ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கேல் சிசன் நாளை இலங்கை வருவார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில் அவர் இலங்கையர்களுக்கு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையிலான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கையுடன் உறவினை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகள் குறித்து ஆராயவிருப்பதாகவும், குறிப்பாக வர்த்தக, பொருளாதார, சுற்றுலா வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் மக்களின் சக்தி குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=31416
-
- 1 reply
- 356 views
-
-
கடந்த 4 ஆண்டுகளில் 21458 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பெண்களும் சிறுவர் சிறுமியரும் இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்ட ஒழுங்கு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த போதிலும், அந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 1700 சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டு காலப்பகு…
-
- 0 replies
- 335 views
-
-
ஜப்பான் கடற்பிராந்திய பாதுகாப்புப் பிரிவின் இரு யுத்தக் கப்பல்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. இந்த இரு யுத்தக் கப்பல்களும் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது இலங்கைக் கடற்படையினர் அவற்றினைச் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். ஜப்பான் கடற்பிராந்திய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உரகா – 460 மற்றும் ஹஜ்ஜியோ – 302 ஆகிய யுத்தக் கப்பல்களே வருகை தந்துள்ளன. 141 அடி நீளமும் 61 அடி அகலமுமான இந்தக் கப்பல்களில் 160 அதிகாரிகள் உட்பட 220 பேர் அடங்கியுள்ளனர். இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதானத் தூதுவர் யசூசிஅகாசி இலங்கை வந்து திரும்பிய சில நாட்களில் இந்த இரு யுத்தக் கப்பல்களும் இலங்கை வந்துள்ளமை குறப்பிடத்தக்கது. http://thaaitamil.com/?p=31358
-
- 0 replies
- 441 views
-
-
இலங்கை ராணுவ வீரர்கள் 450-க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு உட்பட நாட்டின் பல மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஏ.கே.அந்தோனி புதன்கிழமை அளித்த பதில் வருமாறு: இந்திய-இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சிப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன்படி, இலங்கை ராணுவ வீரர்கள் 2 பேருக்கு தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களைவிட 450-க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூர், கண்ணூர், பெல்காம் நகரங்களில் உள்ள ராணுவ மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. h…
-
- 0 replies
- 533 views
-
-
சிறிலங்காவில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளில் மட்டும் இலகுவான வெற்றியைப் பெறமுடியும் என்றும், கிழக்கில் தேர்தல் முடிவு மூன்று அணிகளாக பிளவுபட்டிருக்கும் என்றும் கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. களனி பல்கலைக்கழக தொடர்பாடல் திணைக்கள மாணவர்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளதாக, களனி பல்கலைக்கழக தொடர்பாடல் திணைக்களத் தலைவர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கணிப்பின் படி, மூன்று மாகாணசபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 59 வீதமான வாக்குகளும், ஐதேகவுக்கு 15 வீதமான வாக்குகளும், தமிழ்த் தேசியக் கூட்ட…
-
- 0 replies
- 364 views
-
-
யாழ் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தேச விரோத சக்தியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு) தனது அரசியல் நலன்களைத் திணிக்க முற்பட்டு வருகின்றமை தொடர்பில் பட்டதாரிப் பயிலுநர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் வேலையற்ற பட்டதாரிகளாக இருந்த போது இவர்களை வைத்து அரசியல் நடத்திய மேற்படி ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு தற்போதும் அதே போக்கில் செயற்பட்டு வருகின்றமை பட்டதாரிகளை மட்டுமன்றி அவர்களின் பெற்றோரையும் கடும் விசனமடையச் செய்துள்ளது. நாடாளவிய ரீதியாக அண்மையில் 50 ஆயிரம் வரையான பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மட்டுமே வேதனமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கேற்பவே…
-
- 0 replies
- 369 views
-
-
வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்துகொள்ள வந்த இலங்கை சிங்கள மக்கள் பயணித்த பஸ் மீது செருப்படி மற்றும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது: வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்து கொள்ள வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு எதிராக மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்களை சுமார் 5 பேருந்துகளில் போலிஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வர திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திருவாரூர் அருகே சிங்கள மக்கள் வந்த பேருந்து மீது செருப்பு வீச்சு நடத்தப்பட்டது. அதைத் தாண்டி பேருந்து இன்று மதியம் திருச்சி – தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூர் அருகே, சிங்கள மக்கள் வந்த…
-
- 29 replies
- 2.3k views
-
-
லோக்சபாவிலும் நேற்று கடும் அமளி காணப்பட்டது. அ.தி.மு.க., - தி.மு.க.,-எம்.பி.,க்கள் வழக்கம் போல, இலங்கை ராணுவத்தினருக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து கோஷங்கள் போட்டனர். ராஜபக்ஷே வருகையை எதிர்த்து, திருமாவளவன் கோஷங்கள் போட்டபடி இருந்தார். கேள்வி நேரத்தின்போது, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட தி.மு.க., - எம்.பி.,க்கள், கேள்வி நேரம் முடிந்ததும், அமைதியாக அமர்ந்திருந்தனர். திருமாவளவன் தன் முற்றுகையை தொடர்ந்தவுடன், வேறு வழியின்றி, தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுந்து வந்து, மீண்டும் கோஷங்கள் எழுப்பினர். இவ்வாறு, தொடர்ந்து அமளி இருந்து கொண்டிருந்ததால், இரண்டு சபைகளுமே, மதியத்திற்கு மேல், முழுவதுமாக ஒத்தி வைக்கப்பட்டன. Dinamalar
-
- 1 reply
- 1.1k views
-
-
எப்பப் பார்த்தாலும் ஒரே பொய்யா சொல்லி கடுப்பேத்துறான் யுவர் ஆனர்.... பிரதமர் அலுவலகம்..!? வாஷிங்டன் போஸ்ட் விவகாரம் தான்..! ஈழதேசத்தின் சிறப்புப் பேட்டி..! சமீபத்தில் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிக்கைக்காரன் இந்திய பிரதமர் பற்றி இவ்வாறு கட்டுரை ஒன்றை எழுதி, நம்ம இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தை அதாவது பிரதமர் அலுவலகத்தை கோபத்தின் உச்சிக்கே அழைத்து சென்றுள்ளது. முதலில் வாஷிங்டன் போஸ்ட் செய்தியை பார்த்து விடுவோம். ( புதிய தலைமுறை செய்தியின் ' புது புது அர்த்தங்கள் ' வாடை அடிக்கலாம்..பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..! ) அமெரிக்க நாட்டின் பிரபல பத்திரிக்கையான ' தி வாஷிங்டன் போஸ்ட் ' என்ற பத்திரிக்கையில் சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் வரலாற்று நிபுணரு…
-
- 0 replies
- 487 views
-
-
[size=2] [size=4]சுவிஸ் வங்கிகளில் யார் யார் பணம் வைப்புச் செய்துள்ளார்கள் அல்லது கணக்குகளைப் பேணி வருகின்றார்கள் என்பது தெரியாது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.[/size][/size] [size=2] [size=4]ஏனெனில் சுவிஸ் வங்கிகளில் இரகசியமான முறையிலேயே இலங்கையர்கள் பணம் வைப்புச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இந்தப் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.[/size][/size] [size=2] [size=4]சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்புச் செய்தோர் பற்றிய எந்தவிதமான தரவுகளும் கிடையாது என மத்திய வங்கியின் அந்நிய செலாவணிக் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.[/size][/size] [size=2] [size=4]கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கா…
-
- 3 replies
- 572 views
-
-
ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (1) கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் ஈழத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் பலர் எழுந்து முழக்கமிடுவதைப் பார்க்க முடிகிறது. ஊடகங்கள் பலவும் கூட இன்று ஈழ ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இந்நிலை நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்றது. எனினும் இது ஒரு காலம் கடந்த எழுச்சி என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்போ இந்த எழுச்சி ஏற்பட்டிருக்குமானால் ஈழ வரலாற்றில் நல்ல மாற்றங்கள் உருவாகி இருக்கக் கூடும். இன்று ஈழம் குறித்த நல்ல தகவல்களை எல்லாம் தரும் பல ஊடகங்கள் அன்று ஈழம், புலி ஆகிய சொற்களையே பயங்கரவாதம் என உரைத்தன. எவ்வாறாயினும் நல்ல மாற்றங்களை நாம் வரவேற்கிறோம். அதே வேளை…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயமாக சகல தமிழ் மக்களும் வாக்களித்து, தமிழ்த் தேசியம், தமிழர் சுயநிர்ணயம், வடகிழக்கு இணைப்பு என்பவற்றினை வலியுறுத்தி தமிழ்த் தேசியத்தின் மேலான பற்றுறுதியை வெளிக்காட்டுமாறு தமிழ்மக்களிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “திணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயமாக சகல தமிழ் மக்களும் வாக்களித்து மாகாண சபையில் போட்டியிடும் சரியான தரப்பினரைத் தெரிவுசெய்து அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் நாம் என்றுமே தமிழ்த் தேசியத்தினையும் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தையும் விரும்புகின்றோம் என …
-
- 3 replies
- 757 views
-
-
[size=4]வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டாலும் கூட ஒன்றாகவே வாழ்வோம், ஒன்றாகவே ஆள்வோம் என்ற திடமான உறுதியைக் கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் தம் ஜனநாயகத் தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தி வந்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சேனைகுடியிருப்பு பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.[/size] [size=4]இம்முறை நடைபெறும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டு வருவது மகிழ்வைத் தருகின்றது.[/size] [size=4]உலகை ஏமாற்றும் நோக்குடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு முன்வந்ததும், முஸ…
-
- 0 replies
- 290 views
-
-
[size=4]கடந்த 4 ஆண்டுகளில் 21458 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பெண்களும் சிறுவர் சிறுமியரும் இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்து ள்ளார்.[/size] [size=4]நாட்டின் சட்ட ஒழுங்கு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த போதிலும், அந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]இந்த ஆண்டில் மட்டும் 1700 சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறி…
-
- 0 replies
- 490 views
-
-
[size=4]இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்ராலின் தலைமையிலான குழுவொன்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை செப்ரெம்பர் 20இல் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[/size] [size=4]இந்தச் சந்திப்பின் போது அண்மையில் சென்னையில் நடந்த தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பின் "டெசோ' மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளன.[/size] [size=4]இதேபோல், மு.க.ஸ்ராலின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளரிடமும் இந்தத் தீர்மானங்களைக் கையளிக்கவுள்ளார். தி.மு.க. சிரேஷ்ட தலைவர் டி.ஆர்.பாலு, ஸ்ராலினுடன் செல்லவிருப்பதுடன் திராவிடக் கழகத்தின்…
-
- 0 replies
- 538 views
-
-
[size=4]மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், இந்தியப் பயணத் திட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியாக இருப்பதாக புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சில தமிழ் ஆதரவு குழுக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும், மகிந்த ராஜபக்சவின் பயணத் திட்டத்தில் மாற்றமில்லை. தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் விடுத்த பயண எச்சரிக்கையை உடனடியாக விலக்கிக் கொள்ளவதற்கு வாய்ப்பில்லை.[/size] [size=4]கள நிலவரங்களை சிறிது காலம் நன்றாக ஆராய்ந்த பின்னரே, இந்த எச்சரிக்கையை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு எடுக்கப்ப…
-
- 0 replies
- 270 views
-
-
[size=4]இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பெருமளவிலான இராணுவ வன்முறைகளுக்கு சிங்களவாகள் எதிராக குரல் கொடுக்கவில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாகவே தமிழகம் வந்த இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சிங்களவர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்று கூறிய வைகோ, தமிழ் மக்கள் சாகும் போது கவலைப்படாமல் தற்போது சுற்றுலா வருகிறீர்களா என்று சிங்களர்களிடம் உணர்வுள்ள தமிழர்கள் எதிர்ப்பைக் காட்டியதாக அவர் கூறினார். இது நியயமான எதிர்ப்பு என்றும் அவர் கூறினார். திருச்சியில் தாக்குதலுக்குள்ளானவர்கள் பலர் தமிழ் கிறிஸ்தவர்கள் என்று சுட்டிக் காட்டிய…
-
- 0 replies
- 276 views
-
-
[size=4]முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு தேர்தலில் தனித்துப் போட்டியிட முன் வந்தது ௭ன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.[/size] [size=4]காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்துரையாற்றுகையில் - கிழக்கு மாகாண சபை தேர்தல் ௭ங்களுக்குரிய அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.[/size] [size=4]முதலமைச்சர் பதவியை நாங்கள் தவற விடக்கூடாது ௭ன்பதற்காகத்தான் நாங்கள் தனியாக போட்டியிடுகின்றோம். ஸ்ரீலங்கா முஸ…
-
- 0 replies
- 355 views
-
-
[size=2][/size] [size=2][size=4]தமிழகத்துக்கு விளையாட வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினரை திருப்பி அனுப்பியமை சரியான முடிவல்ல என்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார். திராவிட முன்னேற்ற கழக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஊடகவியலாளரிடம் கருணாநிதி பேசும்போதே மேற்படி கூறியுள்ளார். டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் விரைவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதனைக் கொண்டு செல்வார். இதேவேளை, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்பது எமது விருப்பம். எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கையும். இதற்காக நிறை…
-
- 9 replies
- 1.1k views
-
-
தென் ஆப்ரிக்காவும் இலங்கையும் - யமுனா ராஜேந்திரன் 06 செப்டம்பர் 2012 இலங்கை இராணுவத்தினர், இலங்கையிலிருந்து வழிபாட்டுக்கு வந்தவர்கள், விளையாட வந்தவர்கள் என அனைவரும் திருப்பி அனுப்பட்டுள்ளார்கள். வழிபாட்டுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விவாதங்களும் மாறுபட்ட கருத்துக்களும் தமிழகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இராணுப் பயிற்சி உள்பட அனைத்திலும் இந்தியா இலங்கைக்கு இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறது தினமணி தலையங்கம். இலங்கை இராணுவத்தை வெளியேற்றக் கோரியதை வரவேற்ற திமுகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பிற வெகுமக்கள் விiயாட்டுக்காரர்கள் வெளியேற்றப்பட்டதனைக் கண்டித்திருக்கின்றன. இந்தப் பிரச்சினையில் இலங்கை இராணுவம், வழி…
-
- 0 replies
- 259 views
-
-
கிழக்கில் நீதியான தேர்தலை உடனடியாக உறுதிப்படித்துக; அரசின் வன்முறை குறித்து சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் நீதியானதும், நியாயமானதுமான தேர்தலொன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கும், சட்டவிரோதமான வகையில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்களைப் பட்டியலிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள சம்பந்தன், நாட்டின் தலைவர் என்ற ரீதியிலும் ஐக்கிய மக்கள் சுதந…
-
- 0 replies
- 334 views
-
-
மதுரை கோச்சடை பகுதியில் பிரபல தனியார் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் இலங்கையை சேர்ந்த ஸ்ரீநித் டிசில்வா பொதுமேலாளராகவும், தலைமை சமையலராக முரைஷ் என்பவர் உள்பட 16 சிங்களவர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பக்கோரி 15 பேர் இன்று காலை அந்த ஹோட்டலை முற்றுகையிட்டனர். அப்போது இலங்கை ஜனாதபதிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். இலங்கை யாத்திரிகர்கள் 184 பேர் தமிழ்நாடு பூண்டி மாதா ஆலயத்திற்குச் சென்றிருந்த நிலையில் அவர்களையும் முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://thaaitamil.com/?p=31327
-
- 2 replies
- 904 views
-
-
இந்தியாவின் மத்தியபிரதேசத்தின் மாநிலமான சாஞ்சியில் மகிந்தவிற்கு எதிராக வைகோ தலைமையில் பேருந்து பயணம் மேற்கொண்டு கறுப்புக்கொடி அறப்போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக ம.தி.மு.க அறிவித்துள்ளது. ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இராஜபக்ச எதிர்வரும் 21ஆம்நாள் மத்தியபிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருவதை கண்டித்து சாஞ்சியில் கறுப்புக்கொடி அறப்போர் நடத்தவுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து வைகோ உள்ளிட்ட ஆயிரத்திற்கு குறையாத தோழர்கள் செல்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. செட்டம்பர் 17 ஆம்நாள் பிற்பகல் சென்னை கடற்கரை அண்ணா நினைவிடத்தில் இருந்து பேருந்துக்கள் புறப்படுகின்றன ஹைதராபாத்,நக்பூர் வழியாக 1530கிலோமீற்றர் பயணித்து 19ஆம் நாள் பிற்பகல் சாஞ்சி செல்ல…
-
- 1 reply
- 648 views
-
-
[size=2] [size=2]இன்று முதல்வர் ஜெயலலிதா இலங்கை கால்பந்து அணியை திருப்பி அனுப்பி அதிரடியான துணிச்சலான செயலை செய்துள்ளார் . அதன் விவரம் வருமாறு [/size][/size] [size=2] [size=2]முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படவேண்டும் என்று , தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், அவ்வப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழ…
-
- 54 replies
- 3.7k views
-
-
[size=4]புத்த பெருமானின் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாத, கொலைகார மகிந்த ராஜபக்சே ஆட்சி செய்யும் இலங்கைக்கு புத்தரின் புனிதப் பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்க்கு கடிதம் எழுதியுள்ளார்.[/size] [size=4]வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்குகின்ற ஒரு செய்தியைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விழைகின்றேன். தில்லியில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் முதல், செப்டெம்பர் மாதம் 5 ஆம் நாள் வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, …
-
- 2 replies
- 565 views
-