ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
ஒலிகளால் நிறைந்திருக்கும் யாழ்ப்பாணம் – பிரித்தானிய ஊடகரின் கடிதம் இவ்வாறு எழுப்பப்படும் ஒலிகளை அடையாளங்கண்டு கொள்வதற்கான எனது அனுபவம் மிகக் குறைவானதே. ஆனால் எனது அயலவர்கள் இதில் கூடிய அனுபவம் கொண்டுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட சில மணியொலிகளைக் கேட்கும் போது மட்டுமே தமது வீடுகளை விட்டு மிகவேகமாக வெளியில் வருவார்கள். இவ்வாறு பிரித்தானிய ஊடகமான Guardian Weekly தனது ‘Letter from’ பத்தியில் தெரிவித்துள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் இருந்து அதன் செய்தியாளர் Lynda Gill எழுதியுள்ளார். அதன் விபரமாவது, உலகில் இணையவழி வணிகச் செயற்பாடுகள் நடைபெறும் அதேவேளையில், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வணிகச் செயற்பாட்டு முறைமை ஒன்று இன்ப அதிர்ச்சியைத் தருவதாக…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழ் நாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இலவசமாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில், உறவினர் வீடுகளிலுமாக சுமார் 90 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் நாடு திரும்புவதற்காக கடவுச்சீட்டை பெறுவதற்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தமிழ் நாட்டின் சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இந்திய நாணயப்படி 4 ஆயிரத்து 400 ரூபாவைக் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயப்படி சுமார் 10 ஆயிரம் ரூபாவாகும். குடிவரவு, குடியகல்வு சட்டத்தின…
-
- 0 replies
- 713 views
-
-
சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முழுமையான பதிலை அளிக்கும். என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது: போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்களைத் தட்டிக் கழித்து அது தொடர்பான விளைவுகளை ஏற்க இலங்கை அரசு மறுத்திருந்தது. போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறத்தக்க விதமாக தேசிய அளவில் உருவாக்கப்பட்ட பொறிமுறையாக கற்றுக் கொண்ட பாடந்கள் மற்றும் நல்லிணக்க ஆணைககுழுவை அத உலகுக்கு காட்டியது. எனின…
-
- 0 replies
- 574 views
-
-
அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு: நாம் தமிழர் கட்சி கண்டனம்.. இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக நேற்று (06 -01 -2012) வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கையாகும். சிறு பிள்ளைகளுடன் உயிர் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை கடவுச்சீட்டு இல்லாமல் வந்த குற்றவாளிகள் என்று கூறி நீதிமன்றத்தில் நிறுத்திய தமிழக காவல் துறையின் நடவடிக்கை நாகரீகமற்றது, இரக்கமற்றது என்பது மட்டு…
-
- 0 replies
- 708 views
-
-
வெயாங்கொடை இராணுவ முகாமில் சிறீலங்கா சிப்பாய் ஒருவர் இன்றுகாலை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவையைச் சேர்ந்த 26 வயதான சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 666 views
-
-
இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவரும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கனடிய விஜயம் தொடர்பாக கனடியப் பாராளுமன்றத்தில் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்விகள் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரும்படி ஜிம் கரிஜியானிஸ் பா.உறுப்பினரிடம் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவரும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கனடிய விஜயம் தொடர்பாக கனடியப் பாராளுமன்றத்தில் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்விகள் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியில் வாழும் தமிழ் அன்பர்கள் சிலர் மேற்படி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கனடிய லிபரல் கட்சியின் பல…
-
- 5 replies
- 1.4k views
-
-
யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் இருந்து நேற்று படகு மூலம் புறப்பட்டு இராமேஸ்வரம் சென்ற எட்டுப்பேரை இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் கடலில் வைத்து கைது செய்து கோட்டைப்பட்டின காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்த நிலையில் அறந்தாங்கி நீதிமன்றத்தால் இந்திய கடவுச்சீட்டு சட்டம் 1920 இன் 3வது பிரிவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எமது செய்தியாளர் தெரிவிக்கையில் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் மீது கடவுச்சீட்டு சட்டத்தை காரணம் காட்டி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆண்களை திருச்சி சிறையிலும் பெண்களை தஞ்சாவூர் மகளீர் சிறையிலும் சிறுவர்களை புதுக்கோட்டை சீர்திருத்தப் பள்ளியிலும் சிறைவைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்கள் ம…
-
- 0 replies
- 800 views
-
-
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பௌத்த தேசியவாத இலங்கை அரசாங்கத்தின் ஏக விசுவாசமுள்ள தமிழர் விரோத ஆட்சியாளர்கள் என்பதை தமிழ் வாக்குப்பெற்று பாராளுமன்றம் சென்ற அமைச்சராகிய இவர் நிருபித்து விட்டார்.இலங்கைஆட்சியாளர்கள் பொறுப்பற்ற விதத்தில் தமிழர்களுக்கு எதிராக அபாண்டமான முறையில் வரலாறுகளையே திரிபுபடுத்திக் கூறுபவர்கள் என்பதை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. அந்த சந்தையில் உருவாகிய இவரும் அவ்வாறுதான் எதிரொலிப்பார் என்பதில் எமக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் பொறுப்புள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய இவர் ஹிட்லரின் ஊடக அமைச்சர் கோயபெல் சுத்தமாக பொய் கூறுவதை உண்மை தெரிந்தவர்களும…
-
- 0 replies
- 555 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஓருவர் நேற்று யாழ்.காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மூன்று மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் செய்த முறைப்பாட்டை அடுத்தே காவற்துறையினர் குறித்த ஊடகவியலாளரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றதுடன் அங்கு தடுத்து வைத்து மூன்று மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளனர். குடாநாட்டிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை தனித்து சந்திக்க யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரிற்கு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தடைவிதித்திருந்தார். அத்துடன் தனது மாளிகையில் தன்னுடன் இணைந்து பேச மட்டுமே அவர் அனுமதி அளித்துமிருந்தார். இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிய…
-
- 0 replies
- 851 views
-
-
பல நாடுகளில் தேசியத்தலைவர் மற்றும் தேசியத் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து வெளியிட்டதில் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் [ www.rste.org ] ஆகிய நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இதைப்போன்ற முத்திரைகளை பிரித்தனியாவைச் சேர்ந்த எவரும் வெளியிடலாம் என்றபோதும். படங்கள் சிறந்த ஆய்வுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும். அப்படி அனுமதிக்காவிடின் கட்டிய பணத்தை திரும்பத்தருவார்கள் என்பது சட்டம். ஆகவே தேசியத் தலைவரின் படம் அடங்கிய முத்திரைக்கு ரோயல் மெயில் ஒப்புதல் அளித்தே வெயிளிட்டுள்ளது. இந்த முத்திரை முதலாம் தர [ first class stamp ] முத்திரையாகும், இதை உலக நாடுகள் முளுவதுக்கும் அனுப்பப்படு…
-
- 0 replies
- 1k views
-
-
மிக நீண்ட தூரத்தில் இருந்து வரும் எங்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்காது அதிகாரப்போக்குடன் எங்களை இழுத்தடிப்புச் செய்வதாக செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த புல்லுமலை, மரப்பாலம், வேப்பவெட்டுவான் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் "நாங்கள் சுமார் 15 மைல் தூரத்தில் இருந்து செங்கலடி பிரதேச செயலகத்திற்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் வருகை தருகின்றோம். அவ்வாறு வருகை தரும் எங்களுக்கு சேவை அடிப்படையில் பணியாற்றவேண்டிய உதவி பிரதேச செயலாளர் எங்கள் மீது குற்றம் கண்டுபிடித்து எங்களை திருப்பி விடுகின்றார். இது பற்றி பிரதேச செயலாளரிடம் புகார் தெரிவிப்பதற்கு கூட எங்களை அனுமதிப்பதில்லை பிரதேச …
-
- 0 replies
- 639 views
-
-
இன்று 9 ஈழத்தமிழ் அகதிகள் கடல் வழியாக தமிழகம் மண்டபத்தை வந்தடைந்துள்ளதாக சற்று முன் ஈழதேசத்தின் தமிழக செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் கடல் வழியாக தமிழகத்தை வந்தடைந்துள்ள 9 ஈழத்தமிழ் அகதிகளையும் தமிழக கரையோர காவல் துறையினர் சிறப்பு முகாம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இவர்கள் அங்கு கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதோடு,இவர்களை தொடர்ந்தும் தனிமையில் ஒரு சிறப்பு முகாம் ஒன்றிலேயே வைக்கவுள்ளதாக உள்ளிருந்து ஈழதேசம் செய்தியாளருக்கு இரகசியமாக கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான செய்தி இன்னும் எந்த ஊடகங்களிலும் வெளிவராததோடு இவர்களை இவ்வாறு சிறப்பு முகாம் ஒன்றில் வைப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் இவ்வாற…
-
- 5 replies
- 1k views
-
-
2012ல் மகிந்தர் தனது ஆட்சியை இழப்பார் என நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல யோசியர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஏன் அவர் ஆட்சிபீடத்தில் இருந்து இறங்க நேரிடும் என்பது போன்ற விடையங்களை அவர்கள் விளக்கியுள்ளனர். சிலருக்கும் யோசியம் மேல் நம்பிக்கை கிடையாது தான்! இருந்தாலும் இவர்கள் கூறுவது தமிழர்களுக்கு மனதளவிலாவது ஆறுதலைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. காணொளியைப் பாருங்கள். http://youtu.be/4NuavHlqftY http://www.vannionli...01/2012_02.html
-
- 15 replies
- 2.4k views
-
-
இலங்கையில் பெளத்த பிக்கு மாணவர்களுக்கும் இராணுவத்தினரால் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானத்தை உயர் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. பெளத்த பிக்கு மாணவர்கள் ஹோமகம பாலி மற்றும் பெளத்த பல்கலைக்கழகம் மற்றும் புதுசரவாக தர்மாதிபதி பீடம் ஆகியவற்றில் அனுமதி பெறும் பெளத்த பிக்கு மாணவர்களுக்கே தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவது என உயர் கல்வியமைச்சு பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திசாயாநாயக்க குறிப்பிட்ட இரு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil
-
- 5 replies
- 907 views
-
-
போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் தலையிடக் கோரும் மனு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டது. வெள்ளை மாளிகையின் இணையத்தளம் மூலம் இந்தக் கோரிக்கை மனுவில் 5000இற்கும் அதிகமானோர் ஒப்பமிட்டிருந்தனர். இந்தக் கோரிக்கை மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனிதஉரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் மைக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா.விடம் கடிதம் இலங்கையில் காணாமல் போன மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குறித்து புலனாய்வு செய்யுமாறு கோரி செயற்பாட்டுக் குழுக்கள் சில அங்குள்ள ஐநா பிரதிநிதிகளிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன்னதாக காணாமல் போன லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் குறித்து பதில் காணுமாறு மனித உரிமைகளுக்கான மாணவர்கள் என்னும் அமைப்பு கோரியுள்ளது. காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சார்பாக இவர்கள் இருவரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். காணாமல்போன இவர்களைக் கண்டுபிடிக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வதாக அதிகாரிகள் கூறுகின்ற போதிலும், அவர்கள் பொலிஸ்காரர்களால்தான் கடத்தப்பட்டதாக அவர…
-
- 0 replies
- 434 views
-
-
“Mr.Ten Percent” என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தார் பசில் ராஜபக்ச! - விக்கிலீக்ஸ் தகவல்!! சிறிலங்காவின் மகாவலி அபிவிருத்தி அமைச்சில் பசில் ராஜபக்ச பணியாற்றிய போது, ஒவ்வொரு திட்டத்திலும் தனக்கு 10 சதவீதம் தரகுப்பணம் கேட்பதால் அவருக்கு “Mr.Ten Percent” என்ற பட்டப் பெயர் சூட்டப்பட்டதாக விக்கிலீக்ஸ் இயைத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், காலி பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற போது, அப்பாடசாலையில் இருந்து அவர் பலமுறை இடைநிறுத்தப்பட்டதாக அவரின் பாடசாலை நண்பர்கள் கூறியதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக அப்போது பணியாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக்கினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்ப…
-
- 0 replies
- 728 views
-
-
வடபகுதி ரயில் சேவைகளை மறுசீரமைக்கும் திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் யோசனையின் பிரகாரம் வடபகுதி ரயில் சேவைகளை மறுசீரமைப்பதற்காக, சலுகைக் கடன் அடிப்படையில் சுமார் 382 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கே பளையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் மார்க்கத்தை மீள நிர்மாணித்தல், வடபகுதி ரயில் மார்க்கத்திற்கான சமிஞ்சை கட்டமைப்பை நிறுவுதல் போன்ற வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. அத்துடன் இரண்டு நாடுக…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கையின் தேசிய வீதிக் கட்டமைப்பைப் புனரமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் யோசனைக்கமைய பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நிதியுதவியை, சவூதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியம் வழங்கவுள்ளது. இந்த நிதியுதவி மூலம் இலங்கையின் தேசிய வீதிக்கட்டமைப்பின் சுமார் 144 கிலோமீற்றர் தூரமான பாதைகள் புனரமைக்கப்படவுள்ளன. http://www.saritham.com/?p=46836
-
- 0 replies
- 576 views
-
-
கருணா கனடா வந்ததற்கான தடயங்களும்இ ஆதாரங்களும் உறுதிசெய்யப்படவில்லை. கிளப்பிவிடப்பட்ட வதந்தியை வைத்து அரசியல் லாபம்தேடும் நபர்கள் இவ்விடயத்தை முதலில் உறுதிசெய்யாமல் எழுந்தமானத்தில் செயற்பட்டுள்ளார்கள். இது வருங்காலத்தில் எதையும் ஆணித்தரமாகக் கேட்கமுடியாத நிலையை உருவாக்கும். வந்ததென்று கூறப்படும் காலமும் பிழையானதே. விடயத்தை முதல் ஆதாரப+ர்வமாக உறுதிப்படுத்துங்கள். பின் செயல்படுங்கள். அரசியல் லாபம்தேட முயற்சிக்காதீர்கள். பின்னர் தேர்தல் வரும்போது கருயா கனடா வந்ததை ஆட்சேபித்து முதல் முதல் கனடிய அரசாங்கத்தைக்கேட்டவர் என்று வாக்கு வங்கியை அபகரிக்கும் எண்ணமோ? கருயா கனடா வந்திருந்தால் கருணாவின் கனடிய தமிழ் ஆதரவாளர்கள் அதை வெளிப்படுத்தியிருப்பார்கள். எனவே இது ஒரு கட்டுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏ- 9 வீதி அகலிப்பின் போது யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் உள்ள ‘யாழ்ப்பாணம் வரவேற்கிறது’ வளைவு உடைக்கப்படவுள்ளது இந்தத் தகவலை நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , தற்போது ஏ- வீதியை அகலிக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அகலிக்கும் போது, யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான செம்மணிப்பகுதியில் யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற வாசகங்களுடன் உள்ள வீதிவளைவினை உடைக்கவேண்டியிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். இந்த வளைவை உடைப்பதால் உண்டாகும் இழப்பினை ஈடுசெய்வதற்காக பிரதேச சபைக்கு பத்து இலட்சம் ரூபாவை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கமுன்வந்துள்ளது.எனவே வீதி அகலிப்பு …
-
- 0 replies
- 853 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை: சர்வமதத் தலைவர்கள் வரவேற்பு எந்தவொரு வெளிநாட்டையும் திருப்திப்படுத்த தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல : சங்கைக்குரிய பெல்லம்வில விமலரத்ன தேரர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை மதத் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்களென பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லம்வில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அபேயராம புராண விகாரையில் ஊடகவியலாளர்களை நேற்றுச் சந்தித்த சங்கைக்குரிய தேரர் இவ்வாணைக்குழுவின் அறிக்கை இந்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைந்திருக்கின்றது என்று கூறினார். இவ்வாணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பையோ ஐரோப…
-
- 0 replies
- 523 views
-
-
யாழ்.குடாநாட்டிற்கான் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 19;ம் திகதி செல்லவுள்ள நிலையில் அவரது மகனால் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கட்டப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தையும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் நகரின் முன்னணி பாடசாலையான யாழ்.மத்திய கல்லூரியில் பெரும் பிரச்சாரத்துடன் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லை 2007ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டி வைத்திருந்தார். அவரது இளைஞர்களுக்கான நாளை எனும் அமைப்பினூடாகவே நீச்சல் தடாகத்தை கட்டித்தரப்போவதாக கூறியும் வந்திருந்தார்.எனினும் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் ஒப்பந்தகாரரான தென்னிலங்கை வாசிகள் பெருமளவிலான பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிட வருடக்கணக…
-
- 0 replies
- 705 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், அதனால் நாட்டு விட்டு நாடு தாவிய தமிழ் மக்கள் எனப் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் தமிழர்கள். உள்நாட்டில் இடம்பெறும் யுத்தத்தில் இருந்து தம்மைப் பாதுகாக்க புலம்பெயர்ந்து சென்றாலும் அந் நாட்டினால் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு யுத்த முனையாக இருக்கும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படும் பரிதாபங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்த நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நெதர்லாந்தில் வசித்து வந்த இராஜரட்ணம் குஞ்சுப்பிள்ளை என்பவரது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டு, அவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது 26.12.2011 அன்று தற்கொலை செய்து…
-
- 0 replies
- 839 views
-
-
இணையத்தளங்களை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 41 இணையத்தளங் களுக்கு அடுத்த வாரத்தில் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான தகைமைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினால் அனுமதிக்கப்பட்ட 41 இணையத்தளங்களுக்கு இவ்வாறு பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பீ. கணேகல தெரிவித்தார். பதிவு செய்யப்படுகின்ற இணையத்தள ங்கள் பற்றிய தகவல்கள், அதன் உரிமையாளர்கள், அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக ஊடகங்கள் மூலம் வெளியிட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இணையத்தளங்களை பதிவு செய்…
-
- 0 replies
- 1k views
-