ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
இவ்வருட இறுதிக்குள் நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வினை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (30) பாராளுமன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு வலியுறுத்தினார். அப்படி அரசாங்கம் தீர்வை முன்வைக்கத் தவறினால் தந்தை செல்வா காட்டிய வழியில் போராடுவதைவிட வேறு வழியில்லை என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். மாவை சேனாதிராஜா பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பூரண விடயங்களை காணொளியில் காண்க.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=3269:2011-11-30-17-05-17&catid=1:latest-news&…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை பேரினவாதத்தின் நவீன நில ஆக்கிரமிப்பு உத்தி ஆக்கம்: இதயச்சந்திரன் லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. நீண்ட காலமாக லண்டனில் இயங்கிவரும் வானொலி ஒன்றினால் எங்கு மக்கள் செல்ல விரும்புகிறார்கள் என்கிற கருத்துக் கணிப்பென்ற பெயரில் ஒரு அபத்தம் நிகழ்ந்தது. கருத்துக் கணிப்பிற்கான விடயமல்ல இதுவென்பதைச் சுட்டிக் காட்டியவுடன் 'பிரதேசவாதி' என்கிற பட்டத்தை அவ் வானொலி சூட்டியது. ஆகவே, இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் போக்குக் காணப்படுகிறது. இதுவும் ஒரு ஊடகத்தால் ஏனைய ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையாகவே கருதப்படும். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வைக்க…
-
- 1 reply
- 626 views
-
-
யாழ். நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் மீள்குடியேற்றம் குறித்தும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அரச அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமெரிக்கத் துணைத்தூதுவர் கத்தரீன் வொன்டி மற்றும் தூதரகத்தைச் சேர்ந்த எமிலி பிளெக்னெல் ஆகியோர் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து உரையாடியுள்ளனர். அதன்போது யாழ். மாவட்டத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசின் பங்களிப்பு, மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக அமெரி…
-
- 2 replies
- 1k views
-
-
இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழருக்கு 9 வருடம் சிறை இந்தியர் என்று பொய்யான தகவலைக் கொடுத்து இந்தியாவில் காணி வேண்டிய புலம் பெயர் தமிழர் இருவருக்கு ஒன்பது வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய பிரஜைகள் என்று கொழும்பு சென்று இந்திய நிரந்தர வீசா எடுப்போர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு நல்லதோர் உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் காணிகளை வேண்டுவோர் என்ன முறையில் வேண்டியுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும். காணிகளை வேண்டி பணத்தை முதலிடும்போது மௌனமாக இருக்கும் இந்திய அதிகாரிகள் அதை விற்கும்போதுதான் சட்டத்தை கையில் எடுப்பர் என்பதை உணரவும் இந்த வழக்கு உதவியாக உள்ளது. இதோ இது குறித்த செய்தி : தாங்கள் இலங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
'அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்' இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சுமார் 60 பேர் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து தமிழோசையிடம் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், சுமார் 30 அதிகாரிகளால், இந்தக் கைதிகள் கொட்டும் மழையில் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக தனக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார். விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் ஞாயிறன்று அனுட்டிக்கப்படும் நிலையில், அதனைக் கூறியே தாம் தாக்கப்பட்டதாக கைதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். கால் ஊனமுற்ற கைதிகளின் ஊன்றுகோல்கள் பறிக்கப்…
-
- 6 replies
- 1.2k views
-
-
போர்க்குற்றம் புரிந்தனர் என இனங்காணப்படும் இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அரசின் உத்தேச யோசனைக்கு கடும்போக்குக் கொள்கையுடைய அமைச்சர்கள் சிலர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது.அரச தலைமையுடன் இந்த விவகாரம் தொடர்பில் நேரடியாகப் பேச்சு நடத்தவுள்ள இந்த இனவாத அமைச்சர்கள் இதன்போது, தமது உறுதியான நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்துரைப்பர் எனக் கூறப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி அதன் முக்கிய அம்சங்கள் கசிய ஆரம்பித்துள்ள நிலையில், கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அரச தரப்புக்குள் கருத்து முரண்பாடுகளும் உருவாக ஆரம்பித்துள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய இராணுவத்தினருக…
-
- 1 reply
- 1k views
-
-
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 பேர் அடங்கிய குழுவிற்கும் இடையில் இன்று (29) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று முற்பகல் 11.30 தொடக்கம் 12.30 மணிவரை மதியபோசனத்துடன் கூடிய சந்திப்பாக இது அமைந்ததென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், ´இன்றைய அரசியல் சூழ்நிலை, யுத்தம் முடிந்தும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படாமை, தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைப்பதில் அரசாங்கம் அக்கரையின்றி செயற்படுகிறன்றமை, வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கப்படுதல், இ…
-
- 9 replies
- 1.1k views
-
-
இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதனை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களானால் தமிழர்களது இறைமையினப் பறிக்க கூடாது. இவ்வாறு இன்று பாராளுமன்றில் கூறினார் மாவை சேனாதிராஜா. தமிழ் மக்கள் எப்போதும் தமது இறைமையினை சிங்கள அரசாங்கத்திற்கோ அல்லது சிங்கள அரச அமைப்பிற்கோ ஒப்புக்கொடுக்கவில்லை. கடந்த அறுபது ஆண்டு கால வரலாற்றில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் தமிழ் மக்கள் தமது இறைமையினை வெளிக்காட்டியுள்ளனர். . இன்று வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு; . போர் நடந்துவிட்டதாக நீங்கள் கூறிவருகின்றீர்கள் ஆனால் மேற்குலகிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் அவ்வாறு இல்லை என்றே கருதுகின்றார்கள். யுத்தத்தில் நடந்த உண்மை…
-
- 0 replies
- 548 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடித்துள்ளமை தொடர்பில் இணையத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளதாக ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (30) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றியவை வருமாறு:- கௌரவ சபாநாயகர் அவர்களே!.... இதுவரை கால மனித குல வரலாறுகள் யாவும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் மாற்றங்களையே கண்டு வந்திருக்கிறது. வியக்கத்தக்க முன்னேற்றங்களையே அடைந்து வந்திருக்கிறது. இதற்கு, அழகிய எங்கள் இலங்கைத்தீவும் விதி விலக்கானது அல்ல. இன்று நாம் மாற்றங்களை கண்டிருக்கின்றோம். இந்த மாற்றங்கள் கடந…
-
- 0 replies
- 917 views
-
-
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொப்பி புயூலொச் தெரிவித்துள்ளார். பி;ரதி உயர்ஸ்தானிகர் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யுத்த வலயத்தின் நிலைமைகள் குறித்து யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன், புயூலொச் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைத்தல், வடக்கின் அபிவி;ருத்திப் பணிகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. நிலக்கண்ணி வெடி அகற்றுதல், முன்னாள் போராளிகளை …
-
- 0 replies
- 830 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபரை நோக்கி தண்ணீர்ப் போத்தலை வீசியவர் ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 21ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஐதேக உறுப்பினர்கள் 'வெட்கம்' என்று எழுதப்பட்ட அட்டையை உயர்த்தியபடி எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தின் போது ஆளும்கட்சி தரப்பில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் போத்தல் ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக அருகில் விழுந்தது. அதிலிருந்து தெறித்த தண்ணீர் மகிந்த ராஜபக்ச மீதும் கொட்டியத…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா படையினர் மீது ஐ.நா நிபுணர்குழு சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்திருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய. சபுகஸ்கந்தயில் உள்ள சிறிலங்கா பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மனிதாபிமானப் போரின் போது சிறிலங்காவின் முப்படைகளும் எவ்வாறு செயற்பட்டன என்பதை விரைவில் வெளிவரப் போகும் இந்தஅறிக்கை அனைத்துலக சமூகத்துக்கு தெளிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுத்தாத வகையில் போர் எவ்வாறு நடத்த…
-
- 0 replies
- 919 views
-
-
மடுவுக்குச் செல்வதற்கு புலிகளின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது அந்தப் பயணத்தையே கைவிட்டதாக கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்புவிழாவில் உரையாற்றிய அவர், “நான் பிரதமராக இருந்த காலத்தில் வீதி அபிவிருத்தி பணிகளைக் கையாண்டேன். மடுத்தேவாலயத்துக்கு வீதியை அமைத்துத் தருமாறு என்னிடம் கேட்டனர். 40 அடி அகலமுள்ள வீதியை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தேன். அந்த வீதியை திறக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்த மன்னார் ஆயர், விடுதலைப் புலிகளின் அனுமதியுடன் தான் நீங்கள் நிகழ்வில் பங்கேற்க முடியும் என்றும் கூறினார். எனது ஆயுதப் பாதுகாவலர்கள் என்னுடன் விழாவில் பங்கேற்க முடியாது என்றும் கூறப்பட…
-
- 0 replies
- 874 views
-
-
தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்பாணம் மீது ஜெயவர்த்தனாவின் விமானங்கள் வெறித்தனமாகக் குண்டுகளை வீச… சிங்களவர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது.இருப்பினும், தொடர்ந்து விடுதலைப்புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள இராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது. விடுதலைப்புலிகளால் சகல வசதிகளோடு இருக்கும் சிங்கள இராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா? சிங்கள ஓநாய்கள் ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால், அப்பாவித் தமிழ் மக்களின் கதி என்னவாகும்? இது போன்ற கவலைகள் வேறு மனதை நெருடின. உண்மையில் அங்கு தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? இதுப…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பி யாழ்ப்பாணம் செல்லவிருந்த நபர் ஒருவரிடம் பணம்,பொருட்கள் என்பனவற்றைக் கொள்ளையிட முயன்ற நபர் ஒருவர் வசமாக வாங்கிக் கட்டிய சம்பவம் ஒன்று நேற்று வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றிலிருந்து கொழும்புக்கு வந்துள்ளார். அவர் வழமையாக வெள்ளவத்தையிலேயே தங்குவதுண்டு. எனினும் சம்பவதினம் விமானம் தாமதமானதால் நேர காலத்துக்கு வர முடியவில்லை. இரவு 12 மணியளவிலேயே வெள்ளவத்தையை வந்தடைந்ததுடன் அங்கு மங்களா பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கி தங்குவதற்கு லொட்ஜ் ஒன்றைத் தேடியுள்ளார். இரவு வேளை என்பதாலும், லொட்ஜ் வழங்குவதில் இருக்கும் பிரச்சினைகள் காரணமாகவும் அவருக்கு எதுவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்நாடு காஞ்சிபுரத்தின் செங்கொடியூரில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் எழுச்சியோடு இடம்பெற்றது. முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. . நேற்று முந்தினம் (27-11-2011) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்ச்இ திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழ் உனர்வாளரும், தமிழீழ ஆதரவாளருமான திரு. கொளத்தூர் மணி, தோழர்.தியாகு, மற்றும் அற்புதம் அம்மாள், திருச்சி செளந்தராசன், சி.மகேந்திரன், வேல்முருகன், பேராசிரியர் சரசுவதி, பார்வேந்தன்…
-
- 0 replies
- 729 views
-
-
தமிழீழ மாவீரர் நாளாகிய 27.11.2011 இரவு 8.00 மணிக்கு கோலாலம்பூர் துன்சம்பந்தன் கட்டடத்திலுள்ள சோமா அரங்கத்தில் செம்பருத்தி மற்றும் உலகத்தமிழா; நிவாரண நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. இங்கே, தமிழீழப் போரிலே இறுதிவரை போராடி தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களையும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் நினைவுகொள்ளும் நினைவெழுச்சிநாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது இதில் 300க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர் அகவணக்கத்துடன் ஆரம்பமான தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில் பொதுச்சுடரினை மலேசிய சுவாராம் மனித உரிமை கழகத்தின் தவைலர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ஏற்றிவைத்தார் தொடர…
-
- 0 replies
- 688 views
-
-
செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 05:20.28 PM GMT ] நெதர்லாந்தில் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அல்மேர என்னுமிடத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது. பொதுஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தேசியக்கொடியேற்றல் பின் மாவீரர் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு இன உணர்வாளர்களின் மாவீரர் உரை ஒளித்திரையில் காண்பிக்கப்பட்டது. பின் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பன இடம்பெற்றன. அனைத்திற்கும் மேலாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கர வாதத்தடைச்சட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிம…
-
- 0 replies
- 808 views
-
-
எங்களது இளமைக்காலத்தில் தெற்கின் தலைவர்கள் எங்களுக்களித்தபடிப்பினைகளை எண்ணி எங்களால் பெருமிதம் கொள்ள முடியவில்லை. இதனை இந்த மேன்மை தங்கிய சபையில் தெரிவிக்க நேர்ந்ததையிட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன்.கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2012ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாறறும் போதே வன்னிமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு: மேதகு.ஜனாதிபதி அவர்கள், வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்து ஆற்றிய உரையிலிருத்து ஆரம்பிக்க விரும்புகிறேன். ஜனாதிபதி அவர்கள் தனது இளமைக்காலத்தில் தெற்கின் முன்னோடித் தலைவர்கள் …
-
- 0 replies
- 477 views
-
-
'விடுதலைப் போராட்டத்திற்காக மக்களிடம் திரட்டப்பட்ட பணம் குறித்த கேள்விகள் கேட்பதற்கு முன்னதாக, ஜி.ரிவி. தனது நிதி மூலம் குறித்த தமிழ் மக்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். கட்டணமற்ற தொலைக்காட்சியாக இயங்கும் ஜி.ரிவி விளம்பரம் மூலம் பெற்றுக்கொள்ளும் சிறிய வருமானத்தில் தனது சேவைக்கான செலவையும், ஊழியர்களுக்கான சம்பளத்தையும் வழங்குவது சாத்தியமே அற்றது. அப்படியானால், ஜி.ரிவியின் நிதி மூலம் என்ன? யார் வழங்குகின்றார்கள்? மக்களிடம் இருந்து பங்களிப்புப் பெறப்பட்டால் அதன் விபரம் என்ன? என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியம் பின்னால் அணி திரண்டுள்ள மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யாதவிடத்து, ஜி.ரிவியின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்திற்குரியதாக…
-
- 0 replies
- 687 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தைத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் மாணவர் ஒருவரைப் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர். மட்டக்களப்பு அரசடித்தீவைச் சேர்ந்த குறித்த மாணவன் இவ்வாண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதியவராவார். நேற்று மாலை மட்டக்களப்புக் காத்தான்குடிப் பகுதிக்கு சென்ற வேளையில் குறித்த மாணவனைக் கைது செய்த பொலிஸார், இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஐர்செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.eeladhesa...ndex.php?option
-
- 2 replies
- 1.3k views
-
-
லெப் கேணல் நகுலன் என அழைக்கப்படும் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி எனும் அம்பாரை மாவட்ட விடுதலைப்புலிகளின் பொறுப்பு நிலை அதிகாரி இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. . கேணல் நகுலம் 2009 மே மாதத்தின் பின்னர் திருகோணமலை காடுப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.இவரது கைதினைத்தொடர்ந்து கேணல் ராம் எனப்படும் தளபதியும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் இவர்களை வைத்து சிங்கள இராணுவ புலனாய்வுக்குழு விடுதலைப்புலிகளைப்போல இயங்க வைக்க நடவடிகை எடுத்தது. இதன் மூலம் எஞ்சிய விடுதலைப்புலிகள், தப்பி ஓடி காட்டில் இருந்தோர் ஆகியோரை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. . அது வெற்றிபெறாமல்போகவே வெளி நாடு மற்றும் இந்தியா…
-
- 10 replies
- 2.5k views
-
-
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளதும், தமிழர்களதும் வரலாற்றுச் சின்னங்களை அழித்துக்கொண்டுவரும் சிங்கள இராணுவம் கார்த்திகை மரங்களையும் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழீழத்தின் தேசிய மலர் கார்த்திகைப் பூ. இக் கார்த்திகைப் பூவானது கார்த்திகை மாதத்திலேயே பூக்கும் என்பது விசேட அம்சம். தாய் மண்ணுக்காக தம்மையே அர்ப்பணித்த புனிதர்களான மாவீரர்களைப் போற்றும் இக்கார்த்திகை மாதத்தில், மாவீரர்களுக்கெனவே பூக்கும் கார்த்திகை மலர் தமிழீழத்தின் தேசிய மலராக உருவெடுத்தது. மாவீரர் துயிலுமில்லங்கள், சிலைகள் போன்றவற்றை இடித்தழித்த இராணுவம், நேற்று முந்தினம் யாழ் மாவட்டத்தில் மாவீரர் நாளை மக்கள் கொண்டாடி விடுவார்களோ என்ற அச்சத்தில் கோயில்கள், பாடசாலைகள்…
-
- 3 replies
- 1.6k views
-
-
2009 இல் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கு வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் கணக்கீடு உதவும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கூறியுள்ளார். போரில் இறந்தவர்கள் காணாமற் போனவர்கள் தொடர்பான கணக்கீட்டை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள தகவல் குறித்தே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ போரின் இறுதிக்கட்டம் பற்றிய துல்லியமான தகவல்களைத் திரட்டுவதற்கு இந்தக் கண்கீடு உதவியாக அமையும…
-
- 2 replies
- 1.3k views
-
-
இரத்தினபுரி மாவட்டத்தில் கேரள அரசாங்கம் ஓர் சர்வதேச பாடசாலையினை நிறுவ உள்ளது. மத்திய மாகாண முதல் அமைச்சருக்கும் கேரள மா நில அரசுக்கும் இடையே நடந்த பேச்சுக்களில் இந்த பாடசாலை அமைக்கும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்காக 25 ஏக்கர் நிலம் சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களில் வடக்கு கிழக்கு அதிகாரிகளும் கவனத்தில் எடுக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பானம் இருந்தபோதே யாழ் பல்கலைக்கழகமும் நோர்வே துரொம்சோ பல்கலைக்கழகமும் மருத்துவ, கணித மற்றும் மீன்பிடி துறைகளில் கல்வி விரிவாக்கம் தொடர்பில் ஓர் ஒப்பந்தம் செய்தார்கள். மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் அவ்வாறான ஓர் உடன்பாடை செய்து வந்தனர். சுனாமியின் பின்னர் உள்ளூர் அதிகார சபைகளுடன் ம…
-
- 5 replies
- 1.3k views
-