Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 01:42 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் தூதுவராக அட்மிரல் திசார சமரசிங்கவை ஏற்றுக்கொள்ள முன்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு தெரிந்திருந்ததா என்பதை வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் வெளிப்படுத்த வேண்டும் என்று, அவுஸ்ரேலியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிசப் கோரியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் அட்மிரல் திசார சமரசிங்க வடக்கு, கிழக்கு பகுதிகளுக்காக கடற்படைத் தளபதியாக இருந்தவர். ஆயுதம் தரிக்காத பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்தியதாக அவுஸ்ரேலியாவிலும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. …

  2. வடக்கில் சிங்களமயமாக்கல் நடவடிக்கையினைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற அரசாங்கம் அரச நிர்வாககங்களின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரையிலும் சிங்களவர்களைப் பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் உட்பட்ட அரச நிர்வாகங்களின் கீழ் உள்ள கட்டமைப்புப் பணிகளுக்கு சிங்களவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீயின் துணையுடன் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அங்கிருந்து அகற்றப்பட்டு மன்னார் மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. …

  3. இணையங்களுக்கு தகவல் வழங்குவோர் மீது இரகசிய நடவடிக்கை Tuesday, October 18, 2011, 11:42 உள் நாட்டில் இருந்துகொண்டு வெளி நாட்டு இணையத்தளங்களுக்கு செய்திகளை வழங்குவோர் தொடர்பில் ஓர் இரகசிய நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்க கோத்தபாய அறிவுறுத்தியுள்ளார். இலங்கையில் இருந்து தகவல்களை வழங்கி வரும் நபர்கள் குறித்து கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். மஹிந்த இராட்சியத்தின் அட்டூளியங்களை நாள்தோறும் உள் நாட்டில் இருக்கும் ஊடகவியலாளர்கள் வெளினாடுகளுக்கு வழங்கிவருகின்றனர். இது அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றது. அண்மையில் கொலன்னாவ தொகுதியின் முல்லேரியா பகுதியில் க…

  4. கொழும்பு நகரில் எந்தவொரு வீட்டையும் அகற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை : ரணில் Tuesday, October 18, 2011, 12:05 கொழும்பு வாழ் மக்களை மையப்படுத்தியதான கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகம் இங்குள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பினையும் உரிமையினையும் உறுதிப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருக்கின்றது. அத்துடன் குறை வருமானம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது பிரதான பணியாகும். இதற்கு சகலரினது ஒத்துழைப்பும் மிகமிக அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி உறுதியளித்ததுபோல் கொழும்பில் எந்த வொரு வீடும் உடைத்து அப்புறப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதனை நிலைப்படுத்துவதற்கு கொழும்பு மாநகரச…

  5. அரசியல் தஞ்சம் கோரிய சீனப் பிரஜை இலங்கையில் தங்கியிருக்க அனுமதி! Published on October 18, 2011-3:31 am இலங்கையில் அரசியல் புகலிடம் கோரிய சீனப் பிரஜையொருவர் இலங்கையில் தங்கியிருக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். செல்லுபடியான விஸா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்தது. பான் ஜுன் எனும் இந்நபர் தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸாருக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுப்பிய கடிதமொன்றை கருத்திற்கொண்ட நீதவான் லங்கா ஜயரட்ன இந்நபரை விடுதலை செய்வதாக அறிவித்தார். அரசியல் புகலிடம் கோருவோருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சான்றிதழ்களை வழங்குவதற்கான செயற்பாட்டு…

  6. இலங்கை ருவாண்டாவுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் 18 அக்டோபர் 2011 உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது: இலங்கை அரசாங்கம் ருவாண்டா அரசாங்கத்துடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லியில் உள்ள ருவாண்டா தூதரகத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் தமது ராஜதந்திர உறவுகளை ஸ்தாபிக்க உள்ளன. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ருவாண்டாவில் இலங்கை தூதரகம் இல்லாத நிலையில், கென்யாவின் நைரேபியில் உள்ள இலங்கை தூதரகம், ருவாண்டாவுக்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. புதிய உடன்படிக்கையின் மூலம் ருவாண்டா மற்றும் இலங்கைக்கு இடைய…

  7. அவுஸ்ரேலியாவின் முன் நாள் தூதுவராக பணியாற்றும் முன் நாள் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் தெஸர சமரசிங்க நன்றாக மாட்டிக்கொண்டுவிட்டார் என்றே கூறப்படுகின்றது. இவர் மீதான போர்க் குற்றச்சாட்டினை பொலிசார் விசாரிக்க முடியும் என கூறப்படும் சூழலில் அவர் தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.. ஆனால் கண்கண்ட சாட்சியாக சிறிலங்காவில்,வன்னியில் திருமணம் முடித்த அவுஸ்ரேலிய பிரஜையான திருமதி மீனா கிருஸ்ண மூர்த்தி என்பவர் கண்கண்ட சாட்சியாக தான் இருப்பதாக சாட்சியம் அளித்துள்ளார். . மீனா என்பவர் சமாதான காலத்தில் வன்னிக்குச்சென்று அங்கு கிருஷ்ணமூர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அந்த வேளை தனது கணவர் விடுதலைப்புலிகளின் அமைப்பு ஒன்றில் கணக்காளராக பணியாற்றியதாக கூறுகின்றார்.…

  8. 2012 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கோத்தாபயவுக்கு 22944 கோடி – பசிலுக்கு 10357 கோடி ஒதுக்கீடு: 18 அக்டோபர் 2011 இலங்கை அரசாங்கத்தின் 2012 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதிகளவான நிதி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ செயலாளராக பணியாற்றும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அமைச்சுக்காக 22 ஆயிரத்து 944 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பான மதிப்பீட்டுச் சட்டமூலத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருக்காக ஆயிரத்து 351 கோடி ரூபாவும், இராணுவத்திற்கு 11 ஆயிரத்த…

  9. நாட்டில் உள்ள சகல பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கு 14.5 மில்லியன் ரூபா 18 அக்டோபர் 2011 பாதுகாப்பு அமைச்சினால், நாட்டில் உள்ள சகல பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 14.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நபர்களினதும் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. ஆட்பதிவு திணைக்களம் வழங்கும் அடையாள அட்டைக்கு பதிலாக இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கப்பட உள்ளமை குறித்து, அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் கடந்த வருடம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடதக்கது.…

  10. 1ஆவது இராணுவ நீதி மன்ற நீதிபதிகளின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்திய மனு மீண்டும் ஒத்தி வைப்பு:- 18 அக்டோபர் 2011 முதலாவது இராணுவ நீதிமன்றத்திற்கான நீதிபதிகளின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி, ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேக்கா தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்ததது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், ரஞ்சித் சில்வா, அனில் முனசிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என நீதியரசர்கள் தீர்மானித்தனர். அன்றைய தினம் மனு சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் தமது தரப்பு வாதங்களை …

  11. மீண்டும் ஏன் மூண்டது போர்? அறிக்கை தயாரித்தது நோர்வே இலங்கையின் அமைதி முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அரசு, அவற்றை விசேட அறிக்கையாக வெளியிடவுள்ள நிலையில், அதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக நோர்வே அரசுடன் இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளது எனத் தெரியவருகிறது. நோர்வே அரசுடன் நேரடியாக தொடர்புபட்ட அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று இந்த விடயங்கள் குறித்த ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தது என்றும், அந்த அறிக்கை ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், நோர்வே சென்றுள்ள இலங்கைக் குழு அந்நாட்டு முக்கியஸ்தர்களுடன் பிரஸ்தாப அறிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளத…

  12. காணி அபகரிப்பு மற்றும் சிங்களக்குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 17.10.2011 அன்று நடாத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு முதல் நந்திக்கடல்வரை சுமார் 8000ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் விமானப்படைக்குரியது என்று பலகை வைத்துள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனைவிடவும் சிவசக்தி ஆனந்தன் சொன்ன விடயம் இன்னமும் எனது மனவேதனையை அதிகரித்து விட்டது. இத்தகைய அடாவடித்தனங்களைக் கண்டபிறகும் எனது உயிர் பிரிய மாட்டேன் என்கிறதே என்று எனக்;குக் கவலையாக உள்ளது. இன்னும் நான் ஏன் வாழ வேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது என்றும் கூறினார். அப்போது அவர் மேலும்…

  13. கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப் பிரிவான கடற்புலிகள் வைத்திருந்த அதி வேக இடைமறிப்புப் படகுகளைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து இலங்கை கடற்படை உருவாக்கிய இடைமறிப்புப் படகுகளை வாங்க இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த செய்தி உண்மையாக இருந்தால், தன்னை விட சுண்டைக்காய் நாடு ஒன்றிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் முதல் உலக நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் கூறப்பட்டுள்ள செய்தி: இந்தியக் கடற்படையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப் பிரிவுக்காகவே ரூ 250 கோடி மதிப்பில் இந்தப் படகுகள் வாங்கப்பட உள்ளன. சந்தேகத்துக்கிடமான கப…

  14. பாதாள உலகமும் பகிரங்க வெறியாட்டமும் பிரிட்டன் அயர்லாந்தை ஆக்கிரமித்த காலப் பகுதியில் பாரம்பரியமாகத் தொன்மை வாய்ந்த கலாசாரத்துடன் வாழ்ந்த அந்த மக்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொள்ளப்பட்டபோதும் அவர்களின் போராட்டம் தொடர்ந்து முனைப்படைந்து வந்தது. அந்தப் போராட்டத்தை அடக்க, கொடிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை அங்கு கொண்டு சென்று சகல வசதிகளும் வழங்கி ஆயுதபாணிகளாக்கிக் குடியேற்றியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் பெண்கள், முதியோர், குழந்தை கள் எனப் பல ஆயிரக்கணக்கான அயர் லாந்து மக்களைக் கொன்று குவித்தனர். எங்கும் காடையரின் காட்டாட்சியே மேலோங்கி நின்றது. பிரிட்டன் அயர்லாந்தை ஆக்கிரமித்த காலப் பகுதியில் பாரம்பரியமாகத்…

  15. கோத்தபாயவின் வலது கையாக இருந்து மஹிந்த குடும்பத்திற்கு எதிரானவர்களை கடத்தி கொலை செய்தல், மிரட்டுதல்,கப்பம் கொடுத்தல் ஆகிய பணிகளைச்செய்து வந்தவர்தான் குடு ராஜா துமிந்த சில்வா. . துமிந்த சில்வா தேறுவதற்கு நாளாகும் என்பதனால் இவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளில் ஒரு பகுதியை கிழக்கின் ஒட்டுக்குழு மன்னன் கருணாவிற்கு குதி நேர தொழிலாக கொடுக்க கோத்தா திட்டமிட்டுள்ளார். . மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக கடந்தகாலங்களில் செயற்பட்ட எதிர்க்கட்சிகளின் செயற்பாட்டாளர்களை கடத்திச் செல்லுதல், அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், காணாமல் போக செய்தல் ஆகியவற்றை இனிமேல் கருணா பார்த்துக்கொள்வார். அதாவது துமிந்த சில்வாவின் பணிகளை இனி கருணா பார்த்துக்கொள்வார் என கடந்த வெள்ளிக்கிழமை நட…

    • 1 reply
    • 1.4k views
  16. தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்ப என்ன சொல்வர்? “பலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் ஈழத்தின் கண்ணீருக்கும் ஒரே மதிப்புத்தான். சுற்றியிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவ முடியவில்லை. அல்லது அவர்களால் பலஸ்தீனியர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அதைப்போல இந்தியாவில் இருக்கும் தமிழர்களாலோ அல்லது உலகம் ழுவதும் உள்ள தமிழர்களாலோ அல்லது இந்தியாவினாலோ ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கு உதவவும் முடியவில்லை. அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியவும் இல்லை” எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார். நண்பரைப்பற்றிப் பின்னர் பார்க்கலாம். இப்போது அவர் கூறியிருக்கும் விசயத்தைப் பார்ப்போம். …

    • 5 replies
    • 1.7k views
  17. வல்வெட்டித்துறை சந்தியில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு முன்பாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புத்தர் சிலை அமைக்கும் முயற்சி இன்று கைவிடப்பட்டுள்ளது. இன்று பகல் குறிப்பிட்ட இடத்துக்கு வந்த இராணுவத்தினர் அங்கு புத்தர் சிலை அமைப்பதற்காக அரைகுறையாக அமைக்கப்பட்டிருந்த கட்டுமாணத்தை முற்றாக உடைத்துச் சென்றனர் என வல்வெட்டித்துறை பிரதேச சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் சற்று நேரத்துக்கு முன்னர் எமக்குத் தெரிவித்தார். http://www.eeladhesa...ndex.php?option

  18. யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவ மன்றத் தலைவர் திரு தவபாலன், 24 வயது, 16/10/2011 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பலமான தாக்குதல் நடாத்தி இருக்கின்றார்கள். இலங்கை ராணுவமும் அதனுடன் இயங்கும் அதன் ஒட்டுண்ணிகளும் என சந்தேகிக்கப்படும் இவர்கள் திரு தவபாலனை பின் தொடர்ந்து சென்று கூர்மையான இரும்புக் கம்பிகளால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் அருகே இவ் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றார்கள். திரு தவபாலன் அவர்கள் கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு எதிராக மாணவர்களை திரட்டி ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை சமீபத்தில் நடத்தி வந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வன்னி போர் முடிவுக்குப் பின்னர் கல்விச்சமூக நபர்கள் இரும்பு கம்பிகளால் தாக்கப்படுவது இ…

  19. [Monday, 2011-10-17 09:40:46] 17ம் திருத்தச் சட்ட மூலத்தை ரத்து செய்துள்ளதன் மூலம் நாட்டில் அராஜகம் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் இந்த அராஜக ஆட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். கொழும்பு மாநகரசபை வெற்றியடைச் செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம் மட்டுமன்றி இரண்டாயிரம் வருடங்களாக பேணப்பட்டு வந்த சமய, கலாச்சார விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பும் வீழ்ச்சியடைக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சகல ஆணைக்குழுக்களும…

  20. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக நெதர்லாந்து அதிகாரிகள் மற்றும் யூரோபோல் ஆகிய இருதரப்பினராலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போது தமிழீழம் கோரி 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதாக அரசாங்கம் நம்பியிருந்தது. ஆனால் நெதர்லாந்து நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் ஐரோப்பாவில் தற்போதும் தமிழீழக் கோரிக்கை வலுவாகவிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் …

  21. தெற்கில் தனியான சட்டம் கொண்டுவரப்பட்டால் தெற்கிலுள்ள தமிழர்கள் வெளியேற்றப்படுவார்கள் என சிறீலங்காவின் மின்வலு அமைச்சரும், பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய அரசியல் கட்சியின் பொதுச் செயலாளருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார். வெள்ளையாரின் ஆட்சிக்காலத்தில் பிரிவினவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் ஆதாரமான தேசவழமைச் சட்டத்தை தேசிய சட்டக் கோவையிலிருந்து உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் தமிழர்களின் காணிகளில் அத்துமீறிய குடியேற்றம் மேற்கொண்ட பெரும்பான்மை மக்கள் தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தேசவழமைச் சட்டத்தை ரத்துச் செய்வதன் மூலம் அனைவருக்கும் காணிகள் வழங்கப்…

    • 1 reply
    • 1.7k views
  22. வாகரைப்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீடுகளை சாதகமாகப் பயன்படுத்தி சில கிராமங்களில் தமிழ் மக்களை ஆதிவாசிகளாக மாற்ற விமல் வீரவன்ச முற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். . இது தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு யோகேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; . "இலங்கையின் பூர்வீக வாசிகள் இயக்க குலப் பெண்ணான குவேனி பரம்பரையில் வந்த வேடர்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனாலும் வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் அனைவரும் அவ்வாறான வேடுவர் அல்ல. சிலர் பல பரம்பரைக்கு முன் இவ்வாறு இருந்தாலும் தற்போது இலங்கைத் தமிழர்கள் எ…

  23. நேற்று கந்தர்மடம் வீதியில் சிங்கள இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் ஈபிடிபி இனரால் யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் தாக்கபப்ட்டார். இதனை கண்டித்து மாணவர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் வகுப்புப் பகிஷ்கரிப்பிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். . யாழ். பல்கலைக்கழக மாணவர் பொதுமன்றத்தில்இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் வகுப்புப் பகிஷ்கரிப்பும் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்வதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்த வேண்டும் ;மாணவர்களாகிய எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையென்றால் எங்கே ஜனநாயகம்? . மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமான ஆயுததாரிகள் வன்முறைகள் மற்றும் அடாவடித்தனங்களை நிறுத்த வேண்டும்;வேண்…

  24. யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் வகுப்புப் பகிஷ்கரிப்பிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். யாழ். பல்கலைக்கழக மாணவர் பொதுமன்றத்தில்இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் வகுப்புப் பகிஷ்கரிப்பும் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றன. 'மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்வதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்த வேண்டும்'இ 'மாணவர்களாகிய எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையென்றால் எங்கே ஜனநாயகம்'இ 'மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமான ஆயுததாரிகள் வன்முறைகள் மற்றும் அடாவடித்தனங்களை நிறுத்த வேண்டும்'இ 'வேண்டாம் வேண்டாம் மாணவர்க…

  25. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு மூல காரணமாக இருந்தவர் சேர்.பொன்.இராமநாதன். தமிழ் மக்களின் கல்வி நலன்கருதி தனது நிலத்தை வழங்கி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைவதற்கு அவர் வழிவகுத்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த சிந்தனை பலவாக இருந்தாலும் சைவசமயம் சார்ந்த பல்கலைக்கழகம் தேவை என்பதன் அடிப்படையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாக காரணமாயிற்று. எனினும் தனித்துவமாக சைவசமயம் சார்ந்த பல்கலைக்கழகம் ஒன்று உருவாகாமல் போனாலும், தமிழ் மக்களின் கல்விக் களஞ்சியமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாகியது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமகாலப் போக்கு நமக்கு அதிகம் தெரியாவிடினும் ஒரு காலத்தில் தமிழின உரிமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.