Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு Dec 30, 2025 - 11:44 AM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அந்த குழு விஜயம் செய்யவுள்ளது. ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது. எனினும், டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. https://adader…

  2. டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் 29 Dec, 2025 | 03:26 PM முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்…

  3. காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் ! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457707

  4. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அள…

  5. சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை! அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஜப்பானின் புஜி மலை முதலிடத்தில் உள்ளதுடன், அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸின் பலவான், டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் உள்ளன. அணுகுவதற்கான வசதி, உள்ளூர் விலைகள், சுற்றுலாத் தலங்கள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் ஆகிய காரணிகளைக் கருத்திற்கொண்டு தரவு பகுப்பாய்வு மூலம் இந்தத் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் உள்ள மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் பண்டைய இடிபாடுகள், பல பிரபலமான ஆசிய சுற்றுலாத் தலங்களில் காணப்படும…

  6. போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை Dec 29, 2025 - 01:02 PM இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே …

  7. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு Dec 29, 2025 - 03:03 PM மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது. இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. டித்வா புயல் நாடாளவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் மலையகத்தில் 127 பேர் பலியாகி 16 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதியில் 1,641 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 593 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நி…

  8. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு…

  9. பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி 29 December 2025 மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர…

  10. நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? - சி.வீ.கே.சிவஞானம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியதுடன் இந்திய வெளியுறவு நாங்கள் அதனை வலியுறுத்தினேன் என தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக சி.வீ.கே.சிவஞானம் நேற்று (28) நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரிடமே மகஜர் கையளிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார். இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மகஜரை கையேற்பதில்லை எ…

  11. மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது 29 Dec, 2025 | 09:15 AM மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அத…

  12. அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம் adminDecember 28, 2025 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட ” அலையோடு உறவாடு ” உணவுத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்திற்கே உரிய தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கடலுணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமிய உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் சந்தையும் இதில் இடம்பெறுகிறது. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள், பண்பாட்டு விழுமிய…

  13. சம்பூர் கடற்பரப்பில் இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம் கரை ஒதுங்கியுள்ளது Published By: Vishnu 28 Dec, 2025 | 10:07 PM சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் மாலையளவில் சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் பாகங்களாக இருக்கலாமா எனவும் ரொக்கட் மே…

  14. காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு: அனர்த்த முகாமைத்துவமும் வானிலை திணைக்களமும் வேறுபட்ட கருத்து – நளின் பண்டார Published By: Vishnu 28 Dec, 2025 | 09:26 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நாளையும் (29), நாளை மறுதினமும் (30) மிகமோசமான காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஆனால் பாரிய அச்சுறுத்தலான நிலை இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது. காலநிலை தொடர்பில் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மே…

  15. யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்! யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான கேள்வியின் போது பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம் பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வழக்கு இடம்பெறுகின்ற காரணத்தினால் வழக்கு நிறைவடையாமல் கட்டுமானங்களை ம…

      • Like
      • Haha
    • 4 replies
    • 254 views
  16. யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்! இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது தலைமை உரையை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் வருடம் நிறைவடைய உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு பொது நிர்வாக உள்நாட்டல்கள அமைத்து மற்றும் ஏனைய அமைச்சுகள் மூலம் கிடைக்கப்பெற்ற…

  17. இலங்கையில் அவசர நிலை - மக்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் பிபிசி சிங்கள சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி ஊடக இயக்குநர் ஜெனரல் பிரசன்னா பெரேரா தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையிடம் அவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் பேரிடர் சூழல் நிலவுவதால் இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பொருட்டு அவசர நிலையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டம் அவசர நிலை என்பது என்ன? அவசர நில…

  18. யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - எண்மர் கைது! 28 Dec, 2025 | 05:23 PM யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/234604

  19. 10 DEC, 2023 | 09:04 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரு படகுகளுடன் 25 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171352

  20. Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள் Dec 28, 2025 - 01:11 PM சில தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்களே "டித்வா" புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிதியத்திற்கு தமது நிதியை வழங்கியுள்ளனர். அதற்கமைய குறித்த நிதியத்திற்கு 108,000 ரூபாவினை பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வொன்று நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர மற்றும் கிருஷ்ணன் க…

  21. யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்! யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்க…

  22. 2026 இல் உள்ள அரச விடுமுறைகள் இதோ... Dec 28, 2025 - 12:07 PM 2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வௌிவந்துள்ளன. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களமும் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 26 அரசாங்க விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியாக தலா 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. 2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மலரவுள்ளது. அத்துடன், வெசாக் பௌர்ணமி தினம் மே 01 ஆம் திகதியும், நத்தார் டிசம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இடம்பெற்றுள்ளன. 2026 ஆம் ஆண்டின் அரச விடுமுறைகள்,…

  23. மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திற்குள் நுழைந்தது 20 மேற்பட்ட காட்டு யானைகள் ; விரைந்து செயற்பட்டனர் ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் 28 Dec, 2025 | 05:04 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், போன்ற பல பிரதேசங்களில் நீண்ட நாட்களாக காட்டு யானைகள் தொல்லைகளும் அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ள மக்களின் பயன்தரும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும் காட்டுயானைகள் துவம்சம் செய்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை (27) அப்பகுதியைச் சூழ சுமார் இருபதிற்கு மேற்பட்ட காட்டுயானைகள் உலாவித்தி…

  24. வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள் 28 December 2025 இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகப் பாரிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். குறித்த நிவாரண உதவிகள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாகக் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு மையத்தின் அதிகாரிகள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர். இதன்படி தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள், 2 கொள்கலன்களில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், தமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் 12,33,604 இந்திய ரூபாய…

  25. கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.