Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை மூவாயிரமாகக் குறைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானம் [Wednesday, 2011-07-06 15:18:05] வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை மூவாயிரமாக குறைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைகளம் தீர்மானித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது நான்காயிரத்து 600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ . ஆர். டி.சில்வா குறிப்பிட்டார். அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இங்குள்ள கைதிகளில் சிலரை மஹர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஏனையவர்களை நாட்டிலுள்ள மற்றைய சிறைச்சாலைகளுக்கு எதிர்வரும் காலங்களில் மாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்…

  2. வீரகேசரி இணையம் 7/6/2011 10:26:08 AM இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தப்பியோடிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் நாடு பூராகவும் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார். சர்வதேசம் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை இல்லாதொழிப்பதற்கான தீய சக்திகளின் செயற்பாடுகள் தொடர்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் டி.எம். ஜயரத்ன இதனைத் தெரிவித்தார். இங்கு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், மனிதாபிமான படை இறுதி நடவடி…

  3. இரட்டைக்குடியுரிமை இன்றி வெளிநாடுகளில் வாழும் இலங்கையரின் ஓய்வூதியத்துக்கு வேட்டு வைக்கப் போகும் தேரர் [Wednesday, 2011-07-06 17:35:42] இரட்டைக்குடியுரிமை இன்றி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை தடை செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனசெத முன்னணியின் தலைவரான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இதேவேளை வெளிநாடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுவதாகவும் இதற்காக வருடாந்தம் 3.5 பில்லியன் செலவிடப்படுவதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=46050&category=TamilNews&language=tamil

  4. கந்தர்மடம் ஞானவைரவர் ஆலயத்தில் பிள்ளையார் விக்கிரகம் களவாடப்பட்டது. [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-05 12:18:17| யாழ்ப்பாணம்] கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஞானவைரவர் சுவாமி தேவஸ் தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த பிள்ளையார் விக்கிரகம் அடியோடு அகழ்ந் தெடுக்கப்பட்டு களவாடப்பட்டடுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இவ்விக்கிரகமானது கடந்த ஏப்ரல் மாதம் பிரதிஸ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வலம்புரி.கொம். பிள்ளையாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. இதை செய்தது உள்ளூர் கள்ளரா, வெளியூர் கள்ளரா, …

  5. ராஜபக்சே சொல்வது போல் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளா??இந்த அறிவிப்பு பலகையை பாருங்கள் புரியும்

  6. உலகத் தமிழர் பேரவையின் (GTF) நாடாளுமன்ற வரவேற்பு ஒன்றுகூடல் இன்றிரவு பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் (Attlee Suite of Portcullis House) நடைபெற்றது. பல நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அமைப்புக்களை உள்ளடக்கி கடந்த வருடம் உருவாகப்பட்ட உலகத் தமிழர் பேரவையானது, பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு பல்வேறு அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. http://youtu.be/pivetRXTPPY http://youtu.be/ckOyO1pZj30 நன்றி ஈழம் டெய்லி http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8352:-gtf-&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

    • 1 reply
    • 890 views
  7. தப்பியோடிய புலிகள் உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். கைது செய்ய நடவடிக்க வேண்டும் என்கிறார் இலங்கை பிரதமர் ஜெயரத்னே. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பியோடிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் நாடு முழுதும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இவர்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் துவங்கப்பட உள்ளனர் என்றார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார் இந்த அடிமை டி.எம்.ஜெயரத்னே. மேலும் கூறுகையில், சர்வதேசம் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே தீய சக்திகளின் செயற்பாடுகள் தொடர்வதாகவும் தெரிவித்தார். அவசர கால சட்டத்தை நீடிக்க வேண்ட…

  8. பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாம் பொக்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://akkinikkunchu.com/new/

  9. 06 ஜூலை 2011 தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா நான் சிலகாலங்களுக்கு முன்பு எழுதிய பத்தி ஒன்றில் இலங்கையில் குற்றச்செயல்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளுவதை விட்டுவிட்டு விசாரணைகள் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வதந்திகளை மட்டுமே அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பரப்புவதை மையப் பொருளாக்கியிருந்தேன். அந்தப்பந்தியில் இலங்கையில் பலவந்தமான முறையில் மனிதர்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் எந்தவித சமூக எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியிருந்தேன். அதுமட்டுமல்ல இந்த நிலமைக்கு ஏதுவாக எதோவொரு சமூகக் குணாம்சமும் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தேன். இந்தப்பத்தியில் காணாமல் போதல்களைக் கண்டும் காணாமல் …

  10. Wednesday, July 6, 2011, 12:04சிறீலங்கா கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலிற்கான பரப்புரைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெறும் பிரசார நடவடிக்கைகளுக்கு சிங்கள கூலிப்படைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தடங்கல்களையும் கெடுபிடிகளையும் விளைவித்து வருகின்றனர். ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் ஆதரவாகச் செயற்படு கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.நேற்றும் கூட கிளிநொச்சி மலையாள புரம் பகுதியில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளரான வடிவேல் நகுலேஸ்வரனை ஆதரித்துப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை அங்கு நின்றிருந்த இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். அவர…

  11. [Wednesday, 2011-07-06 12:11:43] ஈழத்தமிழினத்தை அழிக்கும் நோக்கோடு வரலாறு காணாத படுகொலைப்படலத்தை அரங்கேற்றிய - இனவாத - சிங்களக்கொடுங்கோலரசின் முகத்திரயை, அனைத்துலக அரங்கில் தோலுரித்துக் காண்பித்த "சனல் - 4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற பெட்டக நிகழ்ச்சியை, கடந்த 4 ஆம் திகதி மீள் ஒளிபரப்பு செய்தமைக்காக ஏ.பி.ஸி. தொலைக்காட்சிச்சேவைக்கு ஒஸ்ரேலியத்தமிழர்கள் சார்பில் எமது உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்து கொள்கின்றோம். மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப்பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து , சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் குற்றவாளியாக நின்றுகொண்டிருக்கும் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட…

  12. [ புதன்கிழமை, 06 யூலை 2011, 00:18 GMT ] [ தி.வண்ணமதி ] விடுதலைப் புலிகளுடனான பேச்சினை நெறிப்படுத்திக்கொண்டிருந்த இணைத்தலைமை நாடுகளை வெளியேற்றியதுடன் ராஜபக்சவின் நலிந்த இராசதந்திரப் பயணம் ஆரம்பித்தது. இவ்வாறு கொழும்பினைத் தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Gamini Weerakoon எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. கடந்த மாதம் சென் பீற்றஸ்பேக்கில் இடம்பெற்ற அனைத்துலக பொருளாதார மாநாட்டின்போது சீன அதிபர் கூ ஜின்ரோ மற்றும் ரஷிய அதிபர் டிமிற்றி மிட்வடேவ் [sri Lanka’s friends - Dimitry Medvedev and Hu Jintao]ஆகியோரது அரவணைப்பில் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்த அதே காலப்பகுதியில் பிரித்தானிய …

  13. [ புதன்கிழமை, 06 யூலை 2011, 03:59 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இந்தச் சந்திப்புக்காக பான் கீ மூனின் செயலகத்துக்குச் சென்றிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது ஒளிப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பை ஒளிப்…

  14. தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பிய அகதிகளை மன்னாரில் குடியேற்ற நடவடிக்கை [Wednesday, 2011-07-06 10:10:22] இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேரை மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் பொறுப்பேற்று அவர்களை மீள்குடியேற்றவென மன்னாருக்கு அழைத்து சென்றுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 49 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். பன்னிரு குடும்பங்களை சேர்ந்த 49 பேர் தமிழக அகதி முகாமிலிருந்து இலங்கை திரும்பினர் என மீள்குடியேற்ற அமைச்சு நேற்று தெரிவித்திருந்தமை க…

  15. நாடு கடந்த தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் வட அமெரிக்க தமிழ்சங்க பேரவை பெட்னா விழாவில் நேற்று ஆற்றிய உரை http://www.youtube.com/watch?v=30o1IpOzzvc

  16. இலங்கையின் கொலைக்களம் படத்தை ரணில்-மூன் ஒரே நேரத்தில் பார்ப்பர் Sunday, July 3, 2011, 9:09 உலகம், சிறீலங்கா அமெரிக்கா சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீமூனும் ஒன்றாக இருந்து இலங்கையின் கொலைக்களம் சனல் 4 ஆவணத் திரைப்படத்தை பார்வையிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் பான் கீ மூனைச் சந்தித்து ரணில் பேச்சு நடத்தவுள்ளார். அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் திகிலூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ரணில், அரசின் உயர்மட்டத் தவைர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார…

  17. யாழ்.சிறையில் 98 வீதமானோர் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்; கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் கைதிகளின் எண்ணிக்கையும் குறைவு news யாழ்.சிறைச்சாலைக்கு வரும் கைதிகளின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குறைவடைந்துள்ளது. எனினும், அங்கு வரும் கைதிகளில் 98 வீதமானவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 27 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாகவே உள்ளனர் என்று யாழ்.சிறைச்சாலை வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தமை வருமாறு: யாழ்.சிறைச்சாலையில் கைதி களின் எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 300 இற்கும் 350 இற் கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் காணப்பட்டது. புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் ஆரம்ப மானதைத் தொடர்ந்து…

  18. சனல்-4 தொலைக்காட்சிக்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி ; சமாதான நீதிவான்கள் கூட்டத்தில் இந்தக் கைங்கரியம் news இறுதிப்போரில் இடம் பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அரசுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங் களை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான பிரசாரத்தை அரசு யாழ்ப் பாணத்திலும் ஆரம்பித்துள்ள தாகத் தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில நிழ்வுகளை அரசு இதற்காகப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத் துக்கு வருகை தந்த இலங்கை சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் நிர் வாகப் பணிப்பாளர் பேராசிரி யர் ஜயந்த களுபோவில, சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக யாழ்ப…

  19. தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது பெண் இராணுவச் சிப்பாய்களால் பகிரங்க இடத்தில் சோதனை [Wednesday, 2011-07-06 08:40:04] தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லும் போது பெண் இராணுவச் சிப்பாய்கள் பகிரங்க இடத்தில் அவர்களைச் சோதனையிடுவதனால் கைதிகள் வெட்கத்தால் கூனிக் குறுகிப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்கள் பார்த்திருக்க சோதனையிடுவதால் பெண் கைதிகள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு சுகயீனம் அடைகின்றனர் இப்படி "நாம் இலங்கையர்'' அமைப்பு விசனம் தெரிவிக்கின்றது.நீதிமன்ற விசாரணைகளுக்காக தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னரும், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னரும் அ…

  20. வடமாகாணத்தில் உள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்னும் மூன்று வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தல் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் சுதந்திரமான முறையில் நடைபெறுமா? என்று பலமான கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில், அங்கு பல்வேறு அச்சுறுத்தல் சம்பவங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே பிரசாரங்கள் ஆரம்பமாகி விட்டன. இந்தத் தேர்தலில் ஈ.பி.டி.பி.யை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தான் பிரதான போட்டி இருக்கப்போகிறது. ஐ.தே.க. மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. வெற்றிலைச் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியில் குதித்துள்ள ஈ.பி.டி.பி. இந்தத் தேர்தலில் அதிகளவு சபைகளைக் கைப்பற்…

  21. வீரகேசரி இணையம் 7/5/2011 10:28:58 AM வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும் முறை கடந்த சில மாதங்களாக அமுலில் இருந்தது. இந்த நடைமுறை நேற்று முதல் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்வதைப்போன்று யாழ்ப்பாணத்துக்கும் செல்ல முடியும். ஒமந்தையில் அமைக்கப்பட்டுள்ள விசேட காவலரணில் விபரங்களை பதிவு செய்துவிட்டு இவர்கள் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை தொடரலாம் என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்…

  22. Sri Lanka's civil war atrocities shown in British documentary The ABC's Four Corners television program has screened footage of executions, atrocities and the shelling of civilians during the final stages of Sri Lanka's civil war. The British-made documentary looked at allegations that up to 40,000 Tamil civilians were killed as Sri Lankan Government forces moved in to destroy the Tamil Tiger army in 2009. The story aired as the United Nations continues to urge Sri Lanka to launch an independent investigation into allegations of war crimes and crimes against humanity. Sri Lanka's High Commissioner to Australia asked the ABC not to screen the program on th…

  23. Footage sparks calls for Sri Lanka war crimes probe Australian politicians are calling for an international investigation of apparent war crimes in Sri Lanka. A documentary aired on ABC1's Four Corners on Monday night showed evidence of rape, torture and murder of civilians during Sri Lanka's civil war. Last year, a United Nations panel of experts found there was credible evidence that up to 40,000 civilians were killed in the conflict. The British television documentary shows Tamil Tigers using civilians as human shields but it also reveals government forces shelling civilians who had been offered sanctuary in no-fire zones. MPs on both sides of …

  24. அவுஸ்திரேலிய வானொலியான 3AW "சிறிலங்காவின் படுகொலைக்களம் காட்டிய உண்மைகளை ஆதாரமாக வைத்து அவுஸ்திரேலியா அரசு சிறிலங்கா மீது மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமா?" என்ற கருத்துகணிப்பை அவுஸ்திரேலியா முழுவதும் செய்துகொண்டிருக்கிறது.நேற்று அவுஸ்திரேலிய அரச தொலைக்காட்சியான ABC இல் ஒளிபரப்பிய என்ற விபரண காணொளியை முழுமையாக உள்ளடக்கிய"4 corner"s நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அது அவுஸ்திரேலிய பல்லின மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுதியதோடு மட்டும் இல்லாமல், சிறிலங்காவில் நிகழ்ந்த உண்மையான இன அழிப்பின் கோரத்தினை உணர வைத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் இதுவரை மெளனமாக இருந்தவர் இந்த காணொளியை கண்ணுற்ற பிறகு "சிறிலங்கா அரச படைகளின் அட்டூழியம் நிறைந்த கொலைகளைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.