Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும். அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் ஏமாந்தனர். 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நாடு வங்குரோந்தடைந்தது. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூகமயப்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் ஏமாற்று பேச்சுக்களால் நாட்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு இன்று வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று (15) மாத்தளை நகரில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம…

  2. 16 Oct, 2025 | 12:20 PM நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் அமைச்சில் (15) அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, ' மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை வருடங்கள்? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் என ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாரம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்கின்றேன். இவ்வளவு நாள…

  3. 16 Oct, 2025 | 12:31 PM நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை குறைந்துள்ளது எனவும் தேங்கி அழுகும் மரக்கறிகளை குப்பையில் கொட்டப்படுகிறது. இதில் தக்காளி, லீக்ஸ், கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் கரட், போஞ்சி, ஆகியவற்றின் விலை அதிகளவு குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையி…

  4. Published By: Vishnu 16 Oct, 2025 | 04:17 AM மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மாகாணசபைத்தேர்தல்கள் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரசாங்கத்தினால் பழைய முறைமையிலேயே தேர்தல்களை நடாத்தமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'எமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எனவே பழைய முறைமையில் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான சட்டத்திருத்தத்…

  5. 16 Oct, 2025 | 04:28 PM பதுளை - கெப்பெட்டிபொல பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “கெப்பெட்டிபொல பூதயா” என்பவருடன் மேலும் 18 பேர் கெப்பெட்டிபொல பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய கெப்பெட்டிபொல பொலிஸாரால் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளழனட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊவபரனகம மெதவெல பிரதேசத்தில் வசிக்கும் “கெப்பெட்டிபொல பூதயா” என்பவர் இரத்தினபுரியில் இருந்து ஹேரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வந்து ஈசி கேஸ் மூலம் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. “கெப்பெட்டிபொல பூதயா” எ…

  6. 16 Oct, 2025 | 04:55 PM போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவின‌ரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரௌடிகள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ் நிலை காணப்படுகிறது. பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன். பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினேன். இந்த விடயங்கள் தொடர்பாக ப…

  7. 16 Oct, 2025 | 05:05 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினமான இன்றையதினம் அதிகாலை சிறுமி வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். சிறுமியை தேடிய பெற்றோர் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயது …

  8. 15 Oct, 2025 | 03:07 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் எம்மை சந்தித்து எமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை. மாறாக நாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி மற்றும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக ஐ.நாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான வலிந்து காணாமலாக்கப்ப…

  9. ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை. செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை. வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி தி…

  10. நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் October 16, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் செயற்திறனற்ற வரிக்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என்பன தொடர்பில் 101 பக்க விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்க…

  11. சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார் adminOctober 13, 2025 பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை உடற்கூறாய்…

  12. முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை; முறையாக ஒழுங்குபடுத்தவும் திட்டம் வேலணை பிரதேசசபை உடும்புப்பிடி! வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிதி நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கவும் சபை தீர்மானித்துள்ளது. வேலணைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும், வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தால் மு…

  13. வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார் adminOctober 15, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து , சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார். https://globaltamilnews.net/2025/221567/

  14. இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை! இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் …

  15. பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு! மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படுகிறது. நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் …

  16. யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி! பலரிடம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்க…

  17. Published By: Vishnu 15 Oct, 2025 | 09:08 PM தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர்மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பில் அறிந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குருந்தூர்மலைப்பகுதிக்கு 15.10.2025இன்று நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேல…

  18. வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டு…

  19. 15 Oct, 2025 | 04:09 PM சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார். பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார். இலங்கை பார்…

  20. இலங்கையிலிருந்து வந்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த ஒரு பெரிய சம்பவம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என டாக்கா ட்ரிப்யூன் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றது. 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை 2 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கியது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டது. விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்தது. தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக …

  21. 15 Oct, 2025 | 04:28 PM இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்புக்காக முறையற்ற வகையில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மனுஷ நாணயக்கார, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியிருந்தார். இதன்போது மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! | Virakesari.lk

  22. கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது. அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது. S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது. செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது | Virakesari.lk

  23. கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் 15 Oct, 2025 | 11:59 AM மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும். குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக ' சிவப்பு நண்டு' என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த சிவப்பு நண்டை …

  24. 15 Oct, 2025 | 05:45 PM இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தொடுதல், கண்டறிதல் மற்றும் பரிசோதித்தல் தொணிப்பொருளுக்கு அமைய மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் முகமாக நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் என முக்கோண வடிவிலான விளையாட்டு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பங்குபற்றுனர்கள் அனை…

  25. 15 Oct, 2025 | 01:25 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) உலக உணவு தினம் 2025 ஐ “ சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம் ” என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சிறந்த போசாக்கையும் உறுதிப்படுத்த, நிறுவன வரம்புகள், துறைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்ற செய்தி தெளிவாகிறது. இந்நிலையில், ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO ) பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ( IFAD ) பணிப்பாளர் ஷெரீனா தபஸ்ஸூம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.