ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
28 NOV, 2023 | 06:25 AM கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடி…
-
- 2 replies
- 334 views
- 1 follower
-
-
கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் மீண்டும் நீடிக்கவுள்ளது. அதற்கமைய, கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள Mines Advisory Group எனப்படும் MAG மற்றும் HALO Trust நிறுவனங்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 23 கோடியே 80 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hideaki , Mines Advisory Group நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan, HALO Trust நிறுவனத்தின் நிகழ்ச்சி முகாமையாளர் Stephen Hall உள்ளிட்டோர் 27ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளனர். 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்…
-
- 0 replies
- 373 views
-
-
Published By: RAJEEBAN 30 NOV, 2023 | 10:44 AM கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்களின் பெற்றோர் நேற்று தங்கள் பிள்ளைகளிற்கு நீதிகோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாய்ஒருவர் கருத்து தெரிவிக்கையில் உயர்நீதிமன்றத்தில் டிரையல் அட்பார் விசாரணை இடம்பெறும்போது தங்களிற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து சட்டமாஅதிபர் திணைக்களத்தின் அக்கறையின்மை காரணமாக நீதி 15 வருடங்களாக தாமதமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 NOV, 2023 | 07:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்காக 2016 ஆம் ஆண்டு 13,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இதற்கான மாதிரி திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு கொழும்பில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது. அதற்காக 2020 ஆம் ஆண்டு 1770 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது ஆனால் தந்திரோபாய திட்டம் நிறைவுப்படுத்தப்படவில்லை. ஒதுக்கப்பட்ட 13,500 கோடிக்கு நேர்ந்தது என்னவென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெ…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
பிச்சைக்கார நாட்டின் காவல்துறை மாவீர செல்வங்களை நினைவு கூற கூட விடுகினம் இல்லை.............தனது கணவர் மாவீரர்..........உங்களை மாதிரி எங்கட மாவீரர்கள் காசுக்காக போராட வில்லை எங்கட நாட்டுக்காக தான் போராடினவை என்று மன வேதனையுடன் துணிவோடு சொல்லுகிறா............ அஞ்சுவதும் அடி பணிவதும் என் தமிழ் இனத்துக்கே கிடையாது என்று சொன்ன தலைவரின் இந்த சிந்தனைய தமிழர்கள் எப்பவும் நினைவில் வைத்து இருக்கனும்.............
-
- 14 replies
- 1.4k views
-
-
29 NOV, 2023 | 08:57 PM ஆர்.ராம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களும் நிர்வாக கட்டமைப்பும் இல்லாத நிலையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அதியுச்சமான தலையீட்டைச் செய்ய வேண்டுமென வடக்கு கிழக்கு அரசியல் சிவில் புலம்பெயர் தரப்பினர் கூட்டாக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள நிரந்தர தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைச் செய்யவதற்கு இந்தியா வகிபாகமளிக்க வேண்டும் என்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாதுள்ளமையால் தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர்கள்…
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 NOV, 2023 | 10:54 AM கொழும்பில் நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் யாழ். நோக்கி வந்த பேருந்து உள்ளிட்ட மூன்று பேருந்துகள் மீது அநுராதபுர பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் - நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அநுராதபுரம் - புத்தளம் வீதியில் திங்கட்கிழமை (27) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்துகள் இரண்டு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து என்பவற்றின் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த இனம் தெரியாத நபர்கள் கல்…
-
- 2 replies
- 545 views
- 1 follower
-
-
அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம்! பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2023/1361395
-
- 0 replies
- 596 views
-
-
சர்வதேச மனக்கணிதப் போட்டி: யாழில் 19 மாணவர்கள் தெரிவு. மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த போட்டியில் யாழிலிருந்து மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1361308
-
- 0 replies
- 239 views
-
-
Published By: RAJEEBAN 29 NOV, 2023 | 10:40 AM இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் கடன் நிவாரணம் மற்றும் கடனை மீளசெலுத்துவதற்கான காலக்கெடுவை நீடிப்பது குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளன என ஜப்பான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் ஜிஜி நியுஸ் இதனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளின் குழுவிற்கு இந்தியா பிரான்சுடன் ஜப்பானும் தலைமைதாங்குகின்றது. இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கியுள்ள சீனா இந்த குழுவில் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. கடும் நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை கடந்த வருடம் முதல் கடனவழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
29 NOV, 2023 | 09:52 AM கடந்த 1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் கண்டி அரச மாளிகையை தாக்கி அங்கிருந்து சூறையாடப்பட்ட 6 தொல்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து இன்று காலை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட தொல்பொருட்களில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், மன்னரின் தங்கக் கத்தி, இயந்திர துப்பாக்கி மற்றும் இரண்டு பெரிய துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த தொல்பொருட்களை நெதர்லாந்தால் இலங்கைக்கு கையளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விகவிக்ரமநாயக்க, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பக், புத்…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
-
27 NOV, 2023 | 04:44 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நடிகர் அஜித் நடித்த ''சிட்டிசன்'' என்ற படத்தில் ''அத்திப்பட்டி''என்ற கிராமத்துக்கு நேர்ந்த கதியே இன்னும் 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவுக்கும் ஏற்படும். மன்னார் தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் பணிகளை அவுஸ்திரேலியாவின் நிறுவனமும், அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுக்கிறது. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழ…
-
- 2 replies
- 340 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 NOV, 2023 | 05:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கிக்குள் திருடர்கள் உள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன் ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, நிதி இராஜாங்க அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான கப்ரால், லக்ஷ்மன் ஆகியோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு விங்குவது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர், சட்டம…
-
- 1 reply
- 185 views
- 1 follower
-
-
இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் நாள் நினைவேந்தல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அரசியல் தீர்வு அவர் சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவிக்கையில், மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இ…
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 NOV, 2023 | 08:27 PM இலங்கைக்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார். சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியாவே முதலாவதாக முன்வந்தது. …
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 04:10 PM வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக கொடுங்கல் வாங்கலில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (28) பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நெஞ்சுவலி என கூறி நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது, அவர் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக பிறிதொருவருக்கு பணம் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக் கொண்டவர் பணம் வழங்கியவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக பணம் கொட…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
28 NOV, 2023 | 03:16 PM இலங்கையில் 40 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 100 மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் உள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு புத்தளம்நுவரேலியா உட்பட பல பகுதிகளில் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் ஓய்வுபெறுவது புலம்பெயர்வது இடமாற்றம் போன்ற பல காரணங்களால் இது இடம்பெறுகின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/170456
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற உள்ளது. வீதி பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பரந்த ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்துவரும் மற்றும் முழுமையடையாத வீதி பிரிவுகளின் முக்கியப் பணிகளைத் தீர்க்க இந்த நிதி ஒதுக்கப்படும். ADB இன் சலுகைக்குரிய சாதாரண மூலதன வளங்கள் வழங்கும் கடன், 4ஆவது தவணைக்கான மொத்த மதிப்பிடப்பட்ட முதலீட்டு செலவான 68.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியாகும். இந்த செலவில் 8.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு ஏற்கும். https://thinakkural.lk…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 02:52 PM யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/170459
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
தரவை துயிலும் இல்லத்தில் ஆறு பேர் கைது:.சாணக்கியன், கஜேந்திரடனுடன் பொலிஸார் வாக்குவாதம் மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 6 பேர் நேற்று மாலை (27) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நினைவேந்தல் நிகழ்விற்காக ஈகைச் சுடர் ஏற்றுவதற்காக மாவீரர்களின் உறவுகள் காத்திருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றது. திடீரென உள் நுழைந்த பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட கொடிகள…
-
- 1 reply
- 266 views
-
-
27 NOV, 2023 | 09:59 AM யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 07 பேர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்றுள்ளனர். தனுஷ்கோடிக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் , தொடர்ந்து அங்கு வாழ முடியவில்லை என்பதால், தமிழகம் வந்துள்ளோம் எனவும் , இதற்காக மன்னாரில் இருந்து தனுஷ்கோடி பகுதியில் எம்மை இறக்கி விட படகோட்டிக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பணம் வழங்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் 2023 உத்தியோகபூர்வ அறிக்கை . தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2023 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய புனிதர்களை எம் நெஞ்சங்களில் இருத்தி நெய்விளக்கேற்றி நினைவேந்தி உறுதிகொள்ளும் எழுச்சிநாள். உலகில் மிகவும் தொன்மையான எமது தேசிய இன…
-
- 1 reply
- 514 views
-
-
இவர் சொல்லுவதை 10நிமிடம் ஒதுக்கி கேலுங்கோ பல உண்மைகளை வெளியில் சொல்லுகிறார்
-
- 4 replies
- 518 views
-
-
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னிவிளான்க…
-
- 4 replies
- 685 views
-