ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
31 JAN, 2024 | 04:44 PM (இராஜதுரை ஹஷான்) டெலிகொம் நிறுவனத்தின் 53.23 சதவீத பங்குகளை போட்டித்தன்மையான இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்தீரப்படுத்தல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, டெலிகொம் நிறுவனத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்யும் இறுதி தீர்மானத்தில் சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது. இதற்கம…
-
- 0 replies
- 487 views
- 1 follower
-
-
அரசாங்க வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் நம் நாட்டில் இருக்கின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வரி நிலுவை தொடர்ந்தும் தெரிவிக்கையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்க மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான உண்மைகளை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அந்த நிறுவனங்களின் மோசடி மற்றும் ஊழல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். வரி நிலுவையை வசூலிக்க…
-
- 1 reply
- 441 views
-
-
சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரனுக்கு எம். ஏ.சுமந்திரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதம் வருமாறு, முதலிலே தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த 21ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பிலே தாங்கள் அதிகப்படியான வாக்குகளாலே தெரிவுசெய்யப்பட்டமை எமது கட்சியின் வரலாற்றிலும் இந்நாட்டின் வரலாற்றிலும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாக்கெடுப்பில் கல…
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
இந்தியா வழங்கியதைப் போன்று வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி மனோ கணேசன் இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். இந்தியச் சட்டம் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்காது, ஆனால் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய வெளிநாட்டுக் குடியுரிமை (ஓசிஐ) அந்தஸ்தை வழங்குகிறது தனது X பதிவில் தெரிவித்துள்ளார். “OCI வைத்திருப்பவர்கள் இந்தியாவில் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை வாங்கலாம், ஆனால் விவசாய நிலங்களை வாங்கவோ அல்லது அரசியலில் ஈடுபடவோ முடியாது. அவர்களுக்கு விசா இல்லாத நு…
-
- 1 reply
- 464 views
- 1 follower
-
-
31 JAN, 2024 | 04:55 PM பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்தப் பணத்தை பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால் பெரும் நலன் விளையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 73 ஆவது கட்டமாக, மாத்தறை திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் புதன்கிழமை (31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 246 views
- 1 follower
-
-
31 JAN, 2024 | 09:54 PM எரிபொருள் விலையில் இன்று புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவித்துள்ளன. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு்ள்ள நிலையில் அதன் புதிய விலை 371 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவல் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்புதிய விலை 456 ரூபாவாகும். ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன்புதிய விலை 363 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 468 ரூபாவ…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துள்ளார். பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன்ஆளுநர் சந்திப்புக்களை நடத்த வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய முதலாவது சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு, பூம்புகார் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனசமூக நிலையங்களின் அங்கத்தவர்களை ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார். மேற்குறித்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் த…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்பட்ட மேற்கூரை சோலர் பேனல் நிறுவும் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் தேசிய மின்கட்டமைப்பில் 630 மெகாவாட்கள் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதிலும் உள்ள மின்சார நுகர்வோர் இந்த தனித்துவமான தேசிய நோக்கத்திற்கு ஆதரவளித்துள்ளனர் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள CEB தெரிவித்துள்ளது. மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறையிலிருந்து விலகி, புதிய தொழில்நுட்ப அனுபவத்தின் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை விற்பனை செய்வதில் நுகர்வோர் திரும்பியதற்காக CEB மேலும் பாராட்டியுள்ளது. https://thinakkural.lk/article/290083
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி! (இனியபாரதி) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச வானுர்தித்தளம் (விமான நிலைய) அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு வானுர்தி(விமானப் போக்குவரத்து) அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய இன்று நில அளவைப் பணிமனிமனை அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர். இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிள…
-
- 0 replies
- 207 views
-
-
நாட்டில் கடந்த சில நாட்களாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது . மரக்கறி விலைக்கு எதிராக நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது வரி அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரிப்பால் பழங்கள் விலையில் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை எனவும் கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் , இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் படி நெல்லி 1 கிலோ கிராம் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை 1 கிலோ கிராம் விலை 2500 ரூபாவாகவும், 1 கிலோ கிராம் அன்னாசிப்பழத்தின் விலை 700 ரூபாவ…
-
- 0 replies
- 328 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 JAN, 2024 | 09:27 AM ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று செவ்வாய்க்கிழமை (30) சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால…
-
- 4 replies
- 650 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 12:04 PM நீங்கள் சுற்றுலா செல்லவிரும்பினால் இலங்கைக்கு செல்லுங்கள் நான் இதனை விளையாட்டாக சொல்லவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் இலங்கை பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியா வழங்கிய உதவிகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்தியா குறித்த சாதகமான உணர்வுகளை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் இந்த உதவிகள் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். உங்களிற்கான எனது ஆலோசனை என்னவென்றால் அடுத்தமுறை நீங…
-
- 21 replies
- 1.8k views
-
-
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 03:21 PM இலங்கையின் சுதந்திரதினத்தன்று தமிழர்களின்சுயநிர்ணய உரிமையை மீளபெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனின்மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது. ஈழத்தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்பு குழு சர்வதேசதமிழீழ இராஜதந்திரகட்டமைப்பு தமிழ்இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. இது குறித்த இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளதாவது "ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை சமமாக நடத்துவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனக்குழுவிற்கு சமத்துவம் வழங்கப்படாத பட்சத்தில்இ சமத்துவம் மற்றும் இறுதியில் பிரிவினைக்கான அதன் உரிமைகோரல்களை வலியுறுத்த உரிம…
-
- 1 reply
- 409 views
-
-
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 04:33 PM ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் ஜேவிபியின் அனுரகுமாரதிசநாயக்கவிற்கே தொடர்ந்தும் அதிகள ஆதரவு காணப்படுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு வாக்களிப்பது என்ற மக்களின் மனோநிலையை அறிவதற்காக டிசம்பர் மாதம் இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஜேவிபியின் தலைவருக்கு 50 வீதமான ஆதரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு 33 வீத ஆதரவும் ஜனாதிபதி ரணி;ல்விக்கிரமசிங்கவிற்கு 9 வீத ஆதரவும் காணப்படுவது இந்த கருத்துக்கணிப்பி;ன் மூலம் தெரியவந்துள்ளதாக ஐஎச்பி அமைப்பு தெரிவ…
-
- 0 replies
- 306 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 JAN, 2024 | 01:27 PM ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் - புதிய கூட்டணிகள் பற்றி மனோராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, கோட்டாப…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி, நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை இருப்பது போல், அரசியலுக்கும் அது நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “என்றாவது ஒரு நாள் என் கண் பார்வை குறையும், ஒரு நாள் என் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் நிதர்சனம். அரசுப் பணியில் இருந்து 60 வயதில் ஓய்வு பெறுவது ஏன்? நீதிபதியும் 65 ஆண்டுகள் பணியாற்றலாம். கடந்த கால …
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
31 JAN, 2024 | 01:35 PM வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்றையதினம் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 80க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு தற்போது சபையின் பாராமரிப்பில் உள்ளது. எனவே கால்நடை …
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 31 JAN, 2024 | 10:26 AM யாழ்ப்பாணத்தில், உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன. இந்நிலையில், நேற்றைய தினமும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத…
-
- 1 reply
- 445 views
- 1 follower
-
-
வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி! (இனியபாரதி) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச வானுர்தித்தளம் (விமான நிலைய) அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு வானுர்தி(விமானப் போக்குவரத்து) அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய இன்று நில அளவைப் பணிமனிமனை அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர். இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப…
-
- 0 replies
- 168 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இந்த கொடிய சட்டங்கள் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கலாம் என யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது.. பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது அதற்கான் பதிலாக கொண்டு வரப்படுகிற பயங்கரவாத எதிரப்பு சட்டமோ இலங்கைக்கு தேவையில்லை. ஏனேனில் கடந்த காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கடந்த 78 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரபட்ட…
-
- 0 replies
- 238 views
-
-
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சபாநாயகர் கையெழுத்திட்டதிலிருந்து சட்டம் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டத்தின் நோக்கம் அதன் சரத்துகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் அப்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்தச் சட்டவரைவு தொடர்பில் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை இப்போதிருக்கும் சூழலில் இப்படியொரு சட்டவரைவு தேவையா என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 696 views
-
-
இரண்டு அழகான பணிப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் மூன்று இளநிலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அந்த பணியகத்தின் அதிகாரிகள் அண்மையில் பாராளுமன்ற வளாகத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உதவி நிர்வாகி உட்பட இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பரளமனறல-பலயல-சஷட-மவர-கத/175-332344
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா: (மாதவன்) வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில், வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா (30)இன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலில் இருந்து ஊர்வலமாக யாழ்ப்பாண குழல் ஓசை, சிறுவர் நடனம், கும்பியாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், இஸ்ஸாமிய நடனம், பொய்கால் குதிரையாட்டம்,மயிலாட்டம் என்னும் கிராமிய நடனத்துடன் விருந்தினர்கள் சரஸ்வதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவ் நிகழ்வு…
-
- 2 replies
- 491 views
-
-
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம் Mithuna / 2024 ஜனவரி 30 , பி.ப. 05:36 - 0 - 59 உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. …
-
- 4 replies
- 696 views
-
-
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற போதிலும் இலங்கையின் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு முக்கிய தொடர்புள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதே திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது வன்முறை மிகுந்த கடந்தகாலத்தை கையாள்வதில் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக கோட்டாபய ராஜபக்சவை பொறுப்புக்கூறலிற்கு உள்ளாக்குவதே அதற்கான அமில பரிசோதனையாக காணப்படும…
-
- 3 replies
- 464 views
-