Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவில் தொடர் மழையால் மக்கள் பாதிப்பு வீரகேசரி இணையம் 2/1/2011 10:17:38 AM வவுனியாவில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தினதும் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளான பூந்தோட்டம், திருநாவற்குளம், தாண்டிக்குளம் போன்ற பகுதிகளை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வவுனியா மாவட்டத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான வயல்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் உளுந்து, கௌபி, பயறு போன்ற பயிர்கள் முற்றாக அழ…

  2. நிறக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மன்னாரில் அட்டகாசம் செவ்வாய், 01 பெப்ரவரி 2011 07:52 மன்னார் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள் ஆகியன பெரும்பாலும் நிறக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்டப் பகலில்கூட இவ்வாகங்களின் அட்டகாசம் நிறையவே காணப்படுகின்றது. இதனால் பீதியில் மூழ்கி உள்ளனர் மக்கள். நிறக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களின் பாவனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இந்நிலையில் மன்னாரில் நிறக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்களைச் செய்பவர்கள் யார்? அரசின் செல்லப் பிள்ளைகளா? என்கிற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் தலை தூ…

  3. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் புதிய தமிழ்க் கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஆங்கிய ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரது கடுமையான பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் சென்று பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டபின்னர் அவர் திரும்பியுள்ள நிலையிலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. "கே.பி. திரைக்குப் பின்னால் இருந்தகொண்டு செயற்படுகின்றார் என்றே நாம் கருதுகின்றோம். நடுநிலையான கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது" என கே.பி.யுடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பின்னணியிலேயே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பா…

    • 1 reply
    • 635 views
  4. எமது சொந்தக் காணிகளில் எங்களை குடியேற்றுங்கள். இல்லாவிட்டால், சாத்தியமான வழிகளின் மூலம் எமது போராட்டத்தை முன்னெடுத்து வலுக்கட்டாயமாக எமது காணிகளில் நாங்கள் குடியேறுவோமென பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த சுமார் 2500 குடும்பங்கள் ஒன்றிணைந்து மகஜரொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிவுத் தபால் மூலம் இன்று அனுப்பிவைத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு, கடந்த 21 வருடங்களாக மீளக்குடியேற முடியாமல் பரிதவித்து கொண்டிருக்கிறோம். எங்களை எமது வாழ் நிலத்தில் குடியேற்றுங்கள். இல்லாவிட்டால், நாங்கள் வலுக்கட்டாயமாக குடியேறுவோம். எமது வாழ்வியலுக்கான போராட்டத்தில் மீளக்குடியேறும் மக்களின் சோகக் கதைகளாகவே அமைந்துள்ளது. எங்களை நிம்மதியாக எங்கள் காண…

    • 0 replies
    • 317 views
  5. மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது: இந்தியா – சிறிலங்கா கூட்டறிக்கை திங்கள், 31 ஜனவரி 2011( 16:39 IST ) கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எந்தச் சூழலிலும் துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது என்று இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் புதுக்கோட்டை, இராமேஸ்வர மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பைச் சமாளிக்க அயலுறவுச் செயலர் நிருபமா ராவை இலங்கைக்கு அனுப்பினார் பிரதமர் மன்மோகன் சிங். இன்று காலை இலங்கை வந்த நிருபமா ராவ், சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி…

    • 5 replies
    • 726 views
  6. எகிப்து நாட்டில் இடம்பெற்றுவரும் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டச் செய்திகளை ரூபவாகினி மற்றும் ITN தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டின் அரச தலைவர் கொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் கடந்த பல நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான செய்திகள், ஒளிப்படங்களை வெளியிட வேண்டாமென சிறிலங்கா அரசாங்கம் ஊடகங்களுக்கு கட்டளை இட்டுள்ளது. துனிசியாவில் ஆட்சிக் கவிழ்ப்பினை ஏற்படுத்திய மற்றும் எகிப்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களின் மூலம் வெளிப்பட்டுள்ள மக்கள் சக்தியினையிட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் …

    • 0 replies
    • 700 views
  7. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடும் இளைஞர்கள் கைது செய்யப்படுவர் என, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார அறிவித்துள்ளார். சந்திகள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் தேவையற்ற விதத்தில் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஆட்டோ தரிப்பு நிலையங்களில் சாரதிகளைத் தவிர வேறு எவரும் நிற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். சுன்னாகம் பகுதியில் அதிகளவான திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாக முறையிடப்பட்டுள்ளதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக பொதுமக்க…

    • 2 replies
    • 573 views
  8. இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் தமிழ் ஈழம் மலரும்: வைகோ * Sunday, January 30, 2011, 13:44 பிரபாகரன் உயிருடன் வருவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என்று வைகோ கூறினார். இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் மற்றும் 18 பேரின் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூரில் நேற்று இரவு நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க …

  9. ஏ - 9 வீதியில் வாகனங்களின் வேகம் அதிகரிப்பதால் விபத்துக்களின் தொகையும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. கொடிகாமப் பகுதியில் வேகமாக வந்த உழவு இயந்திரம் மிதிவண்டியில் சென்ற இளைஞரை மோதித் தள்ளிக் காயப்படுத்தியது. கொடிகாமம் தவசிகுளத்தைச் சேர்ந்த துரைசிங்கம் ரஜிந்தாஸ் (வயது 23) என்பவர் காய மடைந்தார். சாவகச்சேரி தபாலகம் முன்பாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்த பெண் தூக்கி வீசப்பட்டதில் நாரி எலும்பில் பாதிப்பு ஏற்பட்டது. சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த தங்கராசா கெங்காதேவி (வயது 50) என்பவர் காயமடைந்தார். இவ்விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

  10. லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை – 31 ஜனவரி 2011 அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன' லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை – கொழும்பு ராஜகிரியவிலுள்ள லங்கா ஈநியூஸ் அலவலகம் இலங்கை நேரம் இன்று (31.01.2011) அதிகாலை இரண்டு மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. லங்கா நியூஸ் இணையத்தளத்தில் இது குறித்த ஒரு சிறுகுறிப்பு அவசரஅவசரமாக இடப்பட்டிருக்கிறது. 'அதிகாலை இரண்டு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று தீ மூட்டியுள்ளனர். அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன' என அது தனது குறிப்பில் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கான வலையமைப்பின் தகவல் வட்டாரங்கள் இச்செய…

    • 5 replies
    • 856 views
  11. அமெரிக்கர்களை ஏமாற்றிய பெளத்த துறவி : அதிர்ச்சியில் தேவாலய நிர்வாகம்... திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 15:36 தியான வழிபாடு என்ற காரணங்களை கூறி பௌத்த துறவி ஒருவரே எமது மண்டபத்தை பதிவு செய்திருந்தார். எமக்கு தமிழ் மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வரையிலும் அரசியல் நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுவது தெரியாது என எட்வேட் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவின் பொஸ்ரன் நகரில் உள்ள எட்வேட் தேவாலய மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்வில் சிறீலங்கா இராணுவ அதிகாரியும், பிரதம போர்க்குற்றவாளிகளில் ஒருவருமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உரையாற்றியிருந்தார். சவீந்திர சில்வாவை சிறீலங்கா அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதி…

  12. கேபி ஒரு கைதி - உரையாடவோ அவரைப் பேட்டி காணவோ முடியாது – பாய்ந்தார் படை அதிகாரி:-GTNசெய்தியார் 31 ஜனவரி 2011 கேபியின் விஜயத்தை வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழக முக்கியஸ்த்தர்கள் புறக்கணிப்பு:- கேபி ஒரு கைதி அவருடன் உரையாடவோ அல்லது அவரைப் பேட்டி காணவோ யார் உங்களுக்கு அனுமதி தந்தது என ஒருசில ஊடகவியலாளர்களிடம் பாய்ந்து விழுந்துள்ளார் பாதுகாப்பு அதிகாரி. குடாநாட்டுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை கேபி மேற்கொண்டதாகக் கூறப்பட்ட போதிலும் கேபியின் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு யாழ் மாவட்ட படைத்தலைமையே தகவல்களை வழங்கியிருந்தது. ஆனாலும் யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மூடப்பட்ட அறையில் மிகக் குறைவானவர்களை மட்டுமே கேபி சந்தித்திருந்தார். அங்கு சென்…

  13. இலங்கை மீனவர் இருவர் கொலை இலங்கை மீனவர்கள் இருவர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை மீன்பிடித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம் பேசிய மீன்பிடித் திணைக்களத்தின் துணை இயக்குனரான லால் டி சில்வா அவர்கள், கொல்லப்பட்ட மீனவர்களின் படகு கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அதில் இருந்த மேலும் மூன்று மீனவர்கள் பணயக் கைதிகளாக அவர்களால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் கூறினார். 'தர்ஷன 6' என்னும் படகே கடத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நான்காம் திகதி மிரிசு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தொழிலுக்காக இந்த மீன்பிடிப் படகு புறப்பட்டுச் சென்றதாகவும், ஜனவரி 27 ஆம் திகதி அது சர்வதேச கடற்பரப்பில் சோமாலிய கடற்கொள்ளைய…

  14. Monday, January 31st, 2011 | Posted by admin பருத்தித்துறையில் பாரிய திமிங்கிலம் பருத்தித்துறை முனைக் கடற்பரப்பில் காலை 5.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த திமிங்கிலத்தினது நீளம் 33 அடி, சுற்றுவட்டம் 16 அடி ஆகும். கரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் காணப்படும் திமிங்கிலத்தினை கரையில் முருங்கைக்கற் பாறைகள் காணப்படுவதால் கரைக்கு இழுத்து வருவதில் சிரமம் உள்ளதாகவும், திமிங்கிலத்தினை கரைக்கு கொண்டு வருவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எமது மாவட்ட செய்தி நிரூபர் தெரிவித்துள்ளார். Short URL: http://thaynilam.com/tamil/?p=2420

  15. Jan 31, 2011 / பகுதி: செய்தி / சிங்கள நாடக நடிகை மீதான சிறீலங்கா அரசின் நடவடிக்கை தோல்வி சிறீலங்கா அரச தரப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் வெளிநாட்டுக்கு உல்லாப்பயணம் மேற்கொண்ட சிங்கள தொலைக்காட்சி நடிகையை அவர் நடித்துவரும் தொடரில் இருந்து நீக்குவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சிறீலங்கா அரசின் தொலைக்காட்சி நிறுவனமான ஐ.ரி.என் நிறுவனம் இந்த நாடகத்தொடரை ஒளிபரப்பிவரும் போதும் அதனை வேறு ஒரு நிறுவமே தயாரித்து வருகின்றது. குறிப்பிட்ட நடிகையை தொடரில் இருந்து அகற்றுமாறு அரசு கேட்டபோதும், நடிகை வெளிநாடு சென்றது அவரின் சொந்த விவகாரம். அதனை அவரின் கணவர் மட்டுமே கேட்கமுடியும். எனவே தொடரில் இருந்து நடிகையை நீக்க முடியாது என தயாரிப்ப…

  16. உணவுக்காக இன்று இரவுவேளையிலும் கையேந்தும் நிலையில் எமது மக்கள் - யோகேஸ்வரன் எம்.பி. [ பிரசுரித்த திகதி : 2011-01-31 07:33:13 AM GMT ] உணவுக்காக இரவு 12மணிவரையில் கையேந்தும் நிலைக்கு எமது சமூகம்சென்றுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகள் வாரி வழங்கிய பணம் எங்கே போனது எனவும் கேள்வியெழுப்பினார். ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கிராண்குளம் கதிரொளியகரக் கல்விக்கழகம் நடாத்திய பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://tamilulakam.com/news/view.php?id=22495

  17. ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியும் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியும் ! ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வ்றாமிங்கம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில், சிறப்பு அதிதியாக கலந்த கொண்ட சவேந்திரா சில்வா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். வன்னிப் போரின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள், மனிதப் படுகொலைகள் குறித்து, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக…

  18. தஞ்சையில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட மாவீரன் முத்துக்குமார் சிலை ஈழத்தமிழர் மீதான சிங்கள இந்திய கூட்டுப்படை நடத்திய இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்தக் கோரி தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமாருக்குஇ அவர் உயிர் துறந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29.01.2011 அன்று தஞ்சையில் மார்பளவு சிலை எழுச்சியுடன் திறக்கப்பட்டது. இதில் திரளான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். ஈகி முத்துக்குமாருக்கு முதன் முதலாக சிலை வைக்கும் பணியை, அவரது இறப்புக்குப் பின் உருவான இளந்தமிழர் இயக்கம் கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில் அறிவித்து அதற்காக, உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களின் பங்களிப்போடு மாவீரன் முத்துக்குமாரின் மார்பளவு சிலையை உருவாக்கியது. அச்சிலையை…

    • 1 reply
    • 542 views
  19. செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில், 5வது நாளாக உணவு புறக்கணிப்பு போராட்டத்தால் ஐவர் மயக்கம் செங்கல்பட்டு ஏதிலிகள் சிறப்பு முகாமில், உளவு பிரிவு காவல் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 28 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுவிக்க கோரி 5 நாளாக தொடர் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5 பேர் இன்று மயங்கி விழுந்தனர். [காணொளி] உலகில் பிற நாடுகளில் கூட ஈழத் தமிழர்களின் அடிப்படை தேவைகள் நிறை வேற்றப்படுகின்றன. ஆனால் உரிமை உள்ள தமிழ் நாட்டில் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப் படுகின்றன. ஈழத் தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்ப்பார்ப்பு காணொளி http://mee…

  20. இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பாக வைகோ அனுப்பிய கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இத்தகவலை மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார். ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்ச…

  21. மகிந்த ராஜபக்சேவுக்கு புற்று நோய்? [ பிரசுரித்த திகதி : 2011-01-31 11:24:30 AM GMT ] இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை புற்று நோய் தாக்கியிருப்பதாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து எந்த மறுப்பும் உறுதிப்படுத்தலும் இல்லை. ராஜபக்சே கடந்த சில மாதங்களாவே சுகவீனமுற்றிருப்பதாகவும், கல்லீரல் புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சையை மஹரகமை புற்றுநோய் மருத்துவமனையின் வைத்தியர் கனிஷ்க என்பவர் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் அவரது சிகிச்சையின் பின்னும் அடிக்கடி ஜனாதிபதியின் முகத்தில் ஒரு வீக்கம் ஏற்படுவதாகவும், அவ்வ…

  22. திங்கட்கிழமை, 31, ஜனவரி 2011 (17:21 IST) இந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம்: சீமான் இந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம் என, சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக மீனவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் மீண்டும் தொடர்வது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக வலுவான கடற்படைக் கப்பல்கள், தாக்குதல் நடந்த கடல் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இப்படிப்பட்ட தாக்குதல்களை எப்படி இலங்கையால் மேற்கொள்ள முடிகிறது – என்பது அந்தக் கேள்விகளில் ஒன்று. இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், இந்திய செயற்கைக் கோள்களுக்கும் தெரியாமல் இப்படிய…

  23. இன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை சேர்ந்த ஏழு பணியாளர்களான கணேசலிங்கம் ஐயா, தங்கராசா ஐயா, பிரேமினி அக்கா, வசந்தன், கஜேந்திரன், சதீஸ்கரன், ரவீந்திரன் ஆகியோரின் ஐந்தாம் வருட நினைவு நாள். வெலிக்கந்தவில் வைத்து கருணா, பிள்ளையான் அணியினரால் அரச ஆதரவுடன் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யபப்ட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கும் இவர்களின் பின்னால் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்வரை தம் உயிர்களை பணியின் போது அர்ப்பணித்த பொறுப்பாளர்கள், பணியாளர்களுக்கும் எனது இதய அஞ்சலிகள்.

  24. பங்களாதேசத்தின் கடற்படை கப்பல் சிறீலங்கா வந்துள்ளது ஜன 31, 2011 பங்களாதேச கடற்படை கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை (29) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக சிறீலங்கா கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அண்மைக்காலமாக சிறீலங்காவை நோக்கி பல நாடுகளின் கடற்படைக்கப்பல்கள் பயணத்தை மேற்கொண்டு வருவது நாம் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது பங்களாதேசத்தின் கடற்படை கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை (29) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. பங்களாதேச கடற்படையின் “தலெஸ்வரி” என்ற கப்பலை சிறீலங்கா கடற்படையினர் அணிவகுப்பு வழங்கி வரவேற்றுள்ளனர். 81 மீற்றர் நீளம் கொண்ட இந்த ஆழ்கடல் சுற்றுக்காவல் கப்பலில் 9 கடற்படை அதிகாரிகளும், 49 கடற்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.