Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாக்.உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி : 16 வருடங்களின் பின்னர் மூவரும் விடுதலை ! இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் பிரதிவாதிகள் மூவரும் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகனப்பேரணியாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் உயர் ஸ்தானிகரை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முதலாவது பிரதிவாதியாக யோகராஜா நிரோஜனும் இரண்டாம் பிரதிவாதியாக சுப்பிரமணியம் சுரேந்திரராஜாவும் மூன்றாம் பிரதிவாதியான கனகரெத்தினம் ஆதித்தன் ஆகிய மூவரும் …

  2. 10 NOV, 2023 | 01:18 PM யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடற்கூற்று பரிசோதனையின்போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனையடுத்து, கொழும்பில் மேற்கொள்ள…

  3. கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை யது பாஸ்கரன் கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப…

  4. தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட தடையாக விளங்கும் டக்ளஸ் தரப்பு: முற்றாக விலகுவதாக அறிவித்த உறுப்பினர்! மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபன் கட்சியில் இருந்து விலகிகொண்டதாக தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழ் தேசியம் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவதற்கும் மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்துவதற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தடையாக இருப்பதால் அக்கட்சியில் இருந்து முற்றுமுழுதாக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் காலங்களில் இருந்து தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படுவேன் எனவும் கூறியுள்ளார். …

  5. யாழ்.மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் adminNovember 10, 2023 யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://globaltamilnews.net/2023/197118/

  6. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கறுவா மரக்கன்றுகள் விநியோகம் adminNovember 10, 2023 தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. பாடசாலை அதிபர் ச. விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கலந்துகொண்டு மரநடுகையில் மாணவர்களின் வகிபாகம் குறித்து உரையாற்றியதோடு, மரக்கன்றுகளையும் வழங்கியிருந்தார். இந்நிகழ்ச்சியில் வடக்குக் கிழக்கில் யுத்தத்தின் பின்ன…

  7. எரிபொருள் கையிருப்பில் இல்லை! ”எரிபொருள் கையிருப்பில் இல்லை” என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆராய்வதற்காக அண்மையில் கோப் குழுவானது, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன மற்றும் கூட்டுத்தாபனத் தலைவர் சாலிய விக்ரமசூரிய உட்பட பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் குறித்த கூட்டத்தில் கோப் குழு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” …

  8. அரசியல் தீர்வு விடையத்தில் அவுஸ்திரேலியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் : இரா.சாணக்கியன்! அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இரா.சாணக்கியன், “குறித்த சந்திப்பில் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விபரங்களை அறியும் முகமாகவும் அதற்கான தீர்வுகளை பற்றியதாக இருந்தது. மற்றும் எமத…

  9. யாழில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் மாணவர் சந்தை! யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் நேற்றைய தினம் “மாணவர் சந்தை” வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஜெ.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் வலயக் கல்விப் பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் ப.சுரேந்திரனும், சிறப்பு விருந்தினராக கிராம அலுவலரான திருமதி.ம.சுரேஷ்கண்ணாவும் கலந்து கொண்டு மாணவ சந்தையை ஆரம்பித்து வைத்தனர். https://athavannews.com/2023/1358122

  10. 09 NOV, 2023 | 08:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டை ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று வியாழக்கிழமை (09) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியை வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கிடையில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது மற்றும் பயிற்சி தொடர்பான விடயங்கள் கலந்துரைய…

  11. 09 NOV, 2023 | 04:45 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகும் நிலைமை தற்போது நாட்டில் காணப்படு…

  12. Published By: DIGITAL DESK 3 09 NOV, 2023 | 05:14 PM தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்று வியாழக்கிழமை (9) மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுடன் 15 இந்திய மீனவர்களும்,கடந்த 29 ஆம் திகதி 3 படகுகளுடன் 23 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குறித்த மீனவர்களுக்கு எதிராக மூன்…

  13. Published By: VISHNU 09 NOV, 2023 | 05:08 PM யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா தெரிவித்துள்ளார். கடந்த 22ஆம் திகதி விடுதி இலக்கம் 34இல் அனுமதிக்கப்பட்டவரின் பெயர், வயது , இடம் என எந்த தகவலும் இல்லாத பெண்ணொருவரின் சடலமும், கடந்த 23ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த திருமதி ரு.கிரிஷாந்தன் எனும் பெண்ணின் சடலமும் , கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி விடுதி இலக்கம் 08இல் உயிரிழந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்த நல்லூராஜ் (வயத…

  14. மன்னாரில் காணிகளை விற்பனை செய்யாதவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்! மன்னாரில் காணிகளை விற்பனை செய்ய மறுப்பவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தைதானியம் சாண்ட்’ நிறுவனம் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 4000 துளைகளுக்கு மேல் இட்டு கனிய மணல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது மணல் அகழ்வுக்கான அனுமதியை கோரியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இலங்கையில் சுமார் 18 திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்ணையன் குடியிருப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார். இந்நிலையில் குறித்த விடயத்தை அறிந்த அப…

    • 6 replies
    • 743 views
  15. 09 NOV, 2023 | 02:29 PM வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வட மாகாணத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தபோது வட மாகாண ஆளுநர் செயலகத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வட மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மாகாணத்தை அபிவிருத்தி செய்யவும் நீண்ட மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த ஆளுநர், அந்த வேலைத்திட்டங்களுள் வட மாகாணத்தில் 25,000 நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பது, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான திட்டங்களின் முன்னாயத்த வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்க…

  16. 09 NOV, 2023 | 12:29 PM (எம்.நியூட்டன்) அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அரச அதிகாரிகள் எவ்விதமான அக்கறையும் இல்லாமல் இருப்பது மனவருத்தத்தை தருகிறது. ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின்போது நல்லை ஆதீனத்தின் குரு முதல்வரையும் என்னையும் சந்தித்து கலந்துரையாடியபோது, காங்கேசன்துறை தல்செவன ஹொட்டல் பயன்படுத்தப்படுகின்ற ந…

  17. Published By: DIGITAL DESK 3 09 NOV, 2023 | 01:12 PM அருண பத்திரிகையுடனான நேர்காணலில் பாராளுமன்ற உறுப்பினர் கொடஹேவா இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார்: (1) 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்படும் 70% வரி வருமான அதிகரிப்பு நடைமுறையில் சாத்தியமற்றது (2) வரி அதிகரிப்பினால் வரி செலுத்துபவர்கள் தங்கள் தேவைகளுக்காகச் செலவிடக்கூடிய வருமானத்தில் 70% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆண்டறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது. கூற்று 1: வரி வருமானத்தில் 70% அதிகரிப்பு என்பது நடைமுறை சாத்தியமற்றது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று மூன்று முக்கிய…

  18. மேன்முறையீட்டு நீதிமன்ற ஷண்முகா ஹபாயா வழக்கு: பாடசாலைகளில் ஹபாயா ஆடை அணியத் தடையில்லை என பிரதிவாதிகள் எழுத்து மூலம் ஏற்பு. ஷண்முகா ஹபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த (Writ) வழக்கு (07.11.2023) முடிவிற்கு வந்தது. தனது கலாச்சார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என ஆசிரியை பஹ்மிதா அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் Writ வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் தனது அரச கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற வேளை அதனைத் தடுத்தமைக்கு எதிராக ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்திருந்தார். ப…

    • 6 replies
    • 665 views
  19. Published By: DIGITAL DESK 3 09 NOV, 2023 | 12:19 PM மட்டக்களப்பு பிரதேசத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், திருடர்கள் பகலிலும் இரவிலும் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, பொது மக்கள் தமது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் சந்தேகத்துக்கு இடமாக நடமாடினால் உடன் பொலிஸாருக்கு அறிவித்து ஒத்துழைக்குமாறு பொதுமக்களை மட்டு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுத்து இன்று வியாழக்கிழமை (09) துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அண்மைகாலமாக பகலிலும் இரவிலும் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் நீங்கள் உங்களுடைய உடமைகளை கவனமாகவும் பாதுக…

  20. Published By: RAJEEBAN 09 NOV, 2023 | 12:09 PM சீனாவின் எக்சிம்வங்கி இலங்கையின் கடன்மறுசீரமைப்பு குறித்த யோசனைகளை இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளுடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார். எக்சிம்வங்கியின் ஊடாக முன்வைத்துள்ள இலங்கைதொடர்பான கடன்மறுசீரமைப்பு யோசனைகளை சீனா பகிர்ந்துகொள்வதற்காக அமெரிக்கா காத்திருக்கின்றது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அனைத்து கடனாளர்களையும் சமமாக ஒப்பிடக்கூடிய அணுகுமுறை இருப்பதாக கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் யோசனை வெளியானதும் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் கடன்மறுசீரமைப்பை முன்னெடுக்கலாம் அதன் கடந்தகால நுண…

  21. இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – அமெரிக்கா நம்பிக்கை இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தவிடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும் அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும் தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும் என அம…

    • 3 replies
    • 318 views
  22. தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாகக் கொண்டு, தூத்துக்குடி – காங்கேசன்துறை, தூத்துக்குடி – கொழும்பு, இராமேஸ்வரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் நடந்த சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில் துபாயில் உள்ள தனி…

  23. Published By: VISHNU 08 NOV, 2023 | 05:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற வாதப் பிரதி வாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜ…

  24. Published By: VISHNU 08 NOV, 2023 | 07:47 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற மனநிலையில் இருக்க வேண்டிய சமூகமில்லை என்பதே அரசின் கொள்கை எனவும், அவர்களை இனிமேலும் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதக் கூடாது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத…

  25. 08 NOV, 2023 | 05:29 PM நாட்டில் நீரிழிவு நோயால் 14.6 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் வெவ்வேறு வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட போதிலும் , அவற்றில் வகை 1 மற்றும் வகை 2 ஆகிய நீரிழிவு நோய்களுக்கு தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தமக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியாதுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் தொடர்பில் அனைவரும் பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.