ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வலுவடையும் பட்சத்தில் அவற்றை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா மீது சாட்டி விட்டு தப்பித்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏதுவாக யுத்த காலத்தில் சரத் பொன்சேக்கா கலந்து கொண்ட பாதுகாப்புப் படை தொடர்பான நிகழ்வுகள், இராணுவ உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், பாதுகாப்புக் கவுன்சில் கலந்துரையாடல்கள், இராணுவ முகாம்களுக்கான விஜயங்கள் என்பன தொடர்பான ஒளி, ஒலி நாடாக்கள் அனைத்தும் தற்போது அரசாங்கத்தின் தீவிர பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அவற்றிலிருந்து தேவையான ஆதாரங்களைத் திரட்டியெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு நம்பிக்கையான அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் குழ…
-
- 2 replies
- 603 views
-
-
பருத்தித்துறை புலோலிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலோலி தெற்கு தேரன் பகுதியைச் சேர்ந்த அரியநாயகம் துளசி (வயது 19) என்ற யுவதி கடந்த மாதம் 28 ஆம் திகதி காணாமற்போயிருந்த நிலையில் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி அவருடைய வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தயுவதியின் சடலம் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிணங்க நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் பிரேத …
-
- 0 replies
- 767 views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்த சூனிய வலயத்தில் பணிபுரிந்த 5 வைத்திய அதிகாரிகள், அழுத்தங்களுடன், பயிற்றுவிக்கப்பட்ட கருத்துகளையே, 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஜேம்ஸ் மோர், ஐக்கிய அமெரிக்காவிற்கு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் இன்று மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 24 ஆம் திகதியிடப்பட்டு வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி, யுத்தத்தின் முடிவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பில் வைத்திய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களை சுட்டிக்காட்டி குற்றப்புலனாய்வுத் துறையினர் அவர்களை விசாரணை செய்தனர். பின்பு அவர்கள் பிணையில் விடு…
-
- 1 reply
- 915 views
-
-
இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரமான முன்னாள் உறுப்பினர்கள் என்று வர்ணிக்கப்படும் நூற்று அறுபது பேர் கொழும்பு மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில் புதன் கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர். சென்ற வருடம் முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட காலம் தொட்டே, அந்த முகாம்களுக்குள் பாதுகாப்புப் படையினர் வந்து ஆட்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருந்தன. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலரை யுத்தம் நடந்த சமயத்தில் பார்த்தோம் ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர் என்று அவர்களின் உறவினர்கள் கூறிவருகிறார்கள். புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்…
-
- 0 replies
- 821 views
-
-
தமிழர்குரல் வானொலி முடக்கம்: ஊடகங்களின் மீதான சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதல் ஆரம்பம்...? தாயகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் உரிமைப்போராட்ட செய்தியினை எவ்வித குழப்பமும் இல்லாமல் உலகமெங்கும் ஒலிக்கச்செய்து வந்த தமிழர்குரல் வானொலி இணையத்தின் மீது இணைய தொழிற்நுட்ப தாக்குதல் நடைபெற்றுள்ளது. தமிழர் குரல் வானொலியின் domain: tamilarkural.fm, skype id: tamilarkural ஆகியவற்றினை எதிரிகள் கைப்பற்றியுள்ளனர்(hacking). tamilarkural@hotmail.com அயும் கைப்பற்றும் வேலை நடந்துள்ளது. புலிகளின் குரல் வானொலிக்கு போட்டியாக புதியதாக புலிகளின் குரல் வானொலி ஒன்றிணை ஆரம்பிக்கும் வேலையிலும் சிறீலங்கா கைக்கூலிகள் ஈடுபட்டுவந்ததாக புலிகளி…
-
- 5 replies
- 1.5k views
-
-
சென்னை முதல் டெல்கி வரை ஈழத் தமிழர்களின் நடைபயணம்! 20 டிசம்பர் 2010 இன்று 20-12-2010 அன்று சென்னையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளரின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை! 20-12-2010 நாள்: 16-01-2011 ஞாயிறு நேரம்: காலை 10:00 மணி. இடம் : இராஜீவ்காந்தி நினைவு மண்டபம், சிறிபெரும்புதூர். தமிழர்களைப் புறக்கணித்து, பிரித்தானியரை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்றிய சிங்கள ஆட்சியாளர் 1948ம் ஆண்டு முதல் தமிழ் இனத்தை அழித்து வருகின்றனர். ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புகுத்தி வந்த சிங்கள அரசு இப்போது தமிழர்களின் வாழ்விடங்களையும் …
-
- 7 replies
- 1.1k views
-
-
வௌ்ளவத்தை பிரதான வீதியில் மீண்டும் நிலம் கீழிறங்கியுள்ளது [ பிரசுரித்த திகதி : 2010-12-22 01:45:13 PM GMT ] வௌ்ளவத்தை ரொக்ஸி திரையரங்கு முன் அண்மையில் புனரமைக்கப்பட்ட வீதி சற்று முன் கீழிறங்கியுள்ளது. ஏற்கனவே கீழறங்கி காணப்பட்ட இவ்வீதி அரசாங்கத்தினால் அண்மைகாலத்தில் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இவ்வீதி இன்று கீழறங்கியுள்ளது tamilulakam.com
-
- 0 replies
- 1.1k views
-
-
இஸ்ரேலுடன் இலங்கை தொடர்பு! இஸ்லாமிய, அரபு நாடுகள் சீற்றம் புதன், 22 டிசம்பர் 2010 16:26 தற்போதைய இலங்கை அரசாங்கம் இஸ்ரேலுடன் வைத்துள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்துச் சந்தேகங்களை வெளியிட்டுள்ள அரபு மற்றும் இஸலாமிய நாடுகள் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பலஸ்தீன் மக்கள் தொடர்பில் தற்போது நடந்து கொள்ளும் முறையில் தொடர்பிலும் இந்த நாடுகள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த 300 பேரை இஸரேலுக்குத் தொழிலுக்கு அனுப்பியமை குறித்தும் அவை தமது கவலை வெளியிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. tamilcnn.com
-
- 0 replies
- 643 views
-
-
இந்திய மத்திய அரசா? மலையாளிகள் அரசா? 1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர் 2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர் 3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர் 4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர் 5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர் 6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர் 7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர் 8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் 9. நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர் 10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர் 11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர் 12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர் 13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர் 14. பி.ஜ…
-
- 8 replies
- 1.4k views
-
-
இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும், அவரது பயணத்தையும் நோக்கி, அநுணுகப்பார்த்து தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை எடுத்து ஏமாறுகிறார்கள். ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல் நேசிக்கப்படும் ஒரு அதிமானுடனாக அவர் இன்னும் கருதப்படுவதற்கு பின்னால் அவரின் ஒப்பற்ற ஆளுமையும், தான் நேசித்த எத்தகைய இடர்கள் வரினும் தொடரும் ஓர்மமும் நிறைந்தே காணப்படுகின்றது. இதோ, அவருடைய ஐம்பத்தி ஆறாவது பிறந்ததினமும் வந்துபோய்விட்டது. மிகவும் இருள் சூழ்ந்த ஒரு குழப்பம் நிறைந்த பொழுதில் அந்த மனிதனின் பிறந்தநாள் வந்து போயுள்ளது. வேறு எப்போதையும்விட இப்போதுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் …
-
- 1 reply
- 770 views
-
-
கொழும்பு மாவட்டத்தின் மஹரகம நகர சபையின் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அரச தரப்பின் உறுப்பினர்கள் மூவர் வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியிலிருந்து இருவர் ஆதரவாக வாக்களித்தமை இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். நகர சபையில் ஊழல் மோசடிகள் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டி அண்மையில் நகர சபைக் கட்டிடத்தின் கூரை மீதேறி உண்ணாவிரதம் இருந்த உப தலைவர் சேனக களுபோவிலவும் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார். இதே வேளை வலப்பனை பிரதேச சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு - செலவுத்திட்டப் பிரேரணை அறிக்கை நேற்று 21ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட போது தோல்விய…
-
- 0 replies
- 963 views
-
-
இலங்கை தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானது என்று இலங்கை அரசு கூறியுள்ளது. கொழும்பிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து வெளியானாதாகக் கூறி விக்கிலீக்ஸ் இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள ராஜதந்திர தகவல் பறிமாற்றங்களில், இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை செய்தது, அல்லது அவ்வாறான நடவடிக்கைக்கு துணையாக இருந்தது என்கிற தகவல்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு கூறப்படும் பொய்கள் என்று கூறியுள்ள இலங்கை அரசு, இரகசியத் தகவல்கள் சட்டவிரோதமான முறையில் வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ், அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் பட்ரீஷியா புட்டனிஸை நேற்று சந்தித்த…
-
- 1 reply
- 484 views
-
-
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்த தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ராகுல், இன்று காலை சென்னை ஹோட்டல் தாஜ் கன்னிமாராவில் 120 'அறிவுஜீவிகளை' (intellectuals) சந்தித்தார். இதில் ஊடக, சட்ட, திரையுலக பிரமுகர்கள் (ராம நாராயணன், ஆர்.கே.செல்வமணி, நாசர், நடிகை ராதாவின் மகள் ஆகியோர் உள்பட) கலந்து கொண்டனர். அப்போது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்…
-
- 1 reply
- 887 views
-
-
நாட்டினை பாகுப்படுத்த வேண்டும் என ஒரு சில வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் முயற்சிப்பதாகவும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு இது குறித்து எதுவும் தெரியாது எனவும் தேசிய விடுதலை முன்னணி அரசியல் குழு உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சில் சில புல்லுருவிகள் ஊடுருவியுள்ளனர். பீரிஸ் அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ இதனை அனுமதித்துள்ளார் எனவும் கூறினார் பியசிறி. மேலும், இவ்வாறு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் மூவர் ஐக்கிய நாடுகள் நபை நிபுணர்கள் குழு இலங்கைக்கு வர தூண்டுதல் வழங்குவதாகவும், இது குறித்து முற்று முழுதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தீவிரவாதத்தை தோற்கடித்த போதும் பிரி…
-
- 0 replies
- 662 views
-
-
இராச வீதி சவுக்கு மரங்கள் கேட்பாரின்றி வெட்டப்படுகின்றன [22 டிசம்பர் 2010, புதன்கிழமை 12:00 மு.ப இலங்கை] கோப்பாய் இராச வீதியின் இருமருங்கும் அழகுக்காக நடப்பட்டிருந்த சவுக்கு மரங்களில் இருந்து கிளைகள் கடந்த நாள்களில் பல்வேறு நிகழ்வுகளுக்காக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வீதியின் ஓரங்களில் நடப்பட்டு விருட்சமாக இருந்த சுமார் 75 வரையான சவுக்கு மரங்கள் அனைத்திலும் கிளைகள் வெட்டப் பட்டு அவை மொட்டையாகக் காட்சியளிக்கின்றன. சவுக்குக் கிளைகளை வெட்டி எடுத்துச் செல்லும் சிலர் அவற்றை விற்பனை செய்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. இந்த மரங்கள் யாவும் 9192 காலப் பகுதியில் நடப்பட்டு பராமரிக் கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக இப்பகுதி மரங்களில் இருந்த…
-
- 1 reply
- 864 views
-
-
தமிழ்நாட்டில் தங்கி இருந்த 'காட்டிக் கொடுப்பு' கருணா? அதிரவைக்கும் விக்கிலீக்ஸ் 'விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கையில் நடந்த ஈனத்தனமான செய்கைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சி யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன! ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி., கருணா குழு ஆகியவற்றுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நெருக்கம் இருந்ததையும், இவர்களுக்கு சந்திரிகா காலத்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஐ.நா.நிபுணர்கள் குழுவிடம் சாட்சியங்களை அனுப்பலாம் - இம்மாதம் இறுதிவரை நீடிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-22 07:21:14| யாழ்ப்பாணம்] இலங்கையின் போர்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவிடம் சாட்சியங்களை சமர்ப் பிப்பதற்கான கால எல்லையை இம்மாதம் இறுதிரை நீடிக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றிப்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இன்னர் சிற்றிப்பிரஸின் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்ளிவிக்கு பதில் வழங் கிய ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை நேற்றுத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நிபுணர்கள்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின் அஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் சில இதுவரையில் முறையாகக் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்…
-
- 1 reply
- 487 views
-
-
நாங்கள் கேள்விகள் கேட்போம்; ஆனால் அவர்கள் எங்களைக் கேட்க முடியாது! நிபுணர் குழுவுக்கு நல்லிணக்க ஆணைக்குழு சாட்டை இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவினருக்கு தங்களிடம் கேள்விகளைத் தொடுக்கும் அதிகாரம் இல்லை என்று நல்லிணக்கக ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ஐ.நா நிபுணர் குழுவின் சாட்சியங்கள் பதிந்து கொள்ளப்படும். எமது விதிமுறைகளின் படி நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐநா. நிபுணர்களிடம் கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால் அவர்கள் எங்களிடம் கேள்விகளை முன் வைக்க முடியாது. ஐ.நா …
-
- 1 reply
- 491 views
-
-
http://www.yarl.com/files/101221-munnal-porali-interview.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/files/101221-Ilankumaran.mp3
-
- 0 replies
- 1.1k views
-
-
வடமத்திய மாகாணத்தில் உள்ளோர் மழைநீரை அருந்துவது சிறந்தது – ஆய்வில் தகவல் _ வீரகேசரி இணையம் 12/22/2010 9:41:41 AM சிறுநீரக வியாதியில் இருந்து தம்மைக்காத்துக் கொள்ள வடமத்திய மாகாணத்திலுள்ளோர் மழை நீரை அருந்துவது சிறந்தது எனத் திடுக்கிடும் தகவலை பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய குழுவொன்று கூறுகிறது. பேராதனைப் பல்கலைக்கழக வைத்தியத்துறையைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட மற்றுமொரு ஆய்வின் மூலம் சிறுநீரக வியாதியை ஏற்படுத்துகின்ற பச்சை அல்கா எனும் தாவரத்தின் தாக்கம் வடமத்திய மாகாணத்தில் உள்ள கிணற்று நீரிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி தம்மிகா மெனிக்கே திசாநாயக்க தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வின் படி வடமத்திய மாகாண…
-
- 0 replies
- 809 views
-
-
“தமிழீழம் தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”: மே 17 இயக்கம் தீர்மானம் மே பதினேழு இயக்கத்தினரால் “தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்” என்ற தலைப்பில் மதுரையில் கடந்த 19.12.2010 அன்று கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் “தமிழீழம் தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்ற தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. அனைவரும் காண வேண்டிய காணொளி இணைப்பு மதுரை கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் 1 . இந்திய பெருங்கடலை தமிழர் பெருங்கடல் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். 2 ) தமிழீழம் தனிநாடு என தமிழக சட்டமன்றத்தி…
-
- 0 replies
- 783 views
-
-
வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைப்பதா? ராஜா பரமேஸ்வரி:- புலிகளை உயிர்ப்பிக்க வைக்கும் முனைப்புக்களின் பின்னணியில் 2009 ஆண்டு மே 18 – 19களில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதாக அல்லது வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக அல்லது துடைத்தெறியப்பட்டதாக இலங்கை அரசாங்கம் வெற்றி விழாக்களை கொண்டாடியது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மூத்த தளபதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக பெரும் பட்டியலையே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் படங்களுடன் பட்டியலிட்டன. ஆரம்பத்தில் 17 ஆயிரம் புலிகள் சரணடைந்தார்கள் எனத் தொடங்கி இப்போ 9 ஆயிரம் புலிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ தனிநாடு கோரிக்கையை முதன் முதல் வைத்த நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் நினவு நாள் இன்று தமிழீழம் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா அவர்களின் நூறாவது பிறந்தநாள் 2010, ஒக்ரோபர் 18 ஆம் திகதியான இன்றாகும். இவரே 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் நிறுவுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 95 வயதாக இருந்தபோது 2005 ஆம் ஆண்டும் ஜூலை மாதத்தில் தமிழ்நெட் இணையத்தளம் இவரைப் பேட்டி கண்டிருந்தது. ஆனால் இவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். மேற்படி 2005 ஆம் ஆண்டின் பேட்டியில், தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது, தமிழர்களுக்கென்று தனிநாடு மட்டுமே இதற்கான தீர்வு என்று அவர் வலிய…
-
- 0 replies
- 615 views
-
-
டென்மார்க் வந்த ஆயுததாரி பிள்ளையான் கைது செய்யப்படலாம்? 2 ம் இணைப்பு சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலைக்கு ஒத்தாசையாக இருந்தவனும், தமிழத் தேசிய விடுதலை போராளிகள் மற்றும் உணர்வாளர்களை படுகொலை செய்தவனுமான ஒட்டுகுழு தலைவர் பிள்ளையான் எனப்படும் ஆயுததாரி சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது ஒருசில ஐரோப்பிய வாழ் சகாக்களை சந்திப்பதற்காக டென்மார்க் வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை கடந்த வாரமே அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகார குழுவின் சிறப்புப்பிரிவினர் டென்மார்க் அரசின் அனைத்துலக குற்றவியல் பிரிவினரிடம் தமிழ் மக்கள் மீது ஆயுததாரி பிள்ளையான் புரிந்த மானிடத்திற்கெதிரான குற்றங்களில் சிலவற்றை சேகரித்து டென்மார்க் தமிழ…
-
- 0 replies
- 758 views
-