Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வியாழக்கிழமை, 9, டிசம்பர் 2010 (14:22 IST) விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வைகோ வழக்கு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது: கடந்தமே 14ந் தேதி விடு தலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறி விப்பாணை ஒன்றை வெளியிட்டது. இதுபற்றி விசாரித்த தீர்ப்பாயம் புலிகள் மீதான தடை நீட்டிப்பை உறுதி செய்தது. மேலும் அதை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து கடந்த நவம்பர் 12 ந்தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பானது இயற்கை நீதி…

  2. அரசு சார்பில்லாத உதவி நிறுவனங்கள்… : ஞானசுந்தரம் மனோகரன் ************************************************************************************************** இலங்கையில் உள்ள அந்நிய நிதி உதவியால் செயற்படும் அரசுசாராத அமைப்புகள் எனப்படுவன மறைமுகமாக துயரம் விளைவிக்கும் அமைப்பு வடிவங்கள்தான். அவை பெரும் முற்போக்கான அமைப்புகள் போலநடிக்கும். சமூக உணர்வுள்ள பல படித்த இளையோர் இவ்வமைப்புக்களை நோக்கி உள்வாங்கப்படுகின்றனர். அவர்கள் போராடுவதற்குப் பதில் சமூக சேவை என்ற பெயரில் இவ்வமைப்புக்க்ளோடு இணைந்து கொள்கின்றனர். மக்கள் சார்ந்த எதிர்ப்பியக்கங்கள் குறித்துச் சிந்திக்க கல்வியறிவுடைய யாரும் முன்வருவதில்லை இன்று வடக்கு கிழக்கில் உள்ள பாதிக்கும் உட்பட்ட மக்களுக்கும் ஏன…

    • 0 replies
    • 562 views
  3. கடற் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் வீரகேசரி இணையம் 12/9/2010 4:23:56 PM கடற் பாதுகாப்பு மற்றும் கடற் படை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, 6 கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இலங்கையின் கடற் படையின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் நடைபெற்றன. இதில் பிரதம அதிதிகளாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

  4. மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.http://uyirambukal.blogspot.com/2010/12/blog-post_5570.html

    • 0 replies
    • 1.9k views
  5. விடுதலைப் புலிகளின் தளபதி ரமேஸ் பற்றிய காணொலி போலி "சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் வியாழக்கிழமை, 09 டிசம்பர் 2010 05:26 மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது col.rameshவிடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்புத் தளபதி கேணல் ரமேஸ் சிறிலங்காப் படையினரால் சித்திரவதை செய்யப்படுவதாக வெளியான காணொலிப் பதிவு போலியானது என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல தகவல் வெளியிடுகையில், “இந்தக் காணொலிப் பதிவு போலியானது. புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் சில, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான காணொலிப் பதிவுகளைத் தயாரித்து பொதுமக்களை தவறாக வழிநடத்த முனைகின்றன. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது போன்று விட…

  6. கே.பி.யின் சொத்து விபரங்களை அரசு வெளியிட வேண்டும்:ஜோன் அமரதுங்க வியாழக்கிழமை, 09 டிசம்பர் 2010 10:05 தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எதிராக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை அகற்றி சாதாரண சட்டத்தின் கீழ் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதனிடம் பாரியளவு சொத்துக்கள் காணப்படுவதாக அரசாங்கம் முன்னர் தெரிவித்த போதிலும் இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டி…

  7. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அதை செய்லபடுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனை மேற்கு நாடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புக் காரணமாக பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் உரையாற்ற முடியாமல் போனது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இவர்கள் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் புலம்பெயர் தமிழர்களைக் கடுமையாக சாடியிருந்தனர். இந்தநிலையில் பிரபா கணேசனை மேற்கு நாடுகளுக்கு …

    • 0 replies
    • 1.3k views
  8. பிரித்தானியா புலிகளின் பூமியாக மாற்றமடைந்துள்ளது – சம்பிக்க ரணவக்க 09 December 10 02:23 am (BST) பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகளின் பூமியாக மாற்றமடைந்துள்ளதென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத அமைப்மொன்றிடம் பிரித்தானியா மண்டியிட்டுள்ளமை வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய தமிழ் நாசிவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பிரித்தானியா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் ஆதரவளித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொத்தணி குண்டுகளை வைத்திருக்கும் பிரித்தானியா போன்ற நாடு…

  9. தலைமறைவாகத் திரியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரையும், ஆயுதக் குழுவினரையும் ஒன்று திரட்டி நாட்டில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் திட்டமிடப்பட் டுள்ளது என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். இதற்கு சர்வதேச அமைப்புகளிடம் உதவிகளைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்பகரமான தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். புலிகளின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்த பிரதமர் இதற்கான பணிப்புரைகளும் விடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுக…

  10. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு குறித்து சர்வதேச மட்டத்தில் முழுமையான நீதி விசாரணை வெளிப்படையாக வேண்டும் எனவும் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்றும் யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே .சிவாஜிலிங்கம் விக்கிலீக்‌ஸ் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். Eelanatham

  11. சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை சரிபடுத்திக் கொள்ள வேண்டுமாக இருந்தால், சர்வதேச யுத்த குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளரை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு யுத்த குற்றவாளியென முத்திரை பதிக்க ஒருசில ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். அதேபோன்று எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி மறுசீரமைப்பினை தடுப்பதற்கும் கூட ஒருசிலர் சூழ்ச்சி செய்கின்றனர். அவறிற்கு முகம் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம், கட்சி ம…

  12. கிளிநொச்சி மாங்குள பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கபடும் விதத்தில் படைவீரர் ஒருவரது சடலம் நேற்று அதிகாலை 5 மணிக்கு படைவீரர்களால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இடத்துக்கு மரண பரிசோதகர் செல்ல தாமதம் ஏற்பட்டதனால், மரணபரிசோதனை பின் சடலம் நேற்றிரவு 10 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவிரையில் பிரேத பரிசோதனை இடம்பெறவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Eelanatham

  13. அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-09 07:36:41| யாழ்ப்பாணம்] நடைமுறையிலுள்ள அவசரகாலச்சட் டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப் பதற்கான பிரேரணை நாடாளுமன்றில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது.அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 145 வாக்குகளும் அதற்கு எதி ராக 15 வாக்குகளும் கிடைத்த நிலையில் 130 பெரும்பான்மை வாக்குகளால் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராக வாக்களித்தன. ஆளும் கட்சியும், அரசா ங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. valampurii.com

  14. சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்த 29 குடும்பங்கள் வேறிடங்களுக்கு மாற்றம் * Thursday, December 9, 2010, 4:32 வடபகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் முகமாக, சுன்னாகம் ரயில் நிலையத்தில் குடியிருந்த 29 குடும்பங்கள் அங்கிருந்து வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த இம்மக்கள், சுன்னாகம் ரயில்; நிலையக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ரயில் நிலையத்தில் குடியிருக்கும் மக்களை வேறிடங்களுக்கு மாற்றுமாறும் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயில்; நிலையத்தில் தங்கியிருந்த குடும்பங்களில் …

  15. இந்தியாவின் அழுத்தங்களை முறியடிப்பதற்கே சர்தாரி சிறீலங்கா வந்தார் * Thursday, December 9, 2010, 4:10 சிறீலங்கா மீது இந்தியா எந்த அழுத்தங்களையும் மேற்கொள்ளாதவாறு அதனை முறியடிப்பதற்கே பாகிஸ்தான் அதிபர் அசீப் அலி சர்தாரி கடந்த மாதம் சிறீலங்கா வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்திய வெளிவிவகார அமைச்சர் சிறீலங்காவில் நின்றபோதே சர்தாரி சிறீலங்கா வந்துள்ளார். அவருடன் பாகிஸ்த்தான் நாட்டு வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், முதலீட்டுச்சபை தலைவர் உட்பட பெருமளவான முக்கிய உறுப்பினர்கள் சிறீலங்கா வந்திருந்தனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவின் பயணத்தை முறியடிக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தானுக்கும் – சிறீலங்காவுக…

  16. அம்பாறை அஷ்ரப்நகரில் குடியிருக்கும் 31 பொதுமக்கள் காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அரசாங்க அதிபர் உத்தரவு 08 December 10 04:37 pm (BST) அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, 01 டிசெம்பர் 2010 எனும் திகதியிட்டு அரசாங்க அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதம் தனக்கு அரசாங்க அதிபரிடமிருந்து கிடைத்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரசேதச செயலாளர…

  17. ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு குரலும் சிறீலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் “ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு குரலும் சிறீலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும்” என்ற தலைப்பில் பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவை ஒன்றுகூடல் ஒன்றை இன்று 08.12.2010 புதன்கிழமை பி. பகல் 14:00 மணிக்கு சிறீலங்கா அரசின் தூதரகம், மற்றும் பல்வேறு நாட்டு தூதரகங்கள், அமைந்திருக்கும் Place du Paraquay( Porte Dauphine ) என்னும் இடத்தில் ஏற்பாடு செய்திருந்தது. பிரான்சு நாட்டின் காலநிலை நேற்றும் இன்றும் மிகவும் மோசமான நிலையிலும்,(கடந்த 54 வருடங்களுக்கு பிற்பாடு) பனிகொட்டல்களுக்கு மத்தியிலும் இவ் ஒன்றுகூடல் திட்டமிட்டபடி நடந்தேறியது. அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகிய இவ் ஒன்றுகூடல் மக்கள் ஒன்று பத்தாகி பத்து ந…

  18. காணாமல் போனவர்கள் தொடர்பில் லண்டனில் ஆறாவது அனைத்துலக மாநாடு உலகில் காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆறாவது அனைத்துலக மாநாடு லண்டனில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் நடைபெற்றுவரும் வன்முறைகளில் காணாமல்போன சமூகங்களின் அமைப்புக்கள் இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன. இன்று (09) ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்ரும் 12 ஆம் நாள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பிரித்தானியா தமிழர் பேரவையும் அங்கம் வகிப்பதால் காணாமல்போனவர்களின் உறவினர்களை அதில் கலந்துகொள்ளுமாறும், காணாமல்போனவர்களின் புகைப்படங்கள் இருப்பின் அதனை விபரங்களுடன் பிரித்தானியா தமிழர் பேரவைக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் பல முக்கிய உறுப்ப…

  19. பிரித்தானியா தமிழ் மக்கள் கொடுத்த அதிர்ச்சி – மலேசியாவில் கூட தரையிறங்க அஞ்சிய மகிந்தா சிறீலங்கா அரச தலைவரும் பிரதம போர்க்குற்றவாளியுமான மகிந்தா ராஜபக்சாவை பிரித்தானியாவில் கைது செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டத்தால் அதிர்ச்சியடைந்து தப்பியோடிய மகிந்தா மலேசியாவில் கூட விமானத்தை தரையிறங்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: பிரித்தானியாவில் இருந்து தப்பியோடிய மகிந்தா பயணித்த சிறீலங்கன் எயர் லைன் விமானம் மலேசியா வழியாகவே சிறீலங்கா சென்றது. அதனால் மலேசியா செல்லும் வெளிநாட்டவரும் அதில் பயணித்தனர். ஆனால் மிகவும் அச்சமடைந்து காணப்பட்ட மகிந்தா விமானத்தை மலேசியாவில் தரையிறக்க அனுமதிக்கவில்லை. நேரடி…

  20. இராசீவ் கொலைவழக்கில் சிறையில் வாடும் தமிழர்களை மீட்க குரல் கொடுப்போம் இராசீவ் கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் நம் தமிழர்கள் ஏழு பேரை மீட்க உலக மனித உரிமை நாளில் சென்னையில் “7 தமிழர்கள் விடுதலை மாநாடு” பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. http://meenakam.com/2010/12/09/15672.html

  21. உதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில் இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் வந்து விழுந்துக் கொண்டே இருக்கின்றன ஈழப்போரின் கொலைக் குற்ற காட்சிகள். ஈவு இரக்கம் அற்ற மனித மாண்பிற்கு அப்பாற்பட்ட காட்சிகளை கண்ட எவரும் கண்கள் நிறைந்து தலை குனிவர். படக் காட்சிகள் பலவற்றை வைத்துள்ள இங்கிலாந்தின் சேனல் 4 மானுட சமூகத்தின் நாகரீக வரையறைகளுக்கு உட்பட்ட காட்சிகளைத்தான் தங்களால் வெளியிட முடிந்தது என்றும் வெளியிட முடியாத அளவிற்கு காண சகிக்காத கொடுங்கோலங்களை கொண்ட படக்காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கின…

  22. இரத்தினபுரியில் தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டம் _ வீரகேசரி இணையம் 12/9/2010 9:15:49 AM இரத்தினபுரி ரக்வானை வீதி மாதம்பையில் தனியார் பஸ் சாரதி ஒருவரை தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த சாரதியொருவர் கொலன்னாவை - கொழும்பு தனியார் பஸ் சாரதியை தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இரத்தினபுரியில் இன்று காலை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  23. தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள் – மதுரை கருத்தரங்கம் – மே 17 இயக்கம் தோழர் தியாகி முத்துகுமார் தீக்குளிப்பிற்கு பின் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு பல்வேறுவகைப்பட்ட போராட்டத்துடன் தேர்தலையும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் சந்தித்தோம். தமிழ் சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த கொடூர அரசியல் படுகொலை நிகழ்வாக இது பதிவானது. ஈழம் சார்ந்து ஒவ்வொரு உணர்வாளர்களும் தம்மளவில் பல்வேறு இயக்கங்களுடனும் தனிப்பட்ட முறையிலும் அரசியல் நிகழ்வில் பங்கேற்றோம். அவலமான பின்னடைவான ஒரு நிகழ்வு மே 17 ,18 அன்று நிகழ்ந்து முடிந்தபோது வலியான மனச்சுமையுடன் அமைதி காத்தது தமிழகம். தமிழீழ விடுதலை போரில் சிங்கள அரசு உலக அரசுகளின் துணையோடு நடத்திய தமி…

  24. சிங்களன் கொன்ற மீனவர்களில் காங்கிரஸ் தொண்டனும் இருக்கிறான்! – இயக்குநர் மணிவண்ணன் வேலூர் சிறையில் இருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமானை சந்தித்துவிட்டு வந்திருக் கிறார் இயக்குநர் மணிவண்ணன். மனிதரை சந்தித்தபோது, புயல் மழைபோல் கொட்டித் தீர்த்துவிட்டார்! ”சீமான் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று சொல்கிறார்களே?” ”வரும் சட்டமன்றத் தேர்தலில் ‘நாம் தமிழர்’ இயக்கம் போட்டியிடாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார் சீமான். அவர் ஏதோ எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளை வாங்குவதற்காக மைக் பிடிக்கும் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை உணர்ந்தபோது, எனக்குப் பெருமையாக இருந்தது. இந்தியத் தேர்தல் லட்சணம் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இந்தியாவில் ஜனநாயகம் புதைகுழிக்குப் போய் …

  25. ‘பிரகதி’ – குறும்பு சிரிப்பும்,மழலை மொழியுமாய் தவழ்ந்த ஒன்னரை வயது அழகு குழந்தை. இவளின் துள்ளலும்,கொள்ளையடிக்கும் குறும்புகளும் 23 நவம்பர் வரைதான் நீடித்தது.அதன்பின்….. அங்கே ஈழத்தில் குண்டுகளால் உறவுகளை கொன்றனர் எதிரிகள். இங்கோ ஏதிலியாய் வந்த நிர்மளானந்தன்,சஜீவினியின் பிஞ்சு குழந்தையை தவறான சிகிச்சையால் கொன்றுள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். ப்ரகதிக்கு வாய் அன்னத்தில் பிரச்சனை என்பதால் கடந்த நவம்பர் 19 அன்று நாகியம்பட்டி அகதி முகாமில் இருந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அவரின் பெற்றோர்கள். அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறிய மருத்துவர்கள் அதற்கான நாளாக 23 தேதியை குறித்து வேலையை தொடங்கினர். அறுவை சிகிச்சை செய்யும் முன் அனஸ்தீசியா எனும் மயக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.