ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 9, 2010 பூநகரி 4 ஆம் கட்டையிலுள்ள விக்னேஸ்வரா வித்தியாலயம் தொடர்ந்தும் இராணுவத் தளமாக இயங்கி வருவதால் இப்பிரதேச மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இராணுவத்தை விலகி தமது பாடசாலையினை இயங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டும் இராணுவத்தினர் இன்னமும் அகலவில்லை. அரசபுரம், செம்மன்குன்று, 4 ஆம் கட்டை, தில்லையடி, பள்ளிக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் தமக்கு அருகிலுள்ள விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர முடியாது சுமார் 10 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பூநகரி மகாவித்தியாலயத்திற்குச் செல்ல வேண்டிய பரிதாபகரமான நிலையில் உள்ளனர். பல மாணவர்கள் இந்தப் 10 கிலோ மீற்றர் தூரத்தையும் நடந்தே செல்லவேண்டிய நிலையி…
-
- 0 replies
- 696 views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 9, 2010 கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான மடம் இராணுவத்தினால் பாவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் மடப்பள்ளி இராணுவத்தின் சமையல் கூடமாக பாவிக்கப்படுகின்றது. இங்கு அசைவ உனவுகள் சமைக்கபப்ட்டு கோயில் வளாகத்தை அசிங்கபப்டுத்திக்கொண்டிருக்கின்றனர் இராணுவத்தினர். கூடவே பக்தர்களுக்கென கட்டப்பட்ட ஒன்பது மலசல கூடங்களும் இரணுவத்தினரால் பாவிக்கப்படுகின்றன. ஆகவே இந்த இடங்களில் இருந்து படையினர் உடனடியாக வெளியேறவேண்டும் என நிர்வாகம் கோர்க்கை விடுத்துள்ளது. ஆலயத்திற்கு அருகிலுள்ள கடைகளிலிருந்தும் படையினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையினை கூடிய விரைவில் மேற்கொண்டு, ஆலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீளவும் பெற…
-
- 0 replies
- 473 views
-
-
பொலிஸ் அதிகாரிகள்என்று கூறி மீசாலைப்பகுதியில் வீடுகளுக்குச் சென்று பணம் சேக ரித்த இரண்டு சிங்களவர்களை சாவகச்சேரி பொலிஸாரி னால் நேற்றுக் கைது செய்யப் பட்டுள்ளனர் .இந்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது: மீசாலை மேற்கு காளிகோயில் வீதியில் பிற்பகல் 3 மணி யளவில் வீடுகளுக்குச் சென்று அனுராதபுரத்தில் இயங்கும் அநாதை சிறுவர் இல்லத்துக்கு என்று கூறி குறித்த இருவரும் பணச் சேகரிப்பில் ஈடுபட்டுள் ளனர். இதன்போது பணம் வழங்க மறுத்தவர்களை தாம் பொலிஸ் அதிகாரிகள் எனவும் அதுசம்பந்தமான புகைப்படங் களையும் காண்பித்துமிரட்டி யுள்ளனர். சட்டத்தரணி வீடென்றில் சென்று பணம் கேட்டபோது நீதிமன்றத்தில் இருந்த கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதை அடுத்து சம்பவம் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்…
-
- 0 replies
- 679 views
-
-
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல்கள் தமிழக மக்களுக்குச் சிறப்பான வகையில் சேவை செய்ய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் பிரத்தியேகமான மின் அஞ்சல் முகவரி தமிழகத்தின் 234 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்களுக்கும், தேசிய தகவல் மையத்தால் (NIC) தனி மின் அஞ்சல் முகவரிகள் (E-Mail) ஏற்படுத்தப்பட்டுள்ளன http://www.tn.gov.in/telephone/email-MLA.html முத்தமிழ் சென்னை
-
- 0 replies
- 790 views
-
-
Nov 9, 2010 / பகுதி: செய்தி / வடமராட்சி கடற்கரையில் கடல் பெருக்கெடுத்தது வடதமிழீழம் யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரையில் கடல் பெருக்கெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாகர்கோவில், மருதங்கேனி வீதியில் வெள்ளம் ஏற்பட்டது. தமிழ் நாட்டை நோக்கி நகர்ந்த ஜால் சூறாவளியின் தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யாழ்ப்பாண குடாநாட்டில் மீன்பிடிக்கு தயாரான மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை. நேற்றைய தினமும் நேற்று முன்தினமும் கடற்றொழிலுக்கு செல்லாத நிiயில் அவர்களின் வருமானம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளை வடமராட்சி மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் என்பன சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. pathivu
-
- 0 replies
- 961 views
-
-
ஆறு நாட்களில் அகதிகளுடன் ஏழு படகுகள் - கிறிஸ்மஸ்தீவு முகாம் நிரம்பி வழிகிறது திகதி: 09.11.2010 சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் 81 படகு அகதிகள் நேற்றுமுன்தினம் காலை கிறிஸ்மஸ் தீவு அருகே அவுஸ்ரேலியக் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுக்கு எட்டு கடல் மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் படகில் 81 அகதிகள் மட்டுமே இருந்தனர். படகில் மாலுமிகள் எவரும் இருக்கவில்லை. இந்தப் படகில் மாலுமிகள் இல்லாததால் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பான முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளதாக அவுஸ்ரேலியாவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புப் பேச்சாளர் மைக்கல் கீனன் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தில்களில் ஈடுபடுபவர்கள் இரகசியமான வலைப்பின்னல் ஒன்றை வைத்திருப்ப…
-
- 0 replies
- 986 views
-
-
சந்திரிகா மீதான கொலை முயற்சி வழக்கு- தண்டனையைக் குறைக்குமாறு தமிழ் இளைஞர் மேன்முறையீடு திகதி:09.11.2010 சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் மீது கொழும்பு நகர மண்டபத்தில் வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் 30 வருடச் சிறைத்தண்டனையைப் பெற்ற தமிழ் இளைஞர் தனது தண்டனையைக் குறைக்கும்படி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சக்திவேல் இலங்கேஸ்வரன் என்ற இளைஞர் இந்தத் தாக்குதலுக்கான வெடிபொருட்களை வன்னியில் இருந்து கொழும்புக்குக் கடத்தி வர தான் உதவியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு 30 வருடச்சிறைத்தணடனையை கொழும்பு நீதிமன்றம் விதித்திருந்தது. கொழும்பு புத…
-
- 0 replies
- 409 views
-
-
வெள்ளவத்தை கடற்கரையில் தமிழ்ப் பெண்ணின் சடலம் மீட்பு திகதி:09.11.2010 வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் நேற்று நண்பகல் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தினை இதுவரையிலும் அடையாளம் காணமுடியாதுள்ளது என தெரிவிக்கும் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். கரையொதிங்கிய சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கரையொதிங்கியிருந்தது. அப்பெண் ரோஸ் நிறத்திலான சல்வார் அணிந்திருந்ததுடன் கால்விரலில் மிஞ்சியும் அணிந்திருந்தார். இதிலிருந்து அ…
-
- 0 replies
- 910 views
-
-
Nov 9, 2010 / பகுதி: செய்தி / தொல்பொருள் ஆய்வு - தமிழரின் பூர்வீக பிரதேசங்களை பௌத்த பூமியாக சித்தரிக்கும் செயற்பாடு கடந்த 120 வருடங்களுக்கு பின்னர் தமிழீழத்தின் வடபிராந்தியத்தில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பல புராதன இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நடுவண் தமிழீழம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இந்து மற்றும் பௌத்தபுராதன ஆலயங்களின் தொல்பொருள்கள் கண்டுடிப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஸ்ரீலங்கா தொல்பொருள் ஆய்வு விடயங்களில் காட்டி வரும் அதீத அக்கறையானது, தமிழரின் பூர்வீக பிரதேசங்களை பௌத்த பூமியாக சித்தரிக்கும் செயற்பாட்டின் ஒ…
-
- 0 replies
- 494 views
-
-
"மனிக்பாம்'' முகாமில் இருந்து 514 பேர் கதிர்காமர் முகாமுக்கு பலவந்தமாக மாற்றம் நவ 9, 2010 "மனிக்பாம்'' முகாமில் இருந்து 514 பேர் கதிர்காமர் முகாமுக்கு பலவந்தமாக மாற்றம் நவ 9, 2010 Font size: Decrease font Enlarge font தமிழீழத்தின் வவுனியா ”மனிக்பாம்'' இடைத்தங்கல் முகாம் வலயம் 4 இல் இருந்து 219 குடும்பங்களைச் சேர்ந்த 514 பேர் நேற்று முன்தினம் கதிர்காமர் இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பிரதேச கிராம சேவையாளரின் ஏற்பாட்டில் அவர்கள் பேரூந்துகள் மூலம் கதிர்காமர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா படையினரால் பலாத்காரமாக பேரூந்துகளில் முகாம் மக்களில் ஒருபகுதியினர் ஏற்றிச் செல்லப்பட்டிருந்தனர். ஆனால் நேற்…
-
- 0 replies
- 283 views
-
-
கொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பு நகரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் சூதாட்ட நகரத்தைப் போன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள சூதாட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு நகரம் சூதாட்ட புரியாக மாற்றமடைந்து விடும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு மாநகரசபையை அதிகாரசபையாக உருவாக்கி அதன் மூலம் அரசாங்கம் தமது இலக்குகளை எட்டுவதற்கு முயற்சிப்பதாக கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக கட்சி பேதம் பாராட்டாது வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி.யின…
-
- 0 replies
- 489 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விருப்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போதே பீரிஸ் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும். யுத்த காலப்பகுதியில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றது" என தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 555 views
-
-
ஜேர்மன் அரசு தாராளமாக உதவுகின்ற போதிலும் “மெனிக்பாம்” முகாமில் போதிய வைத்தியர்களில்லை யாழ். வந்த ஜேர்மன் குழு குற்றச்சாட்டு வவுனியா மெனிக்பாமிலுள்ள வைத்தியசாலைக்கு ஜேர்மன் அரசு உதவிகளை வழங்கி வருகின்ற போதும் அங்குபோதிய வைத்தியர்கள் இல்லையென்பதுடன் தாம் எதிர்பார்த்தளவில் ஏற்பாடுகள் எவையும் அங்கு ஏற்படுத்தப்படவில்லையென யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜேர்மன் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ். மாநகர சபையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இதனை அவர்கள் தெரிவித்தனர்.இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வந்தபோது மெனிக்பாம் தடுப்பு முகாமிற்கும் சென்றிருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததைப் போல் அங்குள்ள வைத்தியசாலைக்கு உரிய ஏற்பாடுகளும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவி…
-
- 0 replies
- 368 views
-
-
ஸ்ரீ லங்கா அறைகூவல்: கோதுமை மா மீது போர் (பி.பி.சி) சுமார் இரண்டாயிரம் வெதுப்பகங்கள் ஸ்ரீ லங்காவில் மூடப்பட்டுள்ளது. இந்த மூடல்கள் ஸ்ரீ லங்காவின் கோதுமை மாவிற்கு எதிரான நடவடிக்கைகளால் நிகழ்ந்திருக்கிறது. புலிகளுடன் போர் முடிந்து பதினெட்டு மாதங்களின் பின், ஸ்ரீ லங்கா ஒரு புதிய எதிரிக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியிருக்கிறது. கடந்த சில நாட்களாக, ஸ்ரீ லங்கா பல வியாபார தளங்களில் கோதுமை மா விற்பனையை தடை செய்து வருகிறது. ஸ்ரீ லங்கா இனவாதிகள் "கோதுமை பயங்கரவாதம்" என்று வேறு பேர் சூட்டி அழைக்கிறார்கள். ஸ்ரீ லங்காவில் கோதுமை மா உணவுகளுக்கு அதிக வரவேற்பிருக்கிறது. இங்கு பாண், ரொட்டி, கேக் மற்றும் இனிப்பு பண்டங்களை தயாரிக்க கோதுமையை பாவிப்பார்கள். …
-
- 2 replies
- 786 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி மாத்தளை நகரின் மணிக் கூட்டு கோபுரத்துக்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார தலைமையில் சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பொன்சேகாவை விடுதலை செய்யகோரியும் தற்போது நாட்டில் நிலவிவரும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்(வீரகேசரி ) http://www.tharavu.com/2010/11/blog-post_9253.html
-
- 2 replies
- 600 views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 8, 2010 இதுவரை காலமும் தமிழ் மக்கள் தான் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்று வந்துள்ளனர். இந்த மனித உரிமை ஆணைக்குழுவினை பிக்குகளும் சிங்கள அரசியல் வாதிகளும் இதுவரைகாலமும் புறக்கணித்தே வந்துள்ளனர். ஆனால் இப்போ பிக்குகளும் நியாயம் கோரி செல்லும் நிலை வந்துள்ளது. பல்கலைக்கழக பௌத்த பிக்கு மாணவர்கள் முகம்கொடுக்கும் அநீதியான பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையரகத்தில் முறைப்பாடொன்றை இன்று காலை சமர்ப்பிக்கவுள்ளதாக கலைப் பீட மாணவர் சங்க செயலாளர் கம்புருபிட்டிய ஞானேஸ்வர தேர தெரிவித்துள்ளார். ஓக்டோபர் 24 ஆம் திகதி பிக்கு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்ப்பட்ட பிரச்சினையின் காரணமாக அண்மையில் 17 பிக்கு மாணவர்கள் பல்கலைக்கழ…
-
- 1 reply
- 730 views
-
-
வெளிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆபத்தில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். பொன்சேகாவின் பாதுகாப்பு எந்த வகையிலும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளவாட மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 30 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு நேற்றைய தாக்குதல்களின் போது எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திற்கும், சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கும் இடையில் இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.tharavu.com/2010/11/blog-post_6247.h…
-
- 0 replies
- 451 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் தலைமையிலான தீர்ப்பாயம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி, சென்னை, ஊட்டி என பல்வேறு இடங்களில் நடந்த இந்தக் கூட்டங்களில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என வாதிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாதிட முடியும் என்று விக்ரம்ஜித் கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த வாரம் சென் னையில் நடைபெற்ற தீர்ப்பாயக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் விஜயரத்தினம் சிவநேசன் வழக்கறிஞர் ராதாகிரு ஷ்ணன் மூலம் தீர்ப்பாயத…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழத் தேசியக் கொடி விழிப்பு நிகழ்வு பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 7 நவம்பர், 2010 ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் மிஸ்ஸிசாகா வளாகம் தனது முதலாவது தமிழ் அடையாள பரப்புரைப் போராட்டத்தை கடந்த வியாழன் கார்த்திகை 4ம் நாள் முன்னெடுத்தது. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த எமது மாவீரர்களை கௌரவிக்கும்முகமாகவும் அவர்களின் தியாகங்களை எண்ணிப்பார்க்கும்முகமாகவும் கார்த்திகை மாதத்தை நினைவுகூரும் மாதமாக அறிவித்துள்ளது. தேசியக்கொடி வாரமான முதலாவது வாரத்தில், பல்கலைக்கழகத்தின் தெற்குக் கட்டிடத்தில் உள்ள நடைபாதையில் தகவல்சாவடி ஒன்று அமைத்து அந்த வழியே செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் வேற்றினத்தைச் சோ்ந்த மாணவர்களுக்கும் தமிழீழத் தேசியக்கொடியின் அர்த்தம் மற்றும் அதன் மு…
-
- 0 replies
- 761 views
-
-
மாவீரர் நாளுக்கு புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க சிங்கள உளவுத்துறை சதி திட்டம்: மக்களே விழிப்பாக இருங்கள் பதிந்தவர்: வன்னியன் வெள்ளி, 8 அக்டோபர், 2010 (vannionline.com) தமிழர் தாயகத்தை எதிரியிடம் இருந்து காத்து அங்கு தனியாட்சி நடத்தி வந்த விடுதலை புலிகளின் கட்டமைப்பு தமது மண் மீட்பு மண் காக்கும் போரில் தம் உயிர்களை நீர்த்த போராளிகளை மாவீரர் நாளில் நினைவு கூறுவது வழமை. அவ்வாறாக வரும் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் திகதி ஐரோப்பாவில் வருகை தந்து தமிழ் மக்கள் மத்தியில் பேச இருந்த சீமானை சிறையில் அடைத்தது தமிழக அரசு. அவரது பேச்சின் வாயிலாக தமிழ் மக்கள் மீண்டும் புலிகள் பக்கம் அவர்களின் உரிமை போர் பக்கம் தூண்டபட்டு அந்த போராட்டம் துளிர்க்கும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
எனது குடும்பம் சிங்களவர்களுக்கு கடமைப்பட்டது! நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளி பரபரப்பு பேட்டி சனி, 06 நவம்பர் 2010 14:25 ”1977 ஆம் ஆண்டு எமது பிஸ்கெட் கம்பனி சில வெறியர்களால் தாக்கி அழிக்கப்பட்டது. அது எமது குடும்பத்துக்கு சோதனையும், வேதனையும் நிறைந்த காலம். அவ்வெறியர்கள் எங்களை படுகொலை செய்யக் கூட முயன்றார்கள். ஆனால் நாம் சிங்களவர்களால்தான் காப்பாற்றப்பட்டோம். சிங்களவர்கள் எம்மை காப்பாற்ற முன் வந்தார்கள். வெறியர்கள் எம்மை கொல்கின்றமைக்கு முன்பாக காப்பாற்றினார்கள். இவ்வுதவியை என்றும் நாம் மறக்கவே மாட்டோம்.” இவ்வாறு ஆஸ்திரேலியாவில் வைத்து அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் உலக சாதனையாளரும், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளருமான ம…
-
- 17 replies
- 2k views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 8, 2010 நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற வேண்டம் என்பதை சுட்டிக்காட்டி அதன் செயலாளருக்கு மன்னார் ஆயர் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் குறிப்பாக யுத்தம் இடம்பெற்று முடிந்திருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்டிருக்கும் விசாரணைகளில் பொதுமக்கள் கண்ணீர் மல்க சாட்சியங்களை அளித்திருக்கின்றனர். இவை தவிர வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு என பல பாகங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் மூ…
-
- 0 replies
- 380 views
-
-
வன்னியில் நாளாந்தம் நான்கு பெண்கள் தற்கொலை செய்கின்றனர் என வன்னி மாவட்ட உள வைத்திய நிபுணர் வைத்தியகலா நிதி தயாளினி தியாகராஜா தெரிவித்துள்ளார். சராசரி 500 உளவள பாதிப்பு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். போரின் பின்னர் கூட மக்கள் தம் உளதாக்கங்களில் இருந்து விடுபடவில்லை. இந்த தாக்கங்களில் இருந்து விடுபட சில சந்ததிகள் காலம் எடுக்கலாம். பெரும்பாலான பெண்கள் இளம் விதவைகள் இவர்களின் எதிர்காலம் சூனியமாகவே இருக்கின்றது. என்றும் கூறியுள்ளார் தயாளினி தியாகராஜா. My link
-
- 0 replies
- 755 views
-
-
மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும் மிதிக்கும் நாடுகளும்: 133-ஆவது இடத்தில் இலங்கை: 128-ஆவது இடத்தில் இந்தியா GLOBAL PEACE INDEX GPI MAP - 2010 The table below provides the GPI rankings for the countries analysed this year. Countries most at peace are ranked first. A lower score indicates a more peaceful country. http://www.visionofhumanity.org/gpi-data/#/2010/scor முத்தமிழ் சென்னை
-
- 4 replies
- 581 views
-
-
தமிழக மக்கள் உரிமை கழகம் - இணையம் http://www.savukku.net/ முத்தமிழ் சென்னை
-
- 0 replies
- 823 views
-