Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை (25) இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை விதித்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இரக…

  2. Published By: DIGITAL DESK 3 27 SEP, 2023 | 08:38 AM (எம்.ஆர்.எம்.வசீம்) உள்நாட்டு உணவு கலாசாரம் இன்னும் சுற்றுலாத்துறைக்கு அறிமுகப்படுத்தாமல் இருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தாதவரை சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அத்துடன், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய எமது மனநிலை மாறவேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சுற்றுலா இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டுக்கு அதிகம் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறையே சுற…

  3. Published By: VISHNU 26 SEP, 2023 | 07:19 PM (எம்.மனோசித்ரா) தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. எனவே இவற்றில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை இல்லாதொழித்து எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டும் வகையில் முகாமைத்துவத்திலும், சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். இம்மூன்று திணைக்களங்க…

  4. துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம் இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …

  5. Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 05:23 PM (நா.தனுஜா) விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூல வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளது. மேற்குறிப்பிட்டவாறு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலத்தின் வரைபு கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி உங்களது அமைச்சினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டவரைபைத் தயாரிப்பதற்கான முயற்சிகள…

  6. பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து குறித்த வேலைத்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கொள்கை அடிப்படையிலான தலா 2 கடன் வசதிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ், 2 சதவீத வருடாந்த வட்டி வீதத்தில் 5 வருட சலுகைகாலத்துடன், 25 வருட மீள் செலுத்துகை தவணை காலத்துக்கான கடனை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. https://thinakkural.lk/article/274562

  7. Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 05:04 PM (நா.தனுஜா) இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்துகொண்டது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடு திரும்பியுள்ள பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர்…

  8. Published By: VISHNU 26 SEP, 2023 | 05:10 PM ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ் மாவட்டச் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடலொன்றை நிகழ்த்தியுள்ளது. தமிழர் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இக்கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. ஆனால், அரசதரப்பு எத்தகைய தீவிரங்காட்டினாலும் போரில் உயிரிழந்த அனைவருக்கம் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்குப் பேரினவாதம் உயிரோடிருக்கும்…

  9. Published By: VISHNU 26 SEP, 2023 | 08:01 PM இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை (26) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற், கலாசார ஒத்துழைப்புக்கான துணைத் தூதுவர் ஒ…

  10. இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இலங்கையிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக சிறிய மீன்பிடி படகில் புறப்பட்டவர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு டியாகோ கார்சியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். 2021 ஒக்டோபர் 3 முதல் அவர்கள் அந்த தீவில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் புகலிடக்கோரிக்கையை கோரியவேளை பிஐஓடி ஆணையாளர் அவர்களை சட்டபூர்வமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என தெரிவித்தார். புகலிடக்கோரிக்கையாளர்கள் பத்து பேர் இதற்கு எதிராக உச்சந…

  11. Published By: RAJEEBAN 26 SEP, 2023 | 02:47 PM இலங்கையில் பேச்சுசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டன் கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூபட்ரிக் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்தவேளை இது குறித்து கருத்து சுதந்திரம் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் குறித்த தனது கரிசனையை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து அன்ரூபட்ரிக் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இணையவழி பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயம் பேச்சுசுதந்திரம…

  12. இந்த ஆண்டில் இதுவரை 16 நிலநடுக்கங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.20 மணியளவில் மொனராகலை புத்தல பகுதியில் ரிச்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவானது. நாட்டில் நிறுவப்பட்டுள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/274606

  13. சாந்தனை மீட்டு தருமாறு கோருகிநார் தாய்! adminSeptember 25, 2023 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார். பிரதமர் கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய மத்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையில் பின்னர் இலங்கைக்கு மீள செல்வதற்கான உரிய ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி கடந்த 10 மாத கால பகுதிக்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்திய அரசாங்கத்தால் விடுதலை செய்ய…

  14. காணி அபகரிப்புக்கு எதிராக மயிலத்தமடுவில் போராட்டம்! மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையளர்களினால் 11 ஆவது நாளாக தொடர்ச்சியாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றார்கள். அவர்களின் போரட்டத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக பங்குபற்றிய போது. வருகின்ற ஜனாதிபதி விஜயத்தின் போது பாரிய அகிம்சா வழி போராட்டம் ஒன்றினை மே…

  15. முல்லைத்தீவில் புலிகளின் தங்கத்தைத் தேடித் தொடரும் அகழ்வுப்பணி! முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கண்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வுப் பணியானது இன்று மீண்டும் தொடரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் ஆரம்பமாகிய அகழ்வு பணியானது மாலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைககளோ மீட்கப்படாத நிலையில் இன்று (26) காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிவான் நீ…

  16. இந்தியா – கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே ஆதரவு : மொராகொட இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. கனடா முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தக் கூடாது எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். https://athavanne…

  17. உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘முரளி-800’ திரைப்படத்தை திரையிட இலங்கை திரைப்படக் கண்காட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ‘முரளி-800’ திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. ‘முரளி-800’ திரைப்படத்திற்காக கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, முரளியின் மீதான மரியாதையின் அடையாளமாக இலங்கை சினிமா சட்டமும் விசேட அனுமதியளித்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக …

  18. Published By: RAJEEBAN 26 SEP, 2023 | 10:40 AM கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அலிசப்ரி உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார். …

  19. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள், குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசேட தகுதிகளைக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான முடிவுத் திகதி கடந்த 21 ஆம் திகதி என அறிவிக்கப்பட்ட…

  20. Published By: VISHNU 25 SEP, 2023 | 09:55 PM விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று திங்கட்கிழமை (25) மாலை 2.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகி நடைபெற்றது. பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்றது. …

  21. Published By: DIGITAL DESK 3 25 SEP, 2023 | 01:07 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தி விட்டு, ஏணையில் உறங்கிய 03 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கி.ஹரிகரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) தாய்ப்பால் கொடுத்து விட்டு, குழந்தையை ஏணையில் உறங்க வைத்துள்ளார். நீண்ட நேரமாக குழந்தை எழும்பாததால், சந்தேகம் அடைந்து குழந்தையை எழுப்பிய போது, குழந்தை அசைவற்று இருந்துள்ளது. அதனையடுத்து, குழந்தையை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். https://www.virakesari.lk/article/165398

  22. நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதை அமெரிக்க தூதரகம் தாமதிக்கின்றது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்தமாதம் அமெரிக்காசெல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள சரத்வீரசேகரவிற்கு விசா வழங்க முடியாது அவருக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் என அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவகம் யுஎஸ்எயிட்டின் நிதிஉதவியுடன் இலங்கையின் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்களிற்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 20 நாடாளுமன்ற மேற்பார்வை குழுக்கள் உள்ளன …

  23. நிலத்தில் ‘சுழற்காற்று’ நிலை அல்லது நீரில் சுழற்காற்று, வெள்ளம் ஏற்பட்டால் அதன் அருகில் கூட செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சூறாவளி மற்றும் சுழற்காற்றுகளின் பொது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதால் இது ஆபத்தான நிலை என்றும் இதன்போது அருகிலுள்ள அனைத்தும் இதில் இழுக்கப்படும் , எனவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது, புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவு செய்வது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) பம்பலப்பிட்டிக்கு அண்மித்த கடற்பகுதியில் ஏற்பட்ட தும் அவ்வாறானதொரு ஆபத்தான நிலையே என அவர் தெரிவித்துள்ளார். மிகவு…

  24. Published By: RAJEEBAN 25 SEP, 2023 | 09:53 AM சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியை சந்தித்தவேளை விக்டோரியா நூலண்ட் இது குறித்த அமெரிக்காவின் கரிசனையை வெளியிட்டுள்ளார். இது குறித்து பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் நடுநிலை நாடு என்ற வகையில் வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கைக்குள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது தொடர்பில் நிலையான செயற்பாட்டு முறையொன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அனைத்து நாடுகளுடனும் ஒரேமாதிரியான அணுகுமுறையையே இலங்கை பின்பற்றுகின்றது என தெரிவித்துள்ள வெள…

  25. 25 SEP, 2023 | 10:38 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலையில் உள்ள கைத்தொழில் வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய, இலங்கை அரசாங்கங்கள் நெருக்கமாகச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இரு நாடுகளுக்கும் இடையே படகு சேவைகளை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் , மும்பையில் ஒக்டோபர் 17-19 வரை நடைபெறவுள்ள உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டுக்காக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் கொழும்பில் கடந்த வாரம் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடல்சார் துறையில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.