ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தேர்தலின் போது ஏற்படும் செலவுகளைக் குறைப்பதற்கு இணையவழி வாக்காளர் பதிவு தகவல் முறைமை அறிமுகம் சிறந்த வழி என்பதை நிரூபிக்கும் நடைமுறைப் பரீட்சை அண்மையில் மாத்தறை ராகுல கல்லூரியில் வெளியிடப்பட்டது. நேற்று நடைபெற்ற மாணவர் நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த முறையின் கீழ் கிட்டத்தட்ட 3,000 மாணவர்கள் வாக்களித்தனர். பெறுபேறுகளை அறிவிப்பதற்கு மூன்றரை மணித்தியாலங்களே தேவைப்பட்டன. அதிபர் சமித்த குருகுலசூரிய, கல்லூரியின் இணையக்குழுவின் பொறுப்பதிகாரிகளான லலனிகா ரங்கொடகே, நுவான் ரத்நாயக்க மற்றும் சஜித் சதுரங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சிரேஷ்ட அரச அதிபர் நதீஜா கல்ஹார லியனாராச்சி இந்த அமைப்பை வடிவமைத்தார். “இந்த அமைப்பு நான்கு மணி நேரத்திற்குள் உருவா…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை நீக்க கையெழுத்து வேட்டை! கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை ஐக்கிய சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் கையெழுத்துகள் இதில் திரட்டப்பட உள்ளன. திருகோணமலை -நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் கடந்த 28ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 5 replies
- 473 views
-
-
அம்பாறை திருக்கோவில்-4, மண்டானை கிராமத்தில் காணி மற்றும் வீடற்று வாழ்ந்து வந்த ஐந்து குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட சீடர்ஸ் அமைப்பின் மாவட்ட ஒழுங்கமைப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கனடா குமரன் விளையாட்டு கழகத்தின் நிதி பங்களிப்புடன் ஒரு வீடு 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. பயனாளிகளுக்கான காணி, பிரதேச செயலக காணிப்பிரிவு ஊடாக வழங்கப்பட்டது. வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கலந்து கொண்டு, அடிக்கல்லினை நாட்டினார். உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கிராம சேவகர் எஸ்.ச…
-
- 0 replies
- 495 views
- 1 follower
-
-
21 SEP, 2023 | 07:07 PM அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு (USAID), இலங்கையில் திரிபோஷா வலுவூட்டப்பட்ட உணவுத் திட்டத்தைத் முன்னெடுக்கும் முகமாக 4, 700 மெட்ரிக் தொன் சோயா பீன்ஸ் மற்றும் கணிசமான அளவு மக்காச்சோளத்தினை WFP யினூடாக இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திடம் கையளிக்கும் நிகழ்ச்சியானது ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் ஏற்பாட்டில் திரிபோஷா தொழிற்சாலையில் இடம்பெற்றது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் WFP யினால் முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை USAID அமைப்பு வழங்குகின்றது. இலங்கை மற்றும் உலகலாவிய ரீதியில…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படுவது குறித்து அமெரிக்க செனெடடின் வெளிவிவகார குழு கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றவேளை தாக்குதலை தடுத்து நிறுத்துவத்காக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்தும் கரிசனை கொண்டுள்ளோம் என செனெட் குழு தெரிவித்துள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பில் அதிஸ்டவசமாக பொலிஸார் பலரை கைதுசெய்துள்ளனர் - இந்த குற்றங்களிற்கு காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் எனவும் செனெட்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படுவது குறித்து அமெரிக்க செனெட் குழு கண்டனம…
-
- 0 replies
- 259 views
-
-
சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச சமாதான தினம் இந்த தினத்தில் இன்று போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது சர்வதேச நியமங்களின் பி…
-
- 0 replies
- 271 views
-
-
மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 200 மரணங்கள் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார…
-
- 1 reply
- 265 views
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் புதன்கிழமை (20) அதிகாலை பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த மாவீரன் திலீபனின் தியாகத்தை விற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை துரத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 652 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள பெட்டிகாலோ கெம்பஸ் இன்று புதன்கிழமை (20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (20) நேரிடியாக கெம்பஸுக்கு விஜயம் செய்து கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார். கெம்பஸை பொறுப்பேக்கும் நிகழ்வில் க…
-
- 3 replies
- 450 views
-
-
காணி பிரச்சனைக்கு டிசெம்பருக்கு முன்னர் தீர்வு வட மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசெம்பர் மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து காணிகளையும் தாங்கள் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம் என்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்தார். வனவள திணைக்களத்தின் கீழுள்ள விவசாய நிலங்கள் மற்றும் உரித்துடைய மக்களின் காணிகளே ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்தார். அங்கு …
-
- 0 replies
- 197 views
-
-
ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறைந்தது 28 வாகனங்கள் காப்புறுதி செய்யப்படாதவை என சமீபத்திய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தணிக்கை அறிக்கையின்படி, இந்த வாகனங்களில் 13 உயர் பாதுகாப்பு வாகனங்கள், ஒவ்வொன்றும் 250 முதல் 350 மில்லியன் பெறுமதியானவை தணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பு வாகனங்களின் அதிக பெறுமதி காரணமாக வருடாந்தம் ஒரு வாகனத்திற்கு 20 மில்லியன் காப்புறுதி செலுத்த வேண்டும். அதிக செலவுகளை கருத்தில் கொண்டு வாகனங்கள் காப்புறுதிக்காக பதிவு செய்யப்படவில்லை என ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக செயற்படாத பட்சத்தில், அந்த தேவைகளை பூர்த…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 SEP, 2023 | 10:07 AM வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காக தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவி மற்றும் பிள்ளை சுவிஸ்நாட்டில் வசித்து வருவதாகவும், குடும்பத்தை பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்ததாதகவும் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருந்தவர் என்றும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 574 views
- 1 follower
-
-
சிறுமியின் சடலத்தை ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம்! September 20, 2023 வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம் ரோகினி தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று (19.09) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 25.08.2023 ஆம் திகதியன்று வவுனியா, பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி நீர்த் தொட்டியில் தவறி விழுந்து இ…
-
- 7 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவரை சந்தித்தார். இலங்கை நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த போது ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றிய சுருக்கமான விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார். மேலும், ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டதன் பின்னரான செயன்முறைகள் த…
-
- 1 reply
- 528 views
- 1 follower
-
-
20 SEP, 2023 | 05:24 PM மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உறுகாமம் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை 1.30 மணியளவில் காட்டு யானைகள் அங்கிருந்த மின்சார வேலிகளை உடைத்துவிட்டு, ஊருக்குள் நுழைந்து அங்குள்ள வாழை, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயன்தரும் பயிர் வகைகளை அழித்து சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள், தோட்டங்கள், மின்சார கம்பங்களும் நாசமாகியுள்ளன. வீடுகளையும் பயிர்ச் செய்கையையும் காட்டு யானைகள் அழித்து நாசமாக்கியுள்ளதுடன், மக்கள் மயிரிழையில் உயர் தப்பி காயங்களுடன் ஓடியுள்ளனர். அத்தோடு, காட்டு யானைகளின் தொல்லையால் தங்கள் பொருளாதாரத்…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
20 SEP, 2023 | 06:05 PM முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு 16 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்தியதுடன், தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்க…
-
- 0 replies
- 595 views
- 1 follower
-
-
20 SEP, 2023 | 06:29 PM வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளத்தின் இயற்கையான அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிராக கதிரவேலர் பூவரசன்குளம் கமக்காரர் அமைப்பின் விவசாயிகள் இன்று புதன்கிழமை (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலையத்துக்கு முன்பாக அலுவலகத்தின் வாயிலை பூட்டி, அதன் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளக்கட்டு இயற்கையாக கற்பாறைகளை கொண்டமைந்த நிலையில், 12 அடி நீரை சேமிக்கக்கூடிய சிறு நீர்ப்பாசன குளமாக காணப்படுகிறது. இந்த குளப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் கல்குவாரி அமைக்கப்பட்டு கல் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில், வ…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு, தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமாக்கப்படுவதினால் தாங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் குறித்த நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று புதன்கிழமை (20) மதியம் ஊடக சந்திப்பு இடம் பெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் தொடர் அத்து மீறிய நடவடிக்கையின…
-
- 0 replies
- 298 views
-
-
Published By: VISHNU 19 SEP, 2023 | 08:50 PM மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை இவ்வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இ…
-
- 1 reply
- 196 views
- 1 follower
-
-
பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலர்களை திருப்பி செலுத்தியது இலங்கை ! 2021 ஆம் ஆண்டு நாணய மாற்று முறையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி குறித்த தவணைப்பணம் செலுத்தப்பட்டதாக பங்களாதேஷ் வங்கியின் ஊடக பேச்சாளரும், நிர்வாக பணிப்பாளருமான மெஸ்பால் ஹக், உறுதிப்படுத்தியுள்ளார். இரண்டாவது தவணை எதிர்வரும் 30 ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்த ஆண்டுக்குள் இலங்கையிடமிருந்து மொத்தத் தொகையையும் திரும்பப் பெற எதிர்பாத்துள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த ஆண்டு கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில்…
-
- 16 replies
- 988 views
- 1 follower
-
-
18 SEP, 2023 | 10:21 AM நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன தெரிவித்தார். இம்மாதம் (17) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தினம் நினைவு கூரப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு …
-
- 4 replies
- 429 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 SEP, 2023 | 05:33 PM நான் இந்திய ஆதரவாளனோ அல்லது சீன ஆதரவாளனோ இல்லை இலங்கை ஆதரவாளன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சில காலத்திற்கு முன்னர் என்னை ஒரு நபர் நீங்கள் சீன ஆதரவாளனா இந்திய ஆதரவாளனா என கேட்டார், நான் அதற்கு உறுதியாக நான் இந்திய ஆதரவாளன் இல்லை என தெரிவித்து சீன ஆதரவாளன் இல்லை எனவும் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கு அந்த நபர் நீங்கள் நடுநிலைவாதியா என கேட்டார் நான் அதற்கு நடுநிலைவாதியில்லை இலங்கை ஆதரவாளன் என குறிப்பிட்டேன் என தெரிவித்துள்ளார். வல்லரசுகளின் அல்லது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் …
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த நினைவேந்தலை, 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பில் முதற்தடவையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் இன்று மன்றுரைத்துள்ளனர். பொலிஸார் முன்வைத்த கோரிக்கையினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே, திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி மருதானை, கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு, கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நினைவேந்தலை அனுஸ்டிப்பதற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தை சேர்ந்த அருட்தந்தை சக்திவே…
-
- 1 reply
- 538 views
- 1 follower
-
-
யாழ் போதனாவில் மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம் ! யாழில். மருத்துவ தவறால் 08 வயது சிறுமியின் இடது கை, மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 08 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 26ஆம் திகதி, சிறுமியின் கையில் “கனுலா” (குளுக்கோஸ் , மருந்துகள் ஏற்றுவதற்காக மணிக்கட்டின் கீழ் பொருத்தப்படும் ஊசி) பொருத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு மருந்து (அன்டி பயோடிக்) ஏற்றப்பட்டுள்ளது. “கனுலா” உரிய வகையில் சிறுமியின் கையில் பொருத்தா…
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
2023 ஜூலை மாதத்திற்கான மாதாந்திர வறுமைக் கோட்டு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில், ஒரு நபர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்ய ரூ. 15,978 தேவை என மேற்படி கணக்கெடுப்பு கூறுகிறது. தேசிய ரீதியில் இந்தத்தொகை ரூ. 16,089 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2023 இல் மேற் கொண்ட புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதச் செலவு ரூ. 63,912 ஆகும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இந்த அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-