ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
பிரித்தானியாவில் பெருமளவு தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், தமிழ் மக்கள் விடயத்தில் பிரித்தானியா என்றும் அக்கறை கொண்டிருப்பதாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் தெரிவித்துள்ளார். லண்டன் ரூற்றிங் நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து அமைச்சருமான சதீக் கானின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒன்றுகூடலில், வெண்புறா அமைப்பின் பிரதிநிதிகளிடம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் இந்தக் கருத்தினைக் கூறியிருக்கின்றார். வெண்புறா அமைப்பின் ஐரோப்பிய பொறுப்பாளர் மருத்தவர் என்.எஸ்.மூர்த்தி தலைமையில் வெண்புறா பிரதிநிதிகள் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான்டுடன், போக்குவரத்து அமைச்சர் சதீக்…
-
- 0 replies
- 399 views
-
-
இக் காணொளியைப் பதிவு செய்தோர் சிங்கள இராணுவத்தினர் ஆவர். ஒட்டுசுட்டான் பகுதியை சிங்கள இராணுவப் படையினர் கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில், சிங்களப் படையினரில் ஒருவராக வட்டத் தொப்பி அணிந்த மனிதர் நிற்கிறார். அவரது தோற்றம் தேசியத் தலைவர் பிரபாகரன் போலவே உள்ளது. மேலும், தலைவர் பிரபாகரனது உடல் என சிங்களர் காட்டிய உருவம் இத் தொப்பித் தலையரது உருவம் போல் தெரிகிறது. இக்காணொளியைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறோம். ”இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது தான் பிரபாகரன் கொல்லப்பட்டார். பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர் வேறு உடையில்தான் இருந்தார். நாங்கள் தான் விடுதலைப் புலிகளின் சீருடையை அவரது உடலில் அணிவித…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்தால் இராணுவத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கக்கூடும் என்று தாங்கள் அச்சம் கொண்டுள்ளதாக பிரதான எதிரணி நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது. அரச தொலைக்காட்சியில் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளைத் தோன்றச்செய்து ராஜபக்ஷவுக்கான தங்களின் ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்குமாறு அரசாங்கம் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரத்தை தக்கவைப்பதற்கான களத்தை அரசாங்கம் தயார்படுத்திக்கொண்டிருக்கிறது.மிகவும் சிரேஷ்ட தரத்திலுள்ள அதிகாரிகளை ஜனாதிபதியின் பக்கத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் களத்தை அரசு ஆயத்தப்படுத்துகிறது. மக்களின் விருப்பத்தை நசுக்குவதற்கு இராணு…
-
- 4 replies
- 875 views
-
-
நாட்டை பிரிக்க அனுமதியோம்: கடைசி நேரப் பரப்புரையில் மகிந்த, சரத் சூழுரை சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் பரப்புரைகள் முடிவுக்கு வருதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் - நாட்டில் பிரிவினைவாத சக்திகள் தலையெடுப்பதற்கு ஒருபோதும் தாம் அனுமதியளிக்க மாட்டோம் என்று முதன்மை வேட்பாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் சூளுரைத்துள்ளனர். தேர்தலுக்கான நாட்கள் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பான இரகசிய ஒப்பந்தம் ஒன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொன்சேகா செய்து கொண்டுள்ளார் என்ற பரப்புரையை மகிந்த தரப்பு தீவிரப்படுத்தத் தொடங்கி உள்ளது. தமிழர்களின் எதிர்கால நலன் கருதி அரச தலைவர் தே…
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறானவிடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.இன்னும் சில நாட்களில் நடந்தேறப்போகும் தேர்தலில் வெற்றி யாருக்கு என தீர்மானிப்பதில் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளே பெருமளவு செல்வாக்கு செலுத்துகின்றன அத்தோடு மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் இவ்விடயத்தில் அடங்கும். தமிழர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை பொன்சேகாவுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். பொன்சேகாதான் வெல்லவேண்டும் என்பதற்காக இல்லாமல் எப்படியாவது மகிந்தவை தோற்கடித்துவிட வேண்டு…
-
- 0 replies
- 472 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தல் வன்முறை: எதிர்க்கட்சி தலைவர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான ரிரான் அலசின் [Tiran Alles] இல்லத்தின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் ஒன்றில் அவரது வீடும் வாகனம் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளன. அதேவேளையில், ரிரான் அலஸ் காயங்கள் எதுவும் இன்று பாதுகாப்பாகத் தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான நாவலயிலேயே [Nawala] இவரது இல்லம் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இவரது இல்லத்துக்கு வந்த இனந்தெரியாத ஒரு குழுவினரே கைக்குண்டு ஒன்றை அவரது இல்லத்துக்குள் வீசிவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் இ…
-
- 0 replies
- 418 views
-
-
யாழில் நேற்று மட்டும் 8 பேர் கைது யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் 8மணியளவில் சிறிலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக வடபகுதி்க்கான எமது மீனகம் செய்தியாளர் தெரிவிக்கின்றார். அப்பகுதியில் இரவு வேளையில் தேர்தல் சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்கள் என்ற பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் எதிரணி வேட்பாளரின் ஆதரவாளர்கள் எனத்தெரிகின்றது. தேர்தலில் போட்டியிடும் விக்கிரமபாகு கருணாரெத்தின அவர்களுடைய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த ஒருவரும் நேற்று மாலையில் சுன்னாகம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விநியோகித்த துண்டுப்பிரசுரத்தில் அச்சிடப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் வில…
-
- 0 replies
- 642 views
-
-
அரசியல் மேடைகளில் கருத்து வெளியிடுவதில் இணக்கப்பாடு இல்லை – முன்னாள் அதிபர் சந்திரிகா எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பாக தான் எந்தமேடையிலும் தோன்றப்போவதில்லையென முன்னாள் சிறிலங்காவின் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார். அத்தனகல்லயில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தாம் உரையாற்றப்போவதாக வெளியான செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தக்காலத்தில் இவ்வாறான தேர்தலுக்கான அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகளுடன் கருத்து வெளியிடுவதில் தமக்கு இணக்கப்பாடு இல்லையெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். இவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிடுவதில் அரசியலில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் சந்திரிகா தெரிவித…
-
- 0 replies
- 410 views
-
-
பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி வழக்கின் நிலை என்ன…? – சட்டவியலாளர் துரைசாமியின் செவ்வி பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி அவர்களின் வழக்கின் தற்போதைய நிலவரம், நளினி பிரியங்கா காந்தி சந்திப்பு, அரசின் நிலைப்பாடு பற்றி நளினி அவர்களின் வழக்கறிஞருமான பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினருமான மூத்த சட்டவியலாளர் துரைசாமி அவர்கள் மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி. http://meenakam.com/?p=3806
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கை அரசியலுக்குள் இந்தியாவை கூட்டமைப்பு தான் இழுத்துவிடுகிறதாம் சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் இந்தியாவை இழுத்து விடும் வெளித் தெரியாத பரப்புரை ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது இந்திய அரசியல்வாதிகளில் ஒருவரான அன்பரசு குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.அன்பரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடக்க இருக்கும் அரச தலைவர் தேர்தலில் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்தியா ஆதரவு வழங்குவதாகப் பொய்யான உறுதிமொழிகளைக் கூறுவதன் மூலம் சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் இந்தியாவை இழுத்து விடும் வெளித் தெரியாத பரப்புரை ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. கூட…
-
- 5 replies
- 562 views
-
-
இலங்கையில் தேர்தல் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் அந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர். வருகின்ற 26ஆம் திகதி அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகக் கூறுகின்றார்கள். கடந்த ஒரு வார காலத்தில் மாத்திரம் 4 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்; இறந்தவர்களில் இருவர் எதிரணியைச் சேர்ந்தவர்கள்; மற்றைய இருவரும் அரசதரப்பு அணியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வன்முறைகளில் இதுவரையில் 39 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். 19 பேர் இந்த வன்முறைகள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிசார் அறிவித்திருக்கின்றார்கள். இது தொடர்பாகப் பல முறைப்பாட…
-
- 0 replies
- 309 views
-
-
சிறீலங்கா சபாநாயகரால் இடைநிறுத்தப்பட்ட அர்ச்சகர் திகதி: 21.01.2010 // தமிழீழம் தமிழகத்தில் புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவில், வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சிறிலங்கா சபாநாயகர் லொக்குபண்டாரா வருகை தந்தது குறித்து உரிய தகவலை அளிக்காததற்காக வைத்தீஸ்வரன் கோவில் அர்ச்சகர் அய்யப்பனை கோவிலை நிர்வகிக்கும் மட நிர்வாகிகள் இடைநிறுத்தம் செய்துள்ளனர். சிறீலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டாரா சனவரி 9ம் நாள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இதை அறிந்ததும் மதிமுக, பெரியார் தி.க, நாம் தமிழர் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டு, லொக்கு பண்டாராவின் கார் மீது செருப்புகளை வீசித் தாக்கினர். இந்தத்தாக்குதலில் பண்டாராவின் மகன் மீது செரு…
-
- 1 reply
- 666 views
-
-
டிலான் அலசின் வீட்டின் மீது கிறனேட் கைக்குண்டு வீச்சு! நாவலையில் அமைந்துள்ள வர்த்தகரும் எதிரணி அங்கத்தவருமான அலசின் வீடு,மற்றும் வாகனம் என்பன இதன்போது சேதமடைந்ததாக எதிர் கட்சி பேச்சாளர் தெரிவித்தார்.அலஸ் தாக்குதலில் இருந்து தீங்கின்றி தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. இவர் சு.க.(மக்கள் பிரிவு)பொது செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailymirror.lk/index.php/news/1045-grenade-attack-on-tirans-house.html
-
- 0 replies
- 396 views
-
-
கிளிநொச்சியில் மக்களை காணவில்லை; இராணுவத்தினரே அதிகமாக உள்ளனர்!- த அசோசியட் பிரஸ் தெரிவிப்பு கிளிநொச்சி நகரம் தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகிறது அங்கு மக்களை காணமுடியவில்லை. சில நூறுமீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம் என த அசோசியட் பிரஸ் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு, கிளிநொச்சியில் பெருமளவான நெல்வயல்கள் களைகள் மூடி கிடக்கின்றன. ஆடுகளும் மாடுகளும் காணாமல் போயுள்ளன. உழவு இயந்திரங்களையும் மோட்டார் சைக்கிள்களையும் அங்கு காணமுடியவில்லை. கட்டிடங்களும் வீடுகளும் குண்டுவீச்சுக்களால் நிர்மூலமாகி கற்குவியல…
-
- 0 replies
- 476 views
-
-
பொலநறுவை: அத்தியாவசியப் பொருட்களின் விலையானது அதிகளவுக்கு அதிகரித்திருப்பது ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கான வாய்ப்புகளை மோசமாகப்பாதித்திருப்பதாகத் தென்படுவதுடன், எதிரணி வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவுக்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கச் செய்திருப்பதாகத் தென்படுகிறது. கடந்த வருடம் மே மாதத்தின் பின்னர் நாட்டிலுள்ள சிங்கள மக்களால் பேசப்படும் பிரதான விவகாரங்களில் ஒன்றாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காணப்படுகிறது. விலை அதிகரிப்பு தொடர்பாக கவலைப்படுவோர் பொன்சேகாவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த விவகாரத்தையும் பொன்சேகாவின் முகாம் பற்றிப் பிடித்திருக்கின்றது என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. நகரப் பகுதியிலுள்ளவர்களை மாத்திரமன்…
-
- 0 replies
- 392 views
-
-
மகிந்த மேற்கொண்ட முயற்சி தோல்வி ! ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தால்வியடைந்திருப்பதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரத்தை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி பிரபல பௌத்த பிக்கு ஒருவரையும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவையும் அனுப்பியிருந்தார். இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அலவி மௌலானா முன்னாள் ஜனாதிபதியை பல தடவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார். இதன்போது ஜனாதிபதியைச் சந்திப்பதில் தனக்கு பிரச்சினைகள் இல்லையெனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் இருப்பதாகக் க…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜனவரி 26 யாருக்கு வாக்களிப்பது? ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருக்கின்றன. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தேர்தல் வன்செயல்களும் அதிகரித்திருக்கின்றன. ஆளும் கட்சிக் கூட்டணியும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிற்கொன்று சளைக்காத விதத்தில் தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதிகளை முன்வைக்கின்றன. இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும் பொதுமக்கள் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் நாட்கள் நெருங்கிவிட்டன. குறிப்பாகத் தமிழரும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமையுடையவர்கள் என்பதால் அவர்களது முடிவு ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டும். பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத் …
-
- 3 replies
- 964 views
-
-
தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது? தெளிந்த புத்தியால் மக்களை வழி நடத்தலாமே! த.எதிர்மன்னசிங்கம்: தமிழ் நெற் தொடர்ந்தும் தன் அறிவுக்குப் பொருந்தாத வகையில் செயற்பட்டு வருகிறது. அதன் ஆசிரியர் குழு எமது அறிவுச் சமூகத்தில் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உள்ள நபர்களைக் கொண்டிருப்பதால் தான் பல வெளி நாட்டு ஊடகங்களின் வரவேற்பையும் சிங்கள அரசுகளின் வெறுப்பையும் பெற்றதோடு தமிழ் மக்கள் சார்பாக உள்ள நியாயப் பாடுகளை உலகறியச் செய்து வந்துள்ளது. புலித்தலைமை வன்னியிலிருந்து மறைக்கப் பட்ட நாளில் இருந்து தமிழ் நெற் தனது நிதானத்தையும் நேரிய விமர்சனப் பார்வையையும் இழந்து விட்டது போன்ற தோற்றப்பாடு தெரிகிறது. உண்மையைச் சொல்வதானால் இது போன்ற பிறழ்வுகள் உலக நாடு…
-
- 4 replies
- 1.1k views
-
-
விக்ரமபாகுவின் யாழ்மாவட்ட தேர்தல் பிரதிநிதி கைது சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிப் பொது வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரத்னவின் யாழ்.மாவட்டத் தேர்தல் பிரதிநிதியான மாணிக்கசோதி என்பவர் சுன்னாகம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டிருந்த போது, அதை அச்சிட்டது யார் எனக் குறிப்பிடப்படாத துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. எனினும் குறித்த துண்டுபிரசுரத்தில் சகல விவரங்களும் அச்சிடப்பட்டிருந்ததாகவும், தமது பிரதிநிதி வேண்டுமென்றே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் புதினப் பலகைக்கு விக்கிரமபாகு தெரிவித்தார். இதேவேளை…
-
- 0 replies
- 561 views
-
-
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மேனன் நியமனம் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்த எம்.கே.நாராயணன் மேற்குவங்க ஆளுநராகிறார். இதைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளரான சிவசங்கர மேனனை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் மத்திய அரசு நியமித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி பிரதமர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உளவுப் பிரிவுகள் ஆகியவற்றை இணைப்பதால் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது, இலங்கை விவகாரத்தை கையாண்ட முறை என முக்கிய விவகாரங்களில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனின் செயல்பாடுகள் சர்ச்சைக்…
-
- 0 replies
- 517 views
-
-
சரத்பொன்சேகா கையளித்துள்ள எழுத்து மூல பத்திரத்தினை இன்று சம்பந்தன் பாராளுமன்ற கட்டடத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு காட்டிக்கொண்டு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தனது முடிவுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் எனவும் இல்லாவிடில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு சீட்டு கிழிக்கப்படும் என விரட்டுவதாகவும் எம்.பி க்கள் கூறுகின்றனர். சரத் பொன்சேகாவின் ஆவணத்தில் மொத்தம் 10 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவாம் அதன் சுருக்கம்; சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடை செய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுக…
-
- 17 replies
- 3.7k views
-
-
புலிகளின் ஊடுருவல்களை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை தமிழகததில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கியூபிரிவு புலனாய்வுத்துறையினர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தமிழக கடற்கரை ஓரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வரும்வேளையில் தமிழகத்தில் உள்ள முகாம்களில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை தொடர்வதாக ஆவணங்கள் அற்ற நிலையில் திருச்சி மதுரை போன்ற இடங்களில் பல ஈழத்தமிழ் இளைஞர்களை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்கள் செ…
-
- 0 replies
- 420 views
-
-
அண்மையில் நாங்கள் நம்பிக்கை வைத்த இரு இணைய தளங்கள் எங்களிடயே தங்களுடைய கருத்தை திணித்து குழப்ப முயற்சி செய்வதாக உணர்கிறேன். பதிவு ,தமிழ்நெட் என்ற இரு ஊடகங்களும் நங்கள் அடிகடி பார்க்கும் ஊடகங்கள். இவை நோர்வே ஐ சேர்ந்த ஒருவரால் பேணப்படுவதாகவும் அறிகிறோம் . ஆனால் திடீர் என்று இவை எம் காலை வார்ந்து எமக்கே கதை சொல்ல தொடங்கியமை எங்களிடையே பிரிவினைகள் வளர்க்கப்படுவதை இனம் காட்டி நிற்கிறது. இன்று யார் என்ன செய்தாலும் தமிழ் ஈழ பயணித்தின் திசையில் அவை இருந்தால் மக்கள் ஆதரிக்க தயார் ஆகிவிட்டார்கள். அது ஊர்வலங்கள் . போராட்டங்கள் இலிருந்து வட்டுகோட்டை தீர்மானம் , தமிழீழ அரசு என்று வேறுபாடின்றி யார் இடித்தாலும் அரிசியானால் சரி என்கின்ற நிலைப்பாட்டில் சாதாரண மக்கள் இருக்கிறோம். நி…
-
- 0 replies
- 624 views
-
-
அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கடத்தல் முயற்சியொன்றிலிருந்துமயிரிழையில் தப்பியுள்ளார். எனினும் இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகள் இவரது மனைவியையும் பிள்ளைகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். செவ்வாய் இரவு 8.45 மணியளவில் நாவிதன்வெளி விவேகானந்தா வீதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவதுபிரதேச சபை தவிசாளர் கலையரசன் செவ்வாய் இரவு வீட்டிலிருந்த போது மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற இரு ஆயுதபாணிகள் திடீரென வீட்டினுள் நுழையவே அவர் வீட்டின் பின்புறத்தால் தப்பியோடியுள்ளார். இதையடுத்து அந்த இருவரும் வீடடிற்குள் வந்து அவரது மன…
-
- 3 replies
- 1.3k views
-
-
இவ்வார இறுதியில் சனவரி 23 மற்றும் 24ஆம் நாட்களில் ஜேர்ர்மன், சுவிஸ், நெதர்லாந்து நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்களிடையே நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பில் வரலாறாக திரண்டு ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தனித் தமிழ்ஈழ அரசே என்பதை சர்வதேசத்திற்கு மீண்டும் வெளிப்படுத்துங்கள் என கனடித் தமிழ் மக்களின் வாழ்த்துக்களை கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டுள்ளது. நோர்வே, பிரான்ஸ், கனடா என ஈழத்தமிழ் மக்கள் ஏற்கனவே பெரும் எண்ணிக்கையில் வெளிப்படுத்திய சனநாயக வழி தழுவிய அரசியல் வெளிப்பாட்டை உங்கள் நாடுகளிலும் சனநாய வழிதழுவி ஒரு இனக்குழுமமாக நீங்களும் வெளிப்படுத்த முனைந்து நிற்பது கனடிய ஈழத் தமிழ் மக்களாகிய எமக்கு பெர…
-
- 1 reply
- 519 views
-