Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டால் பிரதமர் பதவியை வழங்குவதற்குத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பீ.திஸாநாயக்கவிற்கு அறிவித்துள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. இதுகுறித்து எஸ்.பீ.திஸாநாயக்க இதுவரை பதிலளிக்காத போதிலும், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு இது உகந்த நேரமா என பல சோதிடர்களைத் தொடர்புகொண்டு எஸ்.பீ. கேட்டறிந்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தில் நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றிய சந்தர்ப்பத்தில், எஸ்.பீ.திஸாநயாக்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர…

    • 9 replies
    • 1.2k views
  2. தமிழனுக்கு அகதி என்று பேர்! வீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை… ”முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு இருந்த மூன்று லட்சம் வரையிலான மக்களில் சரிபாதியினரை அரசு வெளியேற்றி இருக்கிறது. மீதமிருக்கும் முகாம் மக்களையும் இலங்கை அரசு வெளியேவிட்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால், இலங்கைத் தீவானது பொருளாதார நிலைமைகளில் முற்றுமுதலாகச் சீர்குலைந்து கிடக்கிறது. சிங்கள மலைப் பாம்பு ஒரு பெரும் இரையை விழ…

  3. சோக பூமியில் துரோக அரசியல்: சீன அடிமை Vs அமெரிக்க பொம்மை! போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்’ என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா… ஃபொன்சேகாவின் ராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாகமுடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ஃபொன்சேகாவைத்…

  4. இந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் 'ஓசியானிக் வைகிங்' கப்பலில் உள்ளவர்களில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது. ஏனையோர் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இலங்கையர்கள் 78 பேரும் வெளியேறி, கரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை 22 பேர் கப்பலைவிட்டு இறங்கி இந்தோனேஷியக் கரையை அடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை எஞ்சியிருந்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட 56 பேரும் கப்பலிலிருந்து கரை இறங்கியுள்ளனர். இதன் பின்னர் இவர்கள் இந்தோ…

  5. ஈழப் பிரச்சனை தொடர்பாக கருணாந்தி பிரபாகரன் மீதான பல்வேறு விமர்சங்களை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதின் பல் வேறு நிலைப்பாடுகளை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983ம் ஆண்டு…

  6. ஜனாதிபதி சார்பில் பகிரங்கமான முனைப்புக்களை மேற்கொண்டுவரும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பெருந்தெருக்கள் அமைச்சைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி தயாராகி வந்த நிலையில், பசில் ராஜபக்சவின் கடும் எதிர்ப்பு காரணமாக அதனைக் கைவிட்டுள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருந்தெருக்கள் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க சுபநேரமொன்றை ஒதுக்கியிருந்த அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு, ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த திடீர் அறிவிப்பை அடுத்து சத்தியப் பிரமாண வைபவம் இரத்துச் செய்யப்பட்டதால் அமைச்சர் மிகவும் கவலையடைந்துள்ளார். தனக்கு ஏற்பட்ட இந்தப் புறக்கணிப்பு காரணமாக ஆத்திரமடைந்திருக்கும் மகிந்தானந்த அள…

  7. பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி. தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் …

  8. 19/11/2009, 12:00 சரத் பொன்சேகா தங்குவதற்கு இருப்பிடம் இன்றி தவிப்பு முப்படைகளின் பிரதானி நிலையில் இருந்து பதவி விலகியுள்ள சரத் பொன்சேகா தங்குவதற்கு இருப்பிடம் இன்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ தலைமையகத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று வரைமட்டுமே சரத் பொன்சேகா இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் சொந்த வீடு இல்லாத நிலையில் தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கும் வீடு ஒன்றை வாடகைக்கு பெறும் முயற்சியில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளார். எனினும் அவருக்கு ஏற்ற வீடுகள் சிலவற்றை அவர் அடையாளம் கண்டுள்ள போதில…

  9. தமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த “பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்” கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக… இலங்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து துல்லியமாக அளித்து வரும் ஜூ.வி., ‘அதிபருக்கும் தளபதிக்குமான வெ(ற்)றிக் கூட்டணியில் விரிசல் விழுகிறது என்பதையும் முதன்முதலில் மிகவிரிவாகச் சொன்னது! கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற அலங்காரப் பதவியைக் கொடுத்து தன்னை அவமானப்படுத்தும் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தன் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் சரத் ஃபொன்சேகா குதிக்கப் போகிறார் என்றும் அடித்துச் சொன்னது ஜூ.வி.! அதிபர் மற்றும் தளபதியின் மனைவியர் தங்களுக்குள் இருந்த நட்பைப் பயன்படுத்தி கடைசியாக சில முயற்சிகள் செய்ய… அதுவும் பலிக்காமல் போய், ஃபொன்சேகா தன் பதவியைத் துற…

  10. பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் ஆண்டு மாணவி பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டதனை ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கிறது. அந்த மாணவி பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றமைக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுவாராயின் மஹிந்த ராஜபக்ஷவினால் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தல்வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது 1988 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் பிறந்து பேராதனை பல்கலைகழகத்தில் கலைப்பீடத்தில் 2 ஆம் ஆண்டில் …

  11. தெற்கின் நவீன துட்டகைமுனு யார் என்ற போட்டியில் பல நாடகங்கள் அரங்கேறுவதை இனிமேல் நாடு தரிசிக்கும். பௌத்தசிங்கள மேலாதிக்கத் திமிரில் மேலாண்மை மமதையில் மூழ்கிக் கிடக்கின்றது தென்னிலங்கைப் பேரினம். அதை வசமாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை எப்போதும் பேணிக்கொள்ளலாம் என்ற சிந்தனை உத்தி தென்னிலங்கை அரசியல் தலைமைகளிடம் மேலோங்கி நிற்கின்றமை கண்கூடு. இயல்பாகப் பேரினவாத மேலாதிக்கச் சிந்தனையில் சிக்காத தென்னிலங்கைத் தலைவர்கள்கூட, ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி என்று வந்தவுடன் அந்தப் பேரினவாதச் சிந்தனையை அரவணைத்து, அந்த மேலாண்மைச் சகதிக்குள் முற்றாக மூழ்கிவிடுவதைக் காண்கிறோம். தென்னிலங்கை வாக்கு வங்கியைச் சுருட்டிக் கொள்வதற்காகச் சிறுபான்மையினரான தமிழர் மற்றும் முஸ்லிம்களை ஏற…

  12. தப்புத்தாளங்கள் போடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்! முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஈழத் தமிழர்கள் தமது படைபலத்தை மட்டும் இழக்கவில்லை, தமது அரசியல் பலத்தையும் சேர்த்தே இழந்துள்ளார்கள் என்பது தற்போதைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கதகளி நடனத்தினால் உணர்த்தப்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்ட பின்னரும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் அரசியல் போர்க் களத்தை முன் நகர்த்திச் செல்லும் என்றே தமிழர்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது சிதைவடைந்தே செல்கின்றது.முள்ளிவாய்க்கால் பேரழிவில் தப்பிப்பிழைத்தவர்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கிச் சித்திரவதைக் குட்படுத்திய போதும், நாளாந்தம் அங்கிருந்தவ…

  13. பிரபாகரன் மீது பழிசுமத்தி தனது தவறை கருணாநித மறைக்கப் பார்க்கிறார் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது?” என்கிற தலைப்பில் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி, தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 1984-ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். இதிலிருந்தே, தேர்தல் தோல்வியில் இ…

  14. வருகின்ற ஞாயிற்று கிழமை ஓய்வு பெற்ற சரத் பொன்சேகா அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இருக்கின்ற தனது இருப்பிடத்தை விட்டு செல்லவேண்டும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருக்கின்றது. சரத் ஓய்வு பெற்றதனை தொடர்ந்து அவரது அலுவலக வீடும் உடனடியாக விடப்படவே|ண்டும் என முன்னர் கூறப்பட்டது. பின்பு சரத் பொன்சேகாவின் வேண்டுதலிற்கு அமைய அவர் ஒரு வீடு தேடும்வரை அங்கேயே இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இப்போது ஞாயிற்று கிழமைக்குள் எழும்புமாறு கேட்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த குறுங்காலத்திற்குள் வீடு எடுப்பது கடினம் என சரத் வட்டாரங்கள் கவலையடைந்துள்ளனராம். http://www.eelanatham.net/news/important

  15. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிபர் தேர்தலில் மஹிந்த இராஜபக்ஸ அவர்களை ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார் வி.முரளிதரன். மஹிந்த இராஜபக்ஸ ஒரு சிரந்த தலைவர் என்றும் ஆனால் எதிர்கட்சியோ பொறுப்புணர்வு இல்லாத ஒரு தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வர முயற்சி செய்வதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் எதிரணியினருக்கு வாக்குகளை போடமாட்டார்கள் எனவும் கூறியுள்ளது முரளிதரன்.

  16. முன் நாள் னாடுகளின் பிரதமர்கள், தலைவர்கள் ஆகியோர்களைக்கொண்ட உலகின் மிகப்பெரிய விஐபி க்களின் கிளப்பான CLUB DE MADRID எனும் அமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினராக சந்திரிக்கா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்பெயின் இல் நடந்த பொதுக்கூட்டத்திலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பலவருடங்களாக இயக்குனராக வருவதற்கு பலமுயற்சிகளை மேற்கொண்ட சந்திரிக்கா அவரது ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கபட்டதால் தெரிவில் உள்ளடங்க்கவில்லை.http://www.eelanatham.net/news/important

  17. தமிழர்களே, இதோ நம் நாட்டில் மட்டைப்பந்து விளையாட வந்துள்ளான் சிங்களவன்...போர் நடந்தபோது இவர்கள் அங்கே போனார்கள்....இப்போது அவர்கள் வந்துள்ளார்கள்...இந்திய ஊடகங்கள் அங்கு நடக்கும் கோடூரங்களை திறமையாக மறைத்துவிட்டது என்று அருந்ததிராய் கூறினார். இதோ மட்டப்பந்து போட்டி தொடங்கிவிட்டது...அநியாயங்கள் தமிழக மக்களுகே தெரியாதபோது எப்படி வட இந்திய மக்களுக்கு தெரியும்... ஏதோ இணயத்தைப் பயன்படுத்துவதால் இளைஞர்களுக்கு ஒரளவு தெரிகிறது. சரி..இதோ நம்மைபோன்ற இளைஞர்கள் மட்டைப்பந்துபோட்டியை அலுவலகத்தில் உள்ளவர்கள் பார்பார்கள்...வட இந்திய ஊடகங்கள் மறைத்துவிட்டன...இணையம் இருக்கிறது... நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்... நாம் இலங்கை அணியினரை திட்ட…

  18. . வீரகேசரி இணையம் - "ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது" என தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் வீ .ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதி பொது நிலைப்பாடு ஒன்றை வலியுறுத்தும் முகமாக தமிழர் விடுதலை கூட்டணி சில தீர்மானங்களை வெளியிட்டுள்ளது. கூட்டணியின் தலைவர் வீ ஆனந்த சங்கரியின் கையொப்பத்துடன் கூடிய மேற்படித் தீர்மான அறிக்கையிலேயே அவர் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது. எனவே இனப்பிரச்சினையின் நிரந்தர தீர்வுக்கு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வே பொருத்தமானதாகும். இதன் அ…

  19. கொழும்பில் இந்திய மியாட் மருத்துவமனை வீரகேசரி இணையம் 11/19/2009 10:10:00 AM - தமிழ்நாடு மியாட் மருத்துவமனையின் கிளை ஒன்று கொழும்பில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதுதொடர்பான ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி கொழும்பு சினமன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. மியாட் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் பிரக்தீவ் மோகன் தாஸ் தலைமையில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது. இந்தியப் பத்திரிகையாளர் மணவை அசோகன் மற்றும் மியாட் மருத்துவமனையின் அலுவலக பொறுப்பாளர் ரொபின் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். E-mail to a friend

  20. அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய் தமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது. அறநெறி பிறழாத, நல்ல தலைவனாய் -பிரபாகரன் -தமிழினத்திற்கு! புத்த நெறியையே பிறழச்செய்த கொடுங்கோலனாய் -மகிந்த- சிங்கள இனத்திற்கு!! இனத்துரோகிகளோடு கை கோர்த்து,சர்வதேசமே சாட்சியாய் நிற்க, மனித பேரவலத்தை நடத்திக் காட்டிவிட்டான் மகிந்த. தமிழர் தாயகத்தில் மகிந்த சகோதர்களின் பிணந்தின்னும் வெறிக்கு தமிழினமே அழிந்து கொண்டிருந்த போது தான்…. தாய் தமிழகமும்,புலம்பெயர் நாடுகள…

    • 2 replies
    • 1k views
  21. தமிழக முதல்வர் கருணாநிதி தமிழீழ போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், நக்கீரன் இதழுக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில் ரணில் கூறியிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 2005 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் தோல்வி அடைய சுமார் 7லட்சம் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாத நிலைதான் காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின?எங்கே போய் முடிந்தன?என்பதை எண்ணிப்பார்த்து நான் மவுணமாக அழுவதை யார் காதில் விழப்போகிறது. நம்முடைய மவுன வல…

    • 18 replies
    • 2.8k views
  22. இலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை "லக்ருவணி மெதகம" என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய "இருதின" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது. இன்று, 'மஹிந்த சகோதர' நிறுவனத்தின் 363 பேர் பலதரப்பட்ட அரச பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறைக்கு அமைய இப்பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர்கள் "சகோதர நிறுவனத்தின்" உறுப்பினர்கள் என்பது மட்டுமேயாகும். அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வைத்து மேற்குறிப்பிட்டவாறு கருத்து வழங்கியவர் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரான மங்கள …

  23. ஒரு இலட்சத்து 30 ஆயிரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிராமத்திற்கு, ஐக்கியநாடுகள் சபையின் மனிதாபிமான செயல்பாடுகளுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இன்று புதன்காலை விஜயம் செய்தார். தனது மொழிபெயர்ப்பாளர் சகிதம் சென்ற இவர், மக்களுடன் தனிப்பட்ட ரீதியில் உரையாடினார். தாம் மீளக்குடியேற விரும்பவதாகவும் விரைவில் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னரும் இவர் இந்த இடத்திற்கு விஜயம் செய்தமை குறிப்பிடதக்கது. 2010ம் ஆண்டு சனவரிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் அவர்களுடைய பழைய இருப்பிடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது

  24. தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: pazha_nedumaran1கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார். 1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அ…

  25. சுமார் இருபது ஆண்டுகளுக்கு பின்னர் வவுனியா நொச்சிமோட்டையில் நெல் வேளாண்மை செய்கை இம்முறை நடைபெறவுள்ளது வயல்வேலைகளுக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 150 ஏக்கரில் இம்முறை நெல் கால போகத்தில் செய்கை பண்ணப்படும். ஏ-9 வீதியில் வவுனியாவிலிருந்து 9 மைல் தொலைவில் நொச்சிமோட்டை அமைந்துள்ளது. வடக்கே வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நொச்சிமோட்டையில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக இந்த கிராமத்து மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போது ஒரு சிறிய தொகையினர் மீள்குடியேறியுள்ளனர். பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் புதிதாக அமைக்கப்படுகின்றது. வேறும் சில புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.