ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
இந்தோனேசியாவில் கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் படகு தொடர்பாக இந்தோனேசியா மற்றும் அவுஸ்ரேலிய நாடிகளின் அரசியல் மற்றும் பாதுகாப்பில் பெரும் பர பரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவுஸ்ரேலிய பிரதமர் நாளை இந்தோனேசிய சென்று நேரடியாக அந்தனாட்டு அரசுடன் பேசவுள்ளார். அவுஸ்ரேலிய எதிர்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கும் அதே நேரம் அந்த அகதிகளுக்கு ஏது நடந்தால் ஆசி அரசே பொறுப்பெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தற்போதைய ஆசி அரசு போராடிக்கொண்டு இருக்கின்றது. ஆசி அரசு இந்தோனேசிய அரசுக்கு தகவல்களை வழங்கி அவர்களை பாவிப்பது தமது நாட்டின் சொந்த பாதுகாப்பில் நம்பிக்கை இன்மையினை தோற்றுவித்துள்ளதாகவும் அதே நேரம் அகதிகள் வருகையினை கட்டு படுத்த முறையான திட்டம் தற்போதைய அரசிடம…
-
- 0 replies
- 683 views
-
-
இன்று மாலை தொல் திருமாவளவன் இலங்கை சக்தி தொலைகாட்சியில் மின்னல் நிகழ்ச்சியில் பங்கு பற்ற போகின்றார். இந்திய குழுவினரின் இலங்கை விஜயம், அவர்கள் மக்களை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வலைகள், ஏன் பத்திரிகையாலர்களை சந்திக்கவில்லை? என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கவுள்ளாராம். திருமா என்ன சொல்ல போகின்றார்? அசடு வழிய மீண்டும் இலங்கை இந்திய உறவுக்காக கதைப்பாரா அல்லது ஆக்ரோசமாக ஈழத்தமிழர்களுக்காக கதைக்க போகின்றாரா? எப்படியாயினும் கதைத்து விட்டு போகட்டும் ஆனால் முகாமில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவி செய்வதாக பேசிப்பேசி அவர்களை மீண்டும் மீண்டும் கொல்லாமல் இருந்தால் சரி. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 908 views
-
-
திருமாவளவனிடம் இருந்தது தமிழனின் பண்பாட்டுக் கூறுதான். கடந்த நூற்றாண்டில் நடந்த யூத இனப் படுகொலை பற்றி மனித நேய ஆர்வலர்களால் பலமுறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நூற்றாண்டு முழுவதும் சொல்லத் தக்க அளவுக்கு இனப் படுகொலை நடந்தது தமிழீழத்தில் தான். எத்தனை போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்புகள் எதற்கும் அசைந்து கொடுக்காத இந்திய அரசும் அதற்கு உறுதுணையாக நின்ற தமிழக அரசும் தமிழினப் படுகொலைக்கு வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. இனியும் அந்த நிலையே தொடரும் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. போர் முடிந்து விட்டதாக அறிவித்த பின்பும் 3 லட்சம் பேர் அகதிகள் முகாமில் உணவு, உடை, உயிர் பாதுகாப்பு இன்றி தவித்து வருகிறார்கள். அது பற்றி ஒரு சின்ன செய…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்கா அரசில் வரவு செலவுத் திட்டத்தில் பெரும்பாலான செலவீனங்கள் சிறீலங்காப் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் சிறீலங்காப் படையினரின் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்தும், உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன. போர் நடைபெற்ற காலத்தில் போர்க்களத்தில் நிற்கும் படையினருக்கு பாரிய அளவிலான நிதி வழங்கப்பட்டு வந்துள்ளது. அரசுப்படை சிப்பாய் ஒருவன் இருபதாயிரம் ரூபா சம்பளத்தினை அடிப்படையாக பெறுகின்றான். ஆனால், இப்படையினன் குறைந்தது பத்தாம்ஆண்டுவரைதான் படித்திருப்பான். களமுனையில் தாக்குதல்களில் ஈடுபட்ட படையினருக்கு அவர்களின் ஊக்கிவிப்பாக நிதி உதவியினை வழங்கி வந்துள்ள சிறீலங்கா அரசு அன்றைய போர் நடைபெற்ற காலத்தில் எல்லாம் தமிழ்மக்களின் இடங்களுக்குள் ஊடுருவி விடுதலைப்புலிகளின் …
-
- 0 replies
- 333 views
-
-
வவுனியா முகாமில் இருந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் திருகோண மலைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் இடைத்தங்கல் முகமான செண்பகம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.நேற்று அங்கு வந்த சீருடை தரித்த இனந்தெரியாதவர்கள் முகாமில் உள்ளவர்களை விசாரித்த பின்னர் அங்கிருந்து 15 பேரைக் கடத்திச் சென்றனர்.கடத்திச் செல்லப்பட்டவர்கள் திருமணமானவர்கள்; 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட குடும்பத் தலைவர்கள் ஆவர். கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்கள் குறித்து நேற்று மாலை வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 311 views
-
-
76 இலங்கையருடன் ”ஓசியன் லேடி” என்ற படகு பிரிட்டிஸ்-கொலம்பிய தீவுப்பகுதியில் கனேடிய பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் இந்த படகு கனேடிய ரோயல் மவுண்டட் பொலிசாரினால் அடையாளம் காணப்பட்டதாகவும் நேற்று சனிக்கிழமை இந்த படகு வழிமறிக்கப்பட்டதாகவும் ஃபொக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படகு இலங்கை வாசிகள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் இவர்கள் கனேடிய நாட்டினை நோக்கி வான் கூவர் பகுதிக்கூடாக பயணித்து கொண்டிருந்த தாகவும் கூறப்படுகின்றது.
-
- 0 replies
- 391 views
-
-
வீரகேசரி இணையம் - மட்டக்களப்பு கல்லடியில் இயங்கி வந்த சட்ட விரோத கருக்கலைப்பு நிலையமொன்று நேற்று மாலை பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது வைத்தியர் மற்றும் உதவியாளர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். ஆயுள்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் குறித்த இடத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு இடம்பெற்று வருவதாகத் தமக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே இந்நிலையம் முற்றுகையிடப்பட்டதாகக் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலின்படி இந்நிலையத்தில் சட்ட விரோத கருக்கலைப்புக்குள்ளான இருவர் உயிரிழந்திருப்பதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர். இந்நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் உடைமைகளையும் மருந்துப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். …
-
- 0 replies
- 481 views
-
-
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற 8வது ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கீழே விழுந்ததாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் பதிவான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் அதிகாரிகளும் தம்வசப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சாகித்திய விழாவின் போது ஜனாதிபதி ஆசனத்திலிருந்து கீழே விழுந்த காட்சிப் பதிவுகளும் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு அகற்றப்பட்டது. சனிப்பெயர்ச்சியின் பின்னர் ஜனாதிபதியின் நேரம் கூடாதிருப்பதுட…
-
- 3 replies
- 878 views
-
-
யுத்தத்தின் பின்னரான பின்புலம் மற்றும் மனித உரிமைகள் என்ற இருவித காரணிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் தற்கால அரசியல் தலைவிதியை ஆழமாக நோக்கும் விதத்தில் அமைகிறது இக்கட்டுரை.சுனந்த தேசப்பிரிய எழுதிய இக்கட்டுரை கடந்த 04 ஆம் திகதிய "ராவய'' பத்திரிகையில் பிரசுரமாகியது. அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரம் மீளவும் கடந்த வாரம் முழுவதிலும் விமர்சனங்கள் என்ற வகையில் முன்னெழுந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் போர்ரீதியில் தோற்கடித்ததன் பின்னர் அரசுக்கு மிகப் பெரும் சவாலாகியிருந்த எதிரி இல்லையென்றாகிவிட்டுள்ளதால், அதன் பின்னர் புதியதொரு எதிரியைத் தேடித் திரிந்த அரசு, தற்போது மனித …
-
- 0 replies
- 375 views
-
-
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் சேது சமுத்திரத் திட்டத்திற்காக 2,427 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.இதற்கான அடிக்கல்லை, அவ்வருடம் ஜூலை 2ஆம் திகதியன்று, பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் நாட்டினார். மூன்றரை வருடங்களில் முடிவடையுமென்று கணிப்பிடப்பட்ட இத்திட்டம், ராமர் கட்டிய அணை விவகாரத்தால் இழுபட்டுச் செல்கிறது. 7500 கிலோ மீற்றர் நீள கடல் எல்லையைக் கொண்ட இந்தியாவிற்கு, பாக்கு நீரிணையானது, தொடர் பாதையைப் பேணுவதற்கு இடையூறாகவிருக்கிறது. இந்தியாவின் மேற்குத்துறை முகங்களிலிருந்து கிழக்குத் துறைமுகங்களுக்குச் செல்வதற்கு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று, இலங்கையைச் சுற்ற வேண்டும். இச் சேது சமுத்திரத் திட்டம், இந்தியாவின் …
-
- 0 replies
- 536 views
-
-
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இலங்கை அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றல் தொடர்பாக விமர்சித்தனர். அதாவது அரசாங்கம் கண்ணீவெடி அகற்றலை ஓர் காரணமாக காட்டி மீழ் குடியேற்றத்தினை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக தெரிவித்திருந்தனர், அத்துடன் உண்மையாக அரசாங்கம் அக்கறையாக செயற்பட வேண்டுமெனின் ஏன் சர்வதேச அமைப்புக்களை அனுமதிக்க கூடாது என கேள்வியும் எழுப்பி இருந்தனர். இது தொடர்பாக தேச நிர்மாண அமைச்சு கருத்து தெரிவிக்கையில் இது ஏற்றுகொள்ள முடியாது எனவும் அதே நேரம் தாம் ஹலோ ட்ரஸ்ட்,டானிஸ் குறூப், யு.என்.டி.பி போன்ற அமைப்புக்களை ஏற்கனவே அனுமதித்துள்ளதாக கூறியிருக்கின்றது. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 362 views
-
-
Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? http://www.2ue.com.au/ Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? Yes 82% No 17%
-
- 2 replies
- 1.5k views
-
-
தாயகத்தில் சிங்கள அரசினால் முட்கம்பி வேலிக்குள் வதைக்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் இன்றுடன் 150 நாள்களாக எந்தவித ஏற்பாடுகளோ தீர்வுகளோ இன்றி இருக்கின்றனர்.இதனை மீண்டும் ஒருதடவை அனைத்துலகத்திற்கு இடித்துரைப்பதற்காக இன்று பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர் தமிழர்களால் மாபெரும் பேரணி நடைபெறுகின்றது. 12.30 அளவில் லண்டன் எம்பார்க்மெண்ட் இல் கூடிய மக்கள் ஹை பார்க் வரை வீதியின் ஒரு பக்கத்தில் பேரணியாக நடந்து சென்றனர்.இதன் போது இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொழித்த இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரனைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் இப்பேரணியின் அடிநாதமாக விளங்குகின்றது. ப…
-
- 1 reply
- 831 views
-
-
வருகின்ற டிசெம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிகின்றது அத்தோடு நான் எனது இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றேன். அதற்கு முன்பாகவோ அல்லது டிசெம்பருக்கு பின் தொடரவோ நான் விரும்பவில்லை. இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் இது பற்றி ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரிவித்துள்ளதாகவும் அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தவிர அரசாங்கத்திற்கும் எனக்கும் முறுகல் நிலை அல்லது கருத்து முரண்பாடு என சொலவ்தில் உண்மையில்லை எனவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 697 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார ஏடான 'லங்கா' வின் ஆசிரியர் சந்தான சிறிமல்வத்த சிறிலங்கா காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் இப்பத்திரிகையின் நிருபர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 488 views
-
-
இந்திய உளவுத்துறையின் முன்னாள் நிபுணர் கேணல் ஹரிகரன் GSP+ இலங்கைக்குக் கிடைக்காது என்று இம்மாதம் ஏழாம் திகதி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருந்தார். இவர் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கம் தொடர்பாகக் கட்டுரைகளை எழுதுபவர். பொருளாதார நிபுணர் அல்லர். ஆனாலும் GSP+ என்னும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியவர்த்தகச் சலுகையைப் பற்றி கேணல் ஹரிகரன் இவ்வளவு அக்கறை எடுத்தது ஏன்? GSP+ பற்றி அறிந்து கொள்ளவும். இப்போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகையை நிறுத்தப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வர்த்தகச் சலுகைக்கும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இலங்கை இச்ச…
-
- 1 reply
- 797 views
-
-
கிழக்கின் சிங்கள உதயம்! தமிழின் அஸ்த்தமனம்! பாருங்கள், கிழக்கின் விடிவெள்ளிகள் தமிழை எப்படி வளர்க்கிறார்கள் என்று!
-
- 2 replies
- 770 views
-
-
இப்போது ஈழத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே பாக்கியாக உள்ளன. ஒன்று, தற்போது மேற்குலகில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை முறையாகப் பயன்படுத்தி தமிழீழத்தை நோக்கி நகர்வது. மற்றொன்று, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து தமக்கான பாதுகாப்பை நிச்சயப்படுத்திக் கொள்வது. தற்போது மேற்குலகிலும், அமெரிக்காவிலும் சிங்கள அரசின் இனவாதத்திற்கெதிரான கருத்துக்களும் கண்டனங்களும் வலுவடைந்து வருகின்றன. பல திசைகளிலுமிருந்து சிங்கள அரசுக்கெதிரான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சாதகமான அரசியல் சூழ்நிலைகளை மிகச் சாதுரியமாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதனூடாக தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை நோக்கிய பயணத்தை வென்றெடுக்க முடியும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.…
-
- 0 replies
- 723 views
-
-
இந்த ஆண்டின் இறுதி பகுதியில் எடுக்கப்பட இருக்கும் ஜி.எஸ்.பி க்கான இறுதி முடிவு பெரும்பாலும் இலங்கைக்கு சாதகமாக இருக்காது என ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் 1400 கோடி ரூபாய்களை இலங்கை அரசு இழப்பதோடு 250,000 பேர் இலங்கையில் வேலை வாய்ப்பினையும் இழக்க நேரிடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கை அரசு தொடர்ந்தும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் கவனம் செலுத்தாது அதனை புறக்கணிப்பதாகவும் அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை அரசு அனுமதியினை மறுத்து வருவதுமே வரிசலுகை நீக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 601 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற் பிரிவான கடற் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்கள். வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் அங்கிருந்து தப்பிச் சென்று மறைவிடம் ஒன்றில் இருந்ததாகவும், கொழும்பிலிருந்து சென்ற காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஒன்று இவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வந்திருப்பவர்களில் சுமார் 10,000 பேர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் என இனங்காணப்பட்டு தனியான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடற்புலிகள் அ…
-
- 0 replies
- 620 views
-
-
வணங்கா மண் நிவாரணப்பொருட்களை வேணுமென்றே தாமதப்படுத்துவதற்கும் அல்லது புறக்கணிப்பதற்குமாக இலங்கை அரசு போட்ட நாடகம் ஏற்கனவே தெரிந்ததே. இதன்படி வழமையாக செஞ்சிலுவை சங்கத்திற்கு வரிவிதிப்பதில்லை ஆனால் வணங்கா மண் பொருட்களுக்கு அனைத்து வரிகளும் சாதாரண வாணிப நடவடிக்கைகள் போல் விதிக்கப்பட்டது. பின்னர் வரி தொடர்பாக மூன்று மாதம் இழுத்தடிக்கப்பட்டது. தற்போது தாம் ஏதோ மக்களுக்கு உதவுவது போன்று அந்த வரியினை ஜனாதிபதி ஏற்பதாக கூறப்படுகின்றது. வரும் திங்கட்கிழமை இந்த வரியினை ஜனாதிபதியின் செயலர்செலுத்துவதாகவும் அதன்பின்னர் தரக்கட்டுப்பாட்டு சபையின் சோதனையின் பின்னர் இவை மக்களுக்கு வழங்கப்படும் என தற்போதய செய்திகள் கிடத்திருக்கின்றன. இதன்படி 2 மில்லியன் ரூபா வரியினை அரசாங்கம் செலுத்துவதாக…
-
- 0 replies
- 528 views
-
-
வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டத் தாக்குதல்கள் என வர்ணிக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடி வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்களை விடுவிக்கக் கோரி புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கிய இவ்வாண்டின் முதல் அரையாண்டில் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது, தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று வருகின்றன. இன்று, வதை முகாம்களில் அல்லும் பகலும் அவலத்தைச் சந்தித்தவாறே அணுவணுவாக மரணித்துக் கொண்டிருக்கும் மக்…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வியாழக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்ட தமது உண்ணா நோன்பினை கைவிட்டுள்ளனர். இந்த போராட்டம் ஒர் எதிர்மறையான கருத்தை ஏற்படுத்துவதாகவும் அத்துடன் அங்கு இருக்கின்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நிலையினை கருத்தில் கொண்டும் தாம் இந்த போராட்டத்தினை கைவிடுவதாகவும் கூறியுள்ளனர்.தாம் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் உதவியுடன் அவர்கள் எம்மை பொறுப்பெடுத்தால் படகில் இருந்து வெளியே வர தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஏற்கனவே ஒரு குழந்தை உட்பட உண்ணாவிரதம் இருந்த இருவர் உடல்னிலை மோசமாகியதால் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. தம்மை நீண்டகாலத்திற்கு இந்தோனேசியாவில் வைத்திருக்கவேண்டாம் எனவும் ஏனெனில…
-
- 0 replies
- 646 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரத்தினை நாடு கடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு வாரியான செயற்பாட்டுக் குழுக்கள் - Countrywise Working Groups தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி, தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக - தமிழீழ மக்களின் சுதந்திரத்தினையும் இறைமையினையும் ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்கான நிறுவனமாக நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதனை நீங்கள் அறிவீர்கள். இந்த முயற்சி நாளாந்தம் முன்னேற்றம் கண்டு…
-
- 5 replies
- 648 views
-
-
பிரித்தானியாவுக்கான மாணவர்களுக்கான விசா அனுமதி பெற்று பிரித்தானியா வருவதற்காக இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற 18 தமிழ் மாணவர்கள் தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று மதியம் இலங்கை நேரப்படி 1.15 க்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ஏ.எல்.கே.503 விமானத்தில் இவர்கள் பயணிக்க இருந்தனர். குடிவரவு குடியகல்வு பரிசோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்காகக் காத்திருக்கச் செல்கையிலேயே இவர்கள் அனைவரும் பயணத்தைத் தொடர விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கட்டுநாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டதற்கு நியாயமான காரணமெதுவும் தெரிவிக்கப்…
-
- 4 replies
- 1.1k views
-