ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் பிறந்த விஞ்ஞானி இராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது. நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மேற்கொண்ட புதிய கண்டுபிடிப்புக்காக அவருக்கும், மேலும் இரண்டு விஞ்ஞானிகளுக்கும் கூட்டாக இந்த பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 881 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களுக்குள் வைத்திருக்கும் மறைமுகத் திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் அனைத்துலக அபிவிருத்தி விவகார அமைச்சர் மைக் போஸ்டருடன் நடத்திய பேச்சுக்களின்போதே அமைச்சர் போகல்லாகம இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றுவதும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவுயே இருவருக்கும் இடையிலான பேச்சுக்களின்போது முக்கியமாக ஆராயப்பட்டதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. …
-
- 0 replies
- 607 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 591 views
-
-
சிறிலங்காவின் அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 தமிழ்க் கைதிகளின் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டுவருவதாக சிறைச்சாலை ஆணையாளரின் பேச்சாளர் கெனத் பெர்னான்டோ தெரிவித்திருக்கின்றார். தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தம்மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அநுராதர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் நாள் உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை தொடங்கினர். விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை எதற்காக தொடர்ச்சியாக பல வரு…
-
- 0 replies
- 511 views
-
-
அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை உடனடியாக விடுவிப்பதற்கான அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்கு வழங்க அனைத்துலக நாடுகள் தீர்மானித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக வன்னி முகாம்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு நிதி உதவி அளிப்பதில்லை என்று நிதி வழங்கும் நாடுகள் முடிவு செய்துள்ளன. தடுப்பு முகாம்களின் வழக்கமான பணிகளுக்காக பிரித்தானியா இனிமேலும் நிதி உதவி வழங்காது என்பது சிறிலங்கா அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கொழும்பு சென்ற பிரித்தானிய அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர், லண்டனின் முடிவை சிறிலங்கா அரசிற்கு மிகத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். சிறிலங்காவிற்கு நிதி உதவிகளை வழங்கிவரும் ஏனைய நாடுகளும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளன எனவும் அவர் கூறினா…
-
- 0 replies
- 916 views
-
-
ஊடகத்துறையில் துணிச்சலுடன் பணியாற்றியமைக்கான பீற்றர் மக்லர் விருதைப் பெற்றுக்கொண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்தை கெளரவிக்கும் முகமாக கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் திசநாயகத்தின் பெற்றோரும், ஊடகத்துறையில் உள்ள அவரின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய திசநாயகத்தின் தந்தையான ஜெயப்பிரகாஷ் திசநாயகம் (வயது 90) தனது மகனுக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர், அவருக்கு அன்பையும் ஆதரவையும் தெரிவித்து வெளிநாடுகளில் இருந்து 600 வரையிலான கடிதங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மனோ ரீதியாக தாமும் தமது குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு தமது …
-
- 1 reply
- 698 views
-
-
ஈழநாடு ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்களுக்கு நேற்று மாலை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பல வாரங்களாக தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்த திரு. சி. பாலச்சந்திரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில் சுவிஸ் நேரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலைக் கண்டித்து அண்மையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பாகவே இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று, புதன்கிழமை (07.10.2009) பாரிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற வழமையான ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த வ…
-
- 0 replies
- 986 views
-
-
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவிக்கு கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சராக காமினி லொக்குகே பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இராணுவத் தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி போன்றதொரு பயனற்ற பதவி தமக்கு வழங்கப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா விசனமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் இராணுவத் தளபதி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அனைத்துலக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தாயகத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள, இல்லங்களுக்கு அனுப்பபட்ட சிறார்கள் விபரங்களை முடிந்தவரை திரட்டி வருகின்றது. இதுவரை 3000 வரையான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விபரங்களின் அடிப்படையில் மேலதிக விபரங்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். மேலும் இவைதொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், குடும்பங்கள், தனி நபர்களை கேட்டுக்கொள்கின்றோம். இது தொடர்பாக அவர்கள் விட்டுள்ள குறிப்பு வருமாறு 01/10/2009 அன்பார்ந்த மக்களுக்கு, வவுனியா தடுப்பு முகாம்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் வதிகின்ற ஆதரவற்ற, உறவுகளை இழந்த, பெற்றோரை இழந்த சிறார்களின் முழுமையான விப…
-
- 9 replies
- 1.8k views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக ஒப்பந்தங்களுக்கு விரோதமானது என ஐரோப்பிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரத்தை வழங்குவதற்கு சிறிலங்கா அரசு தவறியிருப்பது ஆழந்த கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 715 views
-
-
தமிழர்களுக்கு கட்டுநாயக்காவில் நடந்த ஒரு கொடூரமான உண்மை சம்பவம் இது இவ் விடயம் 07. 10. 2009இ (புதன்)இ தமிழீழ நேரம் 0:43க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள்இ முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்இ விசேட செய்தி அந்த இளைஞன் அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த ஒடுகலான நடைபாதையைக் கடந்து எதிரே இருந்த அறைக்குள் அவன் இழுத்துச் செல்லப்பட்டுதும் அறைக்கதவு தாழிடப்படுகிறது. அவன் எதிர்பார்க்காத கணமே அவன் முகத்தில் குத்து விழுகின்றது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி கன்னத்தில் பாய்கிறது. அவன் கொண்டு வந்திருந்த பிரயாணப்பை கவிழ்த்துக் கொட்டப்படுகிறது. அடே ஊரு எது? ‐ இவனை இழுத்து வந்தவன் கேட்கிறான். மட்டக்களப்பு என்று பதில் சொல்வதற்குள் இரண்டாமவனிடமிருந்து கேள்வி வருகிறது. அது சிங்களத்த…
-
- 6 replies
- 2.8k views
-
-
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினால் கிராமத்திலுள்ள ஏழை மக்களே துன்பப்படுகின்றார்கள். இதனால் ஜனாதிபதி, அவரது குடும்பம், உறவினர்கள், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்க்கையைத் தான் அனுபவிக்கின்றார்கள். புதல்வரின் மேற்படிப்பிற்காக ஜனாதிபதி அவரை அமெரிக்காவிற்கு அனுப்புகிறார். எனினும், கிராமத்தில் எமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலையை ஜனாதிபதி மூடுகிறார். ஆட்சியாளர்களுக்கு பொருளாதார நெருக்கடி பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர்களது சுகபோக வாழ்க்கை எவ்விதத்திலும் குறைவடையவும் இல்லை|| என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையக…
-
- 0 replies
- 958 views
-
-
சிறிலங்காவில் மக்கள் அச்சம் இன்றி வாழும் நிலை ஏற்படவேண்டும் என்று இந்தியாவின் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர் வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
சிறிலங்காவில் மக்கள் அச்சம் இன்றி வாழும் நிலை ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் இந்தியாவின் வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் சிறீ சிறீ ரவிசங்கர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 781 views
-
-
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய 300 பேர் வவுனியா, செட்டிகுளம் தடுப்பு முகாமில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படடனர் என்று வவுனியா மாவட்ட செயலாளர் பி.சார்ள்ஸ் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 770 views
-
-
பருவ மழைக்கு முன்பாக மெனி தடுப்பு முகாமில் இருக்கும் மக்களை உடனடையாக மீழ குடியமர்த்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான மனிதாபிமான இணைப்பாளர் சேர் ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் மீண்டும் அழுத்தி கூறியுள்ளார். நேற்று நியூ யோக்கில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். பருவமழைக்கு முன் மேற்கொள்ளப்படும் வடிகாலமைப்பு வசதிகள் பொருத்தமானதாக இல்லை அது தாக்கு பிடிக்காது எனவே அதனை நம்பி இருக்காது மக்களை இடம்னகர்த்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முகாமிற்குள் நடமாட்ட சுதந்திரம் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 730 views
-
-
இலங்கையை விட்டு தமிழர்கள் வெளியேறுவதை சிங்களவர்கள் ஒருபோதும் ஆட்சேபிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளது இந்திய இணையத் தளமான ரெடிஃப் டொட் கொம். போர் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டை வந்தடைந்த ஈழத் தமிழ் அகதிகளைச் சந்தித்துப் பேசிய இணையத் தளத்தின் ஊடகவியலாளர் கணேஷ் நாடார் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 666 views
-
-
சிறிலங்கா தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக இரண்டாம் நிலை அதிகாரியான பிரிகேடியர் சயீட் ரசா அஷ்கரி நேகா இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 244 views
-
-
கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக இரண்டாம் நிலை அதிகாரியான பிரிகேடியர் சயீட் ரசா அஷ்கரி நேகா சிறிலங்கா தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவை இன்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 531 views
-
-
சிறிலங்காவில் இருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு கடந்த முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் தீவிரவாதத் தடுப்புக் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைகளுக்காகக் கையளிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
சிறிலங்காவில் இருந்து ஆள்களை வெளிநாடுகளுக்குக் கடந்த முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் தீவிரவாதத் தடுப்புக் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைகளுக்காகக் கையளிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 532 views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்குமாறு கோரி அனைத்துலக மட்டத்தில் பரப்புரை நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா பொதுவுடமை சமத்துவக் கட்சியும் உலகப் பொதுவுடமை இணையத் தளமும் இணைந்து தொடங்கி உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 539 views
-
-
இலங்கையில் 26 வருடங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் பாலியல் வன்முறைகளும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலறி கிளின்ரன் தெரிவித்த கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கொழும்பு வலியுறுத்தி உள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டின்ஸ்சுக்கு நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை அழைப்பாணை அனுப்பிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அவரிடம் சிறிலங்கா அரசின் கருத்தைத் தெரிவித்தார். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நெறிப்படுத்தலின் கீழேயே அமெரிக்கத் தூதுவருக்கு வெளிவிவகார அமைச்சர் அழைப்பாணை அனுப்பினார் என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அரசின் மகிழ்ச்சி அற்ற நிலையை வெளிப்படுத்தும் வகையில் இந்த…
-
- 1 reply
- 947 views
-
-
தீவிரவாதத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இலைமறை காயாக இன்னும் இருப்பதாக தெரிவித்துள்ள அரச தலைவரின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச, அதனைச் சரி செய்வதற்கு இன்னும் சில காலங்கள் செல்லலாம் எனக் கூறி உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 848 views
-
-
போரினால் இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா அரசு பராமரிக்கும் முறை தொடர்பாக தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் பிரித்தானியா, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றது. "முகாம்களில் உருவாகக்கூடிய மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தவிர்க்கப்பட வேண்டுமானால், அங்குள்ள மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்படுவது முக்கியமானதாதகும்" எனவும் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர் தெரிவித்திருக்கின்றார். இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு சென்ற பிரித்தானிய அமைச்சர் வவுனியா மெனிக் பாம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களை நேற்று …
-
- 0 replies
- 714 views
-