ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
மன்னாரில் இராணுவத்தினரிடையே மோதல் இருவர் பலி ஒருவர் காயம் மன்னார் மாவட்டம் பரப்பன்கடவையில் சிங்கள இராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் ஒருவர் படுகாயத்திற்கு உட்பட்டு மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் கடந்த இரவு 10.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான ஓர் நபரை தேடி சென்ற போது அந்த தேடுதலில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் இந்த இரு இராணுவத்தினரையும் கொலை செய்த இராணுவ சிப்பாய் பலத்த காயத்துடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதே நேரம் இது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…
-
- 0 replies
- 1.1k views
-
-
மக்கள் சொந்த இடங்களிற்கு சென்றாலே போர் முடிவுக்கு வந்ததாக கூறமுடியும் - உலகவங்கி இலங்கை தேசமானது போர் சூழலில் இருந்து முற்றாக வெளியில் வரவேண்டுமெனின் ஒரே வழி தடுப்பு முகாமில் உள்ள மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பி செல்வதே ஆகும் என உலக வங்கியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். துருக்கியில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினை உலக வங்கியின் தலைவர் திரு ரொபேட் ஷொலிக் அவர்கள் நடாத்தினார். இதன் போது இலங்கை நிலபரம் தொடர்பில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார். மக்கள் அனைவரும் தமது சொந்த இடத்திற்கு செல்லும் போதே பிரச்சினை தீர்ந்ததாக கருதப்படும் என கூறினார். நன்றி ஈழநாதம் http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 570 views
-
-
பாதுகாப்பு சபையின் அக்டோபர் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப் படவில்லை இந்த மாத பாதுகாப்பு சபை அமர்வுகளில் இலங்கை தொடர்பான விடயங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என ஐ. நா பாதுகாப்பு சபையின் அக்டோபர் மாத அமர்வுகளுக்கு தற்போது தலைவராக இருக்கும் நாடான வியட்னாமின் ஐ. நா வுக்கான தூதர் லி லுங் மிங் அவர்கள் தெரிவித்துள்ளார். ஐ. நா வின் பாதுகாப்பு சபையில் பாதுகாப்புக்கான பொறுப்புணர்வு (Responsiblity to Protect) தொடர்பாக மியன்மார், சிறிலங்கா ஆகியவற்றையும் ஹொண்டூரஸ் நாட்டினையும் கொண்டுவரப்படவேண்டும் என்ற சில அங்கத்துவ நாடுகளின் விருப்பத்தின் பேரில் வினவியபோதே மேற்படி வியட்னாமிய தூதர் தெரிவித்தார். நன்றி ஈழநாதம் http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 701 views
-
-
குருநாகல் பாடசாலை வான் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி ஓர் சிறிலங்கா படை வீரர் குருநாகல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை சிறார்கள் வாகனத்தின் மீதான குண்டுவெடிப்பின் சூத்திர தாரி ஓர் சிங்கள படைவீரர் என தெரியவருகின்றது. இன்று இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை திட்டமிட்டு நடாத்தியதாக குறித்த சிப்பாயைய் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இராணுவ சிப்பாய் தனது பதவியில் இருந்து விலத்தியுள்ளதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. நன்றி ஈழநாதம் http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 816 views
-
-
சிறிலங்காப் படையினருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவரிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையில் பாலியல் வன்முறைகள் போரின்போது ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலறி கிளின்ரன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் தெரிவித்த கருத்துக்களுக்கு சிறிலங்கா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை 3000 ஆயிரம் கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது. இது மதிப்பிடப்பட்ட தொகையைவிட அதிகரித்துச் சென்று வரலாற்றில் உச்ச அளவிலான துண்டுவிழும் தொகையாக மாறியுள்ளதென பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையை எட்டுவீதமாக வைத்திருக்கவே முயற்சித்துவந்தது. எனினும், அதுதற்போது 10.4 வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. அரசாங்கம் கடனுதவியைப் பெற்றுக்கொள்ளும் போது வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையானது ஐந்து சதவீத மட்டத்தில் இருக்கவேண்டும் என சர்வதேச நாணய…
-
- 5 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா துணைத் தூதரை வெளியேற்ற வேண்டும்: பழ.நெடுமாறன் இந்தியாவுக்கான சிறீலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கைவிடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களைப் பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது, அந்த முகாம்கள் மிருகக்காட்சி சாலைகள் அல்ல” என இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை இலங்கையிலுள்ள முகாம்களைப் பார்வையிட அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் எழுப்பிய…
-
- 0 replies
- 665 views
-
-
பிரித்தானியாவில் ஜந்தாவது வாரமாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் [படங்கள் இணைப்பு] சிறீலங்க அரசாங்கத்தினால் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் கடுமையான சுழல் காற்றால் மிகவும் அல்லல் படும் நிலையில் அந்த மக்கள் நிம்மதியாக அவர்கள் சொந்த இடங்களில் குடியேற பிரித்தானிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து நேற்று 5 ஆவது வெள்ளிக்கிழமையாக பிரித்தானிய பிரதமரின் காரியாலய முன்றலில் தொடர் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் அந்த மக்களுக்காக குரல் கொடுத்தார். பல உள்நாட்டு பத்திரிக்கைகள் மற்றும் பத்த…
-
- 0 replies
- 591 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய காலப்பகுதியாக 2002ம் ஆண்டின் பின்னான காலப்பகுதி அமைந்துள்ளது. அதாவது சமாதான காலப்பகுதி என்று குறிப்பிடலாம். இந்தச் சமாதான காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகப் பகுதியான வன்னிப் பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டுப் பிரமுகர்களின் வருகை, வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த அதேவேளையில்தான், விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்களின் ஊடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன. இதனை முறியடித்து இவ்வாறானவர்களை கண்டறிந்து இந்த ஊடுருவல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழ் மக்கள் சிலரே இவ்வாறான துர…
-
- 3 replies
- 3k views
-
-
பிரித்தானியத் தொழிற் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய தமிழரான சென் கந்தையா அவர்கள்பிரித்தானியாவில் மூன்று இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் எல்லோரும் தொழிற்கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்றும் கூறினார். பதினொரு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தொழிற்கட்சி தமிழர்களுக்கு என்னசெய்தது? * உண்ணாவிரதம் இருந்த தயா இடைக்காடருக்கு அழித்த வாக்குறுதிகளை நிறவேற்றியதா? * ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி எழுப்பிய போதெல்லாம் இலங்கை அரசு ஜனநாயக முறைப் படி தேர்ந்தெடுக்க்கப் பட்ட அரசு என்றும் விடுதலைப் புலிகள் பயங்கர வாத இயக்கம் என்று தொடர்ந்து கூறிவந்தது. * இந்தியாவின் வற்புறுத்தலுக்கு இணங்க தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சட்டபூர்வமாக பயங்கரவாத முத்திரை குத்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
உயிரினும் மேலான தாய்நாடு இன்று உடலங்கள் எரிகின்ற பேய்வீடு என் மண்ணில் என் நாட்டில் எந்தன் சூரியனை பார்க்க முடியுமா ? மக்கள் அரங்கத்தில் ஒரு மகத்தான பதில் http://yarl.com/
-
- 3 replies
- 1.7k views
-
-
‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத…
-
- 127 replies
- 9.7k views
- 1 follower
-
-
அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி ரொதாம் கிளிங்டன் அவர்கள் பாலியல் குற்ற சாட்டுக்கள் போராயுதமாக பயன்படுத்தப்படுகின்ற நாடுகளில் சிறிலங்காவை மட்டும் தனித்து சொல்லவில்லை என்றும் அந்த உரை பொதுவானது எனவும் கூறியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் பற்றீசியா புட்டெனிஸ்.இலங்கையில் விடுதலைப்புலிகளையோ, இராணுவத்தினரையோ குறிப்பாக அவர் தமது பேச்சில் குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார்.26 வருட போரில் பாலியல், மற்றும் கொலைகள் தொடர்பான போர்குற்ற சாட்டுகள் இருந்து வருவதாகவும் இது பிறிதொரு பிரச்சனையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். http://www.parantan.com/
-
- 2 replies
- 826 views
-
-
சிறிலங்கா பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வரும் ஏற்றுமதி வரிச் சலுகையை மேலும் நீடிப்பது தொடர்பாக எந்தவிதமான விசாரணைகள் நடத்தப்படுவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று சிறிலங்கா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நாட்டின் இறைமையையும் மதிப்பையும் சுய மரியாதையையும் பாதிக்கும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசும்போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் அவற்றை எ…
-
- 2 replies
- 691 views
-
-
அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்~, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆகியோருக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை வெளியிடவேண்டாம் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சிரே~;ட அதிகாரி, கூட்டம் தொடர்பான செய்தி சேரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் கேட்டுள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலி;ல் வெற்றிப் பெறும் நோக்கில், ரன்பிம காணி உறுதிகளை வழங்கும் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் அரச தலைவர் ஒருவர் பேசக்கூடாத வார்த்தைகளைப் பயன்படு…
-
- 0 replies
- 1.3k views
-
-
டெல்லியில் உள்ள சிறீலங்காத் தூதரகம் மீது கல் வீசித் தாக்குதல் [படம் இணைப்பு] தில்லியில் உயர் பாதுகாப்புமிக்க இடத்திலுள்ள சிறீலங்கா தூதரகம் மீது சிலர் கல்வீசித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணியளவில் 15 லிருந்து 20 பேர் வரை உள்ள சிலர் கல்வீசித்தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதியானது உயர் பாதுகாப்புமிக்க பகுதியென்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைப்பற்றி விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளனர். இன்று கோயம்பத்தூர் சென்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஈழமக்களை காப்பாற்ற முயற்சிக்காததற்காக இந்து மக்கள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி கைதாகியுள்ளனர…
-
- 0 replies
- 852 views
-
-
ETA Cricket tournament which is orgnised by ETA every year as asked Sinhaleese players to be part of their teams Melbourne Tamils are pleading to the committe to reconsider their dessison and stop this happening. ETA has gone crazy.. If this goes futher we will not respect ETA committe and also pull out from the competition We got hammered by Singaleese people who played ETA last year in front of parliment Shame on you ETA We will not be Silenced
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் உரையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் சியொபெய்ன் மக்னோ அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை அங்கு எடுத்துக் காட்டி இலங்கையுடன் வர்த்தகம் செய்யும் Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது அல்லது இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லும் போது நீங்கள் கொடுக்கும் பணம் மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் அரசுக்கு செல்லத்தான் வேண்டுமா என்று யோசியுங்கள் என்றார். உலகத்திலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு இலங்கை என்றும் அவர் குரலெழுப்பினார். காணொளி .................. http://vannikuruvi.blogspot.com/2009/10/blog-post.html
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை போரில் பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலறி கிளின்ரன் பொதுப்படையாகக் கருத்துத் தெரிவித்தாரே தவிர, அவர் எந்த ஒரு தரப்பையும் அது தொடர்பாகச் சுட்டிக்காட்டவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டின்ஸ் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 594 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ள சிறிலங்காவைச் சேர்ந்த 9 பேரும் சிங்களவர்கள் என சிறிலங்கா தூதுவர் சேனக்க வலகம்பாய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 476 views
-
-
சேரமான் 01/10/2009, 19:55 பிரித்தானியாவின் ஆளும் கட்சி மாநாட்டில் சிறீலங்கா அரசுக்கு எதிராகப் போர்க்கொடி! மூன்று இலட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ள சிறீலங்கா அரசுக்கு பிரித்தானிய மக்களின் பணம் சென்றடையக் கூடாது என்று ஆளும் தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிபோன் மக்டொனா அம்மையார் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்: "Marks & Spencer நிறுவனத்தில் ஒரு உள்ளாடையையோ, Next நிறுவனத்தில் மேலங்கியையோ அடுத்த தடவை நீங்கள் கொள்வனவு செய்யும் பொழுது, அல்லது இந்தியாவின் கடலோரத்தை அண்டியுள்ள அழகிய தீவிற்கு வாழ்நாள் பெறுமதிமிக்க விடுமுறையாக நீங்கள் செல்லும் பொழுது,…
-
- 0 replies
- 694 views
-
-
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தையும் மதிப்பையும் வழங்க வேண்டும் எனில் புதிய அரசியலமைப்பும் புதிய சட்டங்களும் சிறிலங்காவிற்கு தேவை என்று தோட்டத் தொழிற்துறை அமைச்சர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 428 views
-
-
சிறிலங்கா தரைப்படையில் இருந்து தப்பியோடிய 20 ஆயிரத்து 220 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என தரைப்படைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 414 views
-
-
இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் விலகியவரும் ஈழத் தமிழர்களின் ஆதரவாளருமான 'தமிழருவி' மணியன் புதிய இயக்கம் தொடங்கவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 664 views
-