ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை - பகுதி 01 air72005ம் ஆண்டின் காலப்பகுதி அது. மகிந்த ராஜபக்ச சிறீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று போரைத் தொடங்கவில்லையாயினும் போருக்கான ஆயத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. இராணுவத்தினருக்கான போர் பயிற்சிகளிலும், ஆயுதக் கொள்வனவுகளிலும் சிறீலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. மகிந்த அரசு பாரிய போர் ஒன்றைத் தொடங்கப் போகின்றது என்பது மிகவும் உறுதியாகத் தெரிந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல, போர் நிறுத்தத்தை மீறும் வகையில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும், விடுதலைப் புலிகளுக்கு ஆத்திரத்தை ஊட்டக்கூடிய…
-
- 5 replies
- 3.9k views
-
-
புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரான கே.பி. என்ற செல்வராசா பத்மநாதனிடம் விசாரணை நடத்த சிபிஐ குழு இலங்கை செல்கிறது. பிரபாகரனின் மறைவையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக அறிவித்துக் கொண்ட செல்வராசா பத்மநாதன் இலங்கை ராணுவத்தால் மலேசியாவில் கைது செய்யப்பட்டார். கொழும்பில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. புலிகளின் பணம், ஆயுத நெட்வோர்க் குறித்த முழுத் தகவல்களை அறிந்தவர் என்பதால் அவரை தீவிரமாக விசாரித்து வருகிறது இலங்கை அரசு. இந் நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாகவும் அவரை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்ட உளவுப் பிரிவுகளின் குழு தான் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்து…
-
- 1 reply
- 852 views
-
-
இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் மீனவர்களே இவ்வாறு நடுக்கடலில் நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்படையினர் துன்புறுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 18 மீனவர்கள் நேற்றிரவு 3 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நாகப்பட்டினத்துக்கு மேற்கே சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அங்கு சென்றுள்ளனர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டே சென்ற இலங்கை கடற்படையினர், மீ…
-
- 2 replies
- 774 views
-
-
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் ஒரு அரைநாள் உண்ணாவிரதப் போராட்டக் களம் திறக்கப்பட்டுள்ளது போலவே தெரிகின்றது. வன்னி மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உச்சம் பெற்று, தமிழீழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சி அலைகளை உச்ச நிலையை அடைந்த வேளையில், சோனியா காந்தி அம்மையாரின் நரபலி வேட்டை தடைபட்டு விடக் கூடாது, அவர் தரும் வரம் இடை நின்று போகக்கூடாது என்ற கடமை உணர்வோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடிய நாடகமும், எழுதிய கடிதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதும் அவர் கடிதம் எழுதிய சாதனையை ‘கின்னஸ்’ சாதனையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வார ஏடுகள் கூட அடிக்கடி கேலிச் சித்திரம் வரையும் அளவிற்கு அவரது கடித சாதனை ஏற்கப்பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மெனிக் பாம் தடுப்பு முகாம்களில், பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் சன நெருக்கடியைக் குறைப்பதற்கு ஏதுவாக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் இடைத்தங்கல் முகாம்களை அமைப்பதற்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 573 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச் சலுகையை (ஜி.எஸ்.பி. பிளஸ்) சிறிலங்காவுக்கு நிறுத்தும்படி தான் எப்போதும் பரப்புரை செய்யவில்லை என சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 452 views
-
-
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் சிறப்பு பிரதிநிதி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கை தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்கர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனை விசாரணை செய்வதற்கான சிறிலங்கா அரசின் அனுமதிக்காக இந்தியா காத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 540 views
-
-
பறிக்கப்படுகிறது வன்னி மண்! பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? : ஈழநாடு (பாரிஸ்) சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது இன்றைய கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:- வன்னி மக்களைச் சிறுகச் சிறுக முற்றாக அழித்தெழிக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு, மேற்குலக நாடுகளும் பல மனித உரிமைகள் அமைப்புக்களும் தெரிவித்துவரும் கண்டனங்களை சிங்கள அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நாடுகளின், அமைப்புக்களின் அழுத்தங்களைச் சமாளித…
-
- 2 replies
- 977 views
-
-
அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கிலறி கிளின்ரனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் நியூயோர்க்கில் சந்தித்து வவுனியா முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 813 views
-
-
கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பதையிட்டு விசாரணைகள் தொடர்ந்தும் நடத்தப்படுவதாகத் தெரிவித்து குற்றப் புலனாய்வுத்துறையினர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோருக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுத்துறையினர் இந்த அறிக்கையை வெளியிட்டனர். தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்று விசாரணைகள் இடம்பெற்ற போ…
-
- 0 replies
- 660 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள அரியாலைப் பகுதியில் மக்களை மீளக் குடியமர்வதற்காக என சிறிலங்கா தரைப்படையினர் அனுமதித்த பகுதியில் நிலக்கணிவெடி ஒன்று வெடித்ததில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 535 views
-
-
தேசிய தலைவரின் வார்தையை மதிப்பவர் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கமுடியாது தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது! விடுதலைப் புலிகளது இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பலம் பொருந்திய சக்தியாக புலம் பெயர் தமிழர்களே உள்ளனர். தமது தாயக மக்களின் விடுதலைக்காகவும், தாயக மண்ணின் விடுதலைக்காகவும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் தேசத்து மக்களையும் அரசையும் தமது நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கு மேலும் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்க முடியும். இந்த மக்கள் சக்தியைச் சிதைப்பதற்கான பெரும் திட்டமிடல்களுடன் சிங்கள தேசம் பலரை நம் மத்தியில் ஊடுருவச் செய்து…
-
- 32 replies
- 2.8k views
-
-
சிங்களப் பேரினவாதத்துக்குத் துணைபோகும் ஸ்ரீராம் நிறுவனத்தின் அகிலா ஸ்ரீனிவாசனுக்கு திறந்த மடல் – மனிதநேயன் மதிப்பிற்குரிய ஸ்ரீராம் லைஃப் நிறுவனத்தின் தலைவர் திருமதி.அகிலா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம்.இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகிகளில் தாங்களும் ஒருவர். கடந்த 23 ஆண்டுகளாக நிதி மூலதனத்துடன் தாங்கள் கொண்டுள்ள உறவும், அதனால் தாங்கள் சார்ந்த ஸ்ரீராம் குழுமத்தில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. தற்சமயம், தென் ஆப்பிரிக்காவின் சன்லாம் நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் தலைவராக சிறப்புடன் இயங்கி வருகிறீர்கள். நிதி நிர்வாகியாக மட்டும் முடங்கிப்போய் விடாமல், சென்ற 7 ஆண்டுகளாக சமூகப் பணியில…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிங்களப் பேரினவாதத்துக்குத் துணை போகும் ஐடியா நிறுவனத்தின் தலைமையில் நடைபெறும் சென்னை மராத்தனை ரத்து செய்க! – நாம் தமிழர் இயக்கம் பெரியார் திராவிடர் கழகம் கூட்டறிக்கை சிறிலங்கா பேரினவாத அரசின் தமிழின அழிப்புக்கு துணை போகும் வகையில் செயல்படும் ஐடியா நிறுவனத்தின் தலைமையில் நடைபெறும் சென்னை மராத்தான் போட்டியை ரத்து செய்யக்கோரி இயக்குநர் செந்தமிழன் சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் இணைந்து இன்று(25.09.2009) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழ் இனம் அறிவையும், மானத்தையும் கொண்ட இனம்தானா என்பதை நிரூபிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். சிங்கள இனவாதம் தொடுத்த போரினால் அழிக்கப் பட்ட வன்னி நிலத்தில் வேளாண் தொழ…
-
- 0 replies
- 903 views
-
-
ஈழம் – நாம் என்ன செய்ய முடியும்? நாம் என்ன செய்ய இயலும்? – கொற்றவன் “நாம் என்ன செய்ய முடியும். நாம் என்ன செய்ய இயலும்” இவ் இரண்டு வரிகள் தான் இன்று ஞாலத்தில் உள்ள தமிழர் சிலரை பற்றி நிற்கும் சொற்றொடர்கள். ஆம் இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும் பொருள் ஒன்று தானே என்று நீவிர் வினவினால் அதற்கு மறுமொழியானது தமிழ் மொழியின் படி ‘ஆம்’ என்று தான் இருக்கும். ஆனால் தமிழரிடையே நிலவும் தருத்துகளின் அடிப்படையில் இவ்விரு வரிகளையும் ஆராய்ந்தால் இவற்றின் பொருள் வெவ்வேறு என்பது புலப்படும்.இதில் நாம் என்ன செய்ய இயலும் என்பது தமிழீழத்தில் ௨௦௦௯ இல் [2009] நடந்த தமிழின அழிப்பிற்குப் பின் புலம் பெயர் ஈழத் தமிழரிடையே எழுந்த சிந்தனையாகும்.இப்படி சிந்தித்து அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த…
-
- 0 replies
- 916 views
-
-
வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மக்களில் சுமார் 35 ஆயிரம் பேரை மீள்குடியேற்றம் செய்வதாக அங்கிருந்து வெளியே கொண்டுசென்ற சிறிலங்கா அரசானது யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் அமைந்துள்ள வேறு முகாம்களில் அவர்களை அடைத்து வைத்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியிருக்கின்றார். இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் முன்னர் எங்கு இருந்தார்களோ அந்த இடங்களிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என வலியுறுத்திய சம்பந்தன், அவர்களை விடுதலை செய்வதாகக் கூறி ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றும் செயற்பாடுகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியிர…
-
- 2 replies
- 688 views
-
-
வெள்ளிக்கிழமை, 25, செப்டம்பர் 2009 (17:22 IST) ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் உலகத் தமிழர் மாநாட்டில் போராட்டம்: இல.கணேசன் பொங்கல் பண்டிகைக்குள் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவிட்டால் கோவை உலகத் தமிழர் மாநாட்டின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். இதுகுறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் மீதான பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய ஆளுங்கட்சியின் கூட்டணியினரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். மக்களவையே அந்தக் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் தமிழக எம்.பி.க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இலங்கை ராணுவத்தினர…
-
- 0 replies
- 598 views
-
-
சேரமான் 25/09/2009, 14:11 தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கக்கூடும்! ரட்ணசிறீ விக்கிரமநாயக்க அச்சம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் நிலவுவதாக சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க அச்சம் வெளியிட்டுள்ளார். நியூயோர்க்கில் இடம்பெற்ற ஆசிய சமூக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சிறீலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை தமது படையினர் தோற்கடித்துள்ள பொழுதும், அவர்கள் மீண்டும் தலைதூக்கக்கூடிய அபாயம் நிலவுவதாகவும், இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளிலேயே தாங்கள் தற்பொழுது ஈடுபடுவதாகவும், சிறீலங்கா பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த மடல் அல்லது வேண்டுகோள் எல்லோரும் படித்தாலும் இது மிக மிக முக்கியமாக புலம்பெயர் தேசங்களில் விடுதலைக்காக நிதிசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் படிப்பதற்காக!!! ________________________________________________________________________________ _________________________________ நண்பர்களே,நீங்கள் கடந்தகாலங்களில் தமிழீழதேசிய விடுதலைக்காக உங்கள் உங்கள் நாடுகளில் பெரும் நிதி சேகரிப்பை செய்து விடுதலையை வேகப்படுத்தும் உதவியை செய்துள்ளீர்கள்.அதற்காக தமிழ்இனம் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டது.ஆனால் நண்பர்களே,கிளிநொச்சி சிங்கள படைகளின் கைகளில் வீழ்ந்த பின்னர் அதாவது 2009 ஜனவரிக்கு பின்னர் உங்களில் பலர் விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விடும…
-
- 0 replies
- 722 views
-
-
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்த நாட்டு அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்பவில்லை. 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமி…
-
- 0 replies
- 733 views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்சினையை பொங்கல் திருநாளுக்கு முன்னதாக தீர்க்காவிட்டால் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் மாநாட்டின் போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்டதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 500 போ் யாழ்ப்பாணம், காரைநகர் கடற்படைத் தளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 504 views
-
-
அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஓய்வூதியக் கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என சிறிலங்காவின் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய அமைச்சர் சரத் அமுனுகம, நாட்டுக்காக சிறப்பான சேவையைச் செய்துள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் நாட்டில் இருக்கின்றார்கள் எனவும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அரச துறையில் பணிபுரிந்தவர்களின் விகிதாசாரம் எமது நாட்டில் அதிகமானதாக உள்ளது எனவும் தெரிவித்தார். ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை 1995, 1997 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் அரசு தீர்த்துவைத்தது எனத் தெரிவித்திருக்கும் அமைச்சர் அமுனுகம, தமது சேவையில் இருந…
-
- 0 replies
- 572 views
-