ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே மிக நீண்ட காலத்திற்குப்பின் உங்களைச்சந்திப்பதில் உவகை ஆனாலும் நாம் எமது உறவுகள் பலரை இன்று இழந்து நிற்கின்றோம். எனினும் எமது இலட்சியப்பாதை மாறாது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் நாங்கள் எமது கடைமைகளை சரிவரச்செய்யவேண்டும். ஒன்று இதுவரையில் சிறையில் வாடும் உறவுகளை அவர்களுடைய சொந்த இடங்களிற்கு அனுப்பும் விதத்தில் செயற்படல் இரண்டு சிறையில் வதைபட்டுக்கொண்டிருக்கும் போராளிகளை விடுவிக்கும் விதத்தில் செயற்படல் மூன்று இனஅழிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேசக்கூண்டில் நிறுத்துமுகமாக செயற்படல் நான்கு அடுத்துவரும் காலங்களில் தமிழர் நிலங்களில் ஏற்படப்போகும் சிங்கள குடியேற்றங்களை அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்தல் ஐந்து எமது இளைய தலைமு…
-
- 0 replies
- 715 views
-
-
பாதுகாப்புக் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு, குறித்த பதவிக்கு மேலதிகமாக சர்வதேச வர்த்தகத்துறை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியை வழங்க தாம் விடுத்த வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச வார இறுதி செய்தித் தாள் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். சர்வதேச வர்த்தகத்துறை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் செயற்பட்டுவருவதுடன் அதன் நிரந்தர செயலாளராக பணியாற்றிவந்த ரணுகே தற்போது நீக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றிடத்தை நிரம்புவதற்காக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு விமல் வீரவங்ச சிபாரிசு செய்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலி…
-
- 0 replies
- 2.1k views
-
-
வரலாறு என்பது வெற்றியீட்டியவர்களாலேயே எழுதப்படுகிறது. அதாவது யாரிடம் அதிகார, ஆதிக்க பலம் உள்ளதோ அவரே வரலாற்றைப் பற்றிய வருணனையையும் ஆய்வையும் வழங்குகிறார்கள். இஸ்ரேல் உருவாக்கத்துக்கான சமரசப் பேச்சு வார்த்தைதகளின்போது ஸ்ரேர்ன் காங் (Stern Gang) என்ற அமைப்பைச் சேர்ந்த தோற்கடிக்கப்பட்ட ஜியோனிஸ்ட்டுகள் (உலக யூதர் அமைப்பினைப் பின்பற்றுபவர்கள்) எகிப்துக்கான பிரிட்டிஷ் தூதுவர் லோர்ட் மொய்னேயைக் கொலை செய்தார்கள். அத்தோடு 1964 ஆம் ஆண்டில் இவர்கள் ஜெருசலேமில் இருந்த கிங் டேவிட் ஹோட்டலைத் தகர்த்தார்கள். இதில் 91 விருந்தாளிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று.... 2009 இல் இஸ்ரேல் பாதுகாப்புப் பிரிவினர் காசாவுக்குள் படையெடுப்பை மேற்கொண்டபோதும் கூட ஜிஜோனிஸ்டுகளை மேற்குலக ஊட்கங…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் வெளியில் சென்று தங்குவதற்கு இடமும் உறவினர்களும் இருப்பவர்களை விடுவிப்பது என்று சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. மீள்குடியமர்வு மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசின் இந்த முடிவு குறித்து இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இடம்பெயர்ந்தவர்களை அவ்வாறு பொறுப்பேற்றுக் கொள்வதற்கு விரும்பும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் ஆள் அடையாளங்கள் மற்றும் விபரங்களை கிராம அலுவலர், காவல்துறையினர், மாவட்ட செயலர்கள் உறுதி செய்வர் என்றும் அதன் பின்னரே முகாமில் உள்ளவர்கள் விடுகிக்கப்படுவர் என்றும் அமைச்சர் கூறினார். வெளியே சென்று உறவினர்களுடன் வசிப்பதற்கான வசதி உள்ள மக்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் …
-
- 0 replies
- 470 views
-
-
சிறிலங்காவின் கூட்டுப் படைத் தளபதியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வழி நடத்தியவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சு செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக அவர், அனைத்துலக வர்த்தக மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது. சிறிலங்கா தரைப்படைத் தளபதியாக அதிகாரம் மிக்க பதவியில் இருந்த பொன்சேகா, போர் முடிவடைந்ததும் அதிகாரம் ஏதுமற்ற கூட்டுப் படைத் தளபதி பதவிக்கு மாற்றப்பட்டார். இதனை அவர் விரும்பவில்லை என்பதுடன், அரச தரப்பு அவரை ஓரம் கட்டுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதனை அடுத்து நாட்டுக்காக பொன்சேகா ஆற்றிய சேவைக்கு மதிப்பளித்து அவருக்கு அதிகாரமிக்…
-
- 0 replies
- 466 views
-
-
சிறிலங்கா அரசின் நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு எதிராக உதவி வழங்கும் நாடுகளும் உதவி அமைப்புக்களும் ஓரே அணியில் திரண்டு நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரித்தானியாவின் புகழ்மிக்கதும் செல்வாக்குமிக்கதுமான நாளேடான 'த கார்டியன்' தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த த கார்டியனின் ஆசிரியர் தலையங்கம் வருமாறு: கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த போரால் ஏற்பட்ட மனித விளைவுகளைச் சமாளிப்பதற்கான சிறிலங்கா அரசின் முயற்சிகள் வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளன. உயர் அளவான படைத்துறைச் செலவீனங்கள், சுற்றுலாத்துறையின் வருமான வீழ்ச்சி, பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், தேய்ந்துபோன வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஆழிப்…
-
- 0 replies
- 384 views
-
-
யாழ்ப்பாணத்தையும் வன்னிப்பெரு நிலப்பரப்பையும் வீதி வழியாக இணைக்கும் வகையில் சங்குப்பிட்டி - பூநகரி இடையிலான கடல் பகுதியை மேவி பாலம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. ஏ-32 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சங்குப்பிட்டியில் ஒரு சிறிய துண்டுப் பெருங்கடல் பகுதியாகக் காணப்படுகின்றது. இதில் 250 மீற்றர் நீளமும் 7.5 மீற்றர் அகலமும் கொண்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. பிரித்தானிய அரசு வழங்கிய 2 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி உதவியில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் யாழ். குடாநாட்டின் சங்குப்பிட்டியும் வன்னியின் பூநகரியும் தரைவழிப் பாதை ஊடாக இணைக…
-
- 0 replies
- 528 views
-
-
1953-ம்ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்துஇ பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன்இ ஒரு ம…
-
- 0 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணத்தையும் வன்னிப்பெரு நிலப்பரப்பையும் வீதி வழியாக இணைக்கும் வகையில் சங்குப்பிட்டி - பூநகரி இடையிலான கடல் பகுதியை மேவி பாலம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. ஏ-32 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சங்குப்பிட்டியில் ஒரு சிறிய துண்டுப் பெருங்கடல் பகுதியாகக் காணப்படுகின்றது. இதில் 250 மீற்றர் நீளமும் 7.5 மீற்றர் அகலமும் கொண்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. பிரித்தானிய அரசு வழங்கிய 2 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி உதவியில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் யாழ். குடாநாட்டின் சங்குப்பிட்டியும் வன்னியின் பூநகரியும் தரைவழிப் பாதை ஊடாக இணைக…
-
- 0 replies
- 414 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றில் உள்ள சிறிலங்காப் படையின் துணைப்படையான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி அந்தப் பகுதியில் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருப்பதுடன், துணைப்படைத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சின்னத்துரை சந்திரகாந்தனின் கொடும்பாவியையும் எரியூட்டினார்கள். காவல்துறையினரின் தடையையும் மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையால் இதனை கலைப்பதற்காக காவல்துறையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி தடியடிப்பிரயோகமும் செய்தனர். இதனால் அக்கரைப்பற்றுப் பகுதி நேற்று திங்கட்கிழமை பதற்ற நிலையில் காணப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அக்கரைப்பற்று ப…
-
- 0 replies
- 506 views
-
-
முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருக்கும் எமது உறவுகளின் உயிர்காக்க அணிதிரளுமாறு யேர்மனி தமிழ் மக்கள் எழுச்சிக் குழு அழைப்பு விடுத்திருக்கின்றது. யேர்மனியில் உள்ள டுசில்டோன் நாடாளுமன்றம் முன்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.09.09) முற்பகல் 11:00 மணியளவில் முட்கம்பி வேலித் தடைகளை உடைப்போம் எனும் தலைப்பில் நடைபெறவிருக்கும் நிகழ்வுக்கே தமிழ் மக்கள் எழுச்சிக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்கின்றனர். நிகழ்வு நடைபெறும் நாள் அன்று அரச தலைவர் தேர்தல் நடைபெறுவதால் முன்கூட்டியே வாக்களித்துவிட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் எழ…
-
- 0 replies
- 421 views
-
-
சர்ச்சைக்குரிய ஒளிநாடாவை வெளியிட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை அரசு கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரச படைகளால் தமிழ் இளைஞர்கள் கைளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை 'சனல் - 4' தொலைக்காட்சி இரு வாரங்களுக்கு முன்னர் ஒளிபரப்பியது. அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தைப் பெற்றுள்ள இந்த ஒளிநாடா போலியானது என சிறிலங்கா அரசு அறிவித்திருக்கின்றது. இந்த ஒளிநாடா போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 0 replies
- 445 views
-
-
புலிகளை பூண்டோடு அழித்தவர்கள் நாடு கடந்த அரசை ஏற்றுக்கொள்வார்களா? புலிகளை பூண்டோடு அழித்தவர்கள் நாடு கடந்த அரசை ஏற்றுக் கொள்வார்களா? : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விளக்கக்கோவை ஒன்றினை ஓகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியிடுவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதற்கமைய இத் திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் எழக்கூடிடிய பல்வேறு கேள்விகளுக்குரிய எமது கருத்துக்களை வினா – விடை வடிவிலான விளக்கக்குறிப்புக்களாகத் தற்போது வெளியிடுகிறோம்.. இவ் விளக்கக் கோவை தற்போது இலத்திரனியல் பிரதியாகவே வெளியிடப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்; (Transnational Government of Tamil Eelam) ஒன்றினை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதனையும் அதனை உரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தமது மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுள்ளது. மகிந்தவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு நீடித்த அதேவேளையில், படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் உடனடியாக மீள்குடியேற்றம் சாத்தியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரித்துவிட்டார். இதற்குப் பதிலாக முகாம்களில் உள்ளவர்கள் தமது நண்ப…
-
- 0 replies
- 479 views
-
-
கொழும்பு: இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கேவை ஜப்பான் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, காக்க வைத்து கைரேகை எடுத்த பின்னரே வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இலங்கை பிரதமர் விக்ரமநாயகே ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நரிட்டா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவரை ஜப்பானிய அதிகாரிகள் சாதாரண பயணியைப் போல நடத்தியுள்ளனர். அவரை விசாரணை அறைக்கு அழைத்துச் சென்று கைரேகையைப் பதிவு செய்துள்ளனர். பின்னர் வழக்கமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டுள்ளார் விக்ரமநாயகே. அதன் பின்னர்தான் அவர் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டாராம். எதற்காக விக்ரமநாயகேவை இப்படி காக்க வை…
-
- 0 replies
- 1k views
-
-
மிக நீண்ட காலமாக தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு அரசியலையே இலங்கையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? அதற்கு மாற்றாக இணக்க அரசியலை முன்மொழிவதாக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவின் தலைவரும் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர்களைத் தனது அமைச்சில் சந்தித்துப் உரையாடிய அவர், அரசுடன் பேரம் பேசுவதற்கான சக்தியை அதிகரிக்கும் வகையில் தனது கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும் என்று கோரினார். வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடந்தன என்றும் அதனை கொழும்பில் உள்ள ஊடகங்களும் கண்காணிப்புக…
-
- 7 replies
- 829 views
-
-
07/09/2009, 12:57 அமெரிக்காவில் விடுதலைப்புலிகளுக்கு nதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை சிறீலங்காவின் வெளிவிவகார செயலர் பாலித கோகன்ன அமெரிக்க அரசாங்கத்திடம் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளரான உருத்திரகுமார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு எனவும் அங்கிருந்து செயற்படும் அவருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளார். பதிவு
-
- 0 replies
- 799 views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு கண்ணில் கண்ட தமிழர்களையெல்லாம் சுட்டுப் படுகொலை செய்த சிறிலங்க ராணுவம், பதுங்கு குழியில் இருந்த மக்களை டாங்கிகள் ஏற்றியும், பதுங்கு குழிகளுக்குள் கையெறி குண்டுகளையும் வீசிக் கொன்றதென நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். தமிழர்கள் மீது சிறிலங்க ராணுவம் நடத்திய இனப்படுகொலையை மே 12 ஆம் தேதி வரை அங்கிருந்து கண்டு பிறகு காயமுற்று, சிறிலங்க ராணுவத்தின் பிடியில் இருந்து சமீபத்தில் தப்பித்து வெளியேறி வெளிநாட்டிற்கு வந்துள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் தான் கண்ட காட்சிகளை விளக்கியுள்ளார். கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு முன்னேறிய சிறிலங்க ராணுவம், தர்மபுரம், வடக்கச்சி, விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மெனிக் பாம் முகாமைப் பார்வையிடும் பான். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகளைத் தாண்டி விட்டது. அவரின் மொத்த பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அது முடிய இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் அவர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்படலாம். அவர் இப்போது அவரது பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதற்கு இருவகையான சவால்களை எதிர் கொள்கின்றார். ஒன்று ஐ. நா ஊழியர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு மற்றது மேற்கு நாடுகளின் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு. மோசமான முகாமைத்துவம் பான் கீ மூன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்பதும் தனக்கு நெருக்கமான சில கொரிய ஆலோசகர்களுடன் மட்டும் நல்ல உறவு நிலையில் இருக்கிறார் என்பதும் அவருக்கு ஐநா ஊழ…
-
- 0 replies
- 1k views
-
-
வன்னியில் பெரும் துன்பங்களுக்கும் சொல்ல முடியாத இழப்புக்களுக்கும் ஆளாகி வதை முகாம்களில் அகதி என்ற பெயரில் கைதிகளாக உள்ள தமிழர்களிடம் லட்சக்கணக்கில் பணம்- நகைகளைப் பிடுங்கிக் கொண்டு விடுவிக்கும் வேலையில் ஒட்டுக்குளுக்கள் தீவிரமாக இறங்கியுள்ளன. இவர்கள் முன்பு பல்வேறு பெயர்களில் இயங்கிய தமிழ் ஆயுதக் குழுக்கள்... இப்போது இலங்கை அரசிடம் துணைப்படைக் குழுக்களாக செயல்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளாகவும் பதிவு பெற்றுள்ளன. ஒரு நபருக்கு குறைந்தது ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை (இலங்கைப் பணம்) லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு முகாம்களிலிருந்து வெளியே அனுப்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையை விட்டு படகுகள் மூலம் தப்பிச் செல்கிறார்கள். முகாமுக்கு வெளியே வவுனிய…
-
- 0 replies
- 788 views
-
-
13வது சாசனத்திற்கு அப்பால் சென்ற அரசியல் தீர்வு முன்வைக்கப்படாது என்ற உறுதிமொழி வழங்கினால் மாத்திரமே மஹிந்த ராஜபக்சா விற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஆதரவு வழங்கப்படும் என சுற்றாடல்துறை அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்காக தற்போதைய சூழலுக்கும், எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் மஹிந்த ராஜபக்ஸவுடன் புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுக்கு யோசனை முன்வைத்துள்ளார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்~விற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஜாதிக ஹெல உறுமய, அந்நாள் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸவுடன் அரசியல் புரிந்துணர்வு…
-
- 0 replies
- 694 views
-
-
எதிர்வரும் 9ம் திகதி முக்கிய கிரக மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், இதனால் ஏற்படப் போகும் அரசியல் மாற்றங்கள் குறித்து தென் இலங்கை அரசியல் வாதிகள் பாரியளவில் அச்சமடைந்திருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இந்தக் கூட்டம் மிகவும் தீர்க்கமானதும், முக்கிய நிகழ்வாகவும் இருக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதிட கணிப்புக்களின் படி பாரிய சோதனைகளுக்கு உட்படுத்தும் சனி பகவான் எதிர்வரும் 10ம் திகதி அதிகாலை 12.01க்கு சிம்ம இராசியிலிருந்து கன்னி இராசிக்கு இடம்பெயர்கின்றார். இதனால் கிரகப் பெயர்ச்சி குறித்து நம்பிக்கைக் கொண்டுள்ள பலர் அச்சமடைந்திருப்பதாக தெரியவருகிறது. ஏனைய துறையில் இந்த …
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஐ.நா. ஊழியர்கள் இருவரின் விடுதலை கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன எனத் தெரிய வருகிறது. ஐ.நா. ஊழியர்களான சார்ள்ஸ் ரவீந்திரன், கந்தசாமி சுரேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும், இம்மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன என்றும் மனித உரிமைகள் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. ஊழியர்கள் இருவரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வவுனியாவில் வைத்து இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உத…
-
- 0 replies
- 915 views
-
-
மகிந்த அண்மையில் தான் லிபியா சென்று வந்துள்ளார் லிபிய விஜயத்தின் போது மேற்கு நாடுகளிற்கு எதிரான கூட்டணி நாடுகள் சிலவற்றின் தலைவர்கலையும் அங்கு சந்தித்துள்ளார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் மேற்கு நாடுகளுக்கு எதிரான கூட்டணியில் மகிந்தவும் இணைந்து அதில் இருந்து எவ்வளவு பலனை எடுக்கமுடியுமோ அவ்வளவு பலனை எடுக்கலாம் என்பதே மகிந்தவின் திட்டம். இதன் பின்னர் நாடு திரும்பிய மகிந்த தனது முதலாவது பொதுமக்கள் கூட்டத்தில் மேற்கு நாடுகளை மையமாக வைத்து ஓர் அறிக்கையும் விட்டுள்ளார். அதாவது இலங்கைக்கு எதிராக உலகில் உள்ள பல நாடுகள் செயற்படுகின்றன. ஆனால் இலங்கை எந்த நாட்டுக்கும் எதிராகச் செயற்படவில்லை. அதனால் எந்த நாட் டுக்கும் எவ்வித அச்சமும் இன்றி முகம் கொடுக்க நாங்கள் தயாராக இர…
-
- 1 reply
- 988 views
-
-
போலிக் கடவுச்சீட்டுடன் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியிருந்த சிறிலங்காவைச் சேர்ந்த சிங்களவர் ஒருவருக்கு ஆறரை மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை முடிந்ததும் அவரை நாடு கடத்தும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவின் வோரே என்ற இடத்தில் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகளுடன் வசித்துவந்த உபால் பசநாயக்க (வயது 38) என்ற நபருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றத்திற்காக அவர் கடந்த மே மாதம் 22 ஆம் நாள் பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். மற்றொரு போலி கடவுச்சீட்டின் மூலமே பசநாயக்க 2000 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அரசியல் அடைக்கலம் கோரி அவ…
-
- 0 replies
- 485 views
-