ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
செங்கல்பட்டு சிறப்புமுகாம்(சிறை)வாசிகள் விடுக்கும் அறிவித்தல் விடுநர் முகாம்வாசிகள் சிறப்பு முகாம் செங்கல்பட்டு. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம். ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம், சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறைவாயினில் வைத்து ம…
-
- 1 reply
- 740 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சிறிலங்கா கடற்படையின் சிறிய போர்ப் படகு அணிகளின் செயற்பாடு குறித்து அறிந்துகொள்வதில் வெளிநாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் இதில் அதிக ஈடுபாடு காட்டுவதாக படை வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
வவுனியாச் செய்தியாளர் கோபி 23/08/2009, 16:01 வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாமில் 300 வரையான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை வைத்திருந்தும் செல்ல முடியா நிலை சிறீலங்காப் படையினரின் யுத்த முன்னெடுப்புகள் காரணமாக வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கபட்டுள்ள 300 வரையான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் பல்கலைக்கழகம் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. எதிர்வரும் மாதங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி ஆண்டு ஆரம்பிக்க இருக்கும் நிலையில் பல்கலைக்கழகம் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கையெழுத்துடன் அனுமதியை வைத்திருக்கின்றபோதும் படையினர் பல்கலைக்கழகத்தில் செல்லவிடாது தடுத்துள்ளனர். இந்த மாணவர்களின் எ…
-
- 3 replies
- 423 views
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லுர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் மத்தியில் மிகவும் பக்திபூர்வமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது. காலை 5:30 நிமிடத்துக்கு தொடங்கிய வசந்த மண்டபப் பூசையையடுத்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சகிதம் காலை 7:00 மணியளவில் தேரில் ஆரோகணம் செய்தார். வெளி வீதியைச் சுற்றிவந்த பின்னர் காலை 8:30 நிமிடமளவில் இருப்பிடத்தை வந்தடைந்தது. பெரும் தொகையான பக்தர்கள் தேருக்குப் பின்னால் பிரதட்டை செய்ததையும் காண முடிந்தது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு அடி…
-
- 24 replies
- 3.4k views
-
-
போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தளர்வு நிலையை அடைந்திருந்த சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு செயலணிகள் உடனடியாக மீண்டும் விழிப்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 477 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட 100 ஆவது நினைவு நாள் கனடாவில் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 402 views
-
-
ஒரு கெரில்லா அமைப்புப் போல செயற்பட்ட சிறிலங்கா தரைப்படையின் தந்திரோபாயம், தரைப்படையை மீள்கட்டமைப்புச் செய்தமை, ஊழல்களை முடிவுக்குக் கொண்டுவந்தமை, சூட்டு வலுவை அதிகரித்தமை மற்றும் சங்கிலித் தொடரான நேரடிக் கட்டளை அமைப்பு என்பனதான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிகொள்வதற்கு உதவியது என சிறிலங்காவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாதுகாப்புத் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் முதல் தடவையாக பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார். 'வெற்றிபெறும் படைத்துறை தந்திரோபாயங்கள் - முகாமையாளர்களுக்கான பாடங்கள்' என்ற தலைப்பில் அவர் தனது உரையை நிகழ்த்தினார். தான் தரைப்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கு 2008 ஆம் ஆண்டு தெரிவாகிய, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்கு படையினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஷெல் தாக்குதல் ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்துள்ள சிவபாதம் பிரசாத் என்ற இந்த மாணவன் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தற்போது வவுனியா முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2பி சி என்ற பெறுபேறுகளைப் பெற்று யாழ்.பல்கலைக்கழகத்தி்ன் மருத்துவ பீடத்திற்கு இவர் தெரிவாகியிருந்தார். பல்கலைக்கழகக் கல்வி நெறி ஆரம்பமா…
-
- 2 replies
- 604 views
-
-
தமிழீழ விடுததலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக வானூர்திகள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு வானூர்தி நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' செய்தி வெளியிட்டிருக்கின்றது. இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், இந்த வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 886 views
-
-
காவல்துறையின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பான சர்ச்சைகள் சிறிலங்காவில் அதிகரித்துவரும் நிலையில், காவல்துறையைச் சேர்ந்த குறைந்தபட்சம் 170 அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டமை தொடர்பாக விசாரணைகளை எதிர்கொண்டிருப்பதாக காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமட்ன தெரிவித்திருக்கின்றார். தவறாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இவ்வாறு காவல்துறையினர் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்பாக தமக்கு தொலை நகல் (Fax) மூலமாக அறிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நாட்டில் இடம்பெறும் குற்றச்சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்த காவல்துறை மா அதிபர், சட்டவிரோதமான போதைப்…
-
- 0 replies
- 314 views
-
-
நாட்டின் அபிவிருத்தியில் சீனா மிக முக்கிய பங்காளி என சிறிலங்கா தெரிவித்துள்ளது. நிதி உதவிகளை வழங்கியதுடன், மட்டுமல்லாது மிகமுக்கியமான தருணங்களில் பீஜிங் தம்முடன் கூடவே நின்று செயற்பட்டுள்ளது எனவும் கொழும்பு கூறியுள்ளது. அண்மையில் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது, எமக்கான ஆதரவை சீனா விரிவுபடுத்தியுள்ளது என்று அரச தலைவரின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார். வடமேற்கு மாகாணத்தில் சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மின் நிலையத்தின் முதல் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்தியில் சீனா மிக முக்கிய பங்காளி என்று அங்கு அவர் அழுத்திக் கூறினார். ச…
-
- 0 replies
- 406 views
-
-
பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை:திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். [sunday, 2009-08-23 07:18:20] வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு விநாயகர் சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமி…
-
- 2 replies
- 1.2k views
-
-
[ஒடியோ]அறுத்தெரிவோம் வாரீர் முள்வேலி சிறைகளை – இயக்குநர் சீமான் ஆண்ட தமிழினம் அடைபட்டுக்கிடக்குது முள்வேலி சிறைக்குள் அறுத்தெரிவோம் வாரீர் நாம் தமிழர் என அழைக்கிறார் இயக்குநர் சீமான் காணொளி
-
- 4 replies
- 1.2k views
-
-
கேபி கைது செய்யப்படும்வரை அவருடனும் ஏனைய புலி உறுப்பினர்களுடனும் ராம் தொடர்பு கொள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் அனுமதிக்கப்பட்டிருந்தார் ‐ லங்கா கார்டியன் ‐ தமிழாக்கம் ‐ GTN (செய்தியை வெளியிட்ட குளோபல் தமிழ் நியூஸ் ஆசிரியர் ஊடகவியலாளர் நடறாஜா குருபரன். ) கே.பி பற்றிய எவ்வித ரகசியங்களையோ அல்லது விசாரணைகளின் போது அவர் சொல்லும் விடயங்கள் குறித்தோ என்னுடைய அனுமதியில்லாமல் எவராவது ஊடகங்களுக்கு தெரிவிப்பார்களாயின் அவர்களை அலுவலகத்திலிருந்து துரத்தி விடுவேன் என அண்மையில் தொலைபேசியூடாக தனது சிரேஸ்ட பாதுகாப்பு அலுவலருக்குத் தெரிவித்திருந்தார் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தலைமையில் கொழும…
-
- 7 replies
- 3.3k views
-
-
ஈழப்போர்-4ல் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களை அழிக்கக்கூடிய எந்தவொரு ஆயுதமும் அளிக்காது என்று தமிழக மக்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், மறைமுகமாய் ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திற்கு இந்திய கொடுத்துள்ளதை எ.டி.டி.வி.யின் இராணுவ செய்தியாளர் நிட்டின் கோகுலே தனது புத்தகத்தில் தெரிவிக்கிறார். உதாரணமாய், இந்தியா ஐந்து மீ-17 ரக உலங்கு வானூர்தியை கொடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராய் பயன்படுத்தப்பட்டது. உயர்ரக ரேடார் பொறுத்தப்பட்ட இந்தியாவின் தயாரிப்பான டோனியர் விமானத்தில் கடல் மேல் உயரே பறந்து திறமை வாய்ந்த ரேடார் இயக்குபவரை வைத்து விடுதலைப்புலிகள் பயன்படுத்திவந்த மிதக்கும் ஆயுத கிங்குகளை காட்டி கொடுக்கப்பட்டது. …
-
- 7 replies
- 1.4k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 23, ஆகஸ்ட் 2009 (22:49 IST) இலங்கை:சண்டை முதல் சமாதானம் வரை விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நேரிடையாக எந்தவிதமான ஆயுதங்களையும் வழங்காவிட்டாலும், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா மறைமுகமாக உதவியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன ஒரு புத்தகம். என்டிடிவி பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆசிரியர் கோகலே இலங்கையில் 33 மாதங்களாக நடைபெற்ற போரினை தொகுத்து சண்டை.முதல் சமாதானம் வரை என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என இந்தியா திரும்பத் திரும்பக் கூறினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியா மிகப்பெரிய அளவில் மறைமுகமாக உதவியது. முக்கியமாக இந்திய கடற்படையின் மிகப்பெரிய உதவியால்தான் விடு…
-
- 0 replies
- 1k views
-
-
காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் அனுரகுமார: அப்பாவி மக்கள் துயருற்றிருக்கிறார்கள் கரு: ஜேர்மனியின் நாசிகால வதைமுகாம்களை ஒத்த முகாம்களில் மக்கள் மங்கள: காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் ‐ அனுரகுமார: இங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒருநாளாவது அந்த அகதிமுகாமில் வாழ முடியுமா? அல்லது உங்கள் பிள்ளைகளைத்தன்னும் அங்குள்ள சேற்று நீரில் இறங்க விடுவீர்களா? நீங்கள் இங்கு உங்கள் மனைவிமாருடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் அங்கு மனைவி ஒருமுகாமில், கணவன் ஒரு முகாமில், பிள்ளை ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்குச் சென்ற உங்கள் குழந்தை வீடு வருவதற்கு ஒரு மணிநேரம் தாமதித்தால் கூட ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கில் தற்போதிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபோதும் தளர்த்தப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார் பாதுகாப்பு அதிகாகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா. அத்துடன் வடக்கில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களை நிரந்தர முகாம்களாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அகதி முகாம்களுக்குள் இருக்கும் மக்கள் மத்தியில் புலிகளும் ஒளிந்துள்ளனர். தினம் 15 புலிகள் வரையில் இனங்காணப்பட்டு கைதுசெய்யப்பட்டு வருவதால் காம்களுக்குள் இருக்கும் மக்களை இப்போதைக்கு விடுவிக்க முடியாதென்றும் ஜெனரல் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். அதேவேளை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூயவும் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பை வலுப்படு…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் யாப்பா பதிலடி எவரது அழுத்தம் கருத்தியும் முகாம் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த மாட்டோம். சுதந்திர நடமாட்ட அனுமதியையு எவரது அழுத்தம் காரணமாகவும் இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்க ளில் தங்கியிருக்கும் மக்களை உடனடியாக மீளக் குடியேற்றிவிட முடியாது. அந்த மக் களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண் டியது அரசின் பொறுப்பாகும். நிவாரணக் கிராமத்தில்... தொடர்ந்து வாசிக்க.. http://www.uthayan.com/Welcome/full.php?id...hayan1251027279 நன்றி - உதயன் இணையம்
-
- 0 replies
- 513 views
-
-
வன்னி மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. 660 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பொருட்களின் தரம் மற்றும் பாவனைக்கு உகந்த நிலை என்பன குறித்து பரிசோதித்து ஆவணங்களை வழங்க வேண்டிய அரச நிறுவனங்கள் இன்னும் அவற்றை வழங்காததே தாமத்துக்கு காரணம் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்கள் துறைமுகத்திலேயே கிடப்பதால் துறைமுக அதிகார சபைக்குச் செலுத்த வேண்டிய வாடகை 15 லட்சமாக உயர்ந்துவிட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க…
-
- 1 reply
- 564 views
-
-
பருவ மழை வெள்ளத்தால் ஏற்படக் கூடிய அனர்த்தத்தைத் தவிர்க்க அகதிமுகாம்களிலுள்ள மக்களை சுதந்திரமாக வெளியே விடுமாறு குரலற்றவர்களின் மனித உரிமைகளுக்கான அவுஸ்திரேலியர்கள் எனும் அமைப்பு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வவுனியா பிரதேசத்தில் பருவமழை எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனால் ஏற்படும் வெள்ள அபாயத்திலிருந்து, இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் 3 இலட்சம் மக்களையும் பாதுகாப்பதற்காக அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அம்முகாம்களிலுள்ள நிலை மோசமடைய முன்னர் அரசாங்கம் இது தொடர்பாக நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது. இம்முகாம்களிலுள்ள மக்கள் போதிய சுகாதார வசதிகளற்ற நிலையிலும் அங்கேயே வா…
-
- 0 replies
- 492 views
-
-
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளை அண்மையில் அமெரிக்க துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் சந்தித்துப் பேசியதற்கு சிறிலங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையே அவர் சந்தித்துப் பேசினார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. சிறிலங்கா விவகாரங்களில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பங்களிப்பு குறித்தும் றொபேர்ட் ஓ பிளேக்கின் பங்கு குறித்தும் தனது கடுமையான கோபத்தை வாஷிங்ரனில் உள்ள தனது தூதரகம் மூலமாக சிறிலங்கா காத்திரமாகப் பதிவு செய்துள்ளது. தனது கண்டனத்தில், அமெரிக்க அதிகாரிகள் சந்தித்து உரையாடி தமிழர்கள், விடுதலைப் புலிகளின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் அரசு உறுதியாகத் தெரிவித்து…
-
- 0 replies
- 414 views
-
-
சிறிலங்காப் படையிலும் காவல்துறையிலும் உள்ள உயர் அதிகாரிகளில் திடீர் பணக்காரர்கள் ஆனவர்களின் பின்னணிகளை உயர்மட்ட விசாரணைக் குழு தோண்டித்துருவ தொடங்கியுள்ளது அவர்களின் திடீர் பணத்துக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்புகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிவதே இதன் நோக்கம். புலிகளின் உளவுத்துறையில் பணியாற்றிய பல பாதுகாப்பு அதிகாரிகளிடம் பெரியளவில் சொத்துக்கள் குவிந்து கிடப்பது அண்மைய விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்தே புதிய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணைகளில் இருந்து, இதுவரை இடம்பெற்ற பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியிலும் அமைச்சர்கள் கொலை மற்றும் அரச தலைவரைக் கொலை செய்யும் திட்டத்தின் பின்னணியிலும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பலர் இருந்தது தெரிய…
-
- 0 replies
- 635 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது காலவரையறைகள் ஏதும் இன்றிப் பிற்போடப்படலாம் என சிறிலங்கா அரச தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் படையினரையும் சிங்கள மக்களையும் குடியேற்றிய பின்னர் அவர்களுக்கு மத்தியில் தமிழர்களை குடியமர்த்த அரச இரகசிய திட்டம் ஒன்றை கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 427 views
-
-
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் தமிழ்மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. புலிகளுக்கு எதிராகவே போர் என்றும் தமிழ் மக்களுக்கு எதிராக தாம் போர் நடத்த வில்லை என்றும் கூறி வந்தது அரசாங்கம். தமிழ்மக்களை சுதந்திரமாக வாழ வைக்கவே போர் நடத்தியதாகவும் கூறியது. ஆனால் தற்போது தமிழ்மக்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் நகர்வுகளையிட்டு அதிருப்தி அடைந்திருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம், சட்ட ரீதியாக தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குகின்ற யற்சியில் இறங்கியிருக்கிறது. போர் முடிந்த கையோடு உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசாங்கம் முயன்…
-
- 0 replies
- 482 views
-