Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதவாச்சி சோதனைச் சாவடியைத் தாண்டி வடபகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசநாயக்க வலியுறுத்தியிருக்கின்றார். பொதுமக்கள் இந்த சோதனைச் சாவடியைத் தாண்டிச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை மட்டும்தான் அரசு தடை செய்திருக்கின்றது எனவும் அநுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியிருக்கின்றார். தமது ஆதரவாளர் ஒருவரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வடபகுதி செல்ல முயன்ற ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரான ரணவீர பத்திரன, மதவாச்சி சோதனைச் சாவடியைத் தாண்டிச் செல்ல முற்பட்டபோது அங்கிருந்த படையினரால் திருப்பியனுப்பப்பட்டார். …

    • 0 replies
    • 420 views
  2. சிறிலங்காவில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளையில் மாணவர்களின் சிங்களப் பேரினவாத உணர்களையும் சோதனைக்குள்ளாக்குவதற்கு சிறிலங்கா அரசு முற்பட்டிருப்பதை பரீட்சை வினாத் தாள்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. பாடசாலைக் காலத்திலேயே இனவாதத்தை பாடத் திட்டங்களின் மூலமாகப் போதிக்கும் சிறிலங்காவின் கல்வித் திணைக்களம் அதனை உயர்தரப் பரீட்சையில் சோதனை செய்வதற்கு முற்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியை சிங்கள மொழிப்பாடத்தின் வினாத்தாள் எழுப்பியிருக்கின்றது. இது தொடர்பாக 'லங்கா நியூஸ் வெப்' தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கல்விப் பொதுத் தராதர உயர்தர சிங்கள பாடப் பரீட்சை வினாத்தாளில் மாணவர்களின் தாய்நாட்டுப் பற்று மற்றும் போர…

    • 0 replies
    • 587 views
  3. விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் கைது செய்யப்ட்டிருந்தமை தெரிந்ததே.இவரது கைது முதலில் ஒரு கடத்தல் சம்பவமாக இருந்தது எனவும், இது ஒரு ஒழுங்கற்ற முறைமை எனவும், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கபட்டிருந்தன. இந்நிலையில், பத்மநாதனின் உதவியாளர் ஒருவரையும், சிறிலங்காப் புலனாய்வுத்துறையாளர்கள் கைது செய்திருப்பதாக சிங்கள நாளிதழ்ச் செய்தியை ஆதாரங்காட்டி, கொழும்பச் செய்திகள் சில தெரிவிக்கின்றன. ஆனந்தன் என அழைக்கப்படும், பத்மநாதனின் உதவியாளரை, தாம் கைதுசெய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக இவர் கைதுசெய்யப்பட்ட நாட்டை வெளியிட முடியாது எனத் தெரிவிக்க…

    • 0 replies
    • 1.1k views
  4. கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த பகுதிகளுக்கு சிறிலங்காவின் வான் படைத் தளபதி எயர் மாஷல் ரொஷான் குணதிலக்க நேற்று திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அவற்றை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 459 views
  5. வீணாப் போன தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று ஈழத் தமிழர்களுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த 'வீரத்தமிழன்' முத்துக்குமாரின் தந்தை மனக்குமுறலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்தவிகடன்' வார ஏடு வெளியிட்ட 'வீரத்தமிழன்' முத்துக்குமார் குடும்பத்தினருடனான நேர்காணல் வருமாறு: முத்துக்குமார்... மறக்கக்கூடிய பெயரா! உள்ளங்கையில் சாவை ஏந்திக்கொண்டு உலகத்துக்குக் கடிதம் எழுதிய கலகக்காரன். மூலக்கொத்தலம் சுடுகாட்டில் நள்ளிரவு 2 மணிக்கு பெருஞ்சோதியாக அவன் எரிந்துகொண்டு இருந்த காட்சி இப்போதும் என் விழி நனைக்கிறது. இந்தத் தலைமுறையில்தமிழ் நாடு கண்ட முதல் மக…

  6. கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த பகுதிகளுக்கு சிறிலங்காவின் வான் படைத் தளபதி எயர் மாஷல் ரொஷான் குணதிலக்க நேற்று திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அவற்றை நேரில் பார்வையிட்டார். வன்னிப் பிராந்தியம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுப் பகுதியிலும், முல்லைத்தீவு டாவட்டத்திலும் தமது வான்படைக்கான ஓடுபாதைகளை விடுதலைப் புலிகள் அமைத்திருந்தார்கள். இந்த ஓடுபாதைகளைப் பயன்படுத்தியே வான் புலிகள் சிறிலங்காவின் இராணுவ பொருளாதார நிலைகளின் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர். சிறிலங்கா படையினர் இந்தப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள…

    • 0 replies
    • 770 views
  7. வடபகுதி ஏதிலிகள் முகாங்களில் தொற்நோய் ஏற்படக்கூடிய அபாயம் - அமெரிக்கா கவலை (கொழும்புச் செய்தியாளர் மயூரன் 20/08/2009, 14:29) வடபகுதியில் அமைந்துள்ள ஏதிலிகள் தடுப்பு முகாங்களின் நிலைமைகள் குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, னத் தொகை மற்றும் அகதிகள் விவகாரத்திற்கான அமெரிக்க துணைச் செயலாளர் எரிக் சிச்வார்ட்ஸ் தெரிவிக்கையில்: தற்போது பெய்துவரும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக ஏதிலிகள் முகாமில் தொற்றுநோய் பீடிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுகின்றது. யுத்த முன்னெடுப்புகளினால் வடபகுதியில் 280,000 பேர் ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். ஏதிலிகள் முகாம் குறித்து திருப…

    • 3 replies
    • 648 views
  8. 67 இலட்சம் பெறுமதியான யூரோக்களுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது வீரகேசரி இணையம் 8/20/2009 9:41:58 PM - உடம்பில் யூரோ நாணயத்தாள்களை கட்டிக்கொண்டு கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல முயற்சித்த இந்திய பிரஜையொருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து வந்த இவர் கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல ஆயத்தமாகியிருந்தார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த சுமார் 67 இலட்சம் பெறுமதியான யூரோக்களை மீட்டனர். சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரிகள் அவரிடமிருந்து மீட்கப்பட்ட யூரோக்களை அரசு உடமையாக்கி…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும், பாதுகாப்புக்கான செலவீனத்தில் குறைப்பு எதனையும் செய்யாமல் அதனை அதிகளவில் வைத்திருப்பதற்கே சிறிலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாக ஏ.எஃப்.பி. செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. படைத்துறையை நவீனமயப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாலும், கடனுக்குக் கொள்வனவு செய்த படைத் தளபாடங்களுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்தவேண்டிய தேவை இருப்பதாலுமே இவ்வாறு பாதுகாப்புச் செலவீனம் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். 2009 ஆம் ஆண்டுக்கான தனது பாதுகாப்புச் செலவீன ஒதுக்கீட்டை சிறிலங்கா அரசு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் 1.6 பில்லியன் டொலராக அதிகரித்தது…

  10. UlagaThamizharPragadanam.pdf

    • 0 replies
    • 1.3k views
  11. வியாழக்கிழமை, 20, ஆகஸ்ட் 2009 (17:55 IST) வெளிநாடுகளில் உள்ள புலிகளின் தலைவர்களை கைது செய்ய தீவிரம் காட்டும் ராஜபக்சே தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு மீண்டும் ஒன்றிணையாமல் இருப்பதில் அரசு எச்சரிக்கையாக இருக்கின்றது என சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், கூட்டுப்படைத் தளபதி, காவல் மா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பேசிய ராஜபக்சே மேலும், புலிகள் மீண்டும் ஒருங்கிணைவதற்கான சாத்தியங்கள் குறித்து அரசு மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கின்றது. தேசிய …

    • 3 replies
    • 1.2k views
  12. ஏதிலிகள் முகாம் புனரமைப்பில் ரிஷாத் பதியுதீனும் அவரது உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர் - ரவூப் ஹக்கீம் (கொழும்புச் செய்தியாளர் மயூரன் 20/08/2009, 14:09) ஏதிலிகள் தடுப்பு முகாம் புரனமைப்புகளில் அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீனும் அவரது உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் வுனியா அகதி முகாம் மக்களின் அவல நிலை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாம் புரனமைப்புகளில் அமைச்சரும் அவரது உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். புனரமைப்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் அமைச…

    • 0 replies
    • 577 views
  13. அவர்கள் எதைக் கொடுப்பார்கள் ? நாம் பெற்றுக் கொள்ள? GTN ற்காக டி.அருள் எழிலன்: இலங்கை அரசு இன்று பல் வேறு மட்டங்கள் ஆழ ஊடுறுவி தாக்குதல் நடத்துகிறது. தமிழகம், புலம்பெயர் நாடுகள் என பாசிச பயங்கரவாத அரசின் கொலைக்கரங்கள் கடல் தாண்டியும் நீளும் சூழலில் முகாம்களில் இருக்கும் மக்களைக் காட்டி உலகெங்கிலும் பிச்சை எடுக்கும் இந்த பிச்சைக்காரர், முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கவோ, கைது செய்யபப்ட்டிருப்பவர்கள் தொடர்பான வெளிப்படையான தன்மை கொண்டோ இயங்கத் தயாராக இல்லை. 13 ‐ வது திருத்தம் குறித்து சர்வக்கட்சிக்கூட்டம் இப்போது அதற்கும் மேலதிகமான தீர்வு ஆனால் அதற்கும் சர்வக்கட்சிக் கூட்டம் என்று ஏற்கனவே ஏமாந்த கூட்டம் ஒன்றைப் பற்றிய கவலை இல்லாமல் உலக நாடுகளை மட்டும…

    • 0 replies
    • 849 views
  14. வவுனியா 'மெனிக்' பாம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் விவகாரம் தொடர்பாக அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆராய்வதற்காக விரைவில் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை தான் மேற்கொள்ளப்போவதாக அமெரிக்காவின் குடித்தொகை, அகதிகள் மற்றும் குடியேற்ற விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் எரிக் சுவார்ட்ஸ் அறிவித்திருக்கின்றார். அனைத்துலக மனிதாபிமான நாள் பிரகடனப்படுத்தப்பட்டிருப்ப

  15. “இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்” என்றொரு பானரை 17.8.09 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் பார்த்தேன். “ஈழத்தமிழர் என்று சொல்லக்கூடாது இலங்கைத்தமிழர் என்றுதான் சொல்லவேண்டும்” என்ற கொள்கை உறுதி கொண்ட கட்சிகளில் யார் இந்தக் கருத்தரங்கத்தை நடத்தக் கூடும் என்ற ஆவலுடன் எட்டிப்பார்த்தேன். “இந்த முள்கம்பி வேலிக்குள் எப்போது ரோஜா பூக்கும்?” என்று ரொம்ப கவித்துவமான ஒரு கேள்வியுடன் விளம்பரத் தட்டி வரவேற்றது. சோறும், தண்ணியும், கழிவறையும் இல்லாமல் சேறும் சகதியும் சூழ்ந்த மண்ணில் பன்றிக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் நிலையை மேற்கண்டவாறு வருணிக்கும் மெல்லிதயம் படைத்தவர்கள் நிச்சயமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினராகத்தான் இ…

  16. எண்பதுகளில் பிலிப்பைன்சில் தனது தளங்களின் இருப்புக்கு சாவால்கள் எழுந்தபோதே அமெரிக்கா தன்து அடுத்த இலக்காக இலங்கையத் தேர்ந்தெடுத்தது. அமெரிக்காவின் டியாகோகசியத் தளம் நிலப் பரப்பு அளவில் சிறியது. ஈராக்கிற்கு எதிரான முதற் போர் புரியும் போது அது புலப்பட்டது. எண்பதுகளில் இலங்கையில் எரிபொருள் நிரப்பு வசதியும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான் தொடர்பாடல் வசதியும் அமெரிக்காவிற்கு தேவைப் பட்டது. அதிலிருந்து இலங்கையில் தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்படுதல் இந்திரா கந்தி அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இன்று தமிழர்கள் பலி கொடுக்கப் பட்டு எல்லாம் பறித்தெடுக்கப் பட்டு நிற்கதியாக நிற்கின்றனர். எண்பதுகளில் சீனா அமைதியாக இலங்கையில் நடப்பவற்றை ஏது மறியாது போலவும் தனக்கு இலங்கைய…

    • 17 replies
    • 2.4k views
  17. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக அனைத்துக் கட்சிக் குழுவால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான யோசனைகள் எதுவும் இல்லை என்று சிறிலங்காவின் அமைச்சரும் பேராசிரியருமான திச விதாரன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 352 views
  18. அண்மையில் நிகழ்ந்த போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை சிறிலங்கா அரசு அனுமதிப்பதற்கு வேண்டிய இராஜரீக நடவடிக்கைகளை கனடா உடனடியாக எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  19. சிறிலங்கா வெளிவிவகாரத்துறையின் அடுத்த செயலாளராக இந்தியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் சி.ரொமேஷ் ஜெயசிங்க நியமிக்கப்படலாம் என அதிகார உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 368 views
  20. வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் அளவிட முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதை அடுத்து அங்கு மக்களுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் மோதல்கள் வெடிப்பதற்கான சாத்தியங்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 365 views
  21. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்தக் கூடிய ஆளுமை கொண்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் எவரும் தற்போது மிச்சமில்லை என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிலைகுலைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை வழிநடத்தி போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய ஆற்றல் மிக்க எவரும் எஞ்சியிருப்பதாக தாம் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் ஒருவரே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்தியதாகவும், அவரது கைதின் மூலம் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும

  22. அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் வதிவிடச் செயலகமான - அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள 'வெள்ளை மாளிகை' முன்பாக அமெரிக்க மற்றும் கனடிய தமிழர்களால் நடாத்தப்பட்டுவரும் பரப்புரைப் போராட்டம் நேற்று புதன்கிழமை 101 ஆவது நாளாகத் தொடர்ந்தது. இது ஒரு உச்ச குரல் மிக்க மக்கள் போராட்டம் என அமெரிக்காவின் அதியுயர் செல்வாக்கு மிக்க "பொலிற்ரிகோ.கொம்" என்ற அரசியல் இணைய ஏடு வர்ணித்துள்ளது. அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் முன்முனைவோடு முன்னெடுக்கப்படும் இந்தப் பரப்புரைப் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (18.08.09) தனது 100 ஆவது நாளைக் கடந்து இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்தும் மற்றும் கனடாவில் இருந்தும் வருகை…

    • 4 replies
    • 1.1k views
  23. ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதைவிட கேள்விக்குரியதாகியிருக்கின

  24. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வரும் வரை ஈழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்று நடத்தும் என அக் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "எழும் தமிழ் ஈழம்'-தமிழின விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது: இந்த மாநாட்டுக்காக பல்வேறு இடங்களில் தொண்டர்கள் வைத்திருந்த 2,000 பேனர்கள் அகற்றப்பட்டன. மத்திய உளவுத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளால் ஏராளமான விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நம்மை சீண்டுவார்கள். ஆனால், நாம் உணர்ச்சி வசப்படாமல் பொறுப்புணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் நடக்க வேண்டும். ஒட…

    • 14 replies
    • 1.7k views
  25. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படாதது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் விசனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக மன்னார் மாவட்டம் முசலியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதன் பின்னரும் முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என அவர் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.