Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'கேப் கொலராடோ' கப்பலை சிறிலங்கா கடல் எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டு கடற்படை மறுத்துள்ளது. இதனால், நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 492 views
  2. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 08/07/2009, 03:19 சிறீலங்காவின் படைத்துறைக் கொள்வனவு ஏன்? சிறீலங்கா அரசு படைத்துறைக் கொள்வனவைத் தொடர்ந்து மேற்கொண்டு, நிதி பெற்று வருவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து குறைந்தது 6 சுப்பர் டோரா ரக அதிவேக விசைப்படகுகளைக் கொள்வனவு செய்ய சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்துள்ள நிலையில், ஆயுதக் கொள்வனவில் பணம் சம்பாதிக்க முடியாக மகிந்த சகோதரர்கள், மாற்று வழியில் பணம் பெற முயற்சி செய்யும் செயற்பாடு இதுவென, கொழும்பின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழலை மூடி மறைப்பதற்காகவே, யாழ் மயிலிட்டி, மற்றும் வவுனிய…

  3. யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று பலாலி வானூர்தி நிலையத்தைச் சென்றடைந்த இந்தியத் தூதுவரும், தூதரக உயர் அதிகாரிகளின் குழுவும் அங்கு முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பாக குடாநாட்டு மக்களின் உணர்களை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தூதுவர் அலோக் பிரசாத்துடன் பிரதித் தூதுவர், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் உட்பட தூதரக முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தப் பயணத்தில் இணைந்திருக்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை பலாலி வானூர்தி நிலையத்தைச் சென்றடைந்த இவர்கள் பின்னர் அங்கிருந்து யாழ். நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ். புறப்படுவதற்கு முன்னர் குடாநாட்…

    • 0 replies
    • 464 views
  4. சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான மற்றொரு சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெறவிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர்களை சிறிலங்கா அரசு கடன் உதவியாகக் கோரியிருக்கின்றது. இருந்தபோதிலும் சிறிலங்காவில் காணப்படும் மனித உரிமைகள் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தக் கடன் உதவியை வழங்குவதை அனைத்தலக நாணய நிதியம் தாமதப்படுத்தி வந்திருக்கின்றது. இது தொடர்பாக இதற்கு முன்னர் சிறிலங்கா அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கள் வெற்றி பெறவில்லை. மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்பதை அனைத்துலக நாணய நிதியம் ஒரு நி…

    • 0 replies
    • 457 views
  5. நாடாளுமன்றத்தில் அழுதவண்ணம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி வவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் படுகின்ற அவலநிலைகளை எடுத்துக்கூறி உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மக்கள் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போதே கண்ணீர் விட்டு அழுது தனது உரையை விட்டு விட்டு உரையாற்றினார். இதனை அவையிலிருந்த அமைச்சர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அவதானித்துக் கொண்டிருந்தனர். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்த…

  6. மட்டக்களப்பு காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த தமிழர் ஒருவரின் இல்லத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்த அடையாளம் தெரியாத ஒரு குழுவினர், அவரைப் பலவந்தமாக வெளியே இழுந்துவந்து கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ள அச்சமூட்டும் சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. நேற்று செவ்வாய்கிழமை காலை தாழங்குடா என்ற பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. கொல்லப்பட்டவர் 42 வயதான இரத்தினசிங்கம் லூயிஸ் பிறவுண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது வீட்டுக்குள் நேற்று காலை அத்துமீறிப் பிரவேசித்த அடையாளம் தெரியாத குழுவினர் அவரை அவரது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் வீதியில் இழுத்துவந்த பின்னரே கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. …

    • 0 replies
    • 391 views
  7. சகல இலங்கையர்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எட்வாட் டேவி தெரிவித்துள்ளார். சகல பேதங்களையும் களைந்து சமாதானத்துடன் வாழக் கூடிய பின்னணியை மக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு கடந்த தமிழீழ பிரகடனம் புத்திசாதூரியமற்றதென அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழும் சகல இன மக்களும் ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்ப வேண்டும் எனவும், ஏனைய இன சமூகங்களக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். லண்டனில் வாழும் தமிழ் இளைஞர்கள் வன்முறைகளில் ஈடு…

  8. இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் வாடும் ஈழத் தமிழரின் நிலை குறித்தும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்வது குறித்தும், அவர்களின் அரசியல் உரிமை குறித்தும் விவாதிக்க தமிழக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்துள்ள ‘விரிவான’ பதில் தமிழனின் அரசியல் தலைமை எந்த அளவிற்கு தடம் மாறிப் போய்விட்டது என்பதற்குச் சான்றாகும். ஈழத் தமிழரின் பிரச்சனை (தான் ஆட்சியில் இருக்கும் போது) அரசியல் பிரச்சனை ஆவதையோ அல்லது தேர்தல் பிரச்சனை ஆவதையோ திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்புவதில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்து உண்மையாகும். அதனால்தான் இ…

    • 0 replies
    • 789 views
  9. வணங்காமண் பொருட்கள் இன்று காலை கொழும்பு நோக்கி செல்கிறது காப்டன் அலி கப்பலில் வந்த வணங்காமண் நிவாரணப்பொருட்கள் இன்று(07.07.2009)காலை சென்னையிலிருந்து கொலராடோ கப்பல் மூலம் கொழும்பு நோக்கி புறப்படுகிறது. நாளை இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன், கொலராடோ கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று இலங்கை புறப்படுகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரணப் பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அந்த நிவாரணப் பொருட்களை சிறிலங்கா அரசு ஏற்காமல், கப்பலை திருப்பி அனுப்பியது. இதையடுத்து வணங்காமண் கப்பல், ஜூன் 12ம் தேதி செ…

  10. இலங்கை தமிழர்களுக்காக ரூ.500 கோடி எல்லாமே இந்திய அரசின் மாயவித்தை - விஜயகாந்த் வீரகேசரி நாளேடு 7/7/2009 10:36:46 PM - பாராளுமன்றத்தில் நேற்று 2009, 2010ற்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை தமிழர் புனர் வாழ்வு செயற்றிட்டங்களிற்காகவென ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இவை எல்லாமே இந்திய அரசின் மாயவித்தைதான் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரவு செலவு கணக்கை அறிவித்தார்களே தவிர, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் இல்லை. இலங்கை …

  11. பிரித்தானிய ஊடகத்துறையும் தமிழர் போராட்டமும் திகதி: 07.07.2009 // தமிழீழம் பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாங்கள் புலம்பெயர் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் ஒத்துழைப்போடு தமிழ் தேசியம் நோக்கி பிரித்தானியாவில் ஒரு ஊடகத்துறையை கட்டி வளர்க்க எத்தனிக்கின்றோம். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற, நடைபெற இருக்கின்ற திரைமறைவு இனஅழிப்பு மற்றும் அரசியல் காய்நகர்த்தல் நடவடிக்கைகளை இங்கிலாந்தின் பல ஊடகங்கள் தற்போது வெளிப்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. இவ்வாறான தருணத்தில் நாம் இவ்வூடகங்களோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் அவசியமாகின்றது. இப்பணி மிகவும் விசாலமானது. இதற்கு ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் இத்துறையில் துறை சார்ந்…

  12. முகாம்களில் அடைப்பட்டிருக்கின்ற மூன்று லட்சம் மக்களில் ஏறத்தாள 1600 மாணவர்கள் வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நூல்கள் மற்றும் சத்துணவு போன்றவற்றை ICUTS என்னும் ” சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் ” ( International Committee of University Tamil Students) எனும் அமைப்பு உதவிகளைப் பெற்று இலங்கை கல்வித்திணைக்களம் ஊடாக அந்த மாணவர்களுக்குச் செய்து வருகின்றது. அது தொடர்பான அவர்களின் அறிக்கை. எம் இனிய தமிழ் நெஞ்சங்களே! வாழ்வில் துன்பம், என்பதை கடந்து துன்பமே வாழ்வாய் எம்மினத்தின் ஒரு பகுதி வாடி வதங்குகிறது. உறவுகளையிழந்து, உறுப்புக்களை தொலைத்து, உடமைகள் அழிக்கப்பட்டு, ஊரையும் பறிகொடுத்து இன்று உணவின்றி, உறங்க ஓ…

  13. சிறிலங்காப் பாராளுமன்றத்தில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிப்பு இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 92 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் பங்குபற்றிய தமிழர் தேசிய கூட்டணியினர் அவசரகால சட்டத்துக்கு எதிராகவும், ஜே.வி.பி யினர் சார்பாகவும் வாக்களித்தனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியினர் இவ்வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளனர். இச்சட்டம் பற்றிய வாதத்தை எழுப்பிய சபாநாயகர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கை அரசானது உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடாத்தி பொதுமக்கள் நிர்வாகத்தை விரைவில் சீர்படுத்தும் என்றும் தாம் வடக்கில் ராணுவ செயல்பாடுகளை விரும்பவில்லை…

  14. இந்திரா காந்தி இலங்கையில் சீனா இராணுவ தளம்அமைப்பதை தடுத்தார். ஆனால் இப்போது ஆயுத கிடங்கே திறக்கப்பட்டுள்ளது: பழ.நெடுமாறன் கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டுபேசும்போது இவ்வாறு கூறியுள்ளார். நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாதவன் வரவேற்றார். நிகழ்வில் பழ.நெடுமாறன் கூறியதாவது:- அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. ராணுவ உடன்பாடு நாடுகள் உருவாக்கப்பட்டது. 3-ம் உலகப்போர் வரும் என்ற அச்சம் நிலவிய போது அணிசேரா நாடுகள் கூட்டமைப்ப…

  15. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அழிந்து விட்டதால் யுத்தம் முடிவுற்றதாக எண்ணக்கூடாது. இன்னும் சர்வதேச மட்டத்தில் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரிவித்த மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மலையகத்திலும் பயங்கரவாதம் நீறுபூத்த நெருப்புப் போல உள்ளதெனவும் தெரிவித்தார். மாத்தளை, குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கடற்படை மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய எட்டுப்பேரைக் கொண்ட கொள்ளை கோஷ்டியைக் கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் சுனில் ஏக்கநாயக்க தலைமையிலான எட்டுப் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை புதிய பொலிஸ் நிலையக் கட்டிட கேட்போர் …

  16. இலங்கையில் போரினால் பாதிப்புற்ற தமது உறவு களுக்காக மேற்குலகில் குறிப்பாக பிரிட்டனிலும், பிரான்ஸிலும் வசிக்கும் ஈழத் தமிழ் வம்சாவழியினர் அனுப்பி வைத்த நிவாரணப் பொருள்கள் சுமார் நான்கு மாத இழுபறிகளுக்குப் பின்னர் கொழும்பில் இறக்கப் படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையில் யுத்தம் சூடு பிடித்து, வன்னியில் கொடூரப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்த நிவாரணப் பொருள்கள் ஈழத் தமிழ் உறவுகளினால் மேற்குலகில் சேகரிக்கப்பட்டன. அவசர, அவசிய மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிவாரண மற்றும் மருந்துப் பொருள் களே இவ்வாறு சேகரிக்கப்பட்டன. இந்தப் பொருள்களின் சேகரிப்பும், அவற்றைக் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற் பாடும் பிரிட்டிஷ் அரசுக…

    • 0 replies
    • 979 views
  17. வஞ்சக வலை – புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதை எம் இனத்தின் மீது திணிக்கப்பட்டபோது நாம் அடிமைகள் அல்ல. சிறுபான்மை இனமாக இருந்தாலும் பெரும்பான்மை இனத்திற்கு சமமான பலம் கொண்டவர்கள் என்று நிருபிக்க தமிழர்களின் மன பலத்துடனும் அவர்களின் பிள்ளைகளாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்துடனும் முப்பது ஆண்டு காலம் போராடி உலகத்தின் மூலையில் மாங்காயாக தொங்கி கொண்டிருந்த இலங்கையில் தமிழினம் என்ற ஒரு இனம…

  18. செவ்வாய்க்கிழமை, 7, ஜூலை 2009 (19:2 IST) தமிழக மீனவர்களின் வலை, மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டகாசம் தமிழக மீனவர்களின் மீன்பிடி வலை, இறால்மீன்கள், நங்கூரங்களை இலங்கை கடற்படையினர் பறித்து சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நான்காம் தேதி ஐந்து விசைபடகுகளில் மீன்படிக்க சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று அனுராதபுரம் சிறையில் வைத்துள்ளனர். இந்நிலையில் மண்டபம் வடக்கு பகுதியிலிருந்து கடந்த ஆறாம் தேதி ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. கோயில்வாடி பகுதியை சேர்ந்த ஜான்போஸ் விசைப்படகு உட்பட நான்கு படகுகளை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து, மீனவர்கள் பிடித்த இறால், நண்டு, கணவாய்மீன்க…

  19. பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் உமது மகனுக்கு பாசாலை அனுமதி கிடைத்திருக்கும், அவர் இல்லாததால் அனுமதி தரமுடியாது என மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி அலைந்த கேகாலை வாசி ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது. 40 வயதான பெருமாள் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக தற்கொலை செய்துகொண்டவர் ஆவார். "எனது மகனை எந்தவொரு பாடசாலையிலும் சேர்க்க மறுத்துவிட்டனர். முன்னர் பிரபாகரன் இருந்ததால் அவர் குண்டு வைத்துவிடுவார் என்ற பயத்தில் உங்கள் பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொண்டிருப்போம். இப்போ பிரபாகரன் உயிருடன் இல்லாததால் உங்கள் பிள்ளையை சேர்க்க முடியாது எனக் கூறிவிட்டனர். எனது கணவர் அவர்களின் காலில் விழுந்…

  20. தமிழ் அரசியல் தலைமையில் இடதுசாரிகளின் பங்கு - சி.இதயச்சந்திரன் ""மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.'' அதாவது, அரசியல் வேலைத் திட்டங்கள் யாவும், பன்முகப் பார்வை கொண்ட மக்களின் விடிவிற்கானதாக இருக்க வேண்டுமென்பதே இதன் உட்பொருளாகும். போராட்ட வடிவங்கள் மாறினாலும் மக்களின் விடுதலை என்கிற அடிப்படை நோக்கிலிருந்து அவை விலகிச் செல்லக் கூடாது. மாறும் வடிவங்கள், புவிசார் அரசியலைப் புரிந்து முற்போக்கான பாதையொன்றை தெரிவு செய்ய வேண்டும். அதாவது போராட்ட முறைமைகளில் காத்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் வெகுஜன இயக்கங்களை இ…

  21. அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் மற்றும் திகம்பத்தான பிரதேசத்தில் கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை தமது விசேட குழுவொன்று கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சந்தேக நபர் திகம்பத்தான பிரதேசத்தில் இடம்பெற்ற கடற்படையினர் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்திய, சுமை ஊர்தியை குண்டுகளை பொருத்தும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் மற்றைய சந்தேக நபர் அனுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கான உளவுப் பணிகளை மேற்கொண்டதுடன், தாக்குதல் தினத்தில் அதனை ஒளிப்பதிவு செய்தவர் எனவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். …

    • 0 replies
    • 926 views
  22. விடுதலைப்புலிகளின் சார்பில் இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிட்டு வந்த பொறியியலாளர் ஒருவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான இவர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து, இணையங்களில் தகவல்களை வெளியிட்டு வந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை இணையத்தளங்கள் ஊடாக வெளியிட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். updated - 2009-07-07மூலம் - GTN

    • 0 replies
    • 660 views
  23. ஈழம் தீர்வு பற்றிப் பேசுவது இப்போது சரியா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக டி.அருள் எழிலன் ஒரு ஆயுதப் போராட்டம் எத்தகைய சூழலில் அழியக்கூடாதோ அப்படி அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போரின் முடிவு துயரம் கவிந்த இருண்ட மேகத்தை தமிழ் மக்கள் மேல் இறக்கிச் சென்றிருக்கிறது. புலிகள் அழிவிலிருந்து தப்பியிருந்தால் இன்றைய சூழல் வேறு. இந்த அழிவை நான் தமிழர்கள் சந்தித்த பெரிய பின்னடைவாகவே பார்க்கிறேன். காரணம் பெரும்பான்மைச் சமூகமும் அதன் தலைமையும் தென் பிராந்தியத்தில் நிலவும் அதிகாரப் போட்டிக்கும் விஸ்தரிப்பு நோக்கத்திற்கும் தன் சொந்த மக்களான சிங்களர்களை பலியாக்குவதோடு தமிழ் மக்களை அச்சுறுத்தி பெரும்பான்மை சமூகத்திற்கு போதையை ஊட்டிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் எதுவுமற்ற நிலையி…

    • 0 replies
    • 687 views
  24. செய்தியாளர் மகான் 07/07/2009, 13:57 முன்னாள் காவல்துறை காஸ்டபிள் வெட்டிப் படுகொலை மட்டக்களப்பு தாளங்குடாப் பகுதியில் முன்னாள் சிறீலங்காக் காவல்துறை காஸ்டபிள் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 42 அகவையுடைய இரத்தினசிங்கம் லூயிஸ் பிறவுண் என அடையானம் காணப்பட்டுள்ளார். முன்னர் இவர் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் பணியாற்றியிருந்தார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இவரது வீட்டு வளாகத்தினுள் உட்நுழைந்த ஆயுததாரிகள் இவரை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலத்தில் கழுத்து, நெஞ்சு, மற்றும் இடுப்பு பகுதிகளில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகக்…

  25. பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாங்கள் புலம்பெயர் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் ஒத்துழைப்போடு தமிழ் தேசியம் நோக்கி பிரித்தானியாவில் ஒரு ஊடகத்துறையை கட்டி வளர்க்க எத்தனிக்கின்றோம். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற, நடைபெற இருக்கின்ற திரைமறைவு இனஅழிப்பு மற்றும் அரசியல் காய்நகர்த்தல் நடவடிக்கைகளை இங்கிலாந்தின் பல ஊடகங்கள் தற்போது வெளிப்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. இவ்வாறான தருணத்தில் நாம் இவ்வூடகங்களோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் அவசியமாகின்றது. இப்பணி மிகவும் விசாலமானது. இதற்கு ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் இத்துறையில் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது. இப் பாரிய பணியை செவ்வனே செய்வதற்க…

    • 0 replies
    • 790 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.