ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
"புலிகளின் குரல்" வானொலி ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பம் http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 1.8k views
-
-
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்போர் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதனை தாம் தடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதனை தடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அகதிகளை இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்கப் போவதில்லை எனவும், இந்தியா இலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை அகதிகளுக்கும் புகலிடம் வழங்கத் தயார் என கனடா அறிவித்துள்ளது. அகதி முகாம்களில் கனடா வீசா காரியாலத்தை அமைத்து மக்களுக்கு புகலிடம் வழங்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் இர…
-
- 1 reply
- 854 views
-
-
02/07/2009, 13:34 [செய்தியாளர் அகரவேல்] சிங்களருக்கு வெண்சாமரம் வீசுகிறார் கருணாநிதி - பழ.நெடுமாறன் கண்டனம் 30 ஆண்டு காலம் அற வழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலக்கட்டத்தில் ஆயுதம் தாங்கியப் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள். தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி மு…
-
- 1 reply
- 815 views
-
-
உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய்இ இறுதியில் உள்ளுக்குள்இ வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனாஇ வியட்னாம்இ அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாதுஇ அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!! உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும்இ பலமான அரசியல் அமைப்பையும் கொண்ட…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை, 'சிறிலங்கா நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் ' எனும் கூறிக்கொண்டு உலக நாடுகள் யாவும் பாரத்துக் கொண்டிருந்தன எனும் கருத்தை, உலகளாவிய 'கொலுசியம்' என வர்ணித்து கருத்தப்படம் வரைந்துள்ளது Creative Truth எனும் இணையத்தளம். ரோமானிய காலத்தில் மனிதவதைக் களமாக ரோமில் இருந்த இக்கொலுசியத்தைக் கட்டடக்கலையின் நாகரீகம் எனப் போற்றதகும், வேளையில் அதனுள்ளே நடத்தப்பட்ட மனித வதைப் படுகொலைகள் மனிதநாகரீகத்துக்கே இழுக்கானவை எனலாம். அத்தகைய கொலுசியத்துடன், இலங்கை வன்னி மண்ணை ஒப்பிட்டு, உலக நாடுகரைளப் பார்வையாளராக்கியிருக்கும் இக்கருத்துப்படம், இனப்படுகொலைகளுக்கான உலக நாடுகளின் மெளனச்சாட்சியை எதிர்த்து, உண்மைகளை உ…
-
- 1 reply
- 846 views
-
-
சிறிலங்காவின் அமைச்சரவையில் மூன்று புதிய அமைச்சர்கள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து புதிய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 496 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் பதவிக்கான திடீர் தேர்தல் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதத்தில் அல்லது டிசெம்பரில் நடத்தப்படலாம் என கொழும்பில் அரசாங்க உயர் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. அரச தலைவர் பதவிப் பொறுப்பை மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்ட நான்கு வருடங்கள் நவம்பர் மாதத்தில் பூர்த்தியானவுடன் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
02/07/2009, 11:25 [தமிழ்நாடு செய்தியாளர் அகரவேல்] மருத்துவர்களை விடுதலை செய்ய வேண்டும் - தஞ்சாவூரில் மனித சங்கிலி வன்னியில் சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மருத்துவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, வலியுறுத்தி தமிழ்நாடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வன்னியில் இன அழிப்பை எதிர்நோக்கியிருந்த மக்களுடன் இறுதிவரை தங்கியிருந்து அளப்பரிய சேவையாற்றி மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, துரைராஜா, சண்முகராஜா, இளஞ்செழிய பல்லவன் ஆகியோருடன், துணை மருத்துவர் ஒருவரும், தாதியும் சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களது விடுதலையை வலியுறுத்தி தஞ்சாவூர் பிரதான தொடரூந்து நிலையத்துக்க அருகில் நேற்று காலை …
-
- 0 replies
- 461 views
-
-
02/07/2009, 11:19 [செய்தியாளர் கயல்விழி] பசில் ராஜபக்ச சர்சைக்குரிய இந்தோனேசிய ஆச்செ மாநிலத்தில் சிறீலங்கா அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ச இந்தோனேசியாவின் சர்ச்சை மிகுந்த சுயாட்சி கொண்ட ஆச்சே மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆச்சே மாநிலத்தின் அதிகாரப் பகிர்வு, மற்றும் மீள்கட்டுமானப் பணிகள் பற்றி கேட்டறியும் நோக்கில் இவரது பயணம் அமைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கை போன்று ஆச்சே மாநிலமும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்டு சுனாமி ஆழிப்பேரலையில் பாரிய அழிவைச் சந்தித்திருந்தது. ஆச்சே சென்ற பசில் ராஜபக்ச, அந்த மாநிலத்தின் ஆளுனர் “இர்வாடி யூசுப்பினை” சந்தித்து பேசியதுடன், சுயாட்சித் தீர்வுகள் பற்றி கற்றுக்கொள்ள ஆச்சே சிறந்த இடம் எனவும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தம்மை இணைந்து கொள்ளுமாறு அரச தரப்பின் உயர் மட்டத்தில் இருந்து கோரப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார். ஸ்ரீதர் திரையரங்கில் வேலையற்ற பட்டதாரிகளுடனான சந்திப்பிலேயே இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தம்மை இணையுமாறு தமக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை அவ்வாறானதொரு நடவடிக்கைகக்கு தான் உடன்பட மாட்டேன் என அரச தலைமையிடம் தான் தெரிவித்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வேலையற்ற பட்டததாரிகள் ஆயிரக் கணக்கானோர் தமக்கான தமக்கான நியமனங்களை வழங்கக் கோரி இன்று ஸ்ரீதர் திரையரங்கில் அமைச்சரை சந்தித்து உரைய…
-
- 0 replies
- 793 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினராகவே எதிர்காலத்தில் செயற்பட உள்ளதாகவும், எவராலும் தன்னை கட்சியிலிருந்து நீக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கட்சி நிர்வாகம் தம்மிடம் எந்த விளக்கத்தையும் கோர முடியாது எனவும், கட்சிக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளையும் தாம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவாமல் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கு தாம் ஆதரவளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியிலிருந்து எவ்வித பதவிகளையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், அவ்வாறு பதவிகளைப் பொறுப்பேற்றிருந்தால் தமக்கு எ…
-
- 0 replies
- 943 views
-
-
CID alleges that Dr Sathyamoorthy had been involved with LTTE
-
- 2 replies
- 1k views
-
-
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.பி.யூ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 29 நாடுகளில் சுமார் 300 பாராளுமன்ற உறுப்பினர்களது உரிமை மீறல் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைலப் புலிகளுடன் நீண்ட காலமாக நடைபெற்ற சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை விசாரணைகள் குறித்த கால தாமதத்திற்கு எவ்வித நியாயங்களையும் முன்வைக்க முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட முடியாதென அரசாங்கம் தெரிவித்து வந்தது. எனினும், எதிர்வரும் காலங்களில…
-
- 0 replies
- 546 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் புதிதாக அமைத்துள்ள தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அனைத்துக் கட்சிக் குழுவின் கூட்டம் இன்று முதல் தடவையாக கொழும்பில் நடைபெறவிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கான உபாயம் ஒன்றை அரசாங்கம் மீண்டும் முன்னெடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 364 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் அமைப்புக்கள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா? தமிழ் மக்…
-
- 0 replies
- 520 views
-
-
அதிகாரப் பகிர்வுத் திட்டம் தொடர்பான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொடர் மெளனம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தேசிய பிக்கு முன்னணி, நாட்டையும் தங்களை ஏமாற்ற அரசு நினைத்தால் போராட்டத்தினால் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது. இன நெருக்கடிக்குத் தீர்வாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய பிக்கு முன்னணி இந்த எச்சரிக்கையை விடுத்தது. "அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக…
-
- 2 replies
- 650 views
-
-
போருக்குப் பின் ஆடு, மாடுகளைவிட கேவலமாக முள்வேலி அமைத்து தமிழ் இளைஞர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 471 views
-
-
வடபகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் அகதிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான நாளேடான 'த அவுஸ்ரேலியன்', அங்குள்ள பெண்கள் அகதிகளுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் பலாத்தகாரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 650 views
-
-
தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 453 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் புதிதாக அமைத்துள்ள தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அனைத்துக் கட்சிக் குழுவின் கூட்டம் இன்று முதல் தடவையாக கொழும்பில் நடைபெறவிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கான உபாயம் ஒன்றை அரசாங்கம் மீண்டும் முன்னெடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 493 views
-
-
சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை மக்களின் கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதையடுத்தே நடைமுறைப்படுத்துவது என அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன் இந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியா இலங்கைக்கு வழங்கிய முழு உதவியின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.அண்ம
-
- 0 replies
- 717 views
-
-
வன்னி புல்மோட்டை தடுப்பு முகாம்களில் இருக்கும் பெண்கள் பாலியல் தொழிலுக்கு நிற்பந்தப்படுத்துகிறார்கள் -அவுஸ்திரெலியன் பத்திரிகை Tamil refugees forced into sex rackets CONDITIONS for about 300,000 refugees forcibly detained in camps across Sri Lanka remain dire, with reports of a prostitution racket run by officials in a remote camp. Aid workers told The Australian yesterday officials at the internally displaced people's camp in Pulmoddai, a remote northeast region, are running the prostitution ring using women kept in the camp. The Australian understands the allegations are the subject of a joint investigation between the Sri Lankan government and an …
-
- 0 replies
- 866 views
-
-
2009ம் ஆண்டிற்காக சாதனை படைத்தவர்களை CNN தெரிவு செய்யவுள்ளது. இதில் மருத்துவத்துறையில் சாதனை படைத்தவர்களுக்காக நீங்கள் இம்முவர்களை தனித்தனியாக தெரிவு செய்யுங்கள் 1) வைத்தியர் சத்தியமூர்த்தி 2) வைத்தியர் சண்முக ராஜா 3) வைத்தியர் வரதராஜா தெரிவு செய்வதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் எழுதவேண்டும். உதாரணங்கள் கீழே தரப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 1ம் திகதிக்கு முன்பாக நீங்கள் இவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும் பின்வரும் இணைப்பின் ஊடாக நீங்கள் தெரிவு செய்யலாம் http://edition.cnn.com/SPECIALS/cnn.heroes/nom/ Dear all, CNN is now accepting nominations for CNN Heroes for 2009. Closing date for Nomnation is 1st August. One can nominate people for 7 …
-
- 1 reply
- 876 views
-