Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசதுறையில் பணியாற்றும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடையவர்களை கண்டறிய விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அனைத்து அரச நிறுவனங்களிலும் புலிகளுக்கு தகவல்களை வழங்குவோர் இருப்பதாக கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் கொலை செய்யப்பட்ட பின்னர், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கொழும்பில் செயற்பட்ட புலிகளின் வலையமைப்புடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வலயமைப்பை சேர்ந்த மேலும் மூவர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்: மூலம் - GTN

    • 5 replies
    • 1.8k views
  2. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடாவிட்டால் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எவ்வித போட்டியுமின்றி வெற்றிபெறச் செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த யோசனையை ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த யோசனையை ரணில் விக்ரமசிங்க இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை வகிக்கும் உத்தேசமில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல்களிலிருந்…

  3. இராணுவத் தளபதி மேஜர் சரத் பொன்சேகாவிற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் புதிய சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கூட்டுப் படைகளின் பிரதான தளபதியாக சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இராணும், வான்படை, கடற்படை மற்றும் காவல்துறை ஆகிய சகல பாதுகாப்புப் பிரிவுகளினதும் பிரதான தளபதியாக சரத் பொன்சேகா திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த புதிய பதவி அமையும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது கூட்டுப்படைகளின் தளபதியாக கடயைமாற்றி வரும் எயர் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா ராஜதந்திர பதவியொன்றுக்காக வெளிநாட்டிக்கு அனுப்பி வ…

  4. மதுரையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக சனிக்கிழமை அன்று பொதுக்கூட்டம் நடந்தது அதில் கலந்து கொண்டுப் பேசிய திருமாவளவன், ஈழத்தமிழர் விவாகரம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசிய போது அதைக் கேட்க பிரதமர், சோனியாகாந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பொறுப்பானவர்கள் யாரும் அப்போது அவையில் இல்லை. மேற்குவங்கப் புயலை தேசியப் பேரழிவாகவும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது குறித்தும் வட இந்திய தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் எங்கள் ஈழத் தமிழனுக்காக யாரும் பேசவில்லை.இது மிகுந்த வேதனையளிக்கிறது. போரின் முடிவில் இலங்கை இராணுவம் தற்காலிக வெற்றியைப் பெற்றுள்ளது. புலிகள் தொடர்ந்து போராடுவார்கள். முகாம்களில் பல லட்சம் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களை அமைக்கக் கூடாதென இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன், இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்க வேண்டும் எனவும் சம்பந்தன் மேலும் கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே அரசாங்கம் இந்த இராணுவ முகாம…

  6. இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களில் மலசல கூடங்களும், குளியல் இடங்களுமே பற்றாக்குறையாகவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்குத் தேவைப்படும் மலசல கூடங்களில் 50 வீதமானவையே அமைத்துக்கொடுக்கப்பட்டிருப

  7. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புதுடில்லி வருகையால் இலங்கை அரசு பீதியடையத் தேவையில்லையென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார். அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ன முடிவெடுத்தாலும் அதனை இந்தியா உறுதியுடன் ஆதரிக்குமென்று ஒப்புதலும் வழங்கியுள்ளார். இந்தியஇலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் உருவாகும்வரை, சகல விட்டுக் கொடுப்புகளையும் சமரசங்களையும் இந்தியா மேற்கொள்ளுமென்பதை சிவ்சங்கர் மேனனின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். தென்னிலங்கையில் சீனா முன்னெடுக்கும் நகர்வுகளை, இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் முறியடிக்க உதவுமென்பது இந்தியாவின் கணிப்பு. இவை தவிர, வேறெந்த நகர்வுகளையும் இந்தியாவால் முன்னெடுக்க முடியாது. அந்த ஒப்பந்தம் ஏற்படும் வரை இலங்கையும் தன…

    • 1 reply
    • 610 views
  8. சனிக்கிழமை, 13, ஜூன் 2009 (15:40 IST) . ஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் சிவகுமார் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு கல்வி கற்க நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி வருகிறார். இந்தமுறை 30வது ஆண்டாக பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவர்களது மகன்களான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், நான் மிகவும் கஷ்டப்பட்டு பட…

    • 5 replies
    • 1.4k views
  9. இந்தக் கட்டுரை யாழ் இணையத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டது. ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்? இதை எழுதியவர்களில் ஒருவருடைய புலி அல்லது ஈழத்தமிழர் எதிர்ப்பு இப்பொழுது கொஞ்சங் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. அவருடைய கருத்து யுத்தத்தை பார்வையிட :http://www.vinavu.com/2009/06/09/the-eelam-question/#comment-5868 நன்றி.

    • 0 replies
    • 984 views
  10. 14/06/2009, 02:51 மணி தமிழீழம் ] தடுப்பு முகாம்களில் இருந்த 5 விடுதலைப் புலிகளின் மருத்துவர்கள் கைது விடுதலைப் புலிகளின் மருத்துவத்துறையில் பணியாற்றிய 5 மருத்துவர்களை சிறிலங்கா காவல்துறை கைது செய்துள்ளது எனத் தெரியவருகிறது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்தோரில் 5 பேரை விடுதலைப்புலிகளின் மருத்துவர்கள் எனச் சந்தேகப்பட்டு காவல்துறை கைது செய்துள்ளது. தடுப்பு முகாமில் இருந்த பொது மக்களின் தகவலின்படியே இக்கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. கூடிய விசாரணைக்காக கைது செய்தவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பதிவு

  11. இணைத்தலைமை நாடுகளில் சிறிலங்காவுக்கு ஆதரவான ஆசிய நாடுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சிறிலங்காவுக்கான ஜப்பானின் சிறப்பு பிரதிநிதி யாசூசி அகாசியிடம் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்குலகத்தில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகிச் செல்லும் நடவடிக்கையாகவே இது கருதப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: யசூசி அகாசியுடன் கடந்த புதன்கிழமை காலை உணவை அருந்தும் போதே மகிந்த ராஜபக்ச இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதன் போது பல அமைச்சர்களும், அதிகாரிகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். சிறிலங்காவுக்கு ஆதரவான பல ஆசிய நாடுகளை இணைத் தலைமை நாடுகளில் சேர்த்துக்கொள்வது தொடர்பில் சாதகமாக பரிசீ…

    • 1 reply
    • 505 views
  12. பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு சம்பந்தமான செய்திகளை ஒளிபரப்புவதற்கோ, ஒலிபரப்புவதற்கோ அல்லது பிரசுரிப்பதற்கோ முன்னர் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். தற்போது சிறிலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் படையினர் பல தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பான தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, பாதுகாப்பு தொடர்பான செய்திகளை உறுதிப்படுத்துவதற்கு தேசிய பாதுகாப்பு ஊட…

    • 0 replies
    • 388 views
  13. சனிக்கிழமை, 13, ஜூன் 2009 (17:59 IST) இலங்கை தலைமன்னார் கடற்கரை பகுதிக்குள் செல்லக்கூடாது: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை இலங்கை தலைமன்னார் கடற் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள ஒன்பது மீனவர்கள் மற்றும் இரண்டு படகை இலங்கை அரசு ஜூன் 15 ம் தேதி விடுவிப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு நாட்களுக்குப்பின் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையொட்டி துறைமுக டோக்கன் அலுவலகத்தில் மீன்துறை அதிகாரிகளால் 700 க்கும் மேற்பட்ட படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. கடற்கரை அந்தோணியார் ஆலயம் முன் கூடிய மீனவர் சங்க பிரதிநிதிகள் படகுக…

    • 1 reply
    • 742 views
  14. சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம் ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழுதி மனிதருக்கு முதுகுவலி வந்ததுதான் …

    • 2 replies
    • 1.4k views
  15. கடல் எல்லை குறித்து இலங்கை- இந்தியா இடையில் சர்ச்சை? வீரகேசரி இணையம் 6/13/2009 12:19:10 PM - கடல் எல்லை குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சர்ச்சைகள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் மிண்ட்செய்தித் தாபனம் (Mint news agency)தகவல்கள் வெளியிட்டுள்ளது. இந்தியாவைச் சூழவுள்ள அரை மில்லியன் சதுர கிலோ மீற்றர் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு கனியப் பொருட்கள், குறித்த பிரதேசத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கமும் குறித்த அதே பிரதேசத்தை உரிமை கோரி வருவதாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையினால் உரிமை கோரப்படும் அரை மில்லியன் சதுர கிலோ மீற்றர் பர…

    • 1 reply
    • 880 views
  16. 13/06/2009, 15:15 மணி தமிழீழம் ] 21 வன்னித் தமிழர்கள் பூசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், புல் மோட்டையிலிருந்து 3 பேரைக் காணவில்லை முல்லைத்தீவிலிருந்து 2 மாதங்களுக்கு முன்பு புல்மோட்டைக்கு படகில் வந்த 8 பெண்கள் உட்பட்ட 21 தமிழ் பொது மக்கள் தற்போது பூசா தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பு அவர்கள் புல்மோட்டை, பதவியா மற்றும் கெப்பிற்றிகொல்லவா காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள், என காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. இதேசமயம், முள்ளிவாய்க்காலில் இருந்து புல்மோட்டைக்கு படகில் வந்து அங்கே வைத்தியசாலையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து காணவில்லை என்று தெரியவருகிறது. காணாமல் போனவர்கள…

  17. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது இறுதி மூன்று நாட்களில் செய்மதி தொலைபேசி ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4பேருக்கு பல தடவைகள் அழைப்புகளை மேற்கொண்டு பேசியுள்ளமை தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதி மூன்று நாட்களில் இந்தியா, மலேசியா, சிங்கபூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர். இந்த உறுப்பினர்கள் இலங்கை திருப்பிச் செல்ல முடியாமல் அந்த நாடுகளில் தங்கியிருப்பதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். போரை நிறுத்த சர்வதேச ரீதியில் அழுத…

  18. கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான தீபக் ஒபராய், இலங்கை செல்வதற்கான விசாவை வழங்க, இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு செல்லும் நோக்கில், அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய எண்ணியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இலங்கை விஜயத்தின் பின்னனியில் கனேடிய தமிழ் அமைப்பு இருப்பதாகவும் இவர் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள நாளிதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. GTN

    • 1 reply
    • 812 views
  19. இலங்கையின் உற்பத்தி பொருட்கள் மலேசிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மலேசிய இந்திய வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் சுமார் 50 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற இந்தப் போக்கினைக் கண்டிக்கும் வகையில் இலங்கையின் உற்பத்தி பொருட்களை மலேசிய தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என மலேசிய இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.சிவக்குமார் பெட்டாலிங் ஜெயாவில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமானமற்ற இலங்கை அரசாங்கத்தின் போக்கு கண்டிக்கதக்கது. அப்பாவித் தமிழர்கள் உணவு, உறைவிடம் இன்றி தவிக்கின்றனர். இலங்கையின் உற்பத்தி பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் மலேசிய தமிழர்கள் இதற்கான தமது எதிர்…

    • 1 reply
    • 650 views
  20. 7 ஆயிரத்து 200 விடுதலைப்புலி உறுப்பினர்களில் 3 ஆயிரம் பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு நிமால் லெவ்கே: வவுனியா இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 ஆயிரத்து 200 விடுதலைப்புலி உறுப்பினர்களில் 3 ஆயிரம் பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் நிமால் லெவ்கே தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். …

    • 1 reply
    • 691 views
  21. விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரிடம் மூன்று மணிநேர ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது : விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் கொழும்பு பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சி முன்னிலையில் நேற்று (12) மூன்று மணிநேர ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் அடங்கிய கோவையுடன் நீதிமன்றத்திற்கு சென்ற ஜோர்ஜ் மாஸ்டர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகளை வழங்கியதாக, ஜோர்ஜ் மாஸ்டர் என்ற பருத்தித்துறை 2 ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்னம் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவக் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இராணுவக் காவற்துறைய…

    • 0 replies
    • 1.2k views
  22. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல்: ராணுவ பேச்சாளர்உதய நாணயக்கார திகதி: 13.06.2009 // தமிழீழம் சிறீலங்கா ராணுவத்துறை பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ‘'கிழக்கு மாகாணத்திற்குள் சிறிய குழுக்களாக விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று தகவல்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதை கண்காணிக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். சங்கதி

  23. சிறீலங்கா வாக்குறுதிகளை மதிக்காதது கொடுமையானது : பான்கீமூன் ஐநாவின் பாதுகாப்பு செயலர் பான் கீ மூன் அவர்கள் சிறீலங்கா அரசாங்கம் கடந்தமாதம் விடுதலைப்புலிகளை தோற்கடித்துள்ளநிலையில் வழங்கிய வாக்குறுதிகளை மதிக்கத் தவறியுள்ளதாகவும் இதுதொடர்பில் சிறீலங்கா ஜனாதிபதி அவர்களுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நன்றி:-பதிவு http://www.pathivu.com/news/2219/54//d,view.aspx

  24. அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு. கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை, வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததன் மூலம். அகிம்சை... அணி சேராக் கொள்கை... பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை... என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது. சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், ஈழ மக்களைக் ] கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அள்னக்கையாக இருந்து அதனை ஆதரித்ததன் மூலம் மொத்த தமிழ் இனத்தின் முகத்திலே கரியை அல்ல மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு. மாபெரும் மனிதப் பேரவலம் நடந்தேறியது கண…

  25. போர்க்குற்ற சாட்சிகளை குற்றம் புரிந்தவராக்கும் சிறீலங்காவின் கைங்கரியம் போர்க் குற்றத்தின் சாட்சியாக விளங்கும் மருத்துவர்களில் இருவரும்இ உதவியாளர் ஒருவரும் நேற்று நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். வன்னியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்டப் படை நடவவடிக்கை வரை அங்கு தங்கியிருந்த அளப்பரிய சேவையாற்றி மருத்துவர்கள்இ தற்பொழுது சிறீலங்கா படையினரது தடுப்புக் காவலில் உள்ளனர். வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களானஇ • கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தம்பிமுத்து சத்தியமூர்த்திஇ • முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் துரைராஜா வரதராஜாஇ மற்றும் • முல்லைத்தீவு பொது மருத்துவமனை அத்தியட்சகர் வீரகத்தி சண்முகராஜா • ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.