ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143558 topics in this forum
-
16 SEP, 2023 | 10:27 AM கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இது குறித்து துணைத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில், கடந்த ஜூன் 16ஆம் திகதி அதன் ஆரம்ப வருகையிலிருந்து 9 தடவையாக மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பயணங்களின் போது, சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கினர். அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் கலாசார பிணைப்புகளையும் அனுபவித்தனர். யாழ…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 SEP, 2023 | 04:08 PM பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்து பல்வேறு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக சின்னவளை,பொலிகண்டி, நிலவன்,கே.கே.எஸ்.மற்ற…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 SEP, 2023 | 04:24 PM வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க வழங்குவதற்கு, அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். வெள்ளிக்கிழமை (15) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கிராமம் ஆகும். குறித்த கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்த…
-
- 5 replies
- 489 views
- 1 follower
-
-
15 SEP, 2023 | 03:59 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், இன்றையதினம் (15) வெள்ளிக்கிழமை, யாழ்குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் …
-
- 2 replies
- 416 views
- 1 follower
-
-
15 SEP, 2023 | 04:04 PM யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை சேர்ச் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் வெள்ளிக்கிழமை (15) மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் கசிப்புடன் கைதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/164648
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
15 SEP, 2023 | 12:03 PM இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐ. என். எஸ். நிரீக் ஷக்” போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை (14) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். “ஐ.என்.எஸ். நிரீக் ஷக்” கடற்படைக் கப்பல் 137 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. கப்பலின் கப்டனாக ஜீது சிங் சௌஹான் செயற்படுகின்றார். இதேவேளை, கப்பலின் கப்டன் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15)காலை சந்தித்தார். இரு…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 11:55 AM கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை (14) காலை 6 மணியளவில் மாலையாளபுரம் புதுஐயன்கன்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் நபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸாரை கண்டு குளத்திற்குள்ளாக தப்பி ஓடிய போது அவர்களை பொலிஸார் தனித்தனியாக ஒவ்வொரு வழியாக திரத்திச் சென்றுள்ளனர். இறுதியில் இரு பொலிஸார் திரும்பிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவரை நேற்று இராணுவம் …
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
IMF இன் 57 உறுதிமொழிகளில் 38 மட்டுமே பூர்த்தி வெரிட்டே ரிசர்ச்சின் சமீபத்திய முன்னேற்றப் புதுப்பிப்பின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 17வது திட்டத்தின் கீழ் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்ட 57 கண்காணிக்கப்படக்கூடிய உறுதிமொழிகளில் 38ஐ இலங்கை நிரூபணமாக ‘நிறைவேற்றியுள்ளது’. 11 உறுதிமொழிகளின் முன்னேற்றம் இன்னும் "அறியப்படவில்லை" என்றும், அதே நேரத்தில் எட்டு உறுதிமொழிகள் "நிறைவேற்றப்படவில்லை" எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2023 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கும், இரண்டாவது கொடுப்பனவை அங்கீகரிப்பதற்காகவும் IMF இன் குழுவொன்று இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது. எவ்வாறாயினும், அது இப்போது மேலும் ஒக்…
-
- 0 replies
- 293 views
-
-
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்! தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாட்கள் இன்று ஆரம்பமாகவுள்ளது, தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முதலாம் நாள் நிகழ்வு இன்று நண்பகல் 12 .30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. https://akkinikkunchu.com/?p=255795
-
- 15 replies
- 2.3k views
- 2 followers
-
-
குருந்தூர் விவகாரம்: கஜேந்திரன், வினோநோகராதலிங்கம் பிணையில் விடுவிப்பு! முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பான் விடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு குருந…
-
- 0 replies
- 241 views
-
-
இரு வாரங்களுக்குள் கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி adminSeptember 15, 2023 கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளாா். மேலும் ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அவா் தொிவித்துள்ளாா். https://globaltamilnews.net/2023/195181/
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 SEP, 2023 | 09:04 PM (இராஜதுரை ஹஷான்) புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு. இவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். குற்றச்சாட்டை நிரூபித்தால் முழு அரசியலிலும் இருந்து விலகுவேன் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 2 replies
- 470 views
- 1 follower
-
-
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் (வயது 86) உயிரிழந்துள்ளார். தனது இரண்டாவது மகனான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று (14.09.2023) காலை 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு காரணமாக உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் என்பதுடன் அதே பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதுடன், காலம் சென்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிக்கிரியை இந்த நிலையில் அவரின் உடல் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு ஜெயரட்…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
14 SEP, 2023 | 03:32 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது, பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும். 076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்திற்…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 SEP, 2023 | 03:28 PM சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் புதன்கிழமை (13) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்தசில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இதன்போது இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164563
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் உடனடியாக மதுபானசாலை அகற்றுமாறும், அவ்வாறு மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை இப்போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/273082
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 14 SEP, 2023 | 12:21 PM இலங்கையின் குற்றவாளிகளை பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேசமயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்தவேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு - பேர்ள் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 54வது அமர்வின் ஐக்கிய நாடுகள்மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த அறிக்கை குறித்த கலந்துரையாடல்களின் போது போள் அமைப்பு தமிழ் மக்களிற்கு எதிரான யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை ஆகியவற்றை நினைவுகூர்ந்துள்ளது. நீதிக்கான முயற்சிகள் இலங்கைஅரசாங்கத்தினதும் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணிலுக்கு மூளை இருக்கிறது ஆனால் இதயம் இல்லை, நாட்டை மீட்பதற்கான சரியான திட்டம் ஜனாதிபதியிடமோ அல்லது அரசாங்கத்திடமோ இல்லை என ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் இரு பிரிவுகள் இருப்பதாகவும், அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதாகவும் தெரிவித்த ராஜித இந்த அரசாங்கத்தில் இணைவது சாத்தியமில்லாத விடயம், இந்த அரசங்கத்திற்கு எதிர்காலம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மட்டுமே இன்றைய தேவை அல்ல. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சுகாதார பிரச்சினை. களவுத்துறை சார்ந்த பிரச்சினை என பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண அரசாங்கம் தயாரா இல்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/a…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 SEP, 2023 | 11:08 AM (நா.தனுஜா) இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை என்ற பொறிக்குள்ளேயே அது சிக்கியிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தியுள்ளார். 'அண்மையகால உயர்மட்ட விஜயங்களும், அவர்களின் இந்து சமுத்திரப்பிராந்தியம் சார்ந்த கோணங்களும்' என்ற தலைப்பில் பூகோள அரசியல் வழிகாட்டி (புநழிழடவைiஉயட ஊயசவழபசயிhநச) என்ற அமைப்பினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போதே சீனத…
-
- 3 replies
- 356 views
- 1 follower
-
-
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம் September 13, 2023 யா ழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயதுப் பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தி யோகத்தர் வலம்புரிக்கு அனுப்பி வைத்துள்ள தன்னிலை விளக்கம் இங்கு பிரசுரமாகிறது . சம்பவத்துடன் தொடர்பு பட்டவரின் கருத்தை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே அவரின் தன்னிலை விளக்கம் இங்கு பிரசுரமாகிறது . ஜனனிரமேஸ் ஆகிய நான் கடந்த 2011 ஆம் ஆண்டிலிரு ந்து இற்றை வரை ஏறக்குறைய 12 வருடங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்து வருகின்றேன் . குறித்த சிற…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
”புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்” - அலி சப்ரி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பி…
-
- 2 replies
- 691 views
- 1 follower
-
-
இலங்கைக்கு புதிய உயர்ஸ்தானிகரை நியமித்தது இந்தியா! பெல்ஜியத்திற்கான தூதராக பணியாற்றும் ஸ்ரீ சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக இந்தியா நியமித்துள்ளது. அவர், விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்துவரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா 2019 ஜூலைஇ முதல் 2020 ஜூலை வரை உஸ்பெகிஸ்தானில் இந்திய தூதராகவும் பணியாற்றினார். அத்துடன் 2017 ஜூலை முதல் 2019 ஜூன் வர…
-
- 0 replies
- 379 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 SEP, 2023 | 04:28 PM (எம்.வை.எம்.சியாம்) வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அதிநவீன சொகுசு ஜீப் வண்டியொன்று வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக குருநாகல் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதிசொகுசு ஜீப் வண்டியொன்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கு…
-
- 7 replies
- 829 views
- 1 follower
-
-
இந்தியாவின் எதிர்கட்சி கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமை தாங்குவாரா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கேள்விஎழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி மக்கள் ஆதரவளித்தால் நாளையே நாங்கள் அதிகாரத்திலிருக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். துபாய் விமானநிலையத்தில் மம்தாபானர்ஜி இலங்கைஜனாதிபதியை சந்தித்துள்ளார்.நவம்பரில் மேற்கு வங்காளத்தில் இடம்பெறும் மாநிலவர்த்தக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அவர் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என்னை துபாய் விமானநிலையத்தில் சந்தித்தார்,என்னை சிறிய உரையாடலிற்கு அழைத்தார் என மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நான் அவரை பெங்கால் உலக வர்த்தக உச்சிமாநா…
-
- 4 replies
- 790 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை பாவிக்க போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தடை விதித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் தொலைபேசியை பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் "கானுலா" பொறுத்தப்பட்டமையால், சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும், குற்றம் சா…
-
- 2 replies
- 364 views
- 1 follower
-