ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
17 Nov, 2025 | 01:57 PM (ஸ்டெப்னி கொட்பிறி) மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை கோபுரத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 21 ஆம் திகதி மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மீன்பிடித்துறையையும் நீரியல் வளத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் மீனவர்களுக்கான ஓய்வூதிய…
-
- 3 replies
- 334 views
- 1 follower
-
-
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்! இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும். மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிட…
-
- 0 replies
- 131 views
-
-
24 Nov, 2025 | 10:02 AM (நமது நிருபர்) சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு' எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
23 Nov, 2025 | 04:43 PM (எம்.நியூட்டன்) யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்து சேவை திங்கட்கிழமை (24) முதல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் அதிகாலை 5.00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் ஆகிய இரண்டு நேரம் இ.போ.ச பஸ் சேவை நடைபெறவுள்ளது. பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இபோச முகாமையாளர் ,வடக்கு மாகாண ஆளுநர் , புகையிரத நிலைய அதிபர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231226
-
- 4 replies
- 354 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 11:12 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு மின்சாரப் பேருந்துகளை வழங்குவதற்கான உதவித் திட்டத்தை சீனா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹோங்(Qi Zhenhong) தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்த செய்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக வெளிநாட்டுச் செலாவணியை நம்பியிருக்கும் இலங்கை, கடந்த காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாட்டை சந்தித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்களின் தினசரி வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது. மின்சாரப் பேருந்துகளுக்கு மாறுவது, எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதுடன்,…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது. சுயமாக குடிவரவு பணி வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடி…
-
-
- 6 replies
- 304 views
- 1 follower
-
-
அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..! Published By: Digital Desk 3 17 Nov, 2025 | 04:55 PM திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தா…
-
-
- 62 replies
- 3.9k views
- 2 followers
-
-
Published By: Vishnu 23 Nov, 2025 | 06:47 PM வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை குட்டிச் சுவராக்கிய வாங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர். நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறோம். கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டை சூறைய…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் : அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து கலந்துரையாடல் 23 Nov, 2025 | 05:10 PM (நமது நிருபர்) அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண்…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
12 Nov, 2025 | 04:18 PM (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத்தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொள்கிற…
-
- 2 replies
- 251 views
- 1 follower
-
-
23 Nov, 2025 | 11:55 AM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிறிதொரு முறைமையின் ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்து ஆலோசித்துவருவதாகவும், வெகுவிரைவில் இடம்பெறவுள்ள டில்வின் சில்வாவின் இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து கலந்துரையாடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. நீண்டகாலமாக நடாத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்கள் ஒரு வருடகாலத்துக்குள் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழரசுக்கட்சியுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பிலும் இது…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகள் இல்லாததால், முந்தைய ஆண்டில் (2024) 43,703 அஸ்வெசும பயனாளிகள் தங்கள் உரிமை பலன்களைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியான பயனாளிகள் தங்கள் பலன்களைப் பெற முடியாமல் போகலாம் அல்லது இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை தீர்க்க பொருத்தமான வழிமுற ஜூன் 2025 இறுதிக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையை நிறுவி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
இந்த நாட்டில் அனைவரும் சமன் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வணங்குவது போல் எமது மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் பதில பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் மாதம் என்பது உலகலாவிய ரீதியில் தங்கள் தேசங்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்களை நினைவு கூருகின்ற மாதம். போராடி மடிந்தவர்களை நினைவு அதனால்தான் உலகெங்கும் இராணுவத்தினராக இருக்கலாம் போராடியவர்களாக இருக்கலாம் அவர்களைப் பொப்பி மல…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு November 22, 2025 4:35 pm பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக, குறித்த வீதியின் கனேதென்ன சந்தியிலிருந்து கடுகன்னாவ வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலை…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க! நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூறும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். எனினும் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ் மக்…
-
- 0 replies
- 111 views
-
-
சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு! நாடுமுழுவதும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவைத்துள்ளார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவ…
-
- 0 replies
- 141 views
-
-
Published By: Digital Desk 1 23 Nov, 2025 | 10:37 AM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார். இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு பற்றி சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, புத்தசாசன அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பிலான அறிக்கையொன்ற…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 10:33 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்கிறது. எனவே கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தில் மூலோபாய நிலைப்பாடு கொண்ட நாடாக இலங்கை இருப்பதால், அதனை ஒத்துழைப்பு கடல்சார் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
நல்லூரில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நல்லூர் மாவீரர் நினைவாலய ஆவணக் காப்பகத்தின் மாவீரர் பட்டியல் மேம்படுத்தலிற்கான படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படிவத்தின் மூலம் தவறவிடப்பட்ட மாவீரர்களின் பெயர் விரிப்புகள் மற்றும் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை நாங்கள் இப்படிவத்தில் எழுதி நல்லூரில் உள்ள அவர்களின் பணிமனையில் கொண்டுசென்று கையளிக்கலாம். எனினும் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிப்போரிற்கான மின்னஞ்சல் முகவரி விரைவில் வெளியிடப்படும் என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. www.tamilwln.com
-
- 2 replies
- 311 views
-
-
சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர் சனி, 22 நவம்பர் 2025 11:32 AM நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில் இருந்து சென்னை சென்ற அவயவங்களை இழந்த குழுவினர்களுக்கான மாற்று அவயவங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக இன்றைய தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளனர். யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில், கனடா வாழ் மக்களின் பங்களிப்புடன் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த இரண்டாவது தொகுதியினர் மாற்று அவயவங்கள் பொருத்திக் கொள்வதற்காக சென்னை சென்றிருந்தது. கனேடி…
-
- 3 replies
- 225 views
-
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி! ஸ்ரீலங்கா பொதுஜனர பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 2009 ஆம் ஆண்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் இருப்பினும் அவர் சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ இங்கிலாந்தில் இருந்து சட்டப் பட்டம் பெற்ற விதம், அவரது சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரியில் இணைவது தொடர்பான தகவல்கள் பல வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார். அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உற…
-
-
- 13 replies
- 778 views
- 1 follower
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள். 22.11.2025 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025. "எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து,அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்." தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள். அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழத் தேசிய இனத்தினது அடையாளமாகவும் அதன் தொன்மையானது பேரொளி கொள்ளும் எமது தேசவிடுதலையைத் தங்களுடைய உயிரினும் மேலாகக்கொண்டு, பூமிப்பந்திலே அதன் சுதந…
-
- 0 replies
- 205 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு நிதர்ஷன் வினேத் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதன் படி, அந்த இருவரையும் துணைவேந்தர் தெரி…
-
- 0 replies
- 101 views
-
-
பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இராசயணவியல் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்…
-
- 0 replies
- 125 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி! ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் பின்னர் அருட்தந்தை சிரில் காமினி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் , குறித்த கலந்துரையாடலின் போது, மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார். அதற்கம…
-
- 0 replies
- 82 views
-