ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
தமிழினப்படுகொலை மேற்கொள்ளப்படுவதை ஊக்கிவிக்கின்றதும், இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை கடுமையாக எதிர்த்துவருவதுமான சிறிலங்காவின் இனவாதக் கட்சிகளில் ஒன்றறான ஜே.வி.பி. இடம்பெயர்ந்து வந்த மக்களை பராமரிக்கும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, இடம்பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களிடம் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 12:48.43 PM GMT +05:30 ] யாழ். மாவட்டம் தெல்லிப்பளைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இனந்தெரியாத நபர்களால் படுக்கையில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை 8 ஆம் கட்டை ஒழுங்கையை சேர்ந்த சொக்காப்புரம் வைரவர் ஆலயத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த புனிதன் எனத் தெரிய வருகிறது. மனைவி குழந்தைகள் அறையில் படுத்துறங்கியதாகவும் இவர் வெளி விறாந்தையில் படுத்துறங்கியதாகவும் அவ்வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றதாகவும், கூறப்படுகின்றது.. தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விக்கிரமசிங்க தலைமையிலான பொலிஸ் குழு விசாரணை மேற்…
-
- 0 replies
- 755 views
-
-
திகதி: 01.05.2009 // தமிழீழம் பிரித்தானியா, பிரான்ஸ் மீது சிறீலங்கா கடும் சீற்றம் அடைந்துள்ளது. ஏற்கனவே இரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களும் அந்நாட்டுக்கு சென்று போரை நிறுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் எவையும் கைகூடாத நிலையில், இந்நாடுகளில் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களால் கடும் சீற்றம் அடைந்துள்ளதாக சிறிலங்கா தரப்பு தெரிவித்துள்ளது. இங்கு நடைபெறும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள சிறிலங்கா, இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைப் புலிகளின் கொடிகளை பயன்படுத்துவதற்குக் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 929 views
-
-
உடனடி போர் நிறுத்தத்திற்கு நியூசிலாந்து அழைப்பு திகதி: 01.05.2009 // தமிழீழம் போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடனடியாக வருமாறு நியூசிலாந்து அரசு சிறீலங்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முர்ராய் மக்குலி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்று சிறிலங்கா போர் நிறுத்தம் ஒன்றுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். 6500 மக்கள் கொல்லப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், 50 ஆயிரம் மக்கள் ஆபத்தான நிலையில் போர்ப் பகுதியில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இரு பகுதியினரும் பொது மக்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ள அவர், அமைதி வழியில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவேண்டும…
-
- 0 replies
- 683 views
-
-
வீரகேசரி நாளேடு 4/30/2009 9:48:02 PM - நாம் இன்று வெற்றி மீது வெற்றி கொண்டு தேசத்தை பலப்படுத்தும் சந்தர்ப்பத்தை அடைந்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த நாட்டில் பிரிவினைவாதம் தொடர்பான எண்ணம் தலை தூக்காதவாறு உழைக்கும் மக்கள் ஐக்கியத்துடன் செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அறிக்கையின் விபரம் வருமாறு, உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் மிகவும் பெருமிதத்துடன் உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் அவர்களுடன் இணைந்து கொள்ளும் எமது நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் அபிவிருத்தியை சரியான பாதைய…
-
- 4 replies
- 1k views
-
-
உலக நாடுகளின்நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிங்களம் on 01-05-2009 08:32 செய்திகள், உலகம் ஜெனீவா,சிங்கள ராணுவமும் இந்திய படையும் சேர்ந்து போராளிகளை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் வரலாறு காணாத மனித பேரவலத்தை உருவாக்கி தந்துவிட்டது. இந்தியாவின் உதவிமற்றும் சில நாடுகளின் உதவி கிடைத்த உடன் சிங்கள ராணுவம் போர் முறைகளை மீறி பல விதத்தில் போர் குற்றங்கள் புரிந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நொயாளிகளை கொல்வது, குழந்தைகள் முதல் சிறுவர் பெண்கள் என பொதுமக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. விசாரணை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை கற்பழித்து வந்தது, மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கொடுமையான சித்திரவதை செய்து கொன்றது …
-
- 0 replies
- 1.3k views
-
-
கடற்படைச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை திகதி: 01.05.2009 // தமிழீழம் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படும் சிறிலங்கா கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் தம்புள்ள வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் சக சிப்பாய்களுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த இச் சிப்பாய் திகம்பதான இடைத்தங்கல் முகாமில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாகவும், இவர்களுக்கான பாதுகாப்புக் கடமையிலீடுபட்டிருந்த ஒரு உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறித்து எவரும் எதிர்பாராத விதத்தில் தனது கழுத்தில் சுட்டுக் கொண்டதாகவும், தம்புள்ள கொண்டுவரும் வேளையில் அவர் உயிர் இழந்ததாகவும் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. துப்பாக்…
-
- 0 replies
- 992 views
-
-
இன்று அதிகாலை முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின்போது படையினரின் சுப்பர்டோரா படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள். பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம். இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியு…
-
- 7 replies
- 5.3k views
-
-
வன்னியிலிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக பொருட்களை சேகரித்து தமது சொந்த தேவைகளுக்கு கருணா குழுவினர் பயன்படுத்திவருவதாக கல்முனைப் பிரதேச மக்கள் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக் களுக்கு கல்முனைப்பிரதேச மக்களிடம் வீடுவீடாகச் சென்று பொருட்களை சேகரிப்பதற்காக கல்முனையிலுள்ள அனைத்து கழக உறுப்பினர்களையும் இன்று (30-04-2009) காலை தமது அலுவலகத்துக்கு வரும்படி கருணாகுழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர். கருணா குழுவினரின் உள்நோக்கத்தைப் புரிந்த கொண்ட கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் சமுகமளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கருணாவின் நம்பிக்கைக்குரிய இனியபாரதியின் வலதுகையும் கல்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்திய மத்திய அரசு தான் இன்று சிங்கள அரசுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கின்றது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர தமிழீமே. இதனை வலியுறுத்தி உங்கள் குரல் ஒலிக்க வேணடும் என உரிமையோடு வேண்டுகின்றோம் என்று தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு... தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்... உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம், இன்று மரணக் கேணி ஆகியிருக்கிறது. பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்கு தல் சத்தங்களில் அந்தக் குரல்கள்…
-
- 0 replies
- 878 views
-
-
சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உடனடிப் போர் நிறுத்தத்ததை ஏற்படுத்தக்கோரி சுழற்சி முறையில் தொடர் நினைவூட்டல் போராட்டம் ஐந்தாவது நாளாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
01/05/2009, 12:02 [பதிவு இணையம்] புலிகள் பங்குபெறாத தமிழ் பிரதிநிதித்துவத்தை இலங்கையில் ஏற்படுத்த இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அரசுகள் கூட்டுச் சதியில் இலங்கையின் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகள் பங்குபெறாத தமிழ் பிரதிநிதித்துவத்தை இலங்கையில் ஏற்படுத்த இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அரசுகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடு ஒன்றில் இந்திய புலனாய்பு துறையின் செயல்பாட்டு வலையமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்த ஓருவர் இந்த நடவடிக்கைக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டு தற்போது கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இவர் பல பலவருடங்களுக்கு முன்னர் இலங்கையில் அரசியல் செயல்பாடுக…
-
- 0 replies
- 974 views
-
-
கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு இயல்புநிலை ஏற்படுத்தப்பட்டு சிவில் நிர்வாகம் நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் கூறும் இவ்வேளையில் மட்டக்களப்பு நகர் மற்றும் ஏனைய பிரதேசங்களில் மாணவர்கள் காணாமல் போயுள்ள சம்பவங்களானது பலத்த சந்தேகத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், தங்கேஸ்வரி கதிர்காமன், த.கனகசபை, எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், "கடத்தப்பட்ட மாணவர்களை சம்பந்தப்பட்டவர்கள் மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்ய வேண்டும் "என்றும் வலியுறுத்திக் கேட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் தெரி…
-
- 1 reply
- 511 views
-
-
இலங்கை நிலைவரம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடுகளையிட்டு அரசாங்கம் ஒரு போதும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. முதல்வர் கருணாநிதியினதும் ஜெயலலிதாவினதும் அரசியல் மோதல்களை நாம் கணக்கில் எடுக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசுடனான உறவு சுமுகமானதாகவே இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச அழுத்தங்கள் எதுவும் இதுவரையில் அரசின்மீது பிரயோகிக்கப்படவில்லை. யுத்த நிறுத்தமொன்றை அரசு மேற்கொள்ளவில்லை. அப்படி கூறுவது சுத்தப் பொய்யாகும். ஆனால் குறுகிய பிரதேசத்துக்குள் கனரக ஆயுத பாவனையோ பாரிய இராணுவ நடவடிக்கையோ முன்னெடுக்கப்படுவதில்லை என்ற தீர்மானத்தை மட்டும் கொண்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவி…
-
- 1 reply
- 666 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச அலுவலகத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்த 3 சிறுவர்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் மூவரும் சர்வோதய பண்ணையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை காத்தான்குடி பொலிஸ் சிறுவர் ,பெண்கள் பிரிவு இவ் அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது 18 வயதுக்கும் குறைந்த 3 சிறுவர்கள் அங்கே தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கரடியனாற்றைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுரேந்திரன் ,கல்லடியைச் சேர்ந்த பரசுராமன் மயூரன் ,மற்றும் அன்புவழிபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் டிசாந்தன் ஆகியோரே மேற்படி சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் இச்சிறுவர்களும் சந…
-
- 0 replies
- 739 views
-
-
இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து இக்கருத்தை அவர் தெரிவித்திருக்கின்றார். வன்னியில் பாதுகாப்பு வலயமென்று பெயர் சூட்டப்பட்டுள்ள பிரதேசம் உண்மையில் பாதுகாப்பற்றது. பாதுகாப்பு வலயத்தில் தான் மோதல்கள் நடைபெறுகின்றன என்று மிலிபாண்ட் மேலும் கூறினார். பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு உறுப்பினரான நீங்களும் இலங்கை அரசாங்கத்தினால் உடனடி யுத்த நிறுத்தத்தை அமுல் செய்வதற்கு மேற்கொண்டுவரும் முயற்சியில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளீர்கள் என்று கேட்கப்பட்…
-
- 0 replies
- 653 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த சூழ்நிலை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு வரைவில் தலையீடு செய்யக் கூடுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தத்தில் விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டாலும், ஈழக் கோரிக்கை தொடரக் கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டமைப்பு ஆட்சியே ஈழக் கோரிக்கையை பலப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் சில தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வந்ததாகவும்,…
-
- 0 replies
- 893 views
-
-
நாட்டின் மீது எனக்கு இல்லாத அளவு அக்கறை வெள்ளைக்காரர்களுக்கு எங்கிருந்து வந்ததென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஆயுதங்களை களைந்து, சரணடைய இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 15000 சதுர கிலோ மீற்றர் வரையில் வியாபித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பை தற்போது ஐந்து சதுர கிலோ மீற்றர் வரையில் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். படையினரும், பொதுமக்களும் யுத்த வலயத்தில் இருப்பதனால் விமான மற்றும் ஆட்லறித் தாக்குல்களை நடத்த வேண்டாமென பணிப்புரை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சர்வதேச சக்திகளுக்கும் அடி பணிந்து தாம் கன ரக ஆயுத பாவனையை நிறுத்தவில்லை என அவர் தெரிவ…
-
- 0 replies
- 747 views
-
-
சென்னை : காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 6ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார். சோனியா, முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகின்றனர். தமிழகத்தில் வரும் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 'சோனியா தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வரக்கூடாது' என, சினிமா இயக்குனர் பாரதிராஜா உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'சோனியா கண்டிப் பாக தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வருவார்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் வயலார் ரவி உறுதியளித்தனர். தமிழகத்தில் வரு…
-
- 7 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை விரைவில் பிடிப்போம் என இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ரோஹித போகலகாமா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்,: பிரபாகரனை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்துவிட்டது . எனவே விரைவில் பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடிக்கும் .பிரபாகரனின் குடும்பத்தினர் அங்கு இருக்கிறார்களா என்பது உறுதிபட தெரியவில்லை. ஆனால், பிரபாகரன் நிச்சயம் இங்குதான் இருக்கிறார் .இன்னும் தப்பிக்கவில்லை. பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பீர்களா என நிருபர் கேட்டதற்கு, அது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது, இருப்பினும் பிரபாகரனை பிடித்த பிறகு அனைத்து சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்படும். லாகூர் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உ…
-
- 0 replies
- 536 views
-
-
பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய எழுத்து மூலமான உறுதிமொழியையடுத்து சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தனது போராட்டத்தை நிறுத்தியிருக்கின்றார். எனினும் அங்கு தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 579 views
-
-
இலங்கைத் தீவில் ஒரு இனப்படுகொலை திட்டமிட்டவாறு நடந்து கொண்டிருக்கையில், அதனை உள்நாட்டு யுத்தமென்றும், பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டமென்றும், சிறிலங்கா அரசு செய்த பரப்புரைகளை அரச தரப்பு ஆதாரங்களாக வைத்துக் கொண்டு சர்வதேச ஊடகங்கள் பல இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டங்கள் பல ஊடகங்களின் பார்வையை, இது குறித்த செய்திகளின் பக்கம் திருப்பியிருந்தன. ஆயினும் சில நாடுகளில் சில ஊடகங்கள், சிறிலங்கா அரசின் பரப்புரைகளுக்கமைவாக ஏஜென்சிச் செய்திகள் வழங்கும் செய்திகளையே வெளியிட்டுவந்தன. இத்தகைய ஒரு நிலையினைச் சுவிற்சர்லாந்தின் முக்கிய ஊடகங்கள் சில தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தன. இதற்கு எத…
-
- 5 replies
- 1.4k views
-
-
சுவிசில் தமிழ் மக்கள் பொலிசாருடன் கைகலப்பு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் 3000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிறிலங்காவில் போர்நிறுத்தம் கோரியும் உடனடி மருந்து உணவு அனுப்பப்பட... சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் 3000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிறிலங்காவில் போர்நிறுத்தம் கோரியும் உடனடி மருந்து உணவு அனுப்பப்படவேண்டும் என்று கோரியும் தமிழீழம் தான் எமக்கான ஒரே இறுதித் தீர்வென்றும் ஆர்ப்பரித்தபடி போராட்டத்தை நடத்தினர். இக் கவனயீர்ப்புப் போராட்டம் சம்மந்தமாக ஏற்பாட்டுக் குழுவினரை அழைத்து சந்திப்பதாகக் கூறியிருந்த ஜக்கிய நாடுகள் சபை…
-
- 3 replies
- 984 views
-