ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
இலங்கையில் உணவுப் பற்றாக்குறையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையாம் !! இலங்கையில் 7.5 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக வெளியான செய்திகள் பொய்யானவை என உலக உணவுத் திட்டத்திற்கான ஒத்துழைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உணவுப் பாதுகாப்பில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக குறிப்பிடும் பயிர் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு செயற்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கு இது முரணாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1334654
-
- 5 replies
- 429 views
-
-
Published By: RAJEEBAN 12 JUN, 2023 | 10:18 AM இராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை பதவி வகித்தவேளை வெலிக்கடை அனுராதபுரம் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறிநுழைந்து சிறைக்கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. குற்றவியல் சட்டம் உட்பட பல சட்டவிதிகளிற்கு ஏற்ப கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆயுதம் ஏந்திய நிலையில் இரு சிறைச்சாலைகளிற்குள் அமைச்சர் நுழைவதற்கு அனுமதித்த சிறைக…
-
- 7 replies
- 368 views
- 1 follower
-
-
வெருகல் படுகொலையின் 37 ஆவது வருட நினைவேந்தல் 13 Jun, 2023 | 10:59 AM வெருகல் - ஈச்சிலம்பற்று பகுதி அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது இடம்பெற்ற சேருவில படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 12 ஆம் திகதி ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் மிகவும் உணவுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986.06.12 அன்று சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி …
-
- 5 replies
- 414 views
-
-
Published By: RAJEEBAN 10 JUN, 2023 | 03:02 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் டுவிட்டர் பதிவொன்றை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்டுள்ளார். ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார். அலிசப்ரி அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்ரீதியில் தங்களுடன் உடன்படமறுப்பவர்களையோ தமிழர்கள் மத்தியி;ல் விமர்சனங்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு அடிபணியாத அல்லது அதனை மீறத்துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர். விடுத…
-
- 11 replies
- 651 views
- 1 follower
-
-
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கு, பேருதவியை வழங்கினார்! இலங்கை அரசாங்கத்தினால் 3ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன், வைரமுத்து சரோஜா,, கந்தையா இளங்கோ, ராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், ஞனேசன் தர்சன் உள்ளிட்டோருக்கு) லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த செவ்வாய்கிழமை (06.06.23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார். ஜனாதிபதியுடனான ஒவ்வவொரு சந்திப்புகளிலும் தம…
-
- 27 replies
- 1.8k views
- 1 follower
-
-
கடன் மறுசீரமைப்பு பேச்சு : ஐரோப்பா செல்கின்றார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார். அதன்படி கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த ஐரோப்பா விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1334339
-
- 1 reply
- 222 views
-
-
யாழில் இருந்து நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாத யாத்திரை முன்னெடுப்பு! நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் மனுர சமன் பெரேரா, வடமாகாண பணிப்பாளர் காமினி, யாழ் மாவட்ட பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சம்பிர்தாய பூர்வம…
-
- 0 replies
- 230 views
-
-
நீளம் பாய்தலில் தேசிய சாம்பியனும், முப்பாய்ச்சல் போட்டிகளில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ள கிரேசன் தனஞ்சயவே சுவிட்சர்லாந்தில் காணாமல்போயுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த வேளையில் இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த போட்டித் தொடர் தனிப்பட்ட ரீதியான அழைப்பிதழின் அடிப்படையில் நடைபெற்றுள்ளதாகவும் இதற்கும் தேசிய மெய்வல்லுனர் அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் சில விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் போட்டிகளுக்காக செல்லும் போது, தப்பிச்சென்று ஏதிலி அந்தஸ்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேரை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. “புதிய மாணவர் குழுவிற்கு அழுகிய உணவளித்து மனிதாபிமானமற்ற சித்திரவதை” சம்பவம் காரணமாக இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ பீடத்திற்குள் நுழைந்த புதிய மாணவர்கள் குழுவினை இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அக்பர் விடுதிக்கு அழைத்துச் சென்று, கெட்டுப்போன மற்றும் அழுகிய உணவினை சாப்பிட கொடுத்து, கடுமையாக திட்டி, தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வகுப்புத் தடை தற்காலிகமானது என்றும், முறையான விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரிய…
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவேற்றப்படும் ! சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை அடுத்த மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட 62 ஒப்பந்தங்களில் 25 மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதன் முன்னேற்றம் குறித்து ஆராய, இது தொடர்பாக, மத்திய வங்கியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார். வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுடன் செயல்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 172 views
-
-
வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் !! உள்ளூராட்சித் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டது. தற்போது உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தேர்தலை நடத்துவது நல்லது என இதன்போது ஆலோசனை விடுக்…
-
- 0 replies
- 180 views
-
-
பொரளையில் விசேட நடவடிக்கை : 35 பேர் கைது பொரளை பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2023/1334331
-
- 0 replies
- 227 views
-
-
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று முன்மொழிந்துள்ளார். “இன்றைய குழந்தைகளுக்கு பாலியல் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என தெரியாது. சில குழந்தைகள் இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது, ”என தெரிவித்துள்ளார். “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ht…
-
- 54 replies
- 3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUN, 2023 | 04:14 PM ஆர்.ராம்- தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்வதையே விரும்புகின்ற நிலையில், இழுத்தடிப்புக்கள் மூலமான தீர்வினை நீர்த்துப் போகச் செய்வதற்கு முயன்றால் வெளியக சுயநிர்ணயத்தைக் கோரும் நிலைமை ஏற்படும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் கடந்த வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை, அதோடிணைந்த எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 7 replies
- 459 views
- 2 followers
-
-
சிவலிங்கம் ஆரூரனுக்கு விடுதலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க …
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
11 JUN, 2023 | 08:04 PM நுவரெலியா, கிரேட்வெஸ்டன் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ரதல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உயிரிழந்துள்ளார். நாளைய தினம் பாடசாலை ஆரம்பிக்க இருப்பதால் இன்று பாடசாலையில் சுத்திகரிப்பு வேலைக்காக சென்றிருந்த அதிபர் சுப்பிரமணியம் மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த அதிபர் தலவாக்கலை கல்கந்த வத்த பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். இறந்த அதிபர் ஒரு சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/157488
-
- 1 reply
- 197 views
- 1 follower
-
-
விபச்சாரத்தில் ஈடுபட்ட பல பெண்களுக்கு தொற்று நோய்! வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது என தொிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் குறித்த 7 பெண்களும் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும்…
-
- 4 replies
- 576 views
-
-
இலங்கை செல்வதற்கு அனுமதி தாருங்கள் – மோடிக்கு சாந்தன் கடிதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது ஒரு அறையில் கைதி போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சாந்தன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த முகாமில் ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தம்மை போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு இந்தியாவில் எவ்வாறு ரத்த உறவுகள் …
-
- 0 replies
- 208 views
-
-
கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் கிழக்கு ஆளுநரால் கையளிப்பு! Published By: Nanthini 10 Jun, 2023 | 01:26 PM கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிலைபேண்தகு விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (9) திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல, மாகாண பிரதம செயலாளர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாள…
-
- 2 replies
- 425 views
-
-
யாழில் சுயமரியாதை நடைபயணம் adminJune 10, 2023 சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றி வலியுறுத்தியும் சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சனிக்கழமை இடம்பெற்றது. சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, ‘ இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இடம்ப…
-
- 6 replies
- 959 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை நோய் குருநாகலிலும் பரவல் - 100க்கும் அதிகமான கால்நடைகள் பாதிப்பு Published By: Vishnu 28 May, 2023 | 06:34 PM (எம்.வை.எம்.சியாம்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் பரவிய தோல் கழலை நோய் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கால்நடைகளிடையே ஒரு வகையான …
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
மாகாண சபை தேர்தல் விரைவில் – தயராகுமாறு பசில் அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் …
-
- 1 reply
- 576 views
-
-
Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:30 AM இலங்கையில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் செனெட் வெளிவிவகார குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைசெய்யப்பட்டதை நான் வரவேற்க்கும் அதேவேளை அவர் கைதுசெய்யப்பட்டமை அச்சுறுத்தப்பட்டமை துன்புறுத்தப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என செனெட் குழுவின் தலைவர் செனெட்டர் மெனெட்டெஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு படையினர் புலனாய்வு பிரிவினரின…
-
- 2 replies
- 667 views
- 1 follower
-
-
10 JUN, 2023 | 09:00 AM காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. https://www.virakesari.lk/article/157380
-
- 4 replies
- 220 views
- 1 follower
-
-
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும் அபிவிருத்தி முகவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவற்றிலிருந்து இந்த செயல்முறைக்கு உதவி பெறப்படும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் இதனை நிறைவு …
-
- 5 replies
- 377 views
- 1 follower
-