Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீனக் கப்பலில் இருந்து 14 சடலங்கள் மீட்பு- இலங்கை கடற்படை! இந்தியப் பெருங்கடலில் கடந்த வாரம் கவிழ்ந்த சீனக் கப்பலில் இருந்து மொத்தம் 14 சடலங்களை கண்டுபிடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தெற்கே உள்ள கடற்பரப்பில் கடந்த 16ஆம் திகதி பதிவாகியிருந்த இந்த விபத்தை அடுத்து மீட்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினரும் உதவிபுரிந்து வருகிறனனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கண்காணிப்பு கப்பலான எஸ்.எல்.என்.எஸ்.விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை கண்டெடுத்த நிலையில் தற்போது 12 பணியாளர்களின் சடலங்களை கடற்படையினர…

  2. முகமாலை பகுதியில் இன்று காலை விபத்து : ஒருவர் உயிரிழப்பு கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர…

  3. ஹபாயா அணியலாம்: நல்லிணக்கத்தின் சமிஞ்சை என்கிறார் இம்ரான் எம்.பி எப்.முபாரக் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பானது நீதிமன்றில் முன்மொழிந்தமை மகிழ்ச்சியழிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். அத்தோடு, இவ்விடயமானது தமிழ் பேசும் மக்களிடையே நல்லதொரு நல்லிணக்கத்துக்கான சமிஞ்சையாக தென்படுவதாகவும் இரு தரப்பாரும் விட்டுக்கொடுப்போடும் இணங்கியும் செல்வதன் மூலம் பலம் பெற முடியும் என்றும் இம்ரான் எம்.பி. தெரிவித்து…

  4. 22 தமிழ் அரசியல் கைதிகளே உள்ளனர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கை…

  5. தவறு செய்யவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுங்கள் : இன அழிப்புக்கு உள்ளானவர்களின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாது - சிறிதரன் Published By: Digital Desk 5 24 May, 2023 | 10:20 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை,இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக முகம் கொடுக்கலாம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் மார்புத்தட்டிக் கொள்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் நிம்மதியாக வாழ்கின்றீர்களா. இன அழிப்புக்…

  6. கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் - சரத் வீரசேகர Published By: Digital Desk 5 24 May, 2023 | 10:10 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம். மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்…

    • 11 replies
    • 663 views
  7. Published By: NANTHINI 23 MAY, 2023 | 06:48 PM எல்லை தாண்டிச் சென்று இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று திங்கட்கிழமை (22) கைதுசெய்துள்ளனர். இந்தியாவின் தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் 60 மைல் நாட்டிகல் தூரம் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கிப் பிடித்தனர். அப்போது IMUL A-0635-NBO என்…

  8. மாலியில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வெடித்ததில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐநா அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் திங்களன்று காயங்கள் பெரிதாக இல்லை என தெரிவித்துள்ளார். மினுஸ்மா எனப்படும் மாலியில் உள்ள ஐ.நா தூதரகத்தைச் சேர்ந்த அமைதி காக்கும் படையினர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை கிடால் பிராந்தியத்தில் உள்ள டெஸ்ஸாலிட்டில் உள்ள அவர்களின் முகாமுக்கு வடமேற்கே 12 கிமீ தொலைவில் நடந்துள்ளது.குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, அவர்கள் ஒரு கவச வாகனத்தி…

  9. Published By: NANTHINI 23 MAY, 2023 | 05:37 PM நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்து, பயணிகள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், மீனவர்களின் உதவியுடன் அப்பயணிகள் மீட்கப்பட்டு படகுக் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23) காலை குறிகாட்டுவான் நோக்கி பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது. சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது. அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தை ச…

  10. 23 MAY, 2023 | 05:30 PM தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று (23) தீர்ப்பளித்துள்ளது. தங்கவேலு நிமலன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக வெடிபொருட்கள் மற்றும் 2 மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இரண்டு மைக்ரோ பிஸ்டல்கள், சி-4 ரக உயர் வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். …

  11. நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது! நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகைத் தந்த அவர் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் வருகை தந்த நிலையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது சுங்கப்பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1332599

  12. கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அமைச்சரவை ஊடக பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளது. https://at…

    • 6 replies
    • 493 views
  13. பருத்தித்துறையில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சிறுமியை கைது செய்துள்ளனர். காந்தி ஊரைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/255056

  14. பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் தற்போது 46 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி 45 ஆண்களும் ஒரு பெண்ணும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 20 பேர் 14 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்…

  15. பொருளாதார நெருக்கடியானது ஆசியாவின் 20 ஏழ்மையான நாடுகளில் இலங்கையையும் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சைடர் மொங்கி என்ற தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை, வளர்ந்து வரும் ஒரு நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் நாணய மதிப்பிழப்பு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாட்டால் மனிதாபிமான அவசரநிலை போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலைவரப்படி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள், இந்த அளவீட்டின் அடிப்படையி…

  16. போதைக்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் உள்ளிட்ட 17 பேர் கைது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடாத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். இதேவேளை அவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பொலிஸார் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332548

  17. சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து !! இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடி…

  18. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு-மத்திய வங்கி இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபாய் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதே காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1 வீதத்தாலும் ஸ்டெர்லிங் பவுண்டுடன் 15.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளது. இதேநேரம் யூரோ நாணயத்துடன் ஒப்பிடும்போது 17.5 வீதத்தாலும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது 18.7வீதத்தாலும் ரூபாயின் …

    • 1 reply
    • 258 views
  19. நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு! நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332537

  20. அவசர நிலையை கையாள்வதற்கு தேவையான வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றா நோய் பிரிவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து பணிகளை முன்னெடுத்துள்ளதாக அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். “தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவாக, நாடளாவிய ரீதியில் உள்ள 73 வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் பதிவாகி வருகின்றது. ஐ.டி.எச் வைத்தியசாலை அல்லது தொற்று நோய்த் திணைக்களம், தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா வைத்தியசாலைகள…

  21. Published By: NANTHINI 22 MAY, 2023 | 02:05 PM கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களை பதிவுசெய்வதற்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பும் அதிகாரம் பீடாதிபதிகளுக்கு இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்குத…

  22. Published By: NANTHINI 22 MAY, 2023 | 05:36 PM மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து எம்.பி. இன்று திங்கட்கிழமை (22) மதியம் அப்பகுதிக்கு விஜயம் செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்ப…

  23. 22 MAY, 2023 | 04:53 PM ( எம்.நியூட்டன்) யாழ் வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதி மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை (22) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் இது தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ சிப்பாயை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்தனர். தமிழ் இராண…

  24. போராட்டத்தால் வவுனியா - ஓமந்தை ரயில் பாதை பணிகள் இடைநிறுத்தம் : 10 ஆயிரம் டொலர்களை வீணாகச் செலுத்த வேண்டியுள்ளதாம் 22 May, 2023 | 11:31 AM ரயில் கடவை கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக வவுனியா ஓமந்தை ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த ஒப்பந்ததாரருக்கு நாளொன்றுக்கு 10,000 டொலர்களை வீணாகச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் ரயில் கடவைகோரி கிராம மக்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் ரயில் பாதையை…

    • 1 reply
    • 527 views
  25. Published By: RAJEEBAN 22 MAY, 2023 | 11:09 AM போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட சீன பயணியை இராஜாங்க அருந்திக பெர்ணாண்டோ தலையிட்டு விடுதலை செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமானநிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார். 18ம் திகதி கொழும்பு விமானந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.