ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் தற்போது 46 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி 45 ஆண்களும் ஒரு பெண்ணும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 20 பேர் 14 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
போதைக்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் உள்ளிட்ட 17 பேர் கைது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடாத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். இதேவேளை அவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பொலிஸார் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332548
-
- 0 replies
- 242 views
-
-
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு! நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332537
-
- 0 replies
- 351 views
-
-
உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் செயலத்தில் உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். https://athavannews.com/2023/1332436
-
- 6 replies
- 571 views
- 1 follower
-
-
ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு! கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குன் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது. https://athavannews.com/2023/1332465
-
- 1 reply
- 221 views
-
-
போராட்டத்தால் வவுனியா - ஓமந்தை ரயில் பாதை பணிகள் இடைநிறுத்தம் : 10 ஆயிரம் டொலர்களை வீணாகச் செலுத்த வேண்டியுள்ளதாம் 22 May, 2023 | 11:31 AM ரயில் கடவை கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக வவுனியா ஓமந்தை ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த ஒப்பந்ததாரருக்கு நாளொன்றுக்கு 10,000 டொலர்களை வீணாகச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் ரயில் கடவைகோரி கிராம மக்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் ரயில் பாதையை…
-
- 1 reply
- 527 views
-
-
32 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தோம் - அலி சப்ரி Published By: Rajeeban 21 May, 2023 | 12:12 PM 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். 32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதிதிரட்டும் சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர…
-
- 16 replies
- 999 views
-
-
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு! போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினையும் வழங்கியுள்ளார். இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்றயதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த போதகர் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவரது இந்த செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் கிறிஸ்தவ அடிப்படைவாத கும்பல் மிக…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
காலாவதியான டின் மீன்கள் விற்பனை : சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாயுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2023/1332364
-
- 12 replies
- 555 views
-
-
22 MAY, 2023 | 04:53 PM ( எம்.நியூட்டன்) யாழ் வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதி மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை (22) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் இது தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ சிப்பாயை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்தனர். தமிழ் இராண…
-
- 3 replies
- 445 views
- 1 follower
-
-
இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள் - புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு! kugenMay 21, 2023 போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கு தேவையான ஒழுங்குகளை செய்யுமாறும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே இந்த விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்போது ஜனாதிபதியிடம் கருத்துரைத்த ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழ…
-
- 7 replies
- 710 views
-
-
அவசர நிலையை கையாள்வதற்கு தேவையான வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றா நோய் பிரிவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து பணிகளை முன்னெடுத்துள்ளதாக அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். “தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவாக, நாடளாவிய ரீதியில் உள்ள 73 வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் பதிவாகி வருகின்றது. ஐ.டி.எச் வைத்தியசாலை அல்லது தொற்று நோய்த் திணைக்களம், தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா வைத்தியசாலைகள…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 22 MAY, 2023 | 02:05 PM கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களை பதிவுசெய்வதற்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பும் அதிகாரம் பீடாதிபதிகளுக்கு இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்குத…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன்-பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்! உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இவ்வாறான அச்சுறுத்தல் இருக்கலாம் என புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது.அச்சுறுத்தல்கள் வருமென்று அறிந்தே இந்த பொறுப்பை ஏற்றேன். நான் இருக்கும்போதே போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.…
-
- 0 replies
- 176 views
-
-
யாழ்.பல்கலை பொருட்கள் கையாடல் 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாம்! May 22, 2023 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சிய சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என சம்பந்தப்பட்ட பகுதியின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறிக்கையிட்டிருந்தாலும், அது இரண்டு மில்லியன்களைக் கடந்திருக்கலாம் எனப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால் முறையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கையாடல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கெனப் பேரவையி…
-
- 0 replies
- 150 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகத் தோன்றுகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின் போது நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளதார். கொழும்பின் ஊடகத்தகவல் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இதன்போது பாதுகாப்பு தரப்பில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வாரம் கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு வலயம் பற்றிய முறைசாரா கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயிரம் உணவுப் பொதிகள் பற்றிய தகவல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்டதைப…
-
- 3 replies
- 438 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும் – மாவை நம்பிக்கை தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கான தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டிக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், சீ.வி.கே.சிவஞானமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் வட்டாரக்கிளைகள் தெரிவு செய்யும் செயற்பாடுகள், யாழ்ப்பாணம், திருகோணமல…
-
- 8 replies
- 421 views
- 1 follower
-
-
வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்ட பெருமைமிக்க நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! ஜனாதிபதி வலியுறுத்தல் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2018 இல், பிரதமராக இருந்தபோது, இந்த குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட வந்ததாகவும் இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர் திட்டத்தை திறந்துவைக்க வருவதை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் குறிப்பிட்டார் அவர…
-
- 3 replies
- 295 views
-
-
ஆளுனராக செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்! கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 16ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள் இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/…
-
- 6 replies
- 413 views
-
-
தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுக்கு வாருங்கள் – ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்து !! தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நில ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், படுகொலை, அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களும் …
-
- 7 replies
- 344 views
-
-
நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம்: நற்சான்றுப் பத்திரம் நைஜீரிய ஜனாதிபதியிடம் கையளிப்பு! Published By: Nanthini 21 May, 2023 | 11:56 AM நைஜீரிய சமஷ்டி குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள வேலுப்பிள்ளை கணநாதன் தனது நற்சான்று கடிதத்தை தலைநகர் அபுஜாவில் உள்ள இராஜாங்க இல்லத்தில் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரியிடம் அண்மையில் கையளித்தார். இந்த உத்தியோகபூர்வ வைபவத்தையடுத்து இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போது நைஜீரிய ஜனாதிபதியும் உயர்ஸ்தானிகரும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அண்மையில் பிரித்தானியாவி…
-
- 0 replies
- 201 views
-
-
இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து அமெரிக்கா தற்போது சிந்திக்கவில்லை- அமெரிக்க அதிகாரி Published By: Rajeeban 21 May, 2023 | 10:47 AM இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணியகத்தின் துணை உதவிச்செயலாளர் அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து தற்போது அமெரிக்கா சிந்திக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார். இது குறித்து நாங்கள் தற்போதைக்கு சிந்திக்கவில்லை என அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 180 views
-
-
கறுப்பு பட்டியலுக்குள் இந்திய மருந்து! இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் ‘பிரெட்னிசோலோன்’ என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்து தொடர்பில் பல சிக்கல்கள் பதிவாகியதையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதனை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தது. இந்தநிலையில் இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், இந்த கண் சொட்டு மருந்து மாசுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நா…
-
- 0 replies
- 167 views
-
-
கைதான தமிழ் பெண் உயிரிழந்தமை தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்! வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இரண்டு சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் இரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 226 views
-
-
நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு !! இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள 370 வைத்திய அதிகாரி பிரிவுகளில் 59 டெங்கு அபாய பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறியுள்ளது. இலங்கையில் 50 வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலும் இதேவேளை வத்தளை, நீர்கொழும்பு, …
-
- 1 reply
- 183 views
-