ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143685 topics in this forum
-
தமிழகத்தில் இன்று முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் கொளத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் இன்னொரு இளைஞர் தீக்குளித்துள்ளார். பள்ளிப்பட்டு என்ற இடத்தைச் சேர்ந்த ரவி என்ற இளைஞரே ஈழத் தமிழ் மக்களுக்கு நீதியும் சமாதானமும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தீக் குளித்ததாக தெரியவருகின்றது. எனினும் இதுதொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை. இது இவ்வாறிருக்க, இன்று கொளத்தூரில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழ் மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்வதை தடுக்க வேண்டியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்பால்பூபதி நெல்லையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை வாங்க மறுத்தார்.ஈழத்தில் நடைபெற்றுவரும் தொடர்போரினால் ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் மடிந்து வருகின்றனர். இதை உலகத் தமிழர்கள் அனைவரும் கண்டித்துவரும் வேளையில் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததன் காரணமாக பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் பலமாதங்களாக போராட்டம் நடத்தியும் எந்த ஒரு அமைதி முடிவும் ஏற்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்ணாநிலை மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி தங்களது எதிர்ப்பை தெ…
-
- 1 reply
- 583 views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறித்தி கட்டாயமாய் ஊர்வலத்துக்கு வரகை தருமாறும் அவ்வாறு வரவில்லையாயின் இரானுவத்தினர் வந்து கட்டாயமாய் வாகனங்களில் ஏத்தப்படுவார்கள் என வீடு வீடாய் சென்று அச்சுறத்தப்பட்டுள்ளனர் இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் காணப்படுகின்றது நான் ஒரு நண்பர் மூலம் அறிந்துகொண்டவர்
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை அரசியலாக்கி மலிவான விளம்பரத்துக்கு வழிவகுக்க வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் தீக்குளித்து இறந்தார். அவரது உடல் கொளத்தூர் வியாபாரிகள் சங்கம் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராமதாஸ், வைகோ, சரத்குமார், திருமாவளவன், தா. பாண்டியன், நல்லகண்ணு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சுதீஷ், நெடுமாறன், சத்யராஜ், வடிவேலு, வெள்ளையன் உள்பட ஏராளமானவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். அப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன. ராஜபக்சே, தங்கபாலு உருவபொம்மைகள் மற்றும் காங்கிரஸ் கொடியை சிலர் எரி…
-
- 28 replies
- 2.8k views
-
-
மூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ? அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது. இப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார். பேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எம…
-
- 6 replies
- 1.4k views
-
-
தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். பணம், பொருள் கொடுத்து தங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என முத்துக்குமாரின் தங்கை கணவர் கூறியுள்ளார். சட்டசபையில் நேற்று அமைச்சர் மு.க.ஸ்டாலின், தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். இந்த உதவியை முத்துக்குமாரின் தங்கை கணவர் கற்குவேல் ஏற்க மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண உதவி தொகை எங்களுக்கு வேண்டாம். தமிழ் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வ…
-
- 0 replies
- 614 views
-
-
இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் தமிழின அழிப்புக்கு இந்திய இராணுவம் ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. அந்த ஆயதங்களை தாய்தமிழகம் வழியாக அனுப்பிவைக்கப்படுகிறது. இதை கண்டித்து தஞ்சையில் உள்ள அரசுக்கு சொந்தமான இராணுவ விமான தளத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள். விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார், டி.எஸ்.பி இளம்பரிதி ஆகியோர் தலைமையிலான 100 போலிஸார் போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர். தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி …
-
- 9 replies
- 1.5k views
-
-
சிங்களப் பேரினவாதத்தின் தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோரியும் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் வன்னி மக்களை காக்குமாறும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றியுள்ள இவ் ஊர்வலமானது மில் பாங்க் (Mill Bank. TATE BRITAIN) இலிருந்து ஆரம்பித்து ரெம்பிள் பிளேஸ் (Temple Place) வரை செல்லவுள்ளது. எனினும் தற்போதும் மக்கள் அலைஅலையாக வந்து ஊர்வலத்தில் சேர்ந்தவண்ணம் உள்ளனர். இவ் ஊர்வலத்தில் பங்குபற்றிய அனைத்து மக்களும் தம் தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தி கோசங்களை முழக்கியவண்ணம் செல்கின்றனர். மேலதிக விபரங்கள் விரைவில்......... http://www.tamilskynews.com/index.php?…
-
- 0 replies
- 695 views
-
-
தமிழீழ மக்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணம் செய்த அன்புச்சகோதரன் முத்துக்குமரன் அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மாணவர்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைகளிற்காக பயமுறுத்துவதாக தெரியவருகிறது. தனது உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்தும் படி மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விட்டு சென்ற தன் தோழமையின் பணி தொடர துடிக்கும் மாணவர்களை அந்த பணியை தொடராது தடுப்பதற்காக இந்த சதி திட்டம் நடாத்தப்படுகிறது. உலகிலேயே மாணவ சக்தியால் சாதிக்க முடியாதது ஒன்றுமே கிடையாது. அந்த மாணவ சக்தி கிளர்ச்சி கொண்டால் தமிழீழத்தில் பாதி உரிமை கிடைத்துவிடும். இவ்வள காலமாக தமிழீழம் என்றால் என்ன? ஏன் அந்த மக்கள் போராடுகிறார்கள்? என்று தெரியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்…
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெறும் வரை பட்டம் வாங்க மாட்டேன் என்று கூறி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் பட்டத்தை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. துணை வேந்தார் சபாபதி மோகன் பட்டங்களை வழங்கினார். அப்போது பிஏ ஆங்கில இலக்கியம் படித்த மாணவர் ஜான்பால் பூபதி என்பவர் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்குரிய பட்டத்தை வாங்க மறுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர் ஜான்பால் பூபதி கூறுகையில், எனது சொந்த ஊர் தேனி மாவட்டம் ராயபாண்டியபுரம். நான் இந்த கல்லூரியி…
-
- 0 replies
- 410 views
-
-
பாலஸ்தீனத்தின் காஸாவில் கொல்லப்படுவதை விட ஈழத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதாக மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சரும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் பீ. ராமசாமி தெரிவித்துள்ளார். முதிவர்கள், பெண், குழந்தைகள் ஈவு இரக்கமின்றி இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளாhர். பினாங்கு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஐனநாயக செயல் கட்சி, இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரண நிதியை திரட்ட ஆரம்பித்துள்ளது. இது குறிதது துணை முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேராசிரியர் பி.ராமசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். இது இன அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட நிதியல்ல எனவும் மனிதாபிமான முறைய…
-
- 0 replies
- 481 views
-
-
தயவுசைது Vote ேபாுங்கோ http://www.citynews.ca/polls.aspx?pollid=4786
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கை விடயத்தில் இந்தியா நடந்துகொள்ளும் முறை அது இன்னும் உலகளாவிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு பக்குவப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. Sri Lanka crisis reveals India not ready for global security role [TamilNet, Friday, 30 January 2009, 20:41 GMT] The present humanitarian crisis in Sri Lanka, which has been completely transparent to international scrutiny for several years, is proving the limits of India's ability to move decisively on 'transnational' security issues, despite its ambitions for a permanent seat in the UN Security Council, writes a reader from Tamil Nadu. Delhi's inability to prevail on Sri Lanka's Sinhala government has long been recognised by the reg…
-
- 1 reply
- 696 views
-
-
நேற்று மாலை ரொறன்ரோ நகரப்பகுதியில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தின்போது மகிந்தவின் வேடமணிந்து வந்தவரின் நிலமை மிகவும் கவலக்கிடமாக இருந்தது.... வேடதாரியை யுவதிகளும் சிறுவர்களும் பனிக்கட்டிகளைக்கொண்டு தாக்கினார்கள்... இந்த ஒளிப்பதிவினை முழுமையாக தரமுடியாவிட்டாலும் சிறு பகுதியினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.... நிழலுக்கே இந்த நிலையெனில் நிஜத்திற்கு....... http://ca.youtube.com/watch?v=pXLah9wFgB0&...re=channel_page நட்புடன் -நிசான்
-
- 2 replies
- 1.6k views
-
-
மகிந்தவின் 48 மணிநேர காலக்கெடுவை ஏற்றுக்கொண்டு 26 பொதுமக்கள் ஓமந்தையூடாக வவுனியா வருகை. Only 26 respond to Rajapaksa's 48-hour ultimatum [TamilNet, Saturday, 31 January 2009, 12:11 GMT] In the last 48-hours, only 26 civilians have crossed through Oamanthai into Sri Lankan government controlled area, sources in Vavuniyaa said Saturday evening. In the meantime, the representatives of the Internally Displaced People in Vanni have expressed fear that many hundreds of civilians are going to perish within the next few hours as a Sri Lankan military official in Colombo said the Sri Lanka Army (SLA) would go on an "all out operation" to "eliminate the remaining Tigers" a…
-
- 0 replies
- 654 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் ஆரம்பமாகிவிட்டது. கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் என்கிற இடத்துக்கு இந்த ஊர்வலம் 2 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்களும், மாணவர்களுமே பெரும் பங்கேற்றுள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது. ஊர்வலத்தின் வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ள தமிழுணர்வாளர்களுக்கு தாகம் தீர்க்கின்றனர். முத்துக்குமார் உடல் செல்லும் வாகனத்தில் இயக்குநர் அமீர் அமர்ந்துள்ளார். …
-
- 4 replies
- 1.3k views
-
-
புதுவை காந்தி வீதி படேல் சாலை சந்திப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற பெயரில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று நள்ளிரவு 8 வாலிபர்கள் 5 மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஓட்டல் மீது அவர்கள் திடீரென்று சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த போலீஸ்காரர் செந்தில் குமார், ஊர்காவல் படை வீரர் நாராயணசாமி ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வேகமாக கல்வீசினார்கள். இதில் போலீஸ்காரரும், ஊர்க்காவல் படைவீரரும் காயம் அடைந்தனர். அவர்கள் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். உடனே மற்ற வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு 4 மோட்டார் சைக்கிளில் …
-
- 0 replies
- 713 views
-
-
கொலைக்களமாகும் இலங்கை !! திசை மாறும் தமிழக அரசியல்!!! குமுதம் வெளியிட்ட காணொளிக்கு இங்கே அழுத்தவும் : http://www.tamiloosai.com/index.php?option...1&Itemid=68
-
- 0 replies
- 689 views
-
-
தமிழினம் காக்க உயிர் நீத்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 526 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின அழிப்பு மற்றும் இந்தியா வழங்கி வரும் இராணுவ உதவிகளை நிறுத்துமாறு வலியுறுத்தி ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின அழிப்பு மற்றும் இந்தியா வழங்கி வரும் இராணுவ உதவிகளை நிறுத்துமாறு வலியுறுத்தி ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 380 views
-
-
தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மதுரையைச் சேர்ந்த தமிழரான ரவி நேற்று தன்னையே எரியூட்டிக்கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 555 views
-
-
சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
வன்னிபெரு நிலப்பரப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்களில் பலர் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப் புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வவுனியா தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 592 views
-
-
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தி தமிழ் மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி நெதர்லாந்து வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்பாக முன் அனுமதி எதுவும் பெறாது திடீரென தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 411 views
-