ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்காவைச் சேர்ந்த சோமாலியா கடற்பகுதியில் இந்தியக் கடற்படை வீரசாகசம் புரிந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். தபார் எனும் போர்க்கப்பல் சோமாலியா கடற்கொள்ளையரின் தாய்க்கப்பலை சுட்டு மூழ்கடித்துள்ளது. சோமாலியாவை ஒட்டியுள்ள ஏடன் கடல் பகுதியில் கடற்கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் சரக்கும் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. மிகப்பெரிய தொகைகளை பெற்றுக்கொண்ட பிறகே பல கப்பல்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய கப்பல்களும் பிறநாட்டுக்கப்பல்களில் வேலைப்பார்த்த இந்திய மாலுமிகளும் கூட கடற்கொள்ளையரின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானில் இந்திய அணிக்குப் பதில் விளையாட தயார் என்று சிறிலங்கா துடுப்பாட்ட சபை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 674 views
-
-
ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து, கொழும்பில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது புலிகள் தாக்கல் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகள் பெருமளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு சென்ற வண்ணம் உள்ளதாகவும் புலனாய்வு துறையினர் கூறியுள்ளனர். இவர்களில் அதிகமானோர் சிங்கபூர், மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே சென்றுள்ளதாகவும் இவ்வாறு இலங்கை சென்றுள்ள இவர்கள் புலிகளின் ஆலோசனை கிடைக்கும் வரை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கியு…
-
- 0 replies
- 1.6k views
-
-
சந்தேகநபர் ஒருவரை அவசரகாலச்சட்டத்தின் கீழ், நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஒன்றரை வருடங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபர் ஒருவரை 90 நாட்களுக்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு அனுமதிப்பதற்கும், விளக்கமறியலில் வைத்திருப்பவரை மீண்டும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் சட்டமா அதிபருக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த பின்னர் உயர்நீதிமன்றம் இந்த வர்த்தமானியை ரத்துச்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை 2009 ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
தடை விதிப்புகளின் மூலமும் இனவழிப்புச் செயற்பாடுகள் [16 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 8:55 மு.ப இலங்கை] வன்னியில் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசங்களுக்கான உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படுவது கட்டுப்படுத்தப் பட்டிருப்பதால் அங்கு சோமாலியா போன்ற மோச நிலைமை ஏற்பட்டிருப்பதாக உலக உணவுத்திட்ட அதிகாரி ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அதை மறுத்துரைத்திருந்த பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, போதியளவு பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன - அனுப்பப்படுகின்றன - என்று பீற்றினார். ஆனால், கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தியின் மாவட்ட நிலைவர அறிக்கை உண்மையை…
-
- 0 replies
- 775 views
-
-
தமிழக முதலமைச்சரை விமர்சித்தவனை எப்படி மன்னிக்க முடியும்.? என்று சிறிலங்கா படைத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 724 views
-
-
கியூபா மற்றும் சிறிலங்கா இடையேயான இருதரப்பு பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான குழுவின் முதல் கூட்டம் கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 616 views
-
-
சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 935 views
-
-
சிறிலங்கா படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியர் உட்பட 4 பேரை சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 684 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை பெறப்படவில்லை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 428 views
-
-
முல்லைத்தீவு நகரின் தென்மேற்கு கிராமமான முள்ளியவளையை சிறிலங்கா படைத்தரப்பு விரைவில் கைப்பற்றும் என்று சிறிலங்காவின் அரசின் ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 457 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து அம்பகாமம் கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 825 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி மகிந்த அரசுடன் இணைந்த அதிருப்தியாளர்கள் குழுவினர் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
மூதூரில் 17 அப்பாவி தன்னார்வப் பணியாளர்கள் சிறிலங்கா படைத்தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இரு காணொளி பதிவுகளில் ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 779 views
-
-
சிறிலங்காவின் தபால்துறை அமைச்சு நட்டத்தில் இயங்குவதால் தனக்கு புதிய துறையை ஒதுக்கக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் மகிந்த விஜேசேகர கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தியாவை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 999 views
-
-
வடபோர் முனையில் இடம்பெரும் மோதல் நடவடிக்கைகளின்போது கொல்லப்படும் படையினரின் உடலங்களை களமுனையின் பின்தளங்களில் படையினர் புதைத்துவிட்டு அவர்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவிப்பதன் காரணமாக தாம் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் இவ்வாறு பல படையினர் காணாமல்போயுள்ளதாக படையினர் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகம் தெரிவித்துள்ளது. http://www.swissmurasam.net/2008-10-17-05-...4-20-04-08.html
-
- 20 replies
- 6k views
- 1 follower
-
-
பொன்னாலை வரதராஐப் பொருமாள் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை திகதி: 15.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பொன்னாலை வரதராஐப் பொருமாள் ஆலயத்திற்கு அருகில் படையினரால் புதிய பௌத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டு வருகிறது. உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இப்பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினரால் நிறுவப்பட்டு வரும் இப்பௌத்த விகாரை வரதராஐப் பெருமாள் ஆலயக் காணியில் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சங்கதி
-
- 5 replies
- 2k views
-
-
நண்பனையும் எதிரியையும் இந்தியா அடையாளம் காண நல்ல சந்தர்ப்பம் [15 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:10 மு.ப இலங்கை இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக் கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கருத்தை, இந்திய நிலைப்பாடாக இலங்கைக்குத் தெரிவிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இயன்ற விரைவில் கொழும்புக்குச் செல்வார் என, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான தமது சந்திப்பை அடுத்துத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்தார். அந்த அறிவிப்பு விடுத்து பத்துநாட்கள் கடந்து விட்டன. ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்கை விஜயம் இன்னும் கைகூடவே இல்லை. இந்தத் தாமதத்திற்கு - விஜயம் இழுபறிப்படுவதற்கு - பல காரணங்கள் பல தரப்பினாலும் கூறப்படுகின்றன. மும்பையில…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆளஇடமளியோம். இவ்வாறு எமது தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து வரும் எதிரிப்படைகளை மக்களின் துணையுடன் எமது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்போம் என கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். இன்று ஆழியவளைப் பகுதியில் இடம்பெற்ற சமகால அரசியல்க் கருத்தூட்டல் நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். வடமராட்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசாங்கம் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் தமிழ் மொழியிலான பாதுகாப்பு இணையத்தளத்தில் வைரஸ் இருப்பதை புலம் பெயர் கணணி நிபுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்திற்கு செல்வோரின் கணணியில் TROJAN Js/Xilos வைரஸ் தாமாகவே உள்நுளைந்து கணணியின் IP முகவரி , மற்றும் இரகசிய தகவல்களை எடுத்துச் செல்கிறது. ANTI-VIRUS எனப்படும் பாதுகாப்பு மென் பொருள் உங்கள் கணணியில் இருந்தால் கூட இவை உங்கள் கணணியை தாக்கவல்லதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வைரஸ் உள்நுளைந்து உங்கள் இரகசிய தகவல்களை திரட்டியபின்னர் ADOBE மென்பொருளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நீங்கள் உபயோகிக்கும் இணையம் மூலமாகவே வெளியில் சென்று வைரஸை இயக்கும் இலங்கை அரசிற்கு தக…
-
- 8 replies
- 3.7k views
-
-
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு அரசாங்க மருத்துவமனையும் பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன. இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், முல்லைத்தீவு மாஞ்சோலை, முள்ளியவளை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்த எறிகணை தாக்குதல்களின்போது பொது வைத்தியசாலை பாதிக்கப்பட்டதையடுத்து, அது செயலிழந்துள்ளதாக அந்த வைத்தி்யசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வி.சண்முகராஜா தெரிவிக்கின்றார். …
-
- 0 replies
- 871 views
-
-
தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆள இடமளியோம் - வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் திகதி: 15.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆளஇடமளியோம். இவ்வாறு எமது தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து வரும் எதிரிப்படைகளை மக்களின் துணையுடன் எமது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்போம் என கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். இன்று ஆழியவளைப் பகுதியில் இடம்பெற்ற சமகால அரசியல்க் கருத்தூட்டல் நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். வடமராட்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
படை அணிவகுப்பைப் பார்வைவயிடச் சென்றபோது வீதி விபத்து - 11 பேர் காயம் திங்கள், 15 டிசம்பர் 2008, 17:25 மணி தமிழீழம் [தாயகன்] புத்தளம் - அநுராதபுரம் வீதியில் இன்று காலை இடம்பெற்ற ஊர்தி விபத்தில் பொதுமக்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறீலங்கா புதிய படையணியின் அணிவகுப்பைப் பார்வையிடச்சென்றபோது இன்று காலை 8:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. காயமமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் படை உறுப்பினர்களா, அல்லது உறவினர்களா என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இவர்கள் பயணித்த சிற்றூந்து கருவலகஸ்வேவ பகுதியில் பாரவூர்தியுடன் மோதியுள்ளது. pathivu
-
- 0 replies
- 1.2k views
-