ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் தலா 17 லட்சம் ரூபா பெறுமதியான 15 கரைவலைகளும் 4 லட்சம் பெறுமதியான 190 மீன்பிடிப் படகுகளும் சிறிலங்கா படையினரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 699 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதான சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
பொதுமக்களை அச்சுறுத்தி அவலப்படுத்தும் வகையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வினை மாணவர்கள் எழுதிக்கொண்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் பிற்பகல் 1:00 மணிவரை எழு தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
போர்முகம் திகதி: 12.12.2008 // தமிழீழம் // [] - அ.லோகீசன். "விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் அடக்குமுறையாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தாயகத் தமிழர்களை நினைவுகூர்ந்து கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உண்ணாநிலையும் கவனயீர்ப்பு நிகழ்வும் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
இடம்மாறும் வெற்றிக்கம்பங்களும் - ஏமாறும் இலங்கை இந்திய அரசுகளும்! ஆய்வு:முரசத்திற்காக பத்மா இன்று உலகமே ஏமாற்றுப் பிரச்சாரத்தால் வாழ்க்கை வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். பல்வேறு துறைகளிலும் இருப்பது போலவே அரசியலிலும் இன்று இது நன்றாக ஒட்டிக் கொண்டுவிட்டது. இலங்கையைப் பொறுத்த வரை சிங்கள அரசியல் கட்சிகளின் வாக்கு வேட்டை தமிழின அடக்குமுறை நோக்கியதாக மாறி, இன்று இராணுவ முகம் கொண்டுவிட்டது. சிங்களத்தின் ஆட்சி அதிகாரவெறி அதனுடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் இராணுவ மயச் சிந்தனைக்கு அடிமையாக்கிவிட்டது. இந்த நிர்ப்பந்தம் இலங்கையில் பொதுவுடமைக் கட்சிகளையும் மிதவாதிகள் எனப் பெயர் வாங்கிக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும் பிடித்துக்கொண்டுவிட்ட நிலை இன்று த…
-
- 2 replies
- 1.6k views
-
-
120 பேர் பலி, 280 பேர் காயம்.கிளிநொச்சி நோக்கிய இருமுனை முன்னகர்வு முறியடிப்பு, ராணுவம் மலையாளபுறம் வரை பிந்தள்ளப்பட்டது ! புதன்கிழமை நடந்த கிளிநொச்சியைக் கைப்பற்றும் மோதல்களில் ராணுவம் அறிவியல் நகரிலிருந்து மலையாளபுறம் வரை பினதள்ளப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று வியாழக்கிழமை வன்னியில் தெரிவித்துள்ளனர். புதுமுறிப்புப் பகுதியில் இருந்து முன்னேற எத்தனித்த விசேட படைகள் மீது புலிகள் நடத்திய எதிர்ப்புச்சமரில் ராணுவத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கடுமையான இழப்புக்கள் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளது.இந்த முறியடிப்புச் சமர்களில் ராணுவத்தில் பல இளம் பராயத்தினர் கொல்லப்பட்டைருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுட
-
- 16 replies
- 4.1k views
-
-
வீரகேசரி இணையம் - கலாநிதி மற்றும் தேசபந்து போன்ற கௌரவப் பட்டங்களை தகுதியற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் எதிர்காலத்தில் வழங்குவதனைத் தடை செய்வதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் மட்டுமே கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்க முடியும. அதே போன்று தேசபந்து, தேசமான்ய போன்ற பட்டங்களை ஜனாதிபதி மட்டுமே வழங்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களும் தனியார்களும் தேசிய ரீதியிலான கௌரவப் பட்டங்களுக்கு நிகரான பட்டங்களை தகுதியற்றவர்களுக்கு வழங்கி வருவது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 5 replies
- 1.1k views
-
-
சிறுவர்களை படையில் சேர்க்கும் அரசுகளுக்கான அமெரிக்க இராணுவ உதவிகளை நிறுத்துவதற்கான சட்டமூலத்தினை அமெரிக்க காங்கிரஸ் நடைமுறைப்படுத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 760 views
-
-
எதிரியின் முன்னணிப்படைகள் அழிக்கப்பட்ட நிலையிலே முன்னணிப் படையினர் கடைசிப் படைகளைக்கொண்டு போரை நடாத்துகின்ற கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான் என இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக உக்கிரமான தாக்குதலை நடாத்தி பேரிழப்பைக்கொடுத்த போராளிகளுக்கு கண்டாவளைஇ விசுவமடுக் கோட்ட மக்களால் உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி களமுனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்இ உண்மையில் நாம் விடுதலைப் போராட்டத்தில் நெருக்கடியானதொரு சூழ்நிலையில் நிற்கின்றோம். இப்படியிருந்தும் நீங்கள் கிளிநொச்சி கட்டளைப்பணிய…
-
- 2 replies
- 2.8k views
-
-
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரை மணிநேரச் சந்திப்பில் ஈழத்தமிழர் விவகாரம், தமிழ்நாடு கரையோரப் பாதுகாப்பு, மும்பை தாக்குதல், மற்றும் பொருண்மிய விடயங்கள் பற்றி பேசப்பட்டதாக அரச தரப்பு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலைப் பொறுத்தளவில் வெளிநாட்டு தூதுவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் மட்டத்திலும், ஏனைய மத்திய அரசு மட்டத்திலும் மட்டுமே பேச்சு நடத்துவது வழக்கமாகும்.இந்த விதிமுறையைத் தவிர்த்து தமிழ்நாடு முதலமைச்சரை இந்தியாவிற்கான பிரித்தானியத் தூதுவர் சந்தித்துள்ளமை பல்வேறு சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் மற்றும் கட்சிகளின் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், சிறீலங்கா அரச தரப்பில…
-
- 1 reply
- 1k views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது மனித உரிமைகள் நாளான நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்காவில் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் டென்மார்க் தமிழ் மக்களின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது. டென்மார்கின் சமூக லிபறல் கட்சியின் பிரமுகர் த. தர்மகுலசிங்கம் மற்றும் டென்மார்க்கின் லுங்பி பங்குத்தந்தை அல்றின் சூசைப்பிள்ளை ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறகம் வற்சனை புரூசல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இந்த விண்ணப்பத்தை கையளித்தனர். கிறகம் வற்சன் பிரித்தானியாவின் மேற்கு லண்டன் லிபறல் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 684 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்யலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் கொள்கையான " எம்மால் முடியும்" எனும் வாசகத்தை இலங்கையிலும் முயற்சித்து, பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்களை தோற்கடிக்க முடியும் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையை அரசியல் தீPர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இதன் மூலம் வன்னியில் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்லக்கூடிய வழி தோன்றும் எனவும் பிளேக் தெரிவித்தார். â…
-
- 11 replies
- 1.9k views
-
-
தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகளாகச் சித்திரித்து, இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேசியது, ஒட்டுமொத்தத் தமிழகத் தையும் கொதிக்க வைத்திருக்கிறது! பல அரசியல் கட்சிகளும் பொன்சேகாவின் பேச்சைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்திருக்க, நாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ விடம் இதுகுறித்த கேள்விகளை வைத்தோம். ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தார் வைகோ... பொன்சேகா, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதில் இந்தியாவுக்கே விருப்பம் இல்லை எனச் சொல்லி இருக்கிறாரே! அப்படியென்றால், மத்திய அரசு இரட்டை நாடகம் போடுகிறதா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துவதே நம் இந்திய அரசுதான் என நான் அடித்துச் சொன்னபோது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னது உண்மைதான் என இன்றை…
-
- 2 replies
- 2.6k views
-
-
தமிழ்நாட்டில் அண்ணா பெயரிலான கட்சியை (அதிமுக) "ஆரிய மாயை'' (ஜெயலலிதா) அபகரித்துவிட்டது. சிங்களர்களின் குரலைத்தானே இவர் சதா ஒலிக்கிறார். காரணம் என்ன? தமிழரல்லர் என்பதுதானே. என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி உரையாற்றிய போது, மிகுந்த கவலையோடு தமிழ்நாட்டு மக்கள் சிந்தனைக்காக, தமிழ் இன உணர்வாளர்கள், முற்போக்குவாதிகள் சிந்தனைக்காக ஒரு கருத்தை முன்வைத்தார். இன உணர்வற்று மரத் தமிழர்களாகி, கூட்டணி சீட்டுகளுக்காக இன எதிரிகளிடம் (அதிமுக) சரண் அடைந்துவிட்ட தமிழர்களும் (கம்யூனிஸ்டுகள்) கூட அந்த 'ஆரிய மாயை'…
-
- 0 replies
- 754 views
-
-
புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. இதனால் தான் படைத்தரப்பு இழப்புக்களை சந்தித்து வருகின்றது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "பிஸ்னஸ் டுடே' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம். இராணுவத் தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்…
-
- 0 replies
- 961 views
-
-
யாழ். குடாநாட்டில் அடுத்து வரும் சில தினங்களில் விடுதலைப் புலிகளின் வசமுள்ள முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றி விடுவார்களென யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண இராணுவ தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகள் கடந்த நான்கு மாதங்களாக யாழ். மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது; இந்த நான்கு மாத காலப்பகுதியில் இந்து ஆலயங்களில் விடுதலைப் புலிகளால் …
-
- 4 replies
- 2.7k views
-
-
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் இன்றுவாழ்த்து தெரிவித்தார். ரஜினிகாந்துக்கு இன்று 59வது பிறந்த நாள். ஆனால் இம்முறை அவர் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதால் தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்றும் எவ்வித கொண்டாட்டங்களிலும் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிறந்த நாளில் ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள் என்பதால் கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் ரஜினி இன்று ஓய்வு எடுத்தார். தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களும் திரையுலகினரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். 18ம் தேதி முதல் எந்திரன் பட ஷ¨ட்டிங்கில் அவர் பங்கேற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிபிஸி உலகசேவையும், சண்டேலீடர் பத்திரிகையும் இலங்கையில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது BBC World Service and Sunday Leader newspaper censored Reporters Without Borders deplores the latest cases of government censorship of international and local news media. In the past few days, the BBC World Service has been jammed by the state-owned Sri Lanka Broadcasting Cooperation (SLBC) and one of the country’s most outspoken newspapers, the Sunday Leader, has been forbidden to refer to the president’s brother. "We are worried by the increase in direct and indirect censorship in Sri Lanka," Reporters Without Borders said. "Coming after a broadcast media bill reintroduc…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கும் அனுபவமுள்ள படையணிகளால்தான் படைத்தரப்பினர் அதிக இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் 'பிஸ்னஸ் ருடே' இதழுக்கு வழங்கிய நேர்காணலில் சரத் பொன்சேகா தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு: போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம். இராணுவத்தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
வன்னியில் இரு களமுனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படையினர் 90 பேர் கொல்லப்பட்டு, 12 உடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. நேற்று புதன்கிழமை காலை 9:00 மணிக்கு கிளிநொச்சிக்கு மேற்கே ஓட்டுப்புலத்தில் இருந்து புதுமுறிப்பு நோக்கி முன்னேற முற்பட்ட படையினருக்கு எதிரான தாக்குதலில் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதுடன், 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த மோதலில் 120 வரையிலான படையினர் காயமடைந்து களமுனையைவிட்டு அகற்றப்பட்டுள்ளனர். புதுமுறிப்பில் ஏகேஎல்எம்ஜி – 04, பிகே எல்எம்ஜி – 02, ஆர்பிஜி – 02, ரி-56-2 ரக துப்பாக்கிகள் – 11, இரவு பார்வை காட்டி – 01, லோ - 01 உள்ளிட்ட படையப்பொருள்களும் கைப்பற…
-
- 16 replies
- 6.2k views
- 1 follower
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாகவும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை பிரித்தானிய உயர்ஸ்தானியர் சேர்.றிச்சட் ஸ்ரெக் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து சிநேக பூர்வமாக ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்மையில் மும்பாயில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் மாறிவரும் உலக பொருளாதாரத்தை எவ்வாறு முகம் கொடும்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது. http://www.pathivu.com/ _____________________________ http://vaththirayan.blogspot.com/
-
- 0 replies
- 472 views
-
-
சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி நகரின் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சிங்கள இனவெறியன் மகிந்த இராஜபக்சே, சரத் பொன்சேகாவா ஆகியோரின் உருவ பொம்மைகளை பாடைகட்டி, பறை முழங்க ஊர்வலமாக எடுத்துவந்து எரித்தனர். இதில் பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் இந்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கின்றனர். 'இந்திய பிரதமர்' மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவும் மக்கள் போராட்டங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையை க…
-
- 1 reply
- 810 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 432 views
-