ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
குடும்பத்தில் காதுகுத்து, கல்யாண நிகழ்ச்சிகளில் மொய் எழுதிய வர்கள்கூட, தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கும் அதே போல வர வேண்டும்; அதே அளவு திருப்பிச் செய்ய முடியாதபோதும், ஏதாவது சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால்தான் தங்க ளுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் என்ற எண்ணம் பொதுவானது. ஆனால் இந்த நாகரிகம், தமிழக அரசியல் கட்சிக ளுக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் புரிய வில்லை இலங்கைப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கள் கூட்டம் நடத்தப்பட்டபோது அனைத்துக் கட்சிகளும்-அதிமுக, மதிமுக, தேமுதிக தவிர- பங்குகொண்டன. இந்தக் கூட்டத்தில், அக் டோபர் 28-ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்று…
-
- 0 replies
- 1.5k views
-
-
பாரதிஜ ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 712 views
-
-
(காணொளி இணைப்பு) இந்தியாவின் பூகோள நலன்சார்ந்த காய் நகர்த்தும் தந்திரோபாயத்தினால் தமிழர்கள் பகடைக்காய்களாகிப் பாதிக்கப்பட்டு வருவதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்றவர்கள் இந்திய அரசில் இருந்தபோது ஈழத்தமிழர்கள் தொடர்பாக இருந்த புரிந்துணர்வுகூட தற்பொழுது இல்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார். இந்திய அரசைப் பொறுத்தளவில் சிறீலங்கா அரசை தனது கைக்குள் வைத்திருப்பதற்கு எவ்வாறு தமிழர்களைப் பயன்படுத்தலாம் என சிந்திக்கின்றதே தவிர, தமிழர் நலன்சார்ந்து சிந்திக்கவில்லை எனவும் யோகி கூறினார். மறு புறத்தில் சிறீலங்கா அரசாங்கமும் இந்திய அரசை தந்திரோபாயமாக பயன்படுத்தி வரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
தமிழ் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் தமிழகமே ஈழத் தமிழரின் துயர் துடைக்க பொங்கி எழுந்துள்ளது உலகெங்கும் உள்ள தமிழருக்கு ஆறுதல் அளிக்கிறது. உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனும் தமிழ் தலைவருக்கு நன்றி சொல்ல வேண்டும். சிங்களத்தின் போர் நிறுத்த மறுப்பும், மஹிந்தவின் போர் தொடர்வதற்கான டெல்லி அறைகூவலும், ரணிலின் நயவஞ்சக டில்லி வழிமொழிவும் தலைவர் கலைஞர், தமிழக மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்களுக்கு சிங்களத்தால் செய்யப்பட்ட அவமானமே. டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொல்வது போல், தோழர் திருமாவளவன் சொல்வது போல் அடுத்த படி என்ன? எனும் கேள்விக்கான பதிலும் தலைவர் கலைஞர் அவர்களின் சாணக்கியத்தாலேயே முடிவு செய்யப்பட வேண்டும். உதாரணமாக ஈழ தமிழரின் சுயநிர்ணய உரிமையை தமிழகம் சட்டசப…
-
- 0 replies
- 776 views
-
-
திரைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு, அதேசமயம் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் வெளுத்து வாங்குகிறார் இயக்குநர் சீமான். ராமேஸ்வரத்தில் அவர் பேசியதில் குற்றம் கண்டுபிடித்த போலீஸ், சீமானை சிறையில் அடைத்தது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இலங்கைப் பிரச்சினை தமிழக அரசியலையும் தினசரி கலக்கி வருகிறது. ஆதரவும், எதிர்ப்புமாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலரைக் கைது செய்ய வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில் இயக்குநர் சீமானை மதுரையில் தமிழன் எக்ஸ்பிரஸýக்காக சந்தித்தோம். திரைப்படத்துறையில் ஈடுபாடுகொண்ட நீங்கள், இலங்கை தமிழர் பி…
-
- 3 replies
- 3k views
-
-
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரவாணிகள் கூட்டமைப்பின் சார்பில், கல்கி, பிரியாபாபு ஆகியோர் நேற்று முன்தினம் பொலிஸ் ஆணையாளர் அலுவகத்தில் எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். பினனர் இது குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கை பிரச்சினையில் மற்றவர்கள் போராடுவதை விட நாங்கள் போரடினால், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். எங்களது போராட்டத்திற்கு பல்வேறு தலவர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். இது தொடர்பாக பலரையும் நாங்கள் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என்றனர். நன்றி : வீரகேசரி
-
- 0 replies
- 1k views
-
-
ஜேர்மனியின் கொடுங்கோல் ஆட்சியாளர் ஹிட்லரின் நாசி முகாமை விட மோசமான நிலையில் இலங்கைத் தமிழர் இருப்பதாக பா.உ கனிமொழி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள்படும் துயரங்களை எடுத்துச் செல்வதற்காக தமிழக மாணவர் கூட்டமைப்பின் 14 நாள் பரப்புரை பயணம் நேற்று தொடங்கியது. கனிமொழி எம்.பி., பயணத்தைத் கொடியசைத்து தொடக்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் : 100 பேரைக் கொண்டு கியூபாவில் விடுதலைப் பயணத்தை ஆரம்பித் பிடேல் கஸ்ரோ போன்று 15 மாணவர்களைக் கொண்டு ஆரம்பமாகியுள்ள இப்பயணம் வெற்றி பெற வேண்டும். நிலவில் என்ன நடைபெறுகின்றது என தெரிந்து கொள்ளக் கூடிய நம்மால் அயல் நாடான இலங்கையில் தமிழர்கள் படும் துயரம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல் இருப்பத…
-
- 0 replies
- 774 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. அங்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். இதுபற்றி நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறி இருக்கிறோம். இந்த பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து பேச நேரம் கேட்டு இருக்கிறேன் என்றார்.
-
- 0 replies
- 800 views
-
-
புலிகள் பின்வாங்கும் மர்மம்...! என்ற தலைப்பில் குழுதத்தில்(17.11. 2008) வந்த ஆக்கத்தில் ஈழம் பற்றிய பகுதிகளை இங்கே இணைத்துள்ளேன். அவசரக்கூட்டம் என்ற அழைப்போடு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கூடியது அலப்பறை டீம். ஆழ்ந்த யோசனையில் இருந்த சித்தன் "என்ன சோதனையோ தெரியலப்பா. இந்த தி.மு.க அரசுக்கு அடிமேல அடி விழுந்துகிட்டு வருது. அதிலிருந்து எப்படி மீளப்போறாங்கன்னுதான் தெரியல..." என்று புலம்பினார். "எந்த விஷயத்தைச் சொல்றீங்க. இந்த விஷயம்னு குழம்பாம சொன்னாதான தெரியும்..."- கோட்டை கோபாலு. "எந்த விஷயம்னு சொல்றது..? தொட்டதெல்லாம் வம்பாயில்ல போயிட்டிருக்கு. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, மின்வெட்டுன்னு தி.மு.க அரசு பேர் ரிப்பேராகி கிடக்கு. இதுல இலங்கைத் தமிழர்களுக்கு…
-
- 2 replies
- 1.9k views
-
-
`காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்! …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களை அங்கு ஏற்பட்டுள்ள சலசலப்புகளை இலங்கை அரசு ஒரு போதும் கவனத்தில் எடுக்காது என்று அமைச்சர் டியூ குணசேகர நேற்று பாரளுமன்றில் கூறினார். இந்தியாவில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலுக்காகவே தமிழ்நாட்டில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்றும் இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைப் பிரச்சினையில் தலையிட முடியாது என்றும் மேலும் கூறினார். இந்தியாவுடன் நாம் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளோம். அந்த உறவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், தமிழ் நாட்டில் மாத்திரம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசியல்வாதிகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் பொய்யானது. இந்தியாவில் …
-
- 0 replies
- 833 views
-
-
யாழ். குடாநாட்டு முகமாலை முன்னரங்க போர்முனைப் பகுதிகளில் இருந்து முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட அகோர உக்கிர மோதலில் 36 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளனர். இம் முறியடிப்புச் சமர் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாவது:- முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து நேற்று திங்கட்கிழமை ந.பகல் தொடங்கி இன்று செவ்வாய்க்கிழமை மு.பகல் 10.00 மணிவரையுள்ள காலப்பகுதியில் சுமார் நான்கு தடவைகள் சிறிலங்கா படையினர் பின்தளப் பிரதேசங்களில் பாரிய மோட்டார் பல்குழல் வெடிகணை சூட்டாதரவுடன் முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர். இம்முன்நகர்வு திங்கட்கிழமை மூன்று தடவைகளும் இன்று செவ்வாய்க்கி…
-
- 1 reply
- 1.6k views
-
-
வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு நேர்ந்த கதை தன்க்கும்? என கேள்வி எழுப்புகிறார் பிள்ளையான்: http://www.globaltamilnews.net/tamil_news....=2318&cat=1 வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளுக்கு நேர்ந்த நிலை தனக்கு நேருமோ என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். வரதராஜப் பெருமாள் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சீர்குலைவுகளை மேற்கொண்டது போல கிழக்கு மாகாணத்தையும் இல்லாமல் செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதை காணமுடிவதாக பிள்ளையான் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்;பித்து உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள…
-
- 1 reply
- 1.2k views
-
-
மீரிகம , கித்துல்வல- கலுஹக்கலகந்த பிரதேசத்தில் விமானப்படை சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் : http://www.globaltamilnews.net/tamil_news....=2321&cat=1 மீரிகம , கித்துல்வல- கலுஹக்கலகந்த பிரதேசத்தில் விமானப்படை சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கலுஹக்கலகந்தயில் உள்ள விமானப்படையின் ஒலிப்பரப்புக் கோபுர நிலையத்தில் இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது என நீர்கொழும்பு சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஹேமசிறி விதான தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் விமானப்படை சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 1k views
-
-
11/18/2008 4:38:04 PM - மத்துகம மகிந்த விஜேதிலக்க என்பவர் எழுதிய 'அப்பட்ட நொபேனென லோக்கய ஹா வெனத் தே' '( எங்களுக்கு கண்ணுக்கு எட்டாத உலகமும் வேறு விடயங்களும்) (பக்கம்137) என்ற நூலில் வண. பலாங்கொட ஆனந்த மைத்ரீய மகா நாயக்க தேரர் வடக்கில் நடைபெற்று வரும் யுத்தம் தொடர்பாக சில தகவல்களை தந்திருக்கிறார். அதன் விபரம் கீழே தரப்படுகின்றது. ''வடக்கு, கிழக்கு பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அது இன்று இக்கட்டான சூழ் நிலையை உருவாக்கி உள்ளது. தொடர்ந்து யுத்தம் மேற்கொள்வதால் எவ்வித பயனும் இல்லை. அது பிரச்சினைக்குத் தீர்வும் ஆகாது. நாட்டில் ஒரே நேரத்தில் பல இடங்களில் சிங்களம் - தமிழ் என்ற பேதம் இன்றி அமைதிக்கான பூஜைகள் நடத்தப்பட வேண்டும். சுயநலன் கருதாது பொத…
-
- 0 replies
- 765 views
-
-
விடுதலைப் புலிகளை அரசாங்கம் தடைசெய்யும்: பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் தடைசெய்துவிடும்” பிரதமரை மேற்கோள்காட்டி பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தற்பொழுது நாடு இருக்கும் நிலையில் எந்தவொரு பிரஜையும், தனிநாடு கோரமுடியாதெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் நாட்டை நல்லவழியில் ஆட்சி செய்வதற்கும் மக்கள் எமக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர். மக்களின் வேண்டுகோளுக்கு அமைய மாவிலாறு முதல் மனித…
-
- 0 replies
- 765 views
-
-
வடக்கு-கிழக்கிலிருந்து 400 சிங்கள மருத்துவர்களை வெளியேற்ற முடிவு [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 03:03 மு.ப ஈழம்] [பி.கெளரி] வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றி வரும் 400 சிங்கள மருத்துவர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக சிறிலங்கா அரச மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா அரச மருத்துவர் சங்கத்தின் துணைச் செயலாளர் மருத்துவ கலாநிதி உபுல் குணசேகர மேலும் தெரிவித்துள்ளதாவது: போர் இடம்பெற்று வரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள மருத்துவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் கடந்த வாரம் சிங்கள மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை தொ…
-
- 0 replies
- 530 views
-
-
இலங்கையின் வடக்கு பகுதியில் இன்று மாங்குளத்தையும் குமுளமுனையையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது. Sri Lanka troops take two more towns from Tigers: defence ministry COLOMBO (AFP) – Sri Lankan troops on Monday captured two more strategic towns from Tamil Tiger rebels following fierce fighting in the north of the island, the defence ministry said. Security forces battling to dismantle the rebels' mini-state entered the town of Mankulam, located just south of the Tamil Tiger political capital of Kilinochchi, government defence spokesman Keheliya Rambukwella said. Government troops also seized Kumalamunai, a town just south of the key …
-
- 50 replies
- 8.2k views
-
-
தொடர் வான் தாக்குதல்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி சீர்குலைவு [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 02:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவில் தொடரும் வான் தாக்குதல்களால் மாணவர்களின் கல்வி சீர்குலைத்துள்ளது என்று முல்லைத்தீவு மகா வித்தியாலய முதல்வர் செ.அல்பிறட் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினரின் வான் தாக்குதலுக்கு பின்னர் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கைகளாலும் ஆழிப்பேரலையாலும் முல்லைத்தீவு மாணவர்கள் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதல்கள் மாணவர்களை பா…
-
- 0 replies
- 423 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
தாயகத்தில் சிங்களப் படையினரின் நில வல்வளைப்பு நடவடிக்கைகளால் வீடு வாசல்களை இழந்து ஆயிரக் கணக்கில் அகதிகளாயுள்ள வன்னி மக்களின் அவலம் தொடர்பான கவன ஈர்ப்புச் செயற்பாடுகளில் சுவிஸ் தமிழர் பேரவை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. படங்கள் இணைப்பு மேலதிக செய்தி உள்ளே............ http://www.tamilseythi.com/tamilar/swiss-tfs-2008-11-18.html
-
- 0 replies
- 588 views
-
-
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வரலாற்றின் சிறப்பு பக்கமாக மாவீரர்நாள் நிகழ்வுகள் அமைகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 859 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்ப்பதற்கான மாற்று வழிகள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் கலைஞரிடம் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 848 views
-
-
புளியங்குளத்தில் சிறிலங்கா படையினர் கிளைமோர் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவர் உட்பட மூவர் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2008, 11:17 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவர் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புளியங்குளத்துக்கும் சன்னாசிப்பரந்தனுக்கும் இடையில் நாளிதழ்களை கொண்டு செல்லும் வாகனம் மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 நிமிடமளவில் சிறிலங்கா படையின் ஆழ ஊடுருவும் அணி கிளைமோர் தாக்குதலை நடத்தியது. இதில் புளியங்குளம் பழையவாடியைச் சேர்ந்த மர்மேந்திரராசா (வயது 50) இவரின் மகனான …
-
- 0 replies
- 493 views
-