ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
பெற்றோரால் பராமரிக்க முடியாத 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் நிலையங்களை நிறுவி, அதனூடாக குறித்த குழந்தைகளை பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை, கொலை செய்யப்படுகின்றமை மற்றும் கைவிடப்படுகின்றமை ஆகிய சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 60 சிறுவர்கள் கைவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாக…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக் கடன்களை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியுள்ளார். தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, சியோலில் வைத்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவை (Masatsugu Asakawa) சந்தித்தபோது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை தற்போது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்கமுடியும் என்பதை அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோன்ற கோரிக்கையை உலக வங்கியும் ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/251815
-
- 1 reply
- 611 views
- 1 follower
-
-
தனியார் நிறுவனங்களால் தமது பாரம்பரிய பூர்வீக நிலங்களுக்கு ஏற்பட்ட அழிவு தொடர்பில் ஆதிவாசி சமூகத்தின் தலைவர் உருவரிகே வன்னில அத்தோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கோனபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ரம்பகன் ஓயா பிரதேசத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பாரம்பரிய தாயக நிலங்களை பயிர்ச்செய்கைக்காக துப்பரவு செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மகாவலி அதிகாரசபையின் தீர்மானத்திற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாவலி அதிகாரசபையின் தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு நீதிமன்றத்தின் தலையீட்டை ஊறுவாரிகே…
-
- 0 replies
- 472 views
- 1 follower
-
-
டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த பரிசோதனைகள் ஆகிய இரண்டிற்கும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் நடத்துநர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. விதிமுறைகளை மீறியதாகவும் குறிப்பிட்ட சோதனைகளுக்கு வர்த்தமானி விலைக்கு மேல் வசூலித்ததாக கண்டறியப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்களால் அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகேகொட, கல்கிசை, மாளிகாகந்த மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதிக கட்டணத்தை வசூலித்தவர்களுக்கு 9.4 மில்லியன்.ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதிகாரசபை அறிவித்துள்ளது. பொதுவாக பயன்பட…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கூறுவதைவிடுத்து நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம் : சுமந்திரன்! kugenMay 3, 2023 இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது குறித்து அண்மையகாலங்களில் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக்கூட்டங்களிலும் நாம் பங்கேற்றிருப்பதுடன், அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருக்கின்றோம். எனவே இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் நாம் ஒருபோதும் தூரவிலகி நிற்கவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் விடயத்தில் …
-
- 0 replies
- 539 views
-
-
வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டது! முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வடமேல் ம…
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும் , அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை. எனவே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவரை பதவி நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சு.க.வின் மே தினக் கூட்டம் திங்கட்கிழமை (01) கண்டியில் இடம்பெற்ற போது ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் , இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் சு.க. தனித்தே போட்டியிடும். அதற்குரிய பலத்துடன் கட்சியை மீளக் கட்டியெழுப்புவோம். கடந்த 2018 இல் தேசிய …
-
- 1 reply
- 218 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களையும் எதிர்க்கிறார்கள். பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை உண்டு என்பது மே தின கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத…
-
- 7 replies
- 441 views
- 1 follower
-
-
அல்லைப்பிட்டி பகுதியில் கோரவிபத்து – இரு பெண்கள் சம்பவ இடத்தில உயிரிழப்பு !! யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்களின் பின்னால் வந்த வாகனம் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. https://athavannews.com/2023/1331213
-
- 4 replies
- 551 views
-
-
வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பாலியல் தொழிலாளர்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வவுனியா, பழைய பஸ் நிலையத்தில் நடமாடும் இரு பாலியல் தொழிலாளர்கள் விடுமுறையில் செல்லும் இராணுவத்தினரை யார் அழைப்பது என தமக்குள் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாலியல் தொழிலாளி ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்களும் சமூக அமைப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத…
-
- 1 reply
- 424 views
-
-
செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர். கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். …
-
- 4 replies
- 796 views
-
-
வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத் விஷாந்தவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை திங்கட்கிழமை (01) முன்னெடுத்தனர். வவுனியா பூவரசம்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய தில்லைநாதன் சுமணன் என்பவர் வெளிநாடு அனுப்புவதாக கூறி வேலணையைச் சேர்ந்த நபர்களிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார். எனினும் நீண்ட ந…
-
- 1 reply
- 312 views
-
-
இலங்கை உட்பட இறைமையுள்ள எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர்Levan Dzhagaryan தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் தங்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் மேற்குலகில் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுகின்றோம்,அவர்களிற்கு பல பிரச்சினைகள் உள்ளன,அவ்வாறான நிலை காணப்படுகின்ற போதிலும் இலங்கை போன்ற நாடுகளிள் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் எதனை செய்யவேண்டும் எதனை செய்யக்கூடாது என உங்களிற்கு பாடம் நடத்துவதற்கு - இலங்கைக்கு எவருக்கும் உரிமை இல்லை - இது உங்களின் உள்விவகாரம் என ரஸ்ய தூதுவர் தெரி…
-
- 48 replies
- 2.7k views
-
-
ஆகஸ்ட் 2022 முதல் நைஜீரியா மற்றும் ஈக்குவடோரியல் கினியாவில் சர்ச்சைக்குரிய எண்ணெய் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த M/T Heroic Idun கப்பல் ஏப்ரல் 28 அன்று போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள நைஜீரியாவின் பெடரல் உயர்நீதிமன்றத்தால் எட்டு இலங்கையர்களை உள்ளடக்கிய மாலுமிகளுடன் விடுவிக்கப்பட்டது. நைஜீரிய அதிகாரிகளுக்கும், கப்பல் உரிமையாளரான இடன் மரிடைம் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கப்பலின் நீதிமன்ற காவலை நிறுத்துவது மற்றும் குற்றச்சாட்டுகளை கைவிடுவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பலில் எட்டு இலங்கை பணியாளர்கள் உட்பட 26 மாலுமிகள் இருந…
-
- 0 replies
- 595 views
-
-
Published By: T. SARANYA 01 MAY, 2023 | 03:49 PM (நா.தனுஜா) தேர்தல்களை உடனடியாக நடத்தாவிட்டால் இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியை ஒத்த சூழ்நிலைக்கு பாகிஸ்தான் முகங்கொடுக்குமென அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார். 'இது எச்சரிக்கை அல்ல. இது என்னுடைய மதிப்பீடாகும். வெகுவிரைவில் தேர்தல் நடாத்தப்படும் என்ற நம்பிக்கையில் கட்சிக்கூட்டங்களிலும் பேரணிகளிலும் பொதுமக்கள் அமைதியாகச் செயற்படுகின்றார்கள். இருப்பினும் வாக்களிப்பதற்கான அவர்களின் உரிமை மறுக்கப்படும் பட்சத்தில், அவர்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவார்கள். அப்போது ஏற்படக்கூடிய நெருக்கடிநிலையை யாராலும் கட்டுப்படுத்தமுடியாமல்போகும்' என்று இம்ரான்கான் தெரிவித…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை என அறிவிப்பு! இந்த வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2023/1331219
-
- 3 replies
- 686 views
-
-
கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கருகில் துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் ஆரம்பம்! கொழும்பு துறைமுகத்தின் ஆறாவது நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீதி அபிவிருத்தி தளத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துறைமுகத்துடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி தளத்திலிருந்து இரும்பு திருடச் சென்ற இருவரை விசாரனை செய்ய முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச மக்களால் அமைதியின்மையின்மை ஏற்பட்டுள்ளது. இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ப்ளூமெண்டல் பகுதியை சேர்ந்தவர்களே சம்பவத…
-
- 0 replies
- 301 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்து! பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்க தவறினால் அதற்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இயற்றப்…
-
- 0 replies
- 324 views
-
-
வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் காணி அற்ற வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கான நன்கொடைக் காணிகள் வழங்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோன்று காணி அற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் குத்தகைக்கு மற்றும் வீடுகளை கட்டுவதற்கு காணிகள் வழங்கும் செயற்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாகாணத்தில் சுமார் 4 இலட்சம் மரங்கள் ஒவ்வொன்றிற்கும் 1:5 என்ற விகிதத்தில் மரங்களை நாட்டுவதற்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற…
-
- 8 replies
- 832 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 01 MAY, 2023 | 04:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) டி. எஸ். சேனநாயக்க, ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னேற்றுவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் பிரதித் தலைவர் றுவன் விஜேவர்த்தன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்றது. இதில் நிகழ் நிலையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 03 தசாப்தங்களாக நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்த நேரத்தில் நான் ஜனாதிபதியாக பொ…
-
- 3 replies
- 604 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு உடன்பாடு: ஜனாதிபதி உரை இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொழிலாளர் தின உரையின் போது தெரிவித்தார் தனது முயற்சி அரசியலன்றி நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து மக்கள் மீதான சுமையை குறைப்பதே என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம் தனக்கு இருப்பதாகவும் அதற்காக ஒத்துழைக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கையினால் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாகவ…
-
- 2 replies
- 321 views
-
-
யாழில் மே தின ஊர்வலம் வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது. https://athavannews.com/2023/1331179
-
- 2 replies
- 640 views
-
-
01 MAY, 2023 | 09:38 AM கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட சிறுவர்கள் இதேவேளை, 2023 ஆம் ஆண்டு 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுமாக மொத்தமாக 11 சிறுவர்கள் உயிரை மாய்த்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 116 பேரும் , …
-
- 2 replies
- 621 views
- 1 follower
-
-
அரசியல் பழிவாங்கல்கள் சக்திவாய்ந்ததொரு அடக்குமுறை சூழ்நிலையாக வளர்ந்துள்ளது – சஜித் ஒரு நாடாக நாம் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், நமது நாட்டு உழைக்கும் மக்களும் உலகத் தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதோடு, பல ஆண்டு கால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இதுவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள், வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வோர் ஆண்டும் மே 1ஆம் திகதி கொண்டாடுக…
-
- 0 replies
- 132 views
-
-
நாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி! நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட…
-
- 0 replies
- 385 views
-