Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பு – ஜனாதிபதி தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள…

  2. அல்லைப்பிட்டி பகுதியில் கோரவிபத்து – இரு பெண்கள் சம்பவ இடத்தில உயிரிழப்பு !! யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்களின் பின்னால் வந்த வாகனம் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. https://athavannews.com/2023/1331213

    • 4 replies
    • 552 views
  3. எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/251604

  4. தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் – ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு ‘திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் நேற்று(30) நேரில் சென்று பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தவை வருமாறு,…

    • 7 replies
    • 797 views
  5. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு உடன்பாடு: ஜனாதிபதி உரை இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொழிலாளர் தின உரையின் போது தெரிவித்தார் தனது முயற்சி அரசியலன்றி நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து மக்கள் மீதான சுமையை குறைப்பதே என்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம் தனக்கு இருப்பதாகவும் அதற்காக ஒத்துழைக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கையினால் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாகவ…

  6. யாழில் மே தின ஊர்வலம் வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது. https://athavannews.com/2023/1331179

  7. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2023/1331192

  8. அரசியல் பழிவாங்கல்கள் சக்திவாய்ந்ததொரு அடக்குமுறை சூழ்நிலையாக வளர்ந்துள்ளது – சஜித் ஒரு நாடாக நாம் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், நமது நாட்டு உழைக்கும் மக்களும் உலகத் தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதோடு, பல ஆண்டு கால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இதுவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள், வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வோர் ஆண்டும் மே 1ஆம் திகதி கொண்டாடுக…

  9. நாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி! நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட…

  10. 01 MAY, 2023 | 09:38 AM கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட சிறுவர்கள் இதேவேளை, 2023 ஆம் ஆண்டு 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுமாக மொத்தமாக 11 சிறுவர்கள் உயிரை மாய்த்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 116 பேரும் , …

  11. சுனாமி எச்சரிக்கைக்காக கட்டப்பட்ட சுனாமி கோபுரங்களில் 40% செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. சுனாமி பற்றி எச்சரிப்பதற்காக 77 சுனாமி கோபுரங்கள் நாடு முழுவதும் அரசு பேரிடர் மேலாண்மை துறைகளால் நிறுவப்பட்டுள்ளன. இந்த சுனாமி கோபுரங்கள் தற்போது 15 வருடங்கள் பழமையானவை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். . இந்த கோபுரங்கள் பல இயங்கவில்லை என்றும், சுனாமி கோபுரங்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் அமைப்பும் செயல்படவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். வேலை செய்யாத சுனாமி கோபுரங்களை கையால் இயக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். …

  12. எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 3…

  13. ஏறக்குறைய 2,000 அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள் இந்த ஊதியமில்லாத விடுப்பை வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ அல்லது அவர்களின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 1988 ஊழியர்கள் ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை தொடர அனுமதி பெற்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  14. Published By: NANTHINI 30 APR, 2023 | 06:25 PM வவுனியாவில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை இல்லாத நிலையில், சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் காரணமாக பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் …

  15. Published By: NANTHINI 30 APR, 2023 | 03:51 PM அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை பெற்று, மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர், தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மன…

  16. Published By: NANTHINI 30 APR, 2023 | 11:24 AM இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொவி…

  17. யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கி…

  18. யாழில். விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்க முதல் நகைகள் மாயம்! யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் உமாதேவி (வயது 72) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மணி வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வெளியில் சென்று, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை உரும்பிராய் பகுதியில் அவருக்கு பின்னால் வேகமாக வந்த கப் ரக வாகனம் மோதி விபத்து…

  19. Published By: T. SARANYA 29 APR, 2023 | 09:14 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐ.நா அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் எட்வேர்ட் ரீஸ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தின் விசேட பிரதிநி…

  20. Published By: DIGITAL DESK 5 29 APR, 2023 | 09:13 PM (இராஜதுரை ஹஷான்) எமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்; மேலும் குறிப்பிட்டதாவது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் கூட்டத்தை நடத…

  21. Published By: NANTHINI 29 APR, 2023 | 12:31 PM இலங்கையில் பல குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் குடுஅஞ்சு என்பவரை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் பின்னரே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் வசித்துவந்த அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரை பிரான்சிலிருந்து இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து இலங்கை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். குடு அஞ்சு கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான தெகிவளை மவுண்டலவேனியா மாநகரசபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா படுகொலை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டுவருகின்றார். …

  22. நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, கடந்த 26 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்த…

  23. நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விற்றமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விற்றமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். சூரிய ஒளியின் மூலமே மனித உடலுக்கு அவசியமான விற்றமின் D ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூ…

  24. இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாவலி கேந்திர நிலையத்தில் 27ஆம் திகதி நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் றோயல் ஆசிய சங்கத்தின் சில வெளியீடுகளின் மூலப்பிரதிகளை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது. அங்கு மேலும் கரு…

  25. சமுர்த்தியைப் பெறும் குடும்பங்களில் சுமார் 33 வீதமான குடும்பங்கள், சமுர்த்தியின் பயனைப் பெற தகுதியற்ற குடும்பங்கள் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவில் கண்டறியப்பட்டுள்ளது. அதே அளவான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெறவேண்டியிருக்கின்ற போதும், அவற்றுக்கு சமுர்த்தி கிடைப்பதில்லை என்றும் கோபா குழுவில் புலப்பட்டுள்ளது. 2015 ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் விதத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக இது தெரியவந்திருப்பதாகவும், 4 இலட்சத்து 49 ஆயிரத்து 979 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சமுர்த்தி பயனாளிகளைத் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.