Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரவாணிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தமிழகமெங்கிலும் இருந்து 800 அரவாணிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரணநிதியாக வழங்குகிறார்கள். கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘’திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்…

  2. படையினர் இலக்கையடைய முடியாது புலிகள் போட்டுள்ள தடைகள்: - முகர்ஜியின் வருகை எதற்காக? -விதுரன்- (தினக்குரல்) [Monday, 2008-12-08 03:35:35] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜ?திபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சந்தித்தபோது ஏற் படாத யுத்த நிறுத்தம், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரtப் முகர்ஜியின் இலங்கை விஜயத்துடன் ஏற்பட்டுவிடுமா? தமிழக முதல்வர் கருtநிதியையும் தமிழகத் தலை வர்களையும் சமாளிக்கும் அதேநேரம் பிரtப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய இன்னொரு தேவையும் இந்தியாவுக்கு உண்டு. அது இலங்கைத் தமிழர் நலன் சார்ந்ததல்ல. இந்தியாவின் நலன் சார்ந்ததென்பதால் இலங்கைப் பிரச் சினையை பயன்படுத்தி இந்தியா தனது நலன்சார் விடயம் குறித்து கவனம் செலுத்தவுள்ளது. இலங்கையில்…

    • 1 reply
    • 3.2k views
  3. மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர சுட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த மூத்த அமைச்சர் கரு ஜெயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 759 views
  4. இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஆங்கில நாளேட்டிற்கு கொடுத்த பேட்டியில் இந்திய அரசு இலங்கையில் போரை நிறுத்த சொல்ல கூடாது, இலங்கைக்கு உதவ வேண்டுமென்று கூறியதை கண்டித்தும் கொளத்தூர் விடுதலை சிறுத்தைகள் சார்பாக பேருந்து நிலையத்தில்...இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கொடும்பாவி எரிப்பு போராட்டம்....... படங்கள் இணைப்பு.......... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

    • 24 replies
    • 5.3k views
  5. அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவா் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  6. தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என ‘நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு’என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்பில் ‘இறுதி எச்சரிக்கை’என்ற தலைப்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழகம் என்பது வெறும் கல்வி கற்கும் இடமல்ல. அது யாழ் சமூகம். அதில் உள்ள சிலர் அழிவடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாத நாசகார புலிகள் அமைப்பை பாதுகாத்து நாட்டையும் தமிழ் மக்களையும் அழிவடைய செய்து வருகின்றார்கள். இது தொடர்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் விபரம்…

  7. 2009ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று அரசாங்கத்தில் இணைந்துகொண்ட மாற்றுக் குழுவினர், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வது பற்றி ஆராய்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியைக் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற கரு ஜெயசூரியாவுக்கு வழங்கப்பட்டால் அதற்குத் தான் ஆதரவு வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறியிருந்தார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணை…

  8. வடக்கில் முன்னெடுக்கப்படும் போர் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி இப்போது தலை தூக்கியிருக்கிறது. ஒரு புறத்தில் இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று கூறிக்கொண்டே, மறுபுறத்தில் போரை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஐ.தே.க. இறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசாங்கத் தரப்பில் இருந்து "போர் தொடர்பான உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிப்பீர்களா?' என்று சவால் விடப்பட்டது. ஆனால் அதற்கு ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமான பதில் எதையும் கொடுக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, தமது கட்சி போர…

  9. தமிழர் போராட்டத்தை அடக்க கச்சை கட்டி நிற்கும் சிங்களம் [08 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:25 மு.ப இலங்கை பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படமாட்டோம் என நாடாளுமன்றத்தில் செய்துகொண்ட தமது சத்தியப்பிரமாணத்துக்கும், அரசமைப்புக்கும் எதிராகச் செயற்பட்டார்கள் என்று தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத்துறையினர் தாக்கல் செய்த முதனிலை அறிக்கையை (b report) ஒட்டித் தாம் கடந்த வெள்ளியன்று காலை விடுத்த உத்தரவை அன்று மாலையே வாபஸ் பெற்றுக்கொண்டு விட்டார் கொழும்பு பிரதம நீதிவான். மட்டக்களப்பு எம்.பிக்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், யாழ். மாவட்ட எம்.பிக்களான செல்வராஜா கஜேந்திரன…

    • 1 reply
    • 1.1k views
  10. கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்! [தமிழ் இளையோர் அமைப்பு - கனடா] www.pathivu.com இலங்கை அரசாங்கம் கொத்தணிக் குண்டுகள் பாவிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நேரத்தில் அனைத்துலக சமூகத்திடம் இந்த கொடூர குண்டுகளை தடை செய்யுமாறும், கனடா அரசாங்கத்தை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து, இலங்கைக்கும் அதற்கு இக்குண்டுகளை வழங்கும் நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து இக்குண்டுத் தயாரிப்பை முடிவுக்கு கொண்டுவருமாறும் கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர். இதுகுறித்து அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:- கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்! டிசம்பர் 03, 2008 மனித உரிமைகள் நெரு…

  11. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானம்? www.globaltamilnews.com முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 'வோர்ட்டர்ஸ் ஏஜ்' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய 30 இலட்சம் ரூபாய் நட்ட ஈட்டைச் செலுத்தி விட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருக்கிறார். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய அவர் ஊழல் மற்றும் லஞ்ச விசாரணைக்குழுவின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளார். திருமதி குமாரணதுங்க கொழும்பு றொஸ்மிட் பிளேஸிலுள்ள தனது காணியையும் வீட்டையும் விற்பதற்காக பிரபல காணி விற்பனை தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இத்தகைய …

    • 12 replies
    • 1.9k views
  12. தன்மானமும் இனப்பற்றும் கொண்டவர்கள் இன்றைய இறுதி வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது – மனோ: www.globaltamilnews.com உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் தோட்டத் தொழிலாளர்களை பட்டினி போட்டு அழிக்கும் இந்த அரசாங்கம் பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து வடகிழக்கிலே தமிழர்களை அழிக்கின்றது. எனவே, தன்மானமும் இனப்பற்றும் கொண்ட எந்தவொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியும் இன்றைய இறுதி வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இன்றைய இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மனோ தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இன்று …

  13. அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது – ஐ.தே.க: www.globaltamilnews.com ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், யுத்தத்தை முன்னிலைப்படுத்தி பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டி சபையில் பிரேரணை ஒன்றினைக் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று திங்கட்கிழமை நம்பிக்கையில்லாப், பிரேரணையையும் சமர்ப்பிக்கவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடனேயே அரசாங்கத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது …

  14. இந்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளின் கோரிக்கைகளை கேட்கமாட்டாது என்றும் விடுதலைப் புலிகளுடன் கொழும்பு போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 432 views
  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தாயும் அவரது ஒன்பது வயதான மகனும் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  16. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே பெற்றோலியம் மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சுப் பதவியில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதமாகவும் அந்த அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷவிற்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அமைச்சர் பெளசி பாராளுமன்றத்தில் அண்மையி…

  17. கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் நவம்பர் மாதத்தில் மட்டும் 60 பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் ஜனநாயகத்தை நிறுவினால் திடீர் திடீரென சுற்றிவளைப்புகளை மேற்கொள்வது ஏன்? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான தங்கேஸ்வரி கேள்வி எழுப்பினார். கிழக்கில் படுகொலை, கடத்தல்கள், கைதுகள் அதிகரித்துள்ளன. வன்னியில் கொத்தணி குண்டுகள் வீசப்படுவதுடன் அதற்கு எதிரான ஒப்பந்தமொன்றும் சர்வதேச ரீதியில் கைச்சாத்திடப்படுவதாக அறிகின்றேன் எனவும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 21 அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்…

  18. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரின் தரைப்படைத் தளபதியுமான சரத் பொன்சேகாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இந்தியாவிலிருந்து சிறிலங்கா தூதுவரை வெளியேற்ற வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியினால் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views
  20. தமிழக தலைவர்களை சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விமர்சித்திருப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 449 views
  21. தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 13 replies
    • 2.2k views
  22. குமுதம் ரிப்போட்டர் 11.12.2008ல் திரு.சோலை 'பயங்கரவாத கோரமுகம்' என்ற தலைப்பில் மும்பாயில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய கருத்துக்களை எழுதும் போது இவ்வாறு கேட்டிருக்கிறார். விடுதலைப்புலி களுக்கு வெங்காயம் போகிறதா வெடிகுண்டு போகிறதா என்பதனை இராமேஸ்வரம் கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணித்து வருகிறது. அதேபோல கராச்சியிலிருந்து மும்பை வரையுள்ள கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணிக்கவில்லையா? விடுதலைப்புலிகளின் மையங்களை இந்திய செயற்கைக்கோள் துல்லியமாகப் படம்பிடித்துத் தருகிறது. அந்தப் படங்கள் சிங்கள ராணுவத்திற்குச் சென்று சேருகின்றன. அதே போல் அரபிக் கடல் அலை அடிக்கும் நமது கடற்கரையை செயற்கைக் கோள்கள் படம் பிடிப்பது இல்லையா? இதே குமுதம் ரிப்போட்டரில் வந்த வம்பான…

  23. இலங்கையின் இராஜதந்திரத்தினுள் அடங்கிப் போன இந்தியா சத்திரியன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரப்போகிறார். போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவே அவர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்துக்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அப்படி அவர் வந்தாலும் போர் நிலையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுமா என்ற கேள்வி பலரிடமும் காணப்படுகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தங…

    • 0 replies
    • 1k views
  24. அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அம்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கும். அதுவே அவற்றின் சிறப்பு. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்லும்; பிரமிக்கவைக்கும். அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் செல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்கும். அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.