ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
இந்தியாவின் அழுத்தத்தை சிங்கள மக்கள் விரும்பவில்லை - சிங்கள பத்திரிகைகள் ஞாயிறு, 07 டிசம்பர் 2008, 13:59 மணி தமிழீழம் [தாயகன்] போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தால், அதனை சிங்கள மக்கள் விரும்ப மாட்டார்கள் என, தென்னிலங்கை சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டு கட்சிகளின் அழுத்தம் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறீலங்காவிற்கு அனுப்ப இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணக்கம் தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் இந்தியாவின் அழுத்தத்திற்கு எதிராகசிங்கள இனவாதக் கட்சிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன், சிங்களப் பத்திரிகைகளும் எதிராக எழுதி வருகின்றன.
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது - இராணுவ தளபதி தமிழ்நாட்டு “அரசியல் ஜோக்கர்கள்” இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை காங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் அரச செய்திதாளான சண்டே ஒப்சேவருக்கு செவ்வியளித்துள்ள அவர், இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான அக்கறையை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்தில் நெடுமாறன் மற்றும் வை கோ போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கிடைக்கும் வருமானங்கள் குறைந்து விடும் என்றும் …
-
- 22 replies
- 3.5k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்களின் கவிதைப் பேராட்டம்--புகைப்படம் இணைப்பு http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 2 replies
- 1.5k views
-
-
வன்னிப் படை நடவடிக்கை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த வேளை கடந்த வாரம் வடபகுதி முழுவதும் பருவமழை என்றும் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்து மிகப்பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை மேலும் இடம்பெயரச் செய்து அல்லல்பட வைத்துவிட்டது. வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற கடும் மழைக்கு மத்தியிலும் படைநடவடிக்கையானது ஓய்ந்துவிடவில்லை என்பதற்கு வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமானத் தாக்குதல்களும், வன்னியின் மூன்று புறமும் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுத் தாக்குதல்களும் சான்றாகின்றன. இவ்வாறு இடைவிடாத மழையும், படைநடவடிக்கையும் வன்னி மக்களை என்றும் இல்லாத அளவிற்கு மிக மோசமாக பாதித்திருக்கின்றது. பருவ காலத்திற்கேற்ற பயிர்ச…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விமான நிலைய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் - இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் GTNக்கு வழங்கிய விசேட செவ்வி: http://www.globaltamilnews.net/tamil_news....=3060&cat=1 கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியல்வு அதிகாரிகள் தன்னை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று காலை இந்தியா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்றதாகவும் இதன் போது, குடிவரவு குடியகல்வு அதிகரிகள் தன்னை நாட்டில் இருந்து செல்ல அனுமதிக்க முடியாது என கூறியதாகவும் …
-
- 0 replies
- 1.7k views
-
-
புலிகளின் கடற்பாதைகள் இப்போது தம்வசம் என்கிறார் கடற்படைத் தளபதி [07 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:25 மு.ப இலங்கை] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தப்பிச் செல்லமுடியாத வாறு கடற்பாதைகளைக் கடற்படை யினர் பலப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வஸந்த கரனகொட. கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட் டியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளமை வரு மாறு:- விடுலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தப்பிச் செல்வதற்கு எந்த இடமும் வசதியாக இல்லை. விடுதலைப் புலிகளின் கடற்பகுதியின் கட்டுப்பாட்டை இப்போது கடற்படையி னர் தம்வசமாக்கியுள்ளதே இதற்குக் கார ணம் - என்றார் அவர்.
-
- 12 replies
- 3.5k views
- 1 follower
-
-
தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் 'சியால்த்' உணர்ந்து சொன்னது போல, "இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" அது போல "இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள், பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணி…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையின் இனக்குழுமச் சதுரங்கம் அடுத்த காய் நகர்த்தல்கள் யாவை? [07 - December - 2008] பீஷ்மர் * கருணாநிதி-மன்மோகன் சிங்-ராஜபக்ஷ கிளிநொச்சியை நோக்கிய அரசுப் படை நடத்துகையின் வெற்றி விபரங்கள் பற்றி தென் இலங்கைக்குச் சொல்லப்பட்டவை இந்தியாவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி அத?ல் பிரtப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்ற மன்மோகன் சிங் கூற்று இந்தப் பிரச்சினையில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய முன்னணி என்ற ஜே.வி.பி, ஹெல உறுமய கூட்டு சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கை எதிர்பார்த்தபடி இந்தியாவைத் தாக்குகின்றது. இலங்கைஇந்திய சதுரங்கத்தில் காய்நகர்த்தல்கள் ஒரு மிகவும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு அல்லது அரசாங்க நிலைப் …
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை பாராளுமன்றம் நாளை மறுதினம் கலைக்கப்படும்? இலங்கைப் பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று கலைக்கப்படும் என்ற ஊகங்கள் நேற்று அரசியல் தரப்புகளில் பேசப்பட்டன. ஆயினும் இந்த ஊகத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ எவரும் முன்வரவில்லை. எனவே ஜனாதிபதி தமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நல்ல நாளாக சோதிடர்களால் கூறப்பட்டுள்ள எதிர்வரும் செவ்வாய்க்கிழமையை கருத்திற்கொண்டே இந்த ஊகம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊகங்களின் அடிப்படையில் நாளை மறுநாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை நடைபெறவுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் வ…
-
- 12 replies
- 2.6k views
-
-
இரண்டு மாதங்களில் இரு தடவைகள் கொக்காவில்லை இராணுவம் கைப்பற்றியுள்ளது கடந்த இரண்டு மாதங்களில் இரு தடவைகள் கொக்காவில் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி கொக்காவில் பகுதி கைப்பற்றப்பட்டதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாகவும், அதே இடம் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ம் திகதி கைப்பற்றப்பட்டுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அநேக சந்தர்ப்பங்களில் யுத்தம் தொடர்பான உண்மையான தகவல்களை அரசாங்கம் வெளியிடுவதில்லை எனவும், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான சம…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை கடுமையான சோதனை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினமும் இலங்கையின் இன்றைய நிலையும் வீரகேசரி வாரவெளியீடு 12/7/2008 10:09:36 AM - உலகில் மனித உரிமை பிரகடனத்தின் சரித்திரங்களை ஆராயுமிடத்து தற்போதைய உலகில்உள்ள பலர் நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத பல உண்மைகள் புலனாகின்றன. மிக அண்மைக்காலமாக பெரும் சர்ச்சைக்குரிய நாடுகளான ஈரான், ஈராக் ஆகிய இரு நாடுகளும் அதாவது முந்தைய பாரசீகம், மெசபத்தேமியா என அழைக்கப்பட்ட நாடுகள் கிறிஸ்துவுக்கு முன் 539 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனித உரிமை பிரகடனத்தின் பதிவில் உள்ளன. சுருக்கமாக கூறுவதானால் பாரசீக போர் வீரர்கள், மெசப்பத்தேமியாவின் பாபிலோன் என்ற நகருக்குள் கி.மு. 539 இல் சென்று அங்கு தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தபொழுது அ…
-
- 0 replies
- 673 views
-
-
தமிழீழத்தில் (வன்னியில்) இடம் பெயர்ந்த மக்கள் படும் அவலனிலை தொடர்பான ஒரு துளி காட்சிகள் இதில் உள்ளது.. அனைவரும் பார்ப்பதுடன் தங்களின் அனைத்துத் தொடர்புகளிற்கும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
-
- 0 replies
- 734 views
-
-
கொழும்பு துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தல் வீரகேசரி வாரவெளியீடு 12/7/2008 10:35:26 AM - கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தை தாக்குவதற்காக புலிகளின் பதினைந்து பேரைக் கொண்ட அணி ஒன்று கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்புப் பொறுப்பு கடற்படையினரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினருக்கு மேலதிகமாக வெள்ளிக்கிழமையில் இருந்து விசேட அதிரடிப்படையினரும் இராணுவ கமாண்டோ அணியினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர பத்து மோட்டார் சைக்கிள் …
-
- 1 reply
- 844 views
-
-
அரசின் நெருக்குவாரங்களால் வன்னி மக்கள் பேரவல நிலையில்! [07 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:10 மு.ப இலங்கை] வன்னிப் பெருநிலப்பரப்புமீது இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தம் காரணமாக அப்பகுதித் தமிழ் மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்ப துயரங்கள் சொல்லில் வடிக்க முடியாதவை. தமிழர் தாயகம் தனது இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் என்று உரிமை கோரிக் கொண்டே அதன்மீது கொடூர யுத்தத்தைத் தொடுத்திருக்கின்றது இலங்கை அரசு. ஒருபுறம் குரூர யுத்தத்தின் பேரழிவுகள். மறுபுறம் அத்தியாவசியப் பொருள்களைக்கூட அங்கு எடுத்துச் செல்லவிடாமல் போடப்பட்டிருக்கும் தடையால் எழுந்துள்ள மோசமான நெருக்கடி மருத்துவ, சுகாதாரப் பாதிப்புகள், வெள்ளப் பேரனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பேரவலம். இப…
-
- 0 replies
- 478 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/12/tamil-eelam-news.html
-
- 0 replies
- 1.1k views
-
-
மும்பையில் இடம்பெற்ற தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் கண்டிக்கவில்லை என தமிழ்நாட்டின் தமிழர் விரோத ஆங்கில ஏடான இந்து (The Hindu) நாழிதழ் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் புதிய தமிழர் கண்ணோட்டம் இதழில் பதிலிறுக்கப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர்நாள் உரையில் மும்பை தாக்குதல் கண்டிக்கப்படவில்லை எனவும், அல்லது பின்னரேனும் கண்டித்திருக்கலாம் என்றும் இந்து நாழிதழ் கடந்த முதலாம் நாள் ஆசிரியர் தலையங்கள் தீட்டி விசமப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தது. அனைத்துலக விடயங்களில் விடுதலைப் புலிகள் ஆதரவை, அல்லது கண்டனத்தை தெரிவிப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் தமிழர் கண்ணோட்டம், அவ்வாறு கண்டனம் தெரிவித்திருந்தால்கூட, இந்தியாவை ஏமாற்ற …
-
- 21 replies
- 3.6k views
-
-
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க சுழற்புயல் தமிழர் தாயகம் நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று மாலை முதல் கிழக்கில் கன மழைப்பொழிவு ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணச் செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர். அடை மழை, பலத்த காற்று, புயல் என்பன தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களை இன்று தாக்கும் என, சிறீலங்கா, இந்திய வானிலை அவதான நிலையங்கள் நேற்று அறிவித்திருந்தன. தமிழர் தாயகத்தில் கடந்த வாரம் பெய்த மழை வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்கள் மீள முன்னர், மற்றொரு இயற்கையின் சீற்றத்திற்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, புயல்காற்று அறிவிப்பு காரணமாக தமிழர் தாயகத்தின் கடற்றொழிலாளர்களின் இன்றைய தொழில் மிகுந்…
-
- 0 replies
- 667 views
-
-
இந்தியாவின் ஆளுமைக்கும் அழுத்தத்துக்கும் இலங்கை அடிபணிந்தே தீர வேண்டும். இதனை இறுதியாக இலங்கையில் நடைபெற்ற சார்க் மகாநாடு தெளிவாகக் காட்டியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சார்க் மகாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக இலங்கைக்கு வந்த போது பாதுகாப்புக்காக இலங்கைக் கடற்பரப்பில் இந்தியக் யுத்தக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை இந்தியாவின் ஆளுமைக்கு ஒரு சிறந்த உதாரணம். இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன். இந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடி பணியமாட்டாதெனவும் யுத்த நிறுத்தத்துக்கு ஒரு போதும் இடமில்லையெனவும் இலங்கைப் பிரதமர் உட்பட அரசாங்க தரப்பு அமைச்சர்கள் தெரிவிப்பது குறித்து ஷ்கை நியூஸ்…
-
- 0 replies
- 662 views
-
-
ஈராக்கில் தூதுவராலயமொன்றை அமைக்க இலங்கைத் திட்டம்: ஈராக்கில் தூதுவராலயமொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹூசெய்ன் பய்லா தெரிவித்துள்ளார். பக்தாத் நகரில் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்பு பெற்று சென்றிருப்பதாகவும், இவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2003 அமெரிக்கா ஈராக் மீது யுத்தத்தை ஆரம்பித்த காலப்பகுதியில் இலங்கை ஈராக்கிற்கான தூதரகத்தை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், ஈராக்குடனான வர்த்தக உறவுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கில் …
-
- 0 replies
- 497 views
-
-
வெளியுறவுத்துறையில் அரசியல் நியமனங்கள் - ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களின் ஆதிக்கம் - அதிகாரிகள் விசனம்: www.globaltamilnews.com இலங்கை வெளியுறச் சேவைக்கான நியமனங்களில் 60 வீதமானவை அரசியல் ரீதியான நியமனங்கள் எனவும், தகுதியானர்கள் புறந்தள்ளப்படுவதாகவும் தொழில்சார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வெளியுறவுத்துறையில் தொழில்சார் தகுதியுடைய அதிகாரிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என வெளியுறவுச் சேவை அதிகாரிகள் சங்கம், அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிடம் முறைப்பாடு செய்துள்ளது. முன்னர் 30 வீதமானவர்களே வெளியில் இருந்து வெளியுறவுச் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்வடைந்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 482 views
-
-
ஜே.வீ.பீக்குள் முரண்பாடு வலுக்கிறது – விமல் - லால்காந்த சந்திப்பு? http://www.globaltamilnews.com ஜே.வீ.பீக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர் ரகசியமாக சந்தித்துக் கலந்துரையாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்புக்கு வெளியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜே.வீ.பீக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமல் வீரவன்ஸவுடன் தேசிய சுதந்திர முன்னணியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு…
-
- 0 replies
- 504 views
-
-
போர் நிறுத்தம் வேண்டுமாயின் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் - நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – அரசாங்கம்: www.globaltamilnews.com விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாயின் அவர்கள் கட்டாயமாக ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அடுத்த வாரம் இலங்கை செல்லும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதலமைச்சரின் போர் நிறுத்தக் கோரிக்கையை அடுத்து, அது குறித்த அழுத்தங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அ…
-
- 0 replies
- 429 views
-
-
ோர்வே தொண்டர் நிறுவனத்தின் ஊழியர் கொலை - விசாரணை வேண்டும் - ஐநா மனிதாபிமான இணைப்பாளர்: www.globaltamilnews.com நோர்வே தொண்டர் நிறுவனத்தின் ஊழியர் விக்னேஸ்வரன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கைக்கான ஐ.நா. மனிதாபினமான இணைப்பாளர் நீல் புஹ்னே இலங்கை அரசை கோரியுள்ளார். நோர்வே அதிதிகள் கவுன்ஸிலின் ஊழியரான விக்னேஸ்வரன் கடந்த வாரம் மட்டக்களப்பில் வைத்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்கொலையைக் கண்டித்துள்ள நீல் புஹ்னே மனிதாபிமானப் பணியாளர்கள் தமது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அவர்கள் அச்சமின்றி செயற்படக்கூடிய நிலை இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு கொலையாளி சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவது விக்ன…
-
- 0 replies
- 548 views
-
-
ஒலி மூலம் இணைப்பு இலங்கை அரசால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் ரஷ்ய தயாரிப்பு OFAB - 500 (Cluster) கிளஸ்டர் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கொத்துக் தொத்தாக மக்களைக் கொல்லும் இப் பேரழிவு ஆயுதம், காலங் கடந்தும் தனது திறமையைக் காட்டும் வல்லமை கொண்டது. அடைமழையால் குளங்கள் உடைப்பெடுக்கின்றன. இராணுவ எறிகணை வீச்சுகளால் உள்ளக இடப்பெயர்விற்குள்ளான வன்னி மக்கள், பேரவலத்தை எதிர்கொள்ளும் போது உலகளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசுகிறது இலங்கை அரசாங்கம் இதைத் தட்டிக் கேட்பதற்கு எவருமில்லை. கடந்த புதன்கிழமை, ஒஸ்லோவில் கூடிய 107 நாடுகள், இக் குண்டுகளைத் தயாரிப்பது களஞ்சியப்படுத்துவது, பாவிப்பது என்பவற்றிற்கெதிரான ஒப்பந…
-
- 1 reply
- 712 views
-