Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை : எம்.பி களின் வரப்பிரசாதங்கள் இரத்து ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 09 Feb, 2026 | 12:28 AM (செ.சுபதர்ஷனி) நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்ய ஏற்கனவே அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்த…

  2. மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே. மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மற்றும் அது தொடர்பான அமைச்சின் நிலைப்பாட்டை கடற்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார். மீன்பிடி பெருவலை என்பது இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் நீண்டகாலமாகப் பிணைந்துள்ள ஒரு தொழில் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் கடல் வளங்களைப் பாதுகாப்பது அரசாங்க…

  3. யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது 09 Feb, 2026 | 10:10 AM யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் ,பொலிஸாரினால் கைத…

  4. நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு Published By: Digital Desk 1 08 Feb, 2026 | 09:20 AM தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238117

  5. உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது ; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம் 08 Feb, 2026 | 11:58 AM இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை என்பதற்கு மணலாறு (வெலிஓயா) ஒரு உதாரணமாகும். அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது. மொழி உரிமை மிகமுக்கியம் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் அவ்வுரிமை மறுக்கப்படுகின்றது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி ந…

  6. பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை 08 Feb, 2026 | 01:08 PM (நமது நிருபர்) பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் முறையற்ற பண வசூலிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமெனஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிடுகையில், பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய பாடச…

  7. கிழக்கின் முக்கிய சுற்றுலாத்தலத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கடும் அவதி 08 Feb, 2026 | 03:41 PM கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரையில், நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்களின் தொல்லையினால் அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்காக வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சுற்றுலா வரும் அதிகளவிலான உள்நாட்டுப் பயணிகள் காத்தான்குடி கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இங்கு அவர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட வரவேற்பு மண்டபங்களும், தங்குமிட விடுதிகளும் நிர்மாணிக்கப்பட்டு…

  8. ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது 08 February 2026 ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்…

  9. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு கோரியும் யாழ்ப்பாண நகரில் இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. அத்துடன் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறுவதற்குப் போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். யாழ் மத்திய பேருந்து நிலையத்திற…

  10. டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து …

  11. தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது. நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக்…

  12. நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர் Feb 6, 2026 - 04:10 PM நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை மாணவி நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று (06) மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் மற்றும் உடல் வலி அதிகரித்துள்ள நிலையி…

  13. சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு 08 Feb, 2026 | 11:02 AM (இராஜதுரை ஹஷான்) லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்பியதை போன்று தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் விலைகளை அதிகரித்துக் கொள்கிறது. நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேள்வியெழுப்பிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கேள்வியெழுப்பி, சமையல் எரிவாயு சிலிண்டருக…

  14. ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு Feb 8, 2026 - 12:27 PM ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. இதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பதாரர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான…

  15. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷர்கள் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு 08 Feb, 2026 | 12:36 PM (எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது. வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நீதிமன்றமாக மாற்றியமைத்து, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா? வழக்கு விசாரணையை நாளாந்தம் முன்னெடுக்காமல் புதுக்கடை நீதிமன்றத்தில் மூன்று மாதத்தக்கு ஒருமுறையா விசாரிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை செய்தது யார், அரசியல் பி…

  16. யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு! 08 Feb, 2026 | 10:05 AM யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (06) வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து …

  17. இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'! Published By: Digital Desk 1 07 Feb, 2026 | 01:45 PM நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 06ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது. 'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தல…

  18. தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம் சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில் தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது. அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்…

      • Thanks
      • Haha
      • Like
    • 9 replies
    • 612 views
  19. தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்! ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், 2028 ஆம் ஆண்டில்…

  20. எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டமூலத்துக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் படி, இந்தத் உயர் தீர்ப்பு சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது. இன்று (6) நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை எ…

  21. அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: Vishnu 07 Feb, 2026 | 05:53 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே. இது பார்க்கப்படுகிறது. நாங்கள் இதற்கு எதிராகவே வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற…

  22. கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம் Published By: Vishnu 28 Jan, 2026 | 11:07 PM கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது புதன்கிழமை (28) இடம்பெற்றது. குறித்த விஜயத்தில் நெடுந்தீவில் பிரதேசசெயலர் என். பிரபாகரன், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி P.பத்திநாதன் அடிகளார், பிரதேசசபை தவிசாளர் ச.சத்தியவரதன் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் இணைந்துகொண்டனர். பக்தர்களின் உயரிய நலன்கருதி இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிட்டார். https://www.virakes…

  23. கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள…

  24. புத்தளம்-மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன் 05 Feb, 2026 | 05:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புத்தளம் -மன்னார் வீதியில் பாரிய அணை ஒன்றை கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் அந்த பாதை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த தவறான தீர்மானத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திவிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.