ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
வீரகேசரி நாளேடு - தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை இந்திய கூட்டறிக்கை தெளிவற்றதாக இருக்கின்றது. இராணுவத் தீர்வா அல்லது சமாதானப் பேச்சுவார்த்தையூடான அரசியல் தீர்வா? என்பதனை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அதில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்தும் விளக்க வேண்டும் என்றும் ஐ.தே.க. சுட்டிக் காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் கூறுகையில், தேசிய இன…
-
- 0 replies
- 649 views
-
-
'ராஜீவ் காந்தியின் கொலை என்பது விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்குhப் பரிகாரமாக 35 இலட்சம் இலங்கைத் தமிழர்களைப் பலிகொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்பதை காங்கிரஸ் கட்சி மீள் பரிசீலிக்க வேண்டும். அத்துடன் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் இருவரையும் அரசு விடுவிக்க வேண்டு என்றும் வலியுறுத்தியுள்ளார் நடிகர் சரத்குமார். மேலும் : கருணாநிதி - பிரணாய் முகர்ஜீ சந்திப்பின் போது தெரிவிக்கபட்ட கருத்தின்படி, நோர்வேத் தூதுக் குழு மீண்டும் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு இலங்கை அரசு உடனடியாக இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். நோர்வேத் தூதுக் குழுவில் தமிழகத் தலைவர்களும் இடம் பெற வேண்டும் என்றார் சரத்குமார். …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்." "இந்தி"ய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் "இந்தி"ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்த…
-
- 1 reply
- 1.4k views
-
-
குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள் இனவெறி அரசு நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டம் "இலங்கை தமிழ் தியாகிகள் அரங்கில்" நடந்தது. இக்கூட்டத்திற்கு குவைத் இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் அமைப்பாளர் மருத்துவர் அன்வர் பாட்சா அவர்கள் தலைமையேற்க தமிழர் சமூகநீதி பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன் விடுதலைச் சிறுத்தைகளின் இணைச் செயலாளர் அழ.பாண்டிச்செல்வன் தமிழோசை கவிஞர் மன்றத்தின் செயலாளர் இராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலங்கைப் போரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கும் தமிழ் தியாகிகளுக்கும் அஞ்சலி தெரிவித்து ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமி…
-
- 1 reply
- 957 views
-
-
இலங்கைப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையைத் தொடங்கியிருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவிவருவதால், பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திரமாகவே வானொலி சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. 1925-ல் "கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்நிலையம் 1972-ம் ஆண்டிலிருந்து "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில் ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டு வந்தது. இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலையில் ஒலிப்பரப்பாகிவந்த "கொழும்பு சர்வதேச நிலைய அலைவரிசை' கடந்த மே 31-ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்...... என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும். அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்…
-
- 15 replies
- 2.3k views
-
-
வணக்கம், கனடா நசனல் போஸ்ட் பத்திரிகை ஒருபக்கச்சார்பாக சிறீ லங்கா இனவாதத்துக்கு தூபம் போட்டுவருகின்றது. ஆனாலும், இன்று திருவாளர்.மணி அவர்களினால் ஓரளவு நடுவுநிலமையுடன் சிறீ லங்காவில காணாமல் போகும் மக்கள் என்று தலைப்பில ஒரு கட்டுரை வெளிவியிடப்பட்டு உள்ளது. இதில கொழும்பு வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது எண்டுறதுக்கு ஒரு உதாரணம் காட்டப்பட்டு இருக்கிது. வெளிநாடு வருவதற்காக கொழும்பில் இருக்கிற கனடா தூதுவரகத்துக்கு சென்ற ஒரு தமிழ் குடும்பத்தலைவன் காணாமல் போயுள்ள சம்பவம் விபரிக்கப்பட்டு இருக்கிது. விடுதலைப்புலி ஆதரவாளரோ அல்லது குடும்பமோ எண்டுறது அல்ல... யாராக இருந்தாலும் இப்படி முறையற்ற முறையில கடத்தப்படுவது சட்டவிரோதமானது எண்டு திருவாளர்.மணி அவர்களின் கட்டுரையில சுட்டிக்காட்ட…
-
- 0 replies
- 2.3k views
-
-
அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 916 views
-
-
கொழும்பு வெள்ளவத்தை காவல்நிலைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறீலங்காவின் பயங்காரவாத தடுப்புப் பிரிவினரால் திருகோணமலையில் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட இளைஞன் வெள்ளவத்தை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். குறிப்பிட்ட இளைஞன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், கொழும்பில் கைது செய்யப்பட்டதாக மற்றொரு தகவல் கூறுகின்றது. இவர் சயனைட் அருந்தியே உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், வதைகளின்போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்வதற்கு சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர…
-
- 0 replies
- 1.5k views
-
-
தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும்: சோலை [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 09:48 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை என்று அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை தெரிவித்துள்ளார். குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை: டெல்லியில் சிறிலங்கா தூதுவரை நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் அழைத்தார். பேச்சுவார்த்தையின் மூலம் ஈழப் பிரச்சினைக்கு சுமூகத் தீ…
-
- 3 replies
- 904 views
-
-
இந்தியாவின் மூத்த அமைச்சரும் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்னும் சில நாட்களில் கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளதன் நோக்கம் என்ன என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
எழுச்சி கொள்ளும் தமிழகமும் இந்திய மத்திய அரசும் - தாரகா - சமீப நாட்களாக தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கான ஆதரவுச் செயற்பாடுகள் முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மற்றும் அதற்கான அமைப்புக்கள் சார்ந்த வட்டத்திற்குள் மட்டுமே அதிகம் வெளிப்பட்ட ஈழ ஆதரவு நிலைப்பாடானது, தற்போது கம்யூனிஸ்ட் கட்சியே, ஈழத் தமிழ் மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும் அளவிற்கு நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியம், திராவிட அரசியல் குறித்து விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது அனைவரும் ஈழத் தமிழ் மக்களுக்காக ஓரணியில் திரள வேண்டிய அவசியப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. கட்சி ரீதியாக கம்யூனிஸ்ட்…
-
- 0 replies
- 940 views
-
-
இலகுரக இராணுவ தளபாடங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது - இராணுவ பயிற்சி எதனையும் வழங்கவில்லை என்கிறார் பிரணாப் முகர்ஜி வீரகேசரி நாளேடு 10/27/2008 8:10:09 PM - ராடர் கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவி…
-
- 0 replies
- 802 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய பின்னர் கூறிய கருத்துக்கள் தமிழர்களுக்கு திருப்தியளிக்கவில்லை எனவும், இது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் எனவும், பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : சிறீலங்கா அரசுத் தலைவர் இராசபக்சேயின் ஆலோசகரும் சகோதரருமான பசில் இராசபக்சே தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசியப் பிறகு அதன் தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் …
-
- 0 replies
- 862 views
-
-
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை வழிமறித்து புலிகள் தாக்குதல்: ஒருவர் பலி [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 07:38 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் …
-
- 0 replies
- 556 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒப்படைப்பு [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 07:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. வன்னியின் மேற்கு களத்தில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இந்த உடலம் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப…
-
- 0 replies
- 655 views
-
-
வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் சிறீலங்கா காவல்துறை அதிகாரி ஒருவரால் கீழ்நிலை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று ஞாயிற்றுக்கிழமை 90 நிமிடம் வரை சந்தித்து பேச்சு நடத்திவிட்டு கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருக்கிறதா? பதில்: இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களெல்லாம் முடிவடைந்தால்தான் முழு திருப்தி அடைய முடியும் என்று நம்புகிறேன். கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ம…
-
- 12 replies
- 2.1k views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசு இன்று இந்தியா சென்று வழங்கியுள்ள பொய்யான வாக்குறுதிகளை தமிழ முதல்வரும் நம்பியுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி பதவி விலகல்கள் இடபெற மாட்டாது எனவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய மத்திய அரசுக்கு விதித்துள்ள கெடு முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கடந…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' ஆரம்பித்துள்ளது. இலங்கை வானொலி நிலையத்துக்கென தனி வரலாறு உண்டு. 1925-ல் 'கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்தநிலையத்துக்கு உலகின் இரண்டாவது வானொலி நிலையம் (முதலாவது - 'பிபிசி' - 1922) என்ற பெருமையும் ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. காலப்போக்கில் எத்தனையோ மாற்றங்களைக் கண்ட இந்நிலையம், 1972-ம் ஆண்டிலிருந்து 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில் ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டுவருகிறது. இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலைவரிசையில் ஒலிப்பரப்பாகிவந்த 'கொழு…
-
- 0 replies
- 1.7k views
-
-
வன்னியில் இராணுவ நடவடிக்கைகளில் சிக்கிக் காயமடைந்துள்ள, நோய்வாய்ப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர்களுக்கு அங்கு செல்ல அனுமதி அளிப்பதற்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதி பஸில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகாரச் செயலர் ஆகியோருடனான சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். "இந்திய மருத்துவ உதவி குறித்து ஆராயப்பட்டதா" என செய்தியாளர்கள் கேட்டமைக்கு, "ஆம் இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது. நாங்கள் இது குறித்து சாதகமாக ஆராய்வோம். வன்னி சென்று பணியாற்ற இந்திய மருத்துவர்களை அனுமதிப்போம்" என்று தெரிவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
அயித்து படம் ஓடுறதா? விடுறதா? தீபாவளி கொண்டாடுறது சரியா? தவறா? இவை போன்றவற்றை கொஞ்ச நேரத்திற்கு தள்ளி வைத்து விட்டு இதை ஒரு முறை பார்க்கலாமே என்பது என் தாழ்மையான எதிர்பார்ப்பு. தவறெனில் மன்னிக்கவும். (ஏனெனில் இங்கு நடக்கும் எழுத்து யுத்தத்தை பார்க்க சிலவேளைகளில் பயமாக இருக்கிறது)
-
- 4 replies
- 2.3k views
-
-
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் எந்த ஒரு நாட்டின் மத்தியஸ்தத்துடனும் புலிகள் பேசத் தயாராகவேயுள்ளனர்; அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்; த.தே.கூ. வீரகேசரி நாளேடு 10/27/2008 10:45:41 AM - தமிழர் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். முப்பது வருடங்களாக போரை முன்னெடுத்துவருகின்ற பேரினவாதத்தின் இழுத்தடிப்புக்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கப் போவதில்லை. இது ஒரு கேலிக் கூத்து என்பதை அமெரிக்கா நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். …
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: இந்திய மத்திய அரசு உத்தரவாதம் நீண்டகாலமாக இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியிடம் உத்தரவாதம் அளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு சென்று முதலமைச்சர் மு. கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைக…
-
- 16 replies
- 1.8k views
-