Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழினத்தின் அவலமும் தாய்த்தமிழக எழுச்சியும்!!! குமுதம் இணையதள காணொளி http://www.kumudam.com/webtv_streaming.php...20&leftid=2 தமிழர்கள் அனைவரும் காண வேண்டிய காணொளி. நன்றாக தொகுத்து அமைத்திருக்கிறார்கள். குமுதம் இணையதளத்திற்கு நன்றி.

  2. மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள மீனகம் அலுவலகம். இங்கேயே ரி.எம்.வி.பியினரின் தமிழ் அலை எனப்படும் மாதாந்த பத்திரிகை கடந்த இரண்டு வருடங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. முன்னர் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பத்திரிகை கருணா லண்டன் சென்றபின்னர் பிள்ளையானின் கைகளுக்கு மாறியது. அன்றிலிருந்து பிள்ளையானின் பிரச்சார ஊதுகுழலாகவும் பிள்ளையானின் புகழ்பாடியும் இப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. கருணா தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்ட கருணாகுழு உறுப்பினர்கள் கருணாவின் தளபதி இனியபாரதியின் ஆலோசனையின்படி கருணாகுழு சிரேஸ்ட உறுப்பினராகிய ரஞ்சனின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் மேற்படி மீனகம் அலுவலகத்துக்குள் அத்துமீறி உட்ப…

  3. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்துத் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பா.ம.க., சி.பி.ஜ., சி.பி.எம்.உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க போவதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு…

  4. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் அவசியம் [21 ஒக்டோபர் 2008, செவ்வாய்க்கிழமை 9:55 மு.ப இலங்கை]/td> இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டித் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்வெழுச்சி, அதையொட்டித் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலம் காத்திரமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடு போன்றவை எல்லாம் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் திருப்பு முனையையும், புதிய பரிமாணத்தையும் தந்து நிற்கின்றன. இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை இருபது வீதத்துக்கும் குறைவாக இருக்கலாம். இந்த சிறிய இலங்கைத் தீவில் பெரும்பான்மை இனமாக சிங்கள இனம் இருக்கலாம். அதற்காகப் பேரினவாதத் திமிரோடும் மேலாண்மைச் சிந்தனையோடும் சிறுபான்ம…

  5. சென்னையில் தொடர்;ச்சியான கன மழை காரணமாக தமிழக அரசினால் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  6. சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதில் இரண்டு விடயங்கள் தற்போது கவனத்தைக் கவர்ந்தவையாக உள்ளன. ஒன்று யுத்தத்திற்கான நிதி ஒதுக்கீடு, இது 17 ஆயிரம் கோடி ரூபாவைத் (17,000 கோடி) தாண்டி விட்டது. அத்துடன் இவ்வாறான பெருந்தொகை நிதி பாதுகாப்புக்கு ஒதுக்காவிட்டால் கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதியைப்போல் நான்கு மடங்கு நிதியை ஒதுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. அடுத்தது தேர்தல் திணைக்களத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதி. இது 109.8 கோடி ரூபா எனத் தெரியவருகிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைப் போல் சுமார் நான்கு மடங்காகும். சிறிலங்காவின் ஐந்து மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகின்றது. அவற…

  7. 95 வீதமான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை என அமெரிக்கா மற்றும் கனடாவிற்கான சங்கசபைத் தலைவர் வல்பொல பியனந்த தேரர் இந்திய பிரதமருக்கு கடித மூலம் அறிவித்துள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நியாயமான முறையில் செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் உலக அரங்கில் தமிழர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள், வடக்கு பகுதி இளைஞர் யுவதிகளுக்கு ஆயுதப் பயற்சிகளை வழங்கி அவர்களது எதிர்காலத்தை வீணடித்துள்ளதாக அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடை…

  8. பிரித்தானியாவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பிரிட்டிஷ் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் நடைபெற்ற இலங்கை குறித்த விவாதம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். உண்மையான நிலைமைகளை புரிந்து கொள்ளாது மேற்கொள்ளப்படும் விவாதங்கள் இலங்கைக்கு எந்த வகையிலும் உதவியாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்கள் இந்த விவாதத்தின் போது முன்வைக்கப்பட்டுள்ளது. படையினர் சட்டவிரோதமான முறையில் தாக்குதல்களை மேற்கொள்வதாக வெளியிடப்பட்ட கருத்து அடிப்படையற்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். …

  9. மட்டக்களப்பில் ஹர்த்தால் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக அப்பிரதேசங்களின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மட்டக்களப்பு நகரில் பொலிசாரால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்டப்டதாகக் கூறப்பட்ட கடைச் சிப்பந்திகள் இருவர் சடலமாக கண்டுபிடிக்கபட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையிலும் 'கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தவர்கள

  10. இலங்கை விவகாரம்:கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மாபெரும் கண்டன பேரணி கன்னியாகுமரி: இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கன்னியாகுமரியில் மாபெரும் பேரணி நடத்தினர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இலங்கையிலும் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும் கன்னியாகுமரியில் இன்று கண்டனப்பேரணி நடைபெற்றது. இதில், இலங்கை அரசைக் கண்டித்து எழுதப்பட்ட அட்டைகளுட…

  11. ஈழத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் நிலையில், கட்சி பேதங்களை மறந்து தமிழ்நாடு அரசியல் கட்சிகளும், மக்களும் கொண்டுள்ள எழுச்சிக்கு, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி கலையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். ஈழத்தில் தமிழ் மக்களிற்கு எதிரான சிறீலங்கா படைகளின் தாக்குதல்களைக் கண்டித்து 1983ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து குரல்கொடுத்து வருவதாக அவர் இந்த செவ்வியில் கூறினார். ஈழத்தில் சிறிலங்கா படைகளின் தாக்குதல்களால் மக்கள் பாதிக்கப்படும்போது உடனடியாக தமிழகம் கொந்தளிக்கும் நிலை புதியது அல்ல எனவும் அவர் கூ…

  12. இலங்கையில் நடக்கும் சன்டையில் இராணுவத்தால் விடுதலைப் புலி வேங்கைகளை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. மஹிந்த அரசு ஈழத்தமிழர்களை காட்டுமிராண்டித்தானமாக மூர்க்கத்தனமாக விலங்குகளை விடக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அரசு அமைதியாக இருந்தமையால் தான் இப்போது இலங்கை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு நடக்கும் சண்டையில் இராணுவத்தால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது. தமிழர்களை அழிக்க இலங்கை இராணுவத்திற்கு ராடர் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை அளித்து தமிழ் மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் துரோகம் இழைத்து விட்டார். அ.தி.மு.க., ம.தி.மு.க கூட்டணி வலுவாகவுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி தமிழகம்…

  13. 23.10.08 கவர் ஸ்டோரி இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி. வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரு…

    • 20 replies
    • 6.9k views
  14. இது ஒரு முக்கியமான தருணம். தவறவிடக் கூடாத அதி முக்கிய தருணம். தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது போல், தமிழகத் தலைவர் முதல்வர் முதல், தமிழகத்துப் பாமரன் வரையுள்ள தமிழபற்றாளர்கள் அனைவரும் அணிதிரண்டுள்ள நேரமிது. இந்நேரத்தில் தவறிவிட்க் கூடாது , தடுமாறிவிடக் கூடாதென்னும் அக்கறையில் எழுதப்படுவது இது . ஈழத்தமிழர் பிரச்சனையில் ஏற்கனவே தவறவிடப்பட்ட தருணங்கள் சிலவற்றைசுட்டிக்காட்ட விரும்புவது. இனிலரும் பொழுதில் எடுக்கவேண்டிய அடியை தளம்பாது எடுத்து வைக்க எண்ணுவதுஈ என்ற வகையில் அமைகிறது. இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களவர்களில், ஏழைத்தொழிலாளியாய் வாழ்வு நடத்தும் சராசரிச் சிங்களவரிடம் வேண்டுமானால் இல்லாது போகலாம் இனத்துவேசம்.மனிதாபிமானத்தின

    • 0 replies
    • 1.3k views
  15. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல என்று தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 767 views
  16. வீரகேசரி நாளேடு - இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரில் கூட்டமைப்பு அரசாங்கம் முன்வைத்திருக்கின்ற யுத்தவாதக் கொள்கையானது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேச பகைமையையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். குடும்ப நிர்வாகமும் அதன் அரசாங்கமும் யுத்தத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறத்து மாகாண சபை, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் மாநாடு கோட்டையில் அமைந்துள்ள தேசிய தொழிற்சங்க தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ம…

  17. சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான பிரதான வீதிகள் 30 நிமிடத்துக்கு மூடப்படுகிறது [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 10:20 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டிச் சந்தியில் இருந்து நாடாளுமன்றம் வரையான பிரதான வீதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாளாந்தம் காலையும் மாலையும் 30 நிமிட நேரத்திற்கு முடப்படவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. முற்பகல் 9:00 மணி தொடக்கம் முற்பகல் 9:30 நிமிடம் வரையும் பின்னர் மாலை 5:00 மணி தொடக்கம் 5:30 நிமிடம் வரையும் குறித்த பகுதிகளுக்கு இடைப்பட்ட வீதிகள் முடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளமையினால் பிரதமர், மூத்த அமைச்சர்கள் ஆகியோரின் பாதுகாப்பை முன்…

  18. போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை தாம் எதிரிகளுக்கும் உணவு அளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடும் சக்திகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய ஆய்வு மையத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். www.tamilwin.com

  19. வீரகேசரி நாளேடு 10/20/2008 8:11:13 PM - இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாந்திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது. இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் …

  20. மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் ஓர் இராஜதுரோகி என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதன் ஊடாக இலங்கையின் அரசியல் சாசனத்திற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக செயற்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சந்திரசேகரனின் செயற்பாடு நாட்டின் இறைமைக்கும், பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படுத்தக் கூடியதொன்றென கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது அமைச்சர் சந்திரசேகரனின் செயல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் www.tamilwin.com

  21. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகள் வீண் போகவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். . பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபருடன் பேசியதைத் தொடர்ந்து ஐ.நா. அனுப்பி வைத்த உணவுப் பொருட்கள் வன்னியில் 2 இலட்சத்து 30 ஆயிரம் தமிழர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார். முதலமைச்சர் கருணாநிதி இன்று கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நேற்று இராமேஸ்வரத்தில் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் நடத்தியதைப் பாராட்டியுள்ளார். …

  22. தமிழர்களுக்கு விபரீதம் நடந்தால் தமிழகம் கரையைத் தாண்டும் - கே.எஸ்.ரவிக்குமார் திங்கள், 20 அக்டோபர் 2008, 09:50 மணி தமிழீழம் [செய்தியாளர் அகரன்] ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு ஒன்று என்றால் கேட்பதற்கு யாருமற்ற நாதியற்றவர்கள் அல்ல என்பதை சிங்கள அரசுகள் புரிந்துகொள்ளவேண்டும், தமிழர்களுக்கு தொடர்ந்து விபரீதம் நடந்தால் தமிழகம் ராமேஸ்வரத்தின் கரையை நிச்சயம்தாண்டும் என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்குமுகமாக இராமேஸ்ரவத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும், நியாயம் கேட்கவு…

    • 0 replies
    • 1.4k views
  23. Started by nunavilan,

    ஆயுத வியாபாரம் [20 - October - 2008] சிறியரக ஆயுதங்களின் பரவலினால் உலகெங்கும் அதிகரித்திருக்கும் வன்முறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் ஜெனீவாவில் கூட்டப்பட்ட சர்வதேச மகா நாடொன்றில் வெளியிடப்பட்ட தகவல்களை நோக்கும் போது உண்மையான பேரழிவு ஆயுதங்கள் சிறியரக ஆயுதங்களே என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. 60 கோடிக்கும் அதிகமான சிறியரக மற்றும் இலகு ஆயுதங்கள் உலகம் பூராவும் புழக்கத்தில் இருக்கின்றன. கடந்த வருடம் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் மரணத்துக்கு சிறியரக ஆயுதங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. அதாவது, சிறியரக ஆயுதங்களினால் கடந்த வருடத்தில் வாரமொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் பெரும் எண…

    • 0 replies
    • 1.6k views
  24. யாழ் குடாநாட்டின் காங்கேசன்துறை, மயிலிட்டி கடற்பரப்புக்களில் 17 படகுகளில் சிங்களவர்கள் ஆயுதங்கள் சகிதம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகிலும் 6 வரையிலான சிங்கள கடற்றொழிலாளர்கள் இருப்பதுடன், இவர்கள் துப்பாக்கிகள், வாள்கள் என்பன வைத்திருப்பதாக நேரில் பார்த்த கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். http://www.tamilskynews.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.