ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
இன்று ஸ்ரீலங்கா முகம் கொடுத்திருக்கும் நிலைமை 1940 ஆம் ஆண்டு தசாப்தங்களில் ஜப்பானும் தாய்வானும் சீன ஆதிக்கத்திற்கு முகம் கொடுத்தது போன்ற நிலைமையாகும். அந்தக் காலகட்டத்தில் சீன ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பல்வேறு சவால்களை ஜப்பானும் தாய்வானும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. படை பலம் வாய்ந்ததும் பெரும் கண்டப்பரப்பைக் கொண்டதுமாகிய சீனாவின் கண்டப்பரப்பின் கரையோரத்தில் பலமற்ற ஜப்பான் சிறிய நாடாகவும் அதைவிடச் சிறியதும் பலமற்றதுமான நாடாக தாய்வானும் இருந்தன. 1940 தசாப்தங்களில் சீனாவின் ஆட்சி அமைப்பும் பொருளாதார கூட்டமைப்புகளும் கம்யூனிஸ அடிப்படையில் மாறிக் கொண்டிருந்தவேளை ஜப்பானும் தாய்வானும் சீனாவின் ஆதிக்க அழுத்தத்திற்கு எதிராக பெரும் இக்கட்டுகளுக்கு மத்தியில் கம்யூனிஸத்துக்குள் சிக்காம…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தொடரும் யுத்தத்தில் கடந்த செப்ரம்பர் மாதம் படைத்ததரப்பில் 200 பேர் கொல்லப்பட்டு 997 பேர் காயமடைந்துள்ளதாகவும் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்ததாகவும் பிரதமர் ரட்ணகசிறி விக்கிரமநாயக்கா நாடாளுமன்றத்தில் இன்று (ஒக்07) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பினனர் அவசரகாலச்சட்டம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆற்றிய உரையின் போதே பிரதாமர் இந்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சரணடைந்தால் மட்டுமே இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்யும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கைப்படையினரினால் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்மானால் விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்தியர்களாகிய தமது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-31-03
-
- 18 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஜானக பெரேராவின் படுகொலைக்கு அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும் -ரணில் வீரகேசரி நாளேடு 10/7/2008 9:44:54 PM - நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்த இராணுவ வீரர் ஜானக பெரேராவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமையே அவரது படுகொலைக்குக் காரணமாகும். மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலைக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜானக பெரேராவின் படுகொலை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை தொடர்பான அரசாங்கத்தின் விசாரணைகளில் ஐ.தே.க.வுக்கு துளியளவும் நம்பிக்கையில்லை என்றும் அவர் மேலும் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்து பேசுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு அவ…
-
- 0 replies
- 787 views
-
-
அவசரகாலச் சட்டம் 84 மேலதிக வாக்குகளால் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணையை பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசுடன் இணைந்து தேசிய சுசந்திர முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.வாக்களிப்பின்ப
-
- 1 reply
- 751 views
-
-
மோதலில் காயமடையும் சகல படையினருக்கும் சிகி;ச்சையளிக்கும் வகையில் நாளை முதல் அனைத்துப் பிரதான வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் விமல் ஜயமான்ன தலைமையில் விசேட குழுவொன்று இதன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 500 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் வைத்தியசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமல் ஜயமான்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் இந்த அறிவிப்பானது வடமுனையில் மோதல்கள் நாளை முதல் அதிகரிக்கலாம் என உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனுராதபுரம் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அல…
-
- 7 replies
- 1.4k views
-
-
இரண்டாம் நிலை இராஜதந்திரிகளுடன் மகிந்த சந்திப்பு [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 09:52 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன், நோர்வே ஆகிய நாடுகளின் இரண்டாம் நிலை இராஜதந்திரிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக போர் நிலைமைகள் தொடர்பாகவே மகிந்த ராஜபக்ச விளக்கி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் தொடர்பாக இராஜதந்திரிகள் கேட்டு அறிந்து கொண்டதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சின் உயர் …
-
- 0 replies
- 1k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...9&Itemid=57
-
- 0 replies
- 1.1k views
-
-
கருணா இருக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் அல்ல சிறையில் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கருணா நாடாளுமன்றத்திற்கு நியமிக்கக் கூடிய தகுதியான நபரல்ல, பிரித்தானிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய கருணா மீது அரசாங்கம் விசாரணைகளை நடத்தியிருந்தால், அவர் இருக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் அல்ல, சிறைச்சாலையில் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். கருணாவை சிறைக்கு அனுப்பாது, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புப் பரிசை வழங்கியமைக்கான ரகசியம் என்ன என்றும் ரணில் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&…
-
- 4 replies
- 2.4k views
-
-
இன்று பிரிதானிய பாராளுமன்றம் முன்பாக மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை பிரித்தானிய தமிழர் பேரவையினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பிரித்தானிய தமிழர்கள் உனர்வுபூர்வமாக கலந்துகொண்டது, குறிப்பிடதக்கவிடையமாகும் படங்கள்........ http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 2 replies
- 1.2k views
-
-
கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு: தா.பாண்டியன் [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 08:23 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த நம் தரப்பில் சொல்லப்பட்ட எந்த கருத்தையும் இலங்கை ஏற்கவில்லை. இதற்கு தீர்வு காண நேரு, இந்திரா, சாஸ்திரி, ராஜீவ் காலங்களில் போடப் பட்ட ஒப்பந்தங்களையும்…
-
- 0 replies
- 706 views
-
-
"நம்முடைய இனத் தமிழர்களை ஒழிப்பதற்கு இலங்கை அரசு போரிலே ஈடுபடுமேயானால் அப்போது எங்களுக்கு இந்திய அரசு துணையாக இருக்க வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொள்கிறேன்," என்று தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார். இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுகவின் நிலையும் - மத்திய அரசுக்கு வேண்டுகோளும் எனும் தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி பேசியது: நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை பிரச்சனை குறித்து பேச வேண்டிய, செயல்பட வேண்டிய உறுதி எடுக்க வேண்டிய, ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு நம்முடைய நிலையை விளக்கி, நாம் தமிழகத்திலே எத்தகைய தாங்கொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லி, அவர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக இருந்த வடமத்திய மாகாண எதிர்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா கொலை செய்யப்பட்ட தினத்திலேயே அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் ஆயுத குழுவொன்றை நடத்திச் செல்லும் கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்க தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரின் துணையின் கீழ் ஆயுதக்குழுக்கள் இயங்குகிறது என்பது தற்போது எவருக்கும் ரகசியமான விடயமல்ல, இதனைத் தவிர அரசாங்கத்தின் அனுசரணையுடன…
-
- 3 replies
- 2.8k views
-
-
தொடர்ந்தும் போரை நடத்தினால் கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க முடியாது: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 08:14 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கால் நிறைவேற்ற முடியாமல் போய்- சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் கச்சைக்கட்டிக் கொண்டு போரை நடத்தினால் நாங்கள் கையைக் கட்டிக்கண்டு சும்மா இருக்க முடியாது என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் பிரச்சியில் தி.மு.க. நிலை தொடர்பான கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதி பேசியதாவது:…
-
- 8 replies
- 1.6k views
-
-
http://isooryavidz.blogspot.com/2008/10/su...lanka-town.html
-
- 3 replies
- 4.8k views
-
-
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச பொலிஸாரே விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, அநுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் வடமத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜென்ரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டிருப்பதைக் கண்டிப்பதாகவும், இந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொலிஸாரே விசாரணைகளை நடத்தவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். உள்ளூர் பொலிஸாரின் விசாரணைகள் மீது தமக்கு நம்பிக்கையில்லையெனவும், சர்வதேசப் பொலிஸார் வரவழைக்கப்பட்டே விசா…
-
- 2 replies
- 972 views
-
-
வவுனியாவில் துப்பாக்கி்ச் சூட்டுக் காயங்களுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு. வவுனியா சிதம்பரபுரத்திலும், ஆசிகுளம் வீதி - கல்நாட்டினகுளம் சந்தியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு இளைஞர்களின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் இந்தச் சடலங்கள் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சடலங்கள் இரண்டும் அடையாளம் காணப்படவில்லை. நேற்றிரவு 10.30 மணியளவி்ல் வெள்ளை வான் ஒன்றில் இந்த இளைஞர்கள் கொண்டு வரப்பட்டு, சம்பவ இடத்தில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பொலி…
-
- 0 replies
- 751 views
-
-
இரத்த அபிசேகம் நடைபெறாமலேயே இலங்கை தமிழர்களின் புரட்சிப்பூ- விடுதலைப்பூ பூக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் கருத்து: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 08:51 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் இரத்த அபிசேகம் நடைபெறாமலேயே புரட்சிப்பூ, புதுமைப்பூ, ஜனநாயகப்பூ, விடுதலைப்பூ, மறுமலர்ச்சிப்பூ, உரிமைப்பூ தமிழர்களின் வாழ்வுப்பூ பூக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, தி.மு.க.வின் கருத்து என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க.வின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இலங்கையில் காந்தியடிகளைப் போன்ற உருவம…
-
- 3 replies
- 952 views
-
-
இலங்கை பிரதமருடன் பேசுக: மன்மோகன் சிங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து இலங்கையில் தமிழர்கள் கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த அந்நாட்டு பிரதமருடன் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் பேசி தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார். சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுப்பட்டு நிற்பது வரவேற்கத்தக்கது. இலங்கை தமிழர்கள் தொடர்ந்து விவரிக்க முடியாத கொடுமைகளுக…
-
- 0 replies
- 713 views
-
-
யாழ் குடாநாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நீதிமன்றங்களில் சரணடைந்து சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்படுபவர்களை 14 நாட்களின் பின்னர் யாழ் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதுவரை காலமும் குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சரணடையும் ஒருவர் 14 நாட்கள் பாதுகாப்பாக யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு, 14 நாட்களின் பின்னர் மீண்டும் அந்த நபர் குறிப்பிட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதில் காணப்படும் பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறித் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை 14 நாட்களின் பின்னர் சரணடைந்த நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லாமல், யாழ் நீதிமன்றத்தில…
-
- 0 replies
- 670 views
-
-
கனடாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக போலி வெளிநாட்டு பயண முகவர்கள், ஏமாற்றி பணம் பெற்று வருவதாகவும் அவர்களிடம் ஏமாந்து போகவேண்டாம் இலங்கை வெளிநாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது. கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக எந்தவொரு பயண முகவர்களுக்கும் தம்மால் அனுமதி வழங்கப்படவில்லை என்று வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுமக்களை ஏமாற்றி பணம் பெறுகின்ற சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட விரோத நிதி மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இவ்வாறு மலேச…
-
- 0 replies
- 1.4k views
-
-
கோத்தபாய ராஜபக்சவும் இன்னும் முக்கிய இராணுவத் தளபதிகளும் அவசர ஆயுதக் கொள்வனவு மற்றும் இராணுவ உதவி வேண்டி ரஷ்சியாவுக்குப் பயணித்துள்ளனர். இக்குழுவினர் மொஸ்கோவில் ஒரு வார காலம் தங்கி இருந்து ஆயுதக் கொள்வனவு தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபட உள்ளதாகச் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தகவல்: புலிகளின் குரல். கிளிநொச்சிக்கான போரில் சிறீலங்காப் படைத்தளபதிகள் நிர்ணயித்த வாரக் கணக்களவுகள் பிசகிக் கொண்டிருக்கும் நிலையில் கோத்தபாய ரஷ்சியா நோக்கி ஓடியுள்ளார்.. என்பது குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 1.1k views
-
-
உள்நாட்டில் இடம்பெற்றும் வரும் சிவில் யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானோர் வெளிநாடுகளுக்குச் செல்ல முனைப்பு காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அவுஸ்திரேலிய எல்லைப் புறத்தில் அமைந்துள்ள பபுவா நியூகினியாவிற்கு இலகுவாக பிரவேசிக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. பபுவா நியூ கினியாவிற்கு செல்லும் இலங்கை அகதிகள் சுமார் 11,800 அமெரிக்க டொலர்களை கட்டணமாக செலுத்துவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இவ்வாறு அகதிகளாக பபுவா நியூகினியை வந்தடைவோரினால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மோர்சபி துறைமுகமூடாக அதிக எண்ணிக்கையில் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெற்று வருவதா…
-
- 0 replies
- 712 views
-
-
அனுராதபுரம் காட்டுப்பகுதியில் கிளைமோர் தாக்குதல்: இருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 10:02 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம், சியம்பலகஸ்வெவ பகுதியில் நேற்று முன்நாள் இரவு இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சியம்பலகஸ்வெவ காட்டுப்பகுதியில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:20 நிமிடமளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதவியாவிலிருந்து கெப்பிட்டிக்கொலாவ பகுதிக்கு மீன் ஏற்றிவந்த வான் மீதே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வான் பலத்த சேதமடைந்தது. வானில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலே…
-
- 0 replies
- 511 views
-
-
வீடியோத் தொகுப்பு: சென்னையில் நேற்று 06.10.08 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில், தமிழகத் தலைநகர் சென்னை மயிலாப்பூரில், நடைபெற்ற திமுக ஈழத்தமிழர் ஆதரவுப் பொதுக் கூட்டத்தின் வீடியோத் தொகுப்பு http://4tamilmedia.com/index.php?option=co...&Itemid=267
-
- 0 replies
- 1k views
-