Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் Grenade attack on TNA MP's house in Ampaa'rai [TamilNet, Wedensday, 01 October 2008, 05:56 GMT] Unidentified persons lobbed a hand grenade on the house of Tamil National Alliance (TNA) Ampaa'rai district parliamentarian, Chandra Nehru Chandrakanthan, on Thirukkoayil main street, Tuesday around 10:00 p.m, despite the presence of three policemen guarding the residence, the MP said. The blast had damaged only the front portion of the house and no one was injured, he said. Police said two attackers were riding in a motorbike. The MP said his house is located…

  2. நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 10:22 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வேயில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு தொடங்கப்பட்ட அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நிறைவுபெற்றது. தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கரிசனை பேச்சளவில் மட்டும் நின்றுவிடுவதைத் தவிர்த்து, செயலளவில் அக்கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவெனவும், அவ்வா…

    • 0 replies
    • 662 views
  3. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.5k views
  4. ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு பற்றியும் இது தொடர்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை (06.10.08) சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. உலகநாடுகளின் கண்டனங்களின் பின் பயங்கரவாத சிங்கள அரசு நிர்ப்பந்தத்திற்காகவும் கண்துடைப்பிற்காக சில உணவு பாரவூர்திகளை வன்னிக்கு அனுப்ப நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது அறிந்ததே. வன்னிக்குச் செல்லவிருந்த உணவு பாரவூர்திகளை சோதனையிட்ட இராணுவத்தினர் அப்பாரவூர்தி ஒன்றின் உள் இருந்து பெருந் தொகையான வெடிப்பொருட்கள் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களை எடுத்தச் செல்ல ஆயத்தமாயிருந்த ஒரு பாரவூர்யில் சூட்சுமமான முறையில் பெருந் தொகையான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அத்துடன் 28,000 மேற்பட்ட சிறிய ரக பட்டறிகள் (பென் டொச் பற்றரிகள்) மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சோதனையிட்ட இராணுவத்தினர் கண்டுபிடித்திருப்பதாகவும், அப் பாரவூர்த…

  6. இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை அவசியம் - கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்: இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் பரஸ்பர மரியாதை, அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை, அசாதாரணமான திடசங்கற்பம் என்பன அவசியமாகிறது என கனேடிய லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப்ரே தெரிவித்துள்ளார். இதற்காக இலங்கையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து பகைமையை களைய கனடாவினால் முயற்சிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சுட்டிக் காட்டி உள்ளார். இலங்கையின் யுத்தம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், தன்னார்வு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியாது என்ற அடிப்படையில் அவர்களை யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களி…

  7. வன்னிப் பிரதேசம் மீது நடத்தபட்டு வரும் தரைவழி வான்வழித் தாக்குதல்களால் சுமார் இரண்டரைலட்சம் வரையிலான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகி அல்லற்பட்டு வருகின்றனர். எனினும் பௌத்தம் பேசும் இந்த நாட்டு ஜனாதிபதியும் அவரது ஆட்சியயில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் அந்த மக்கள் நிலை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுகின்றவர்கள் அல்ல. இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் அரசியல் குழு சாhபாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில் வேல் அனுப்பிய அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டிருப்பவை வருமாறு. வன்னியில் மேற்கொள்ளபட்டு வரும் யுத்த நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்துள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு உணவுப் பொருட்களும் மருந…

  8. வன்னிப் போர் அரங்கில் கடந்த 15 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி முன்னேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 57 ஆவது டிவிசன் படையினர் திடீரென கண் எரிச்சல், உடல் அரிப்பு, மூச்சுத் திணறல், வாந்தி, குமட்டல் போன்ற உபாதைகளைத் திடீரென எதிர்கொண்டனர். சில படையினர் மயங்கியும் வீழ்ந்தனர். ஒரு புறத்தில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. புலிகளின் ஆட்டிலறி மற்றும் மோட்டார் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்க, அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட படையினர் வாகனம் மூலமும் ஹெலிகொப்டர் மூலமும் கொண்டு செல்லப்பட்டு அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அக்கராயன் களமுனையில் இருந்து 6 படையினரும், மறுநாள் காலை வன்னிவிளாங்குளம் களமுனையில் இருந்து 12 படையினரும்…

    • 10 replies
    • 2.4k views
  9. இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அரச தலைவருக்கோ அல்லது அரசுக்கு அக்கறையில்லை என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. 100 பில்லியன் ரூபாயை இழந்தது கொழும்பு பங்குச்சந்தை [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 03:41 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையான பதிப்புக்களைச் சந்தித்து வருகையில் கொழும்பு பங்குச்சந்தை இந்த வருடத்தில் 100 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வருடத்தில் சந்தை முதலீடுகள் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளது. இந்த வருடத்தின் சந்தை முதலீடுகளின் இழப்பு 100 பில்லியன் ரூபாய்களாகும். கொழும்பு பங்குச்சந்தை நேற்று செவ்வாய்க்கிழமை 14 பில்லியன் இழப்புக்களை சந்தித்ததை தொடர்ந்து இந்த வருடத்தின் அதன் மொத்த இழப்பு 104.8 பில்லியன் ரூபாய்களை தொட்டுள்ளது. இது கடந்த இரு வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரும் இழப்…

  11. மணலாற்றில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 படையினர் காயமடைந்துள்ளனர். முறியப்புத் தாக்குதலின்போது ”லோ” உந்துகணை செலுத்தி உட்பட படைப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளளது. இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் பெரும் எறிகணைச் சூட்டாதரவுடன் மணலாற்றின் வனப் பகுதி ஊடாக ஆறு முனைகளில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் களமாடி படையினரை தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். இதன்போது படையினர் தரப்பில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 அதிகமான படையினர் காயமடைந்துள்ள…

  12. யாழ்கள தோழர்களுக்கு நன்றி, கம்யூனிஸ்ட் கட்சித் தோழரும் நமது ஆத்ம நண்பருமான மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் (தாமரை மகேந்திரன்)காலையில் தொடர்புகொண்டபோது பல புலம்பெயர்ந்த உறவுகள் தொடர்புகொண்டு தமது நன்றிகலையும் ஆதரவையும் வெளிப்படுதியதாக சொன்னார். இது அவர்களை மிந்த உற்சாகப் படுத்தியுள்ளது. மாநில செயலாளர் தோழர் த.பாண்டியன் நேற்று பி.பி.சி தமிழ் ஓசைக்கு வளங்கிய செவ்வி மிக முக்கியமானது. இந்தச் செவ்வியைக் கேட்டு தோழர் மகேந்திரனுக்கும் பி.பிசிக்கும் உங்கள் கருத்தை எழுதுங்கள். யாழ்க்கள தோழ தோழியர்கள் யாராவது தோழர் பாண்டியனின் செவ்வியை எழுதுருவில் இணைப்பது பயனுள்ளது. இன்று பதிரிகைகளில் உண்ணாவிரதம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. Times of India நமது பாராளுமண்ற உறுப்பினர்கள் சுரே…

  13. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான நீர்கொழும்பில் படையினர் நடத்திய தேடுதலின் போது ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  14. கிழக்கு மாகாணத்தில் ஆட்கடத்தல், காணாமல் போதல், கொலைகள் ஆகிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. யாழ்ப்பாண முற்றுகை அல்லது யாழ்ப்பாணத்திற்கான போர் என்பது கடந்த ஐந்து நூற்றாண்டுகளிலும் ஏறக்குறைய ஒரே அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. படைநடவடிக்கை அல்லது போர்விதி என்பது பெரும்பாலும் புவியியல் அமைவுகளையும் பருவகாலங்களையும் தம் திட்டமிடலிற் கொண்டுள்ளன. இந்த அடிப்படையைப் புறக்கணித்து விட்டு எந்தப் படை நடவடிக்கையையும் செய்ய முடியாது. எனவே யாழ்ப்பாணத்திற்கான முற்றுகையும், படை நடவடிக்கையும் புவியியல் சார்ந்தே முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது வன்னியில் நடந்து கொண்டிருக்கும் போர் யாழ்ப்பாணத்திற்கான போரே. இதை இன்னும் சற்று விளக்கமாகவும், நேரடியாகவும் சொன்னால் இது ஆனையிறவுக்கான சமர் என்று சொல்லலாம். அதுவே உண்மையும் கூட. சிறீலங்கா இராணுவத்தினர் எட்டு மாதங்கள…

  16. இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் சாத்தியம் இல்லை: ஐ.நா. அதிகாரி [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 10:44 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவுகள் மற்றும் மருந்துகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை இந்த வாரம் வன்னிப்பெரு நிலப்பரப்புக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் செய்தி முகவர் ஒருவரிடம் கருத்துக்கூறிய அந்த அதிகாரி, அறுபது சுமையூர்திகளில் நிவாரணப்பொருட்களின் முதற்கட்ட தொகுதி எதிர்வரும் இரண்டாம் நாளுக்கு முன்னர் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அ…

  17. தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதல்கள், வன்னியில் இருந்து மனிதநேய அமைப்புக்கள் வெளியேற்றப்பட்டமை என்பவற்றைக் கண்டித்து நோர்வேயில் அடையாள உண்ணாநிலை, மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டன. இதில் 1,500 வரையிலான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர். நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம் நேற்று திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் இன்று பிற்பகல் 3:00 மணிவரை 32 மணித்தியாலங்களுக்கு இடம்பெற்றிருந்தது. இளையோர் உட்பட 21 பேர் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை 10:00 மணிமுதல் பிற்பகல் 3:00 மணிவரை நடைபெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் …

  18. சிறிலங்கா படையினர் கிளிநொச்சியை அடைவதற்கு இன்னும் 4.5 கி.மீ உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய தெரிவித்துள்ளார்.சர்வதேச தொலைக்காட்சியான சீ.என்.என் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர் அதி பலமான நிலையில் உள்ளனர். அத்தோடு ஆளணியிலும் விடுதலைப் புலிகளை விட பெரும் எண்ணிக்கையில் படையினர் உள்ளனர்,விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது நிச்சயம் எனவும் கோதபாய தெரிவித்துள்ளார். தொண்டர் நிறுவனங்கனின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அங்கு இயங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வன்னி யில் இருந்து வெளியேறி வவுனியாவில் இருந்து இயங்க அரசாங்கம் அழைப்புவிடுத்தது எனவும் கோதபாய தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஒரு தெளிவான இ…

  19. வன்னிப் படைகளின் தலைமையகம், வவுனியா விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீதான புலிகளின் வான் தாக்குதல்களை அடுத்து இலங்கை விமானப்படை தனது இயலாமையை வன்னியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது காட்டி வருகிறது. ஐ.நாவின் துணை அமைப்புகளாகச் செயற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வன்னியை விட்டு அரசாங்கம் கட்டாயமாக வெளியேற்றிய பின்னர் மோசமான விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானத் தாக்குதல்களின் முக்கிய நோக்கம் "விடுதலைப் புலிகளின் பௌதிக ரீதியான படைவளங்களை அழிப்பதே" என்று அரசாங்கமும் படைத்தரப்பும் சொல்லிக் கொள்கின்ற போதும் அது பொய்யானது. செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் தீவிரமாக்கப் பட்டுள்ள விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் வன்னிப் பகுதியில் இருந்து மக்களை அர…

  20. மூன்றாவது நாளாக தொடரும் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 07:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிக்கு மேற்கு களப்பகுதியில் இன்றும் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்னேரியின் மேற்கு களப்பகுதியில் மூன்றாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமையும் சிறிலங்கா படையினர் முன்னகர்வுத் தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதனை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர். இதேவேளை, கொக்காவில் தொடருந்து நிலையத்துக்கு வடக்காக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் இன்று தாக்குதலை நடத்தியுள்ளனர…

  21. மணலாறில் ஆறுமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 6 படையினர் பலி; 20 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 07:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மணலாற்று களமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். லோ உட்பட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மணலாறு களமுனையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளனவில் பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் ஆறுமுனைகளில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர். இம்முன்னகர்வுகளுக்கு எதிராக செறிவான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்த…

  22. ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் துரோகத்தனத்தை கண்டித்து வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய மத்திய அரசு அலுவலகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.10.08) மறியல் போராட்டம் நடத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. இலங்கைக்கு மத்திய அரசு செய்துவரும் ராணுவ உதவிகளை நிறுத்தக்கோரி, வரும் 10‌ம் தே‌தி சென்னையில் வைகோ தலைமையில் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம் நடைபெறுகிறது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் கடந்த 50 ஆண்டு காலமாக கொடிய அடக்குமுறைக்கு ஆளாகி வந்துள்ள ஈழத் தமிழ் மக்களை இலங்கை அரசு பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு தனது முப்படைகளையும் ஏவி இனப்படுகொலை நடத்தி வருகிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்மக்கள் உண்ண உணவும், வசிப்பதற்கு இடமும் இன்றி வன்னிக் காடுகளில் பசியாலும், நோயாலும் மடியும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர். ‌இந்நிலையில், மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவியும், தளவாடங்களும், ராடார்களும் தந்து வந்ததோடு, இந்திய ராணுவ பொறியாளர்களை…

  24. சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ராஜரட்ணம் தனது 82வது வயதில் மாரடைப்பினால் காலமானார். 1926இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த ராஜரட்ணம், சிங்கப்பூர் செல்ல முன்னர், பிரித்தானியாவில் வழக்கறிஞராகத் தேர்ச்சிபெற்றார். 1981ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, சிங்கப்பூரின் முதலாவது எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானதன் மூலம், ஒரே கட்சி ஆட்சியைக் கொண்ட சிங்கப்பூர் வரலாற்றில் இவர் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். சிங்கப்பூரின் கடந்த 40 வருடங்களாக ஆட்சிபீடத்திலிருந்துவரும் சிங்கப்பூர் மக்கள் இயக்கக் கட்சிக்குச் சவால் விடுக்கும் வகையில் அண்மையில் மறுசீரமைப்புக் கட்சி ஒன்றை இவர் உருவாக்கியிருந்தார். http://www.tamilskynews.com/index.php?opti…

  25. யாழ் குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களிலுள்ள தேர் முட்டிகளை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்திவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தலாமென பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இராணுவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்தே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், யாழ் குடாநாட்டில் யாரும் இல்லாத வீடுகளையும் இராணுவத்தினர் சோதனைக் உட்படுத்திவருவதாகத் தெரியவருகிறது. இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாருமில்லாத வீடுகளில் பதுங்கியிருப்பதாலும், யாருமற்ற வீடுகளில் சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாலும் இந்தச் சோதனைநடவடிக்கைகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.