ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
தமிழனத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னியிலிருந்து ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்கள் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியின் மூலம் இது தெளிவாகியுள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றத்திற்கு எதிராக வன்னிச் சிவிலியன்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னிச் சிவிலியன்கள் பல்வ…
-
- 0 replies
- 958 views
-
-
யாழ் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு விரைவில் கோரப்படும் - டலஸ் அழகப்பெரும யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மாநகரசபை உள்ளிட்ட சகல உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை நடத்த இம்மாதம் வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களைப் பகுதி பகுதியாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகப் பிரச்சார பிரிவுத் தலைவர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 458 views
-
-
யுத்தம் காரணமாகப் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸார் மக்கள் தொடர்பைப் பேண வேண்டியது மிகவும் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டில் கௌரவமான பொலிஸ் சேவை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக ஆயுதங்களுடன் மக்கள் மத்தியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகப் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e
-
- 0 replies
- 567 views
-
-
மொனராகலை காட்டுப் பகுதிகளுக்குச் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரிவித்துள்ளார். மொனராகலை கொட்டியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த சில பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதுள்ள பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் மொனராகலைக் காட்டுப் பகுதிக்குச் செல்லக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். tamilwin.com
-
- 0 replies
- 679 views
-
-
இலங்கையின் தென் பகுதிகளில் நாணயமாற்று சேவைகளை நடத்தி வருவோர் விடுதலைப்புலிகளின் பணத்தை பெருமளவில் மாற்றம் செய்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் நாணயமாற்றுனர்கள் ஊடாகவே தமக்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது. கொழும்புக்கு வரும் விடுதலைப்புலிகள் தமக்குப் பணம் தேவையென கிளிநொச்சியில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு அறிவிப்பதுடன், கிளிநொச்சியில் உள்ள புலிகள் வெளிநாட்டில் உள்ள பிரதிநிதி ஊடாக நாணயமாற்றுனர்களுக்கு பணத்தை அனுப்பி, அதனுடாக பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பில் உள்ள முஸ்லீம் பதாள உல…
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறியிருப்பதானது மனிதாபிமான நடவடிக்கைகளைப் பாதிக்கும் அதேவேளை, தாக்குதல்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பு இடங்களையும் இல்லாமல் செய்திருப்பதாக வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேறக்கூடாதெனக் கூறி அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திப் பகுதியிலுள்ள யு.என்.எச்.சீ.ஆர். அலுவலகத்துக்கு முன்னால் ஒன்றுதிரண்ட மக்கள் வாகனங்கள் எதுவும் வெளியில் செல்லமுடியாதவாறு நுழைவாயிலில் மறியல்களையிட்டு வீதியில் அமர்ந்திருந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, வன்…
-
- 0 replies
- 739 views
-
-
வன்னியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம் முன்பாக மக்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் பின்னர் அவர்களின் நேற்றைய பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 599 views
-
-
உலக வல்லாதிக்க சக்திகளை அம்பலப்படுத்திய விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல்: பா.நடேசன் [சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2008, 06:22 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலானது தமிழின அழிப்புக்கு உலக வல்லாதிக்க சக்திகள் சிங்களத்துக்கு செய்கின்ற ஒத்துழைப்புகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். வன்னி சிறிலங்கா படை நடவடிக்கை தலைமை மையமான வவுனியா படைத்தள அழிப்பில் வீரகாவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: எமது மக்கள் விடுதலைக் குறிக்கோள…
-
- 2 replies
- 794 views
-
-
முக்கியக் கட்டத்திற்குள் நுழைந்திருக்கும் வன்னிப் போர் - மனோகரன் வெள்ளி, 12 செப்ரம்பர் 2008 [பதிவு நிருபர்] வன்னிப் போர் தொடர்பான எதிர்வு கூறல்கள் , ஊகங்கள், அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் எல்லாம் மிகஉச்ச நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை ஊடகங்களில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. புலம்பெயர் தமிழர்களின் ஊடகங்களிலும் மனங்களிலும் கூட இத்தகைய நிலையே இன்னும் உள்ளது. தவிர படைத்துறை இதழ்களிலும் சர்வதேச படைத்துறை ஆர்வலர்கள் வன்னிப் போர் (விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசுபோர்) குறித்து எழுதிவருகின்றனர். ஆக, வன்னிப்போர் இன்று முக்கியமானதொரு விவகாரமாகியிருக்கிறது. அதிலும், குறிப்பாக இலங்கை இனப்பிரச்சனையில் இந்தப் போர் ஒரு தீவிரமான பாத்திரத்தை வகிக்கவும் போகிறது. …
-
- 0 replies
- 934 views
-
-
மனிதாபிமானமின்றி தமிழ் மக்களை நடாத்தும் இலங்கைக்கு எதிராக ஐ.நா. தடைகளை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் விடுக்க வேண்டுமென்று அந்நாட்டு சர்வகட்சிப் பாராளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் பெயரால் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சண்டையில் தமிழ் மக்கள் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இது மனிதாபிமானமற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்தில் கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் மக்கள…
-
- 0 replies
- 616 views
-
-
இன்று சிங்கள மக்களிடையே தினமும் வந்து சேரும் இராணுவத்தினரின் சடலங்களால் அரசும் இராணுவமும் கிலி பிடித்துப் போய் இருக்கிறது. காயப்பட்ட இராணுவத்தால் நிரம்பி வழியும் வைத்திய சாலைகள். இறந்த இராணுவத்தினரின் உடல்களால் நிரம்பி வழியும் பிரேத கூடங்களும் இறுதிச் சடங்கு மலர்ச் சாலைகளும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுமோ என அஞ்ச வேண்டி உள்ளது. இந்த நிலை மேலும் அதிகரிக்கும் நிலை அல்லாது குறையும் சாத்தியம் இல்லாத நிலையே தெரிகிறது. இதுவரை புலிகளுக்கு எதிரான போரைச் சொல்லிச் சொல்லியே தேர்தல்களை நடத்தி வயிற்றை வளர்த்து வந்த அரசுக்கு ஆப்பு வைத்து விடுவது போன்று போரின் போக்கு அமைவது தெரிகிறது. இதனால் அரசின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்களை வெளியேற்றுதல் என்பது பட்டினிச் சாவையும், துன்பியல் வாழ்க்கையையும், தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதற்கு சமனானது'' இவ்வாறு கிளிநொச்சி பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிய மனுவில் கருத்து வெளியிட்டுள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியம், உதவி அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி அச்சம் தருவதாகவுள்ளது. இந்த அறிவிப்பானது பட்டினிச்சாவையும், துன்பியல் வாழ்க்கையையும், தமிழ் மக்களுக்கு பரிசளிக்கின்றது. அத்துடன் அரசு மேற்கொள்ளும், தமிழினப் படுகொலைகளுக்கு சாட்சிகள் இல்லாமல் செய்யும் நிலைப்பாட்டையும் இது உருவாக்கியுள்ளது. இலங்கை அரசு மண்ணின் மீதும், மக்கள் மீதும் …
-
- 0 replies
- 453 views
-
-
புலிகளின் மும்முனை தாக்குதலில் இந்திய இராணுவ தொழில் நுட்பபிரிவினர் நேரடியாக சம்மந்தபட்டிருப்பது அம்பலமாகியதை அடுத்து வை.கோ மன்மோகன் சிங்கிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் ஈழத்தமிழர்களை அழித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபடும் இலங்கை அரசுக்கு இந்தியா நேரடியாக இராணுவ உதவி வளங்கியுள்ளதை வன்மையாக கண்டித்திருக்கும் வை.கோ, இது ஒரு துரோச்கச்செயல் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 4 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 75 வாகனங்கள் கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சகல அமைப்புகள் மற்றும் வாகனங்களை வன்னியில் இருந்து விலகி கொள்ள கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனங்கள் உள்ளிட்ட தன்னார்வ நிறுவனங்கள் இலங்கையில் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தற்போதைய அரசாங்கம் அதிகபட்ச செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள் எதனைக் கூறினாலும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை பாது…
-
- 0 replies
- 546 views
-
-
வன்னியில் இருந்து நேற்று முதல் வெளியேறிவரும் மனிதநேய அமைப்புக்களின் பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டு பணியாளர்களின் ஊர்திகளுடன், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளுர் பணியாளர்களின் ஊர்திகளும் மிகக் கடுமையான சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உள்ளுர் பணியாளர்களின் சொந்த இடம், முகவரி, உறவினர்கள் பற்றிய விபரங்கள் என்பன சேகரிக்கப்பட்ட பின்னரே, ஓமந்தை ஊடாக வவுனியா செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுவரை சுமார் 75 ஊர்திகள் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களில் இருந்து வவுனியாவிற்கு வந்திருப்பதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் வவுனியாச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை, எவ்வாறான இடர் ஏற்பட…
-
- 0 replies
- 543 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்;சி அல்வாய் பிரதேசத்தில் இருந்து மொனராகலை வெல்லவாய பிரதேசத்திற்குச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு பணியகத்தில் நேற்று (12) வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெல்லவாய பிரதேசத்தில் உள்ள உறவினரின் வர்த்தக நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் தனது பெற்றோருக்கு பணம் அனுப்புவதற்காக வெல்லவாய நகரில் உள்ள வங்கிக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் மனித உரிமை பணியகத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான சிவநாயகம் பார்;த்திபன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் வங்கிக்குச் செல்லும் போது தனது அடையாள அட்டையைக் கொண்டு செல்ல மறந்துள்ளத…
-
- 0 replies
- 517 views
-
-
வன்னியில் பேரவல நிலைக்கு வழி செய்யும் குரூர உத்தரவு 13.09.2008 போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான அவசர, அவசிய மனிதநேயப் பணிகளை ஆற்றிவந்த அனைத்துலகத் தொண்டர் அமைப்புகளையும், ஐ. நா. நிறுவனங்களையும் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு விடுத்திருக்கும் உத்தரவு, சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளையும், அவலப்படும் மக்கள் தொடர்பான சர்வதேசத்தின் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகளையும் தடுத்து மீறும் செயற்பாடாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டும். ""இலங்கையில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இலங்கை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த சர்வதேச அமைப்பு…
-
- 0 replies
- 474 views
-
-
வவுனியாவில் வீரவரலாறு படைத்த கரும்புலி மாவீரர்களின் வித்துடல்கள் விதைப்பு [சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2008, 06:08 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் வீரவரலாறு படைத்த கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு புதுக்குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றதுடன் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டன. இராஜன் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புத்தளபதிகளில் ஒருவரான இரட்ணம் பொதுச்சுடரை ஏற்றினார். வித்துடல்களுக்கு பெற்றோர், உடன்பிறப்புக்கள் ஈகச்சுடர்களை ஏற்றி மாலைகள் சூட்டினர். மலர்மாலைகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சிறப்புத் தளபதி இரட்ணம் வடபோர்முனை …
-
- 0 replies
- 599 views
-
-
http://www.tamilnaatham.com/articles/2008/...mar20080912.htm
-
- 0 replies
- 804 views
-
-
வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானத்தை செலுத்திச் சென்றவர்கள் வெளிநாட்டு விமானிகளாகவிருக்கலாம் எனும் சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு எழுந்துள்ளதாக டெய்லி மிறர் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்துள்ளார். விமானப் படை விமானங்கள், புலிகளின் விமானத்தைப் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானங்கள், கடல் மட்டத்திற்கு தாழப்பறந்து சென்றதாகவும், சுப்பர் சொனிக் விமானத்தினைச் செலுத்தக்கூடியவர்களாலன்றி அவ்வாறு தாழப்பறந்து சிறிய ரக விமானங்களை செலுத்த முடியாது எனவும், புலிகளின் விமானங்களைப் பின்தொடர்ந்து சென்ற எப்-7 விமானத்தின் விமானி விமானப்படைத் தலைமையகத்துக்கு அற…
-
- 6 replies
- 3.5k views
-
-
இலங்கை கடற்படையினரின் சிறப்பான செயற்பாடுகளின் காரணமாக, கடற்புலிகளின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். " முன்னர் கடற்புலிகளின் பலம் பற்றி அதிகம் எடைபோட்டிருந்தோம். ஆனால் தற்போது அவர்களது சகலவிதமான பலமும் அழிக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினர் கடற்புலிகளின் பலத்தினை வெற்றிகரமாக ஒழித்துள்ளனர்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். வெலிசர கடற்படைத்தளத்தில் நடைபெற்ற, கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 100வது 'அரோ' எனும் பெயரிலான தாக்குதல் படகை பார்வையிடும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை தாக்கியழித்ததன் மூலம், புலிகளின் ஆயுத விநி…
-
- 14 replies
- 3k views
-
-
வவுனியா கூட்டுப்படை தலைமையம் மீதான தாக்குதலில் பங்கேற்ற 10 கரும்புலிகளினதும் வெலிஓயாப் பகுதிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 போராளிகளினதுமாக 14 போராளிகளின் உடலங்களை அரசு விடுதலைப்புலிகளிடம் ஐ சி ஆர் சி ஊடாக கையளித்துள்ளது. இச்செய்தியை.. பிபிசி/தமிழ் பிரசுரித்துள்ளது. வீரகாவியமான வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.
-
- 13 replies
- 3.3k views
-
-
பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:18 pm இந்தியா என்றால் அது தமிழர்களுக்கு ஆதரவான அரசு என்ற மாயை தமிழீழத்தமிழரிடம் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. நேரு முதல் இந்திரா காந்தி, இராசீவ் காந்திவரை, இடையில் லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், நரசிம்ம ராவ், வி.பி. சிங், சந்திரசேகர் என எல்லோருமே தமிழக - தமிழீழத் தமிழர்களை மட்டும் அல்ல மலையகத் தமிழர்களையும் கிள்ளுக்கீரையாகவே பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டகம் செய்து வந்திருக்கிறார்கள். நேரு காலத்தில் பத்து இலட்சம் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர் வாளா இருந்தார். லால் பகதூர் சாத்திரி காலத்தில் அவரும் சிறில்ங்கா பிரதமர் சிறிமா பண்டாரநாயக்காவும் செய்த உடன்பாட…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலக…
-
- 2 replies
- 2.1k views
-
-
உண்மையில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது பாசாங்கு பண்ணுகின்றதா? 12.09.2008 தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகின்றமை போல வவுனியாவில் பாதுகாப்புப் படையினரின் தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், இலங்கை விவகாரத்தில் புதுடில்லித் தரப்பின் இரட்டை வேடத்தை குட்டை ஒரேயடியாக அம்பலப்படுத்திவிட்டது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இலங்கை அரசுப் படைகளுக்கு இந்தியா வெறும் ஆயுதத் தளபாட மற்றும் தகவல் வசதிகளை மட்டும் வழங்கி உதவவில்லை, நேரடியாக ஆளணி உதவிகளையும் வழங்குகின்றது என்ற விடயத்தை அத்தாக்குதலில் இந்திய விமானப்படையின் சார்ஜன்ட் தரத் தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்தமை நிரூபித்துவிட்டது. ஏற்கனவே, ஆழ்கடலி…
-
- 5 replies
- 1.3k views
-