ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்: புதுடில்லி இராஜதந்திரத்துக்குத் தோல்வி! 09.09.2008 தமிழர் விவகாரத்தில் எடுத்ததற்கெல்லாம் பலாத்காரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகித்து, துப்பாக்கி முனையில் பதில் கூறிப் பழகிக் கொண்டுவிட்ட இலங்கைப் படைகளுக்கு அந்தப் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழக மீனவர்களைக் கையாளும் விடயத்திலும் அதே திமிர்த்தனம் தொடர்கின்றது. இதை சகிக்கமுடியாமல் இப்போதாவது சற்று சீறிப் பாயும் கட்டத்துக்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வந்திருக்கின்றமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடலில் இறங்கும் தமிழக மீனவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விடயம்தான். "சார்க்' மாநாட்டுக்காகக் கொழும்புக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று வவுனியா இராணுவத் தலைமையத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ரடர்கள் ஒழிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார். வடபகுதியில் இடம்பெறும் யுத்தம் தொடர்பான பொய்யான தகவல்களே வெளியில் வருவதாகவும், உண்மைத் தகவல்கள் வெளியாவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அங்கு இடம்பெற்ற மோதல்களில் பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். “உதாரணமாக, 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை 1851 படையினர் கொல்லப்பட்டதுடன், 9901 பேர் காயமடைந்துள்ளனர். இவை உத்தியோகப்பற்றற்ற தகவல். இதுவே இவ்வாறாயின் உத்தியோகபூர்வ தகவல் இதனைவிட அதிகமாகவே இருக்கும்” என்றார் அவர…
-
- 0 replies
- 880 views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7:45 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ராதிகா தேவகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிச் …
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னாரில் இருந்து முன்னேறிய படையினர் இப்போது தமிழீழ விடுதலைப் புல…
-
- 1 reply
- 1.4k views
-
-
புதுக்குடியிருப்பு நகர் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 5 கடைகள் முற்றாக அழிவு [செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2008, 06:13 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் மற்றும் பாடசாலை ஆகியனவற்றின் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று அதிகாலை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. புதுக்குடியிருப்பு நகரப்பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 முதல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. மூன்று தடவைகள் அடுத்தடுத்து வீசப்பட்ட குண்டுகளில் புதுக்குடியிருப்பு நகரில் உள்ள சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை சேதமடைந்துள்ளது. நகரில் உள்ள ஐந்து கடைகள் முற்றாக அழிந்துள்ள…
-
- 4 replies
- 1.2k views
-
-
நாச்சிக்குடா மற்றும் வன்னேரிப்பகுதிகளில் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது விடுதலைப் புலிகள் பெருமளவான படையப் பொருட்களை படையினரிடமிருந்து கைப்பற்றியிருந்தனர். மக்களின் பார்வைக்காக இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டபோதும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் விபரங்களை புலிகள் வெளியிடவில்லை. எனினும் இந்த ஆயுதங்களின் படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. படங்களில் இருந்தவற்றை வைத்து ஊடங்கள் சில கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையும் வெளியிட்டிருந்தன. தமிழ்நெட் உட்பட சில இணையத் தளங்கள் இரு லோ ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதாக படத்துடன் எழுதியிருந்தன. ஆனால் உண்மையில் அது லோ ஆயுதமல்ல. ஆர்.பி.ஓ. ஸ்மெல் (பம்பிள்பீ) என்ற ரஸ்சியத் தயாரிப்பா…
-
- 48 replies
- 8k views
-
-
தமிழக மீனவர்களை காக்க பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம் சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் பலமுறை தான் வலியுறுத்தி இருப்பதை குறிப்பிட்டுள்ளார். முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 முறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் தமிழக மீனவர்கள் 8 பேர் பலியாகி உள்ளனர்; மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளன…
-
- 12 replies
- 1.7k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 11:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரியும் உள்ளுர் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உத்தரவை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் …
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ நேற்று திடீரென கண்டி தலைமையக காவற்துறை பணியகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர்களின் கடமை குறித்து ஆலோசனை வழங்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் திடீர் வருகையை அடுத்து குழப்பமடைந்த காவற்துறை அதிகாரிகள், அவர் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யச் சென்றிருக்கலாம் எனக் கருதி பதிவேடுகளுடன் முறைப்பாட்டைப் பதிவு செய்ய தயாராகியுள்ளனர். அதனைத் தடுத்த நாமால் ராஜபக்ஸ, காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படுவதன் மூலம் நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க முடியும் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப…
-
- 4 replies
- 1.5k views
-
-
கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் புகுந்து அங்கிருந்த தெய்வ உருவச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய பிக்கு ஒருவர் உட்பட மூவரை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்நிலையில் அருகிலுள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு உள்ளிட்ட மூவர் தேவஸ்தானத்தின் கோபுரத்தில் ஏறி சிலைகளை உடைத்துள்ளனர் என கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட மூவரிடம் கிராண்ட்பாஸ் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரம் வீரகேசரி இணையம்
-
- 75 replies
- 6.9k views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எரிவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் அவர்களுடைய சகோதரியின் கணவர் ஒட்டுகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.45 மணியளவில் களுவாஞ்சிக்குடி பழைய காவல் நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சென்ற இனிய பாரதியின் தலைமையிலான குழுவினர் இவரை சுட்டுக்விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. கொல்லப்பட்டவர் 60 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தபோடி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உறவினர்களினடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்து…
-
- 16 replies
- 3.5k views
-
-
ஐவர் காயம்! - டயலொக் குறுந்தொலைநகல் செய்தி
-
- 6 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பில் பெண் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சுதந்திர ஊடகவியலாளரான ராதிகா தேவகுமாரி அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ராதிகா தேவகுமாரி அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினர் விசாரனைகளை தொடங்கியுள்ளனர். புதினம்
-
- 0 replies
- 687 views
-
-
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 813 views
-
-
இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தத்தை இராணுவ வெற்றிகளின் மூலம் முடிவுக் கொண்டுவர முடியாதென ரொய்டர்ஸ் செய்தி சேவையின் ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இலங்கை அரச படையினர் மிகவும் வேகமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்னேறி வருவதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், மரபு ரீதியான இராணுவ வெற்றிகளின் மூலம் ஒருபோதும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு வழிகளில் அரச படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், வான் மற்றும் தரை மார்க்கமாக படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவத…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் இரண்டு தரப்பும் அருகருகே நெருக்கமாக நின்று மோதவிருப்பதாக இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக மோதல்களில் ஈடுபட்டுவந்த விடுதலைப் புலிகள், பாரிய சக்திவாய்ந்த இராணுவத்தினருடன் அண்மையிலிருந்து மோதி, இழப்புக்களை ஏற்படுத்த விரும்பாமல் சற்றுப் பின்வாங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டும் அவர், அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் முன்நகர்வுகளை தாமதப்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் தமது பலம்வாய்ந்த போராளி குழுக்களை இரண்…
-
- 4 replies
- 3.1k views
-
-
போர் முனையில் சிறிதளவு காயமடைந்த படைச் சிப்பாய்களைக்; கொண்டு வன்னியை வலுப்படுத்தும் படையணி என்ற இந்தப் படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தப் படையணியினர் நேரடியாகச் சண்டையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். வன்னிக் களமுனையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைப்பதற்கு அதிகளவிலான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்தை விட்டு விலகியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவி;ல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே களமுனையில் காயமடைந்து நேரடியாகப் போரில் ஈடுபட முடியாத படையினரைக் கொண்டு இந்தப் பதிய படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கைப்ப்றப்பட்ட பகுதிகளில் இவர்கள் நடவடிக்…
-
- 4 replies
- 2k views
-
-
மணலாறில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை தாக்குதலில் வயலில் சூடடித்துக்கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இராணுவ வழிமுறைகளின் மீது தாம் நம்பிக்கை கொள்ளவில்லை எனத்தெரிவித்திருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜேர்கன் வீர்த், அரசியல் வழிமுறைகளூடாகவும், மனித உரிமைகளைப் பேணுவதன் மூலமுமே இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற 'சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சமநிலையைப் பேணுதல்' எனும் தலைப்பிலான இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டே அரசியல் சிந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, யுத்தம் இன்று பிரபல்யமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,…
-
- 0 replies
- 757 views
-
-
யாழ்ப்பாணத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் இம்முறை உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பரீட்சை வினாதாள் திருத்தும் மையம் ஒன்றை ஆரம்பிக்குமாறு எழுந்த கோரிக்கைகளுக்கு கல்வியமைச்சர் அனுமதி வழங்கியதை அடுத்து யாழ்ப்பாணத்தில் வினாத்தாள் திருத்தும் மையம் ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணிகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 643 views
-
-
வன்னி மற்றும் யாழ். களமுனைகளில் சிறிலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 745 views
-
-
நான் வீரத்தையும் மானத்தையும் மதிப்பவன் அதனால்தான் பிரபாகரனை நேசிக்கிறேன் * வைகோ தெரிவிப்பு தூத்துக்குடி: ""நான் வீரத்தையும், மானத்தையும் மதிப்பவன் என்பதால் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேசிக்கிறேன்' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கலிபட்டி கல்குமி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் வைகோ பேசியதாவது; தென்மாவட்டங்களில் வீழ்த்த முடியாத கூட்டணியாக அ.தி.மு.க. ம.தி.மு.க. கூட்டணி விளங்குகிறது. நான் வீரத்தையும், மானத்தையும் மதிப்பவன். எனக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், வாஞ்சிநாதன் ப…
-
- 3 replies
- 4.3k views
-
-
இரவு முழுவதும் "பிரித் ஓதி தமது எதிர்ப்பை காட்ட பிக்குகள் முயற்சி. உயர் நீதிமண்றத்தின் தடை உததர்வையும் மீறி , இரவுமுழுவதும் பிரித் ஓதி தமது எதிர்பை காட்ட புத்த பிக்குகள் முனைவதாக அறியப்படுகிறது. உயர் நீதிமண்றம் விதித்திருக்கும் நேரக்கட்டுப்பாட்டையும் மீறி, இரவுவெளைகளில் ஒலிபெருக்கி மூலம் பிரித் ஓதி நீதித்துறைக்கு எதிராக தமது எதிர்பை வெளிபடுத்த போவதாக பிக்குகள் அறிவித்துள்ளனர். இன்று இலங்கையில் யாரும் தூங்க முடியாது என மக்கள் இந்த தேரர்களை ஏசிக்கொண்டு இருப்பதாக தகவல் http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 15 replies
- 4k views
-
-
அந்த இரவு, விடியவே இல்லை! கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி! சகோதரர் பாக்கியநாதனின் இரண்டு வயது மகளை வேலூர் சிறைக்கு அழைத்து வரச் சொல்லிஇருந்தார். குட்டி மருமகளின் மழலைக் குழைவை அதிகமாகவே ரசித்தார். ''அரித்ராவைத்தான் (நளினியின் மகள்) பார்த்து ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, சீக்கிரமே அவகூடவே இருக்கிற மாதிரி தீர்ப்பு வந்துரும்'' என்றவரின் கண்களில் ஒளி! ஆனால், அந…
-
- 2 replies
- 2.3k views
-
-
இலங்கையின் உள்விவகாரத்தில் சில வெளிநாடுகள் தலையிட முனைகின்றன. அதற்கு ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். காலியில் வெள்ளிக்கிழமை தென் மாகாண சபையின் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்துப் பேசுகையிலேயே பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் விக்கிரமநாயக்கா கூறியதாவது; நாம் எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரத்திலும் தலையிட்டது கிடையாது. எங்கள் பிரச்சினையை நாம் தீர்த்துக் கொள்வோம். எமது நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடமுனையும் நாடுகளுக்குஇ "உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எமது பிரச்சினையை நாம் பார்த்துக் கொள்வோம்' எனக் கூறவிரும்புவதாகவும் தெரிவி…
-
- 1 reply
- 763 views
-