Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளுடன் “திருட்டுக் கல்யாணம்’ செய்துள்ள அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும். ஆனால் அரசு அவர்களை அழைத்து விசாரணை செய்வதுடன் மட்டும் விட்டுவிடுகின்றதென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்ற மன்னார் வளைகுடா எண்ணெய் அகழ்வாராய்ச்சி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுயிகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; புலிகளுடன் தொடர்புடையவரும் மனோகணேசன் எம்.பி.யை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் அழைத்து சில கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு விட்டுவிட்டனர். ஆனால் அவரோ இலங்கையிலுள்ள அனைத்து தூதுவராலயங்களுக்கும் சென்று ஒப்பாரி வைக்கின்றார். தனக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறுவதுடன் இந்த நாட…

  2. சிறிலங்காப் படைநடவடிக்கைகளுக்குக் கடுமையான பதிலடிகளை விடுதலைப்புலிகள் கொடுக்கும்போதும், அதனால் வரும் தோல்விகளை அவதானிகள் தவறெனச்சுட்டும் போதும், பெருமளவிலான இராணுவ ஆளணி இழப்புக்களோ அல்லது படைக்கல இழப்புக்களோ ஏற்படும் போதும், சிங்களப்பகுதிகளில் பேருந்துகளில்,பொது மக்களின் பாவனை அதிகமாகவுள்ள இடங்களில், குண்டுகள் வெடிப்பதும், சிங்களப் பகுதிகளில் இனந்தெரியாக் கொலைகள் நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாக இருப்பதைத் தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. இது ஏன்? இதற்கு என்ன காரணம்? இதன் சூத்திரதாரிகள் யார்? எனப் பலகேள்விகள் எழும்போது, அக் கேள்விக்களுக்கான பதில்களைத் தேடும் போது, சிறிலங்கா அரசின் மீதான சந்தேகங்களே அதிகம் வலுப்பெறுகின்றன. அந்தவகையிலேயே கடந்த இரு தினங்களில், புக…

    • 0 replies
    • 1.2k views
  3. இலங்கை கடற்படையினரின் சிறப்பான செயற்பாடுகளின் காரணமாக, கடற்புலிகளின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். " முன்னர் கடற்புலிகளின் பலம் பற்றி அதிகம் எடைபோட்டிருந்தோம். ஆனால் தற்போது அவர்களது சகலவிதமான பலமும் அழிக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினர் கடற்புலிகளின் பலத்தினை வெற்றிகரமாக ஒழித்துள்ளனர்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். வெலிசர கடற்படைத்தளத்தில் நடைபெற்ற, கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 100வது 'அரோ' எனும் பெயரிலான தாக்குதல் படகை பார்வையிடும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை தாக்கியழித்ததன் மூலம், புலிகளின் ஆயுத விநி…

  4. வனவிலங்குகளை பாதுகாக்கவும் அவற்றுக்கு சரணாலயங்களை அமைக்கவும் நடவடிக்கையெடுத்துள்ள அரசாங்கம் தமிழ் மக்கள் மீது, குண்டுகளை வீசுவதுடன் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்து வருகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றாடல் இயற்கை வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகளுக்கு சரணாலயங்களையும் தாவரங்களுக்கு பூங்காக்களையும் அமைத்துக் கொடுக்கும் அமைச்சர்கள் வன்னியில் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கு கூடாரங்களின்றியும் உண்பதற்கு உணவின்றியும், உயிருக்குப் போராடும் தமிழ் மக்கள் மீது மனிதாபிமானம் காட்டாத…

  5. வன்னியிலிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி கிளிநொச்சியில் ஐ.நா.நிறுனங்கள் முன்பாகத் திரண்ட பொதுமக்கள்! வன்னியிலிருந்து ஐ.நா.நிறுவனங்கள் உட்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியயேற வேண்டாம் எனக்கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாகத் திரண்டனர். இன்று காலை 6.00 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் நிறுவனப்பணிமனை மற்றும். உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் பணிமனை ஆகியவற்றின் முன்பாக திரண்டு நின்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தற்போது நடைபெறும் படைநடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களும் ஏனைய பொதுமக்களுமாக உன்று திரண்ட பொது மக்கள் ஐ.நா.வின் வெளிநாட்டப்பிரதிநிதிகளிடம் தங்களில் அவல நிலையைக்கூறி அழுத காட்சினை…

  6. வன்னி மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்படும் முகாம்கள் குறித்து கசிந்துள்ள திடுக்கிடும் தகவல்கள்! வன்னியிலுள்ள மக்களை வவுனியாவிற்குள் வரவழைப்பது தொடர்பாகவும் அங்கு அம்மக்களை தங்கவைப்பதிற்கு மூன்று முகாம்களை அமைப்பது தொடர்பாகவும் சிறிலங்காப்படைத்தரப்பு அறிவித்துள்ளதன் உள்நோக்கம் மற்றும் பின்னணித்தகவல்கள் தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளன. வவனியாவிற்குள் வரவழைக்கப்படும் வன்னி மக்களை தங்கவைப்பதற்காக வவுனியாவில் மூன்று இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமடு சிதம்பரபுரம் செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ ஆகிய மூன்று இடங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஓமந்தையை மையப்படுத்தி இன்னுமொரு முகாம் அமைக்கவும் படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. வன்னியிலிருந்து வவுனியாவிற்குள் ப…

  7. வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை உடனடியாக வெளியேற்றுவது இனக்குரூரத்தின் இன்னுமொரு உச்ச வெளிப்பாடாகும். சர்வதேச தொண்டு நிறுவனங்கள், தமிழ் மக்களை இடைநடுவில் கைவிட்டுச் சென்றால் அது பொறுப்பற்ற செயலாகும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; இலங்கையில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் சிங்கள அரசினால் கட்டவிழ்க்கப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப்பணி செய்துவந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு சிங்கள அரசு கட்டளை விடுத்துள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இக்கட்டளையானது தமிழ் ம…

    • 6 replies
    • 1.3k views
  8. வன்னியிலிருந்து கடந்த புதன்கிழமை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறியுள்ள நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாத்திரம் தொடர்ந்தும் ஓமந்தை சோதனைச் சாவடியிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிளிநொச்சியிலும் தமது பணிகளைத் தொடரும் என சங்கத்தின் பேச்சாளர் அலெக்சாண்ட்ரா மதிஜேவிக் தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத்துடன் ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “ நாம் தொடர்ந்தும் கிளிநொச்சியில் தங்கியிருப்போம். இந்தத் தீர்மானத்தினை எமக்குள்ள உரிமையின் மூலமும், அரசாங்கத்துடனான உடன்பாட்டின் மூலம்; எடுத்துள்ளோம். தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை நடுநிலையாக மேற்கொள்வோம்” என்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு…

  9. புலிகளின் மும்முனை தாக்குதலில் இந்திய இராணுவ தொழில் நுட்பபிரிவினர் நேரடியாக சம்மந்தபட்டிருப்பது அம்பலமாகியதை அடுத்து வை.கோ மன்மோகன் சிங்கிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் ஈழத்தமிழர்களை அழித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபடும் இலங்கை அரசுக்கு இந்தியா நேரடியாக இராணுவ உதவி வளங்கியுள்ளதை வன்மையாக கண்டித்திருக்கும் வை.கோ, இது ஒரு துரோச்கச்செயல் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

  10. அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரமும் பித்தலாட்டமும் புலிகளின் விமானத் தாக்குதலினால் அம்பலம்-ஐ.தே.க. கருத்து; வீரகேசரி நாளேடு 9/12/2008 8:43:26 AM - வெளிநாட்டுப் படைகள் இலங்கையில் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியது. ஆனால், வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இந்தியப் படையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இதனை இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதிலிருந்து அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரமும் பித்தலாட்டமும் அம்பலமாகியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார தெரிவித்தார். புலிகள் 6 தடவைகளே விமானத் தாக்குதலை நடத்தியதாகவும் விமானப் படையினர் 6 ஆயிரம் தடவை தா…

  11. புகலிடம் கோருவோர் தொடர்பான ஐரோப்பிய கொள்கை குறித்து செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில், உலகெங்கும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகிய

  12. வவுனியா தாக்குதலில் வீரகாவியமான கரும்புலிகளுக்கு தேசியத் தலைவர் வீரவணக்கம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 05:34 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தள மையத்தில் கதுவீ (ராடர்) நிலையம் அழிப்பு மற்றும் படைத்தள அழிப்பு நடவடிக்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். பிரத்தியேகமாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். வன்னி சிறிலங்கா படை நடவடிக்கை தலைமையகத்துக்குள் ஊடுருவி சிங்கள படைகளின் அதிஉயர் கதுவீ (ராடர்) கண்காணிப்பு நிலையத்தை அழிப்பு நடவடிக்…

    • 0 replies
    • 1.8k views
  13. விடுதலைப் புலிகள் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 04:57 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு நேற்று முன்நாள் நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டுக்கு நேற்று முன்நாள் புதன்கிழமை நண்பகல் சென்ற சிறிலங்கா இராணுவ அணியொன்றே வீ…

  14. ஈழத்து இசை உலகில் நாதஸ்தவரச் சக்கரவர்த்திகளில் ஒருவரான வி.கே.கானமூர்த்தி (வயது 60) நேற்று முன்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார். தொடர்ந்து வாசிக்க

  15. வவுனியா கூட்டுப்படை தலைமையம் மீதான தாக்குதலில் பங்கேற்ற 10 கரும்புலிகளினதும் வெலிஓயாப் பகுதிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 போராளிகளினதுமாக 14 போராளிகளின் உடலங்களை அரசு விடுதலைப்புலிகளிடம் ஐ சி ஆர் சி ஊடாக கையளித்துள்ளது. இச்செய்தியை.. பிபிசி/தமிழ் பிரசுரித்துள்ளது. வீரகாவியமான வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

  16. யுத்த நடவடிக்கைகளில் வெளிநாட்டு படையினர் சம்பந்தப்படவில்லை - அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 9/11/2008 9:07:17 PM - இலங்கையில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் இந்திய படையினரோ, வெளிநாட்டு படையினரோ சம்பந்தப்படவில்லை. எனினும், தேசிய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அயல் நாடான இந்தியா அதிநவீன ராடர் கருவியை வழங்கியமையையிட்டு இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு கோரப்பட்டமை தற்காலிக ஏற்பாடாகும். அப்பிரதேசத்தில் நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் பணிகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்கப்படும் என…

  17. மட்டக்களப்பு கிரானில் புலிகளின் தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் பலி, மூவர் காயம் கிரானில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 4 பேர் பலி; 3 பேர் காயம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 04:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கூழாவடி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக சிறப்பு அதி…

  18. வன்னி மக்களின் அவலங்களுடன் கரையும் சுமைகள் - த.தமயா - இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையானது தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதொன்றாகவே காணப்படுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலப்பகுதியில் தமிழனுக்கு பயங்கரவாதி எனும் முத்திரை குத்தப்பட்டு தமிழ் மக்களின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டு அவர்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்க வைக்கப்பட்டார்கள். அவருடைய ஆட்சியை விட மிகவும் கொடுங்கோலான ஆட்சி முறையையே இன்றைய மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நீதி கேட்டுப் போராடி வருகின்ற தமிழ் மக்களின் முதுகில் ஏறி எதுவித மனிதநேயமுமின்றி மகிந்தரின் நயவஞ்சக ஆட்சி அவர்களை நசுக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் எங்குமே சுதந்திரமாகவும் நிம்…

  19. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான வெல்லம்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை இரவு 7:45 நிமிடமளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. இனங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துமாறு கோரும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஜந்து நாள் மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை (18.09.08) சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. கொழும்பு, ஊறுகொடவத்தையில் தொடரூந்துப் பாதையில் மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இன்று இரவு 7:15 அளவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை. eurotv

  22. வவுனியா படைத் தலைமையகம் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கான தொடக்கப்புள்ளி என, தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். படைத்தளத்திற்குள் நுழைந்த கரும்புலிகள் றாடர் கருவியை தாக்கியழித்த பின்னர், வான் புலிகளின் வானூர்திகளை றாடரில் அவதானித்திருப்பதாக சிறீலங்கா படையினர் கூறிவருவது வேடிக்கையான விடயம் எனவும் அவர் கூறினார். வவுனியாவில் இருந்து வன்னிக்கான சிறீலங்கா படைகளின் தலைமையகம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார் http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=109

  23. இலங்கையின் வடபகுதில் நிலைவும் போர்ச் சூழ்நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா செயலாளரின் ஒரு சில கருத்துக்கள் ஏதோ ஓர் தரப்பை மாத்திரம் சார்பாக வைத்து கூறப்பட்ட கருத்துக்களாக காணப்படுகின்றதென இலங்கை சமாதான செயலகத்தின் பணிப்பாளர்நாயகம் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்கால மோதல்களில் சிவிலியன்கள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை எனக் கூறிய அவர் ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடபகுதி சிவிலியன்கள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்…

  24. ஆலையடிவேம்பு,பனங்காடு பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீடொன்றினுள் நுழைந்த இனியபாரதியின் குழுவைச்சேர்ந்த ஆயுதபாணிகள் சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பனங்காடு சாகம வீதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் நுழைந்த ஆயுதபாணிகளே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முகத்தை கறுப்புத் துணியால் மூடிக் கட்டியவாறு ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்த இந்தக் கோஷ்டி வீட்டுத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்ததுடன்,அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகளையும் பறித்தெடுத்தது. இதன் பின் வீட்டிலிருந்தவர்களை துப்பாக்கிமுனையில்அறையொன்ற

  25. கொழும்பு நகரை அண்மித்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் புகையிரத தண்டவாளத்திற்கருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 7.15 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புகையிரத தண்டவாளத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் http://www.tamilskynews.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.